எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of Dead, சாபங்கள் மற்றும் பல

August 31, 2017 | Author: Andhazahi | Category: N/A
Share Embed Donate


Short Description

எகிப்தின் பாரோக்கள் குறித்தும், அதன் பிரம்மாண்ட மற்றும் சுவாரசியமான மரங்மங்களையும் குறித்து பேசும் தமிழின் முதல் புத்தகம...

Description

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

நவீனா அலெக்சாண்டர்

Copyright © 2017 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. [email protected] First Edition. January 2017. Price Rs. 100/Ordering Information: Quantity sales. Special discounts are available on quantity purchases by corporations, associations, and others. For details, contact at the email above. Printed in Chennai, Tamil Nadu.

ப�ொருளடக்கம்

முன்னுரை

1

புதையல்களும் சாபங்களும்

2

அகநேத்தன் கி.மு. 1353 – 1336 (18-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

6

துத்தன்காமூன் கி.மு. 1332 – 1322 (18-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

15

மம்மிபிகேசன்

16

இறந்தவர்களின் புத்தகம்

19

எகிப்திய நாகரீகத்தின் பூர்வீகம் கி.மு. 5000-க்கு முந்தைய காலகட்டம் (வரலாற்றிர்கு முற்ப்பட்ட காலகட்டம்)

21

முதல் பார�ோ நார்மர் கி.மு. 3000 (முதல் அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

25

மஸ்டபாஸ்

27

மென்டோதெப் II கி.மு. 2010 – 1960 (11-வது அரசபரம்பரை, இடை அரசாட்சி காலகட்டம்)

29

நைல் நதி

29

ஜ�ோசர் கி.மு. 2650 – 2620 (3-வது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

37

ஈம�ோதெப்

38

ராமேசிஸ் II கி.மு. 1279 – 1213 (19-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

46

ஸ்னெப்ரு கி.மு. 2575 – 2545 (4-வது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

54

கூஃபு கி.மு. 2545 – 2525 (நான்காவது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

58

குடிமக்களின் வீடுகளும் பார�ோவின் அரண்மனைகளும்

60

கீசாவின் ஆச்சரியப் பிரமிட்

66

ஸ்பிங்ஸ் மற்றும் கீசா பிரமிட் மர்மங்கள்

70

பார�ோ அமினமெத் I கி.மு. 1938-1908 (12-வது அரச பரம்பரை, இடை அரசாட்சி காலகட்டம்)

76

பார�ோ ஆம�ோஸ் I கி.மு. 1539 – 1514 (18-வது அரச பரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

79

ஹெத்செப்சத் கி.மு. 1473 – 1458 (18-வது அரச பரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

82

துட்மோஸ் III – எகிப்தின் அலெக்சாண்டர்

86

கிளிய�ோப்பாட்ரா VII கி.மு. 51-30 (தாலமி காலகட்டம்)

88

கல்லறை திருடர்கள் மற்றும் சாபங்கள்

94

கடவுளர்களும், மந்திரத் தந்திர மர்மங்களும்

98

துணைக் கருவி நூல்கள்

IV

102

முன்னுரை

இந்தப் புத்தகத்தை எழுத (மன்னிக்கவும் தட்சு செய்ய, இப்பலாம் யாருங்க எழுதிகிட்டு) உட்கார்ந்த ப�ோது எகிப்திய நாகரீகத்தின் சுவாரசியமான சில விசயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்களின் வேண்டுக�ோள் விரிவாக எழுதவேண்டும் என்பது. அதுவும் சரிதான் எனப் பட்டதால் எழுதுவதுதான் எழுதுகிற�ோம் க�ொஞ்சம் விரிவாக இந்தப் புத்தகத்தை எழுதலாம் என்று மனம் மாறியது. மனம் மாறிவிட்டாலும் கடலின் அலையில் காலை நனைப்பதற்கும் ஆழ் கடலில் நீந்துவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதுதானே. வரலாற்று ஆய்வாளர்களுக்கு, த�ொல் ப�ொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் ப�ோன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்துப்போட்டு அவைகளைப் பின்பற்றி ஒரு முழுமையான எகிப்திய நாகரீகம் குறித்த அறிமுகத்தை எழுத முயற்சி செய்கிறேன். எகிப்திய வரலாறு குறித்துத் தமிழில் அவ்வளவாகப் புத்தகங்கள் இல்லை என்று ச�ொன்னால் அது வரலாற்றுப் பிழையாகிவிடப் ப�ோவதில்லை. அதை மனதில் க�ொண்டு முகநூலில் எகிப்து குறித்துக் கட்டுரைத் த�ொடர் ஒன்று எழுதலாம் என்று முடிவு செய்து எழுதத் த�ொடங்கினேன். முதல் த�ொடரிலிருந்தே மிகுந்த வரவேற்பு. அடுத்தடுத்த த�ொடர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. த�ொடக்கத்திலேயே இதைப் புத்தகமாகக் க�ொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று படித்தவர்களும் நண்பர்களும் அன்புக் கட்டளை இடத் த�ொடங்கினார்கள். கிட்டத்தட்ட 30 த�ொடர்களைக் கடந்த பிறகு அதற்கான முயற்சிகளை எடுக்கத் த�ொடங்கினேன். இந்த முயற்சியில் எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பர் அன்சாரி முகம்மது அவர்கள். இது புத்தகமாக வந்தால் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி அடையக் கூடிய நண்பர்கள் கார்த்திக்கும், ஜமால் முகமதும். அவர்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சியும். நவீனா அலெக்சாண்டர் (David J Praveen) [email protected]

1

புதையல்களும் சாபங்களும்

ப�ொதுவெளியில் எகிப்தின் அதி சுவாரசியமான விசயங்களாகப் பார்க்கப்படுவது பிரமிடுகள் மற்றும் மம்மிகள். எகிப்து நாகரீகத்தின் மன்னர்களைப் பார�ோ என அழைக்கவேண்டும் என்று தெரியாதவர்கள் கூடப் பார�ோ துத்தன்காமூன் குறித்து அறிந்துவைத்திருப்பார்கள். எகிப்திய பார�ோக்களிலேயே 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டு மக்களால் பரவலாக அறியப்பட்டவர் துத்தன்காமூன். த�ொல் ப�ொருள் ஆராய்ச்சியாளர்களைவிடப் பழம்பொருட்களைக் கடத்தும் மேற்கத்திய பெரும் பணக்காரர்களால் அதிகமாகத் தேடப்பட்டது துத்தன்காமூனுடைய கல்லறை. அதில் இருப்பதாக நம்பப்பட்ட தங்க, பழங்காலப் ப�ொருட்கள் அடங்கிய புதையலே அதற்குக் காரணம். புதையல் என்றால் துணி மூட்டையாகக் கட்டும் அளவிற்கு இருக்கலாம் இல்லை ஒரு பெட்டியில் அள்ளும் அளவிற்கு இருக்கலாம் என்று அவசரப்பட்டுவிடாதீர்கள். எகிப்திய பார�ோக்களின் அரசவையில் அதிகாரியாக இருந்தவர்களின் கல்லறைப் புதையல் என்றாலே பல அறைகள் முழுவதும் ப�ோட்டு அடைக்கும் அளவிற்கு இருக்கும். அப்படியானால் பார�ோக்களின் கல்லறை புதையலை வண்டி வண்டியாகத்தான் நீங்கள் வீட்டிற்கு எடுத்துவரவேண்டும். இவ்வளவிற்கும் பார�ோக்களைப் பிரமிடுகளில் அடக்கம் செய்துவிட்டு அரச பரிவாரம் நகர்ந்த மறு நிமிடமே கல்லறை திருடர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள். வண்டி வண்டியாக உள்ளே தங்கம் இருந்தால் யார்தான் விட்டுவைப்பார்கள். கல்லறைத் திருடர்களால் பல ஆயிரம் ஆண்டுகள் சூறையாடப்பட்டும் பிரமிடுகளில் புதையல் ப�ொருட்கள் எஞ்சியிருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் புதையல் ப�ொருட்களைத் திருடத்தான் மேற்கத்திய பெரும் பணக்காரர்களும் 19-ஆம் நூற்றாண்டுத் த�ொடங்கி இரண்டாம் உலகப்போர் காலம் வரை துடியாய்த் துடித்தது. அந்தப் புதையல் ப�ொருட்களைத் திருடி பணம் பண்ணுவதற்கு அல்ல அந்தப் புதையல் ப�ொருட்களைத் தங்களுடைய வீடுகளில் சேமித்துத் தங்களுடைய செல்வத்தை மற்றவர்களுக்குப் படம் காட்டத்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எகிப்து நாகரீக பழமைப் ப�ொருட்களைச் சேகரிப்பது என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல. வரலாற்று அறிவும் த�ொல் ப�ொருள் தேடல் அறிவும் க�ொண்ட ஒரு நபரைப் பிடிக்கவேண்டும். அவருக்கு உண்மையிலேயே அத்தகைய அறிவு இருக்கிறதா என்று தெரிந்துக�ொள்ளவேண்டும். பிறகு அவரை எகிப்திற்கு அனுப்பித் த�ொல் ப�ொருட்களைத் தேட வைக்கவேண்டும். எகிப்திற்குச் சென்ற நபர் எவ்வளவு நாட்களில் விலை உயர்ந்த த�ொல் ப�ொருட்களைக் கண்டுபிடிப்பார் என்று நிச்சயமாக ஒரு காலவரையறை எல்லாம் ச�ொல்ல முடியாது. வாரங்களாகலாம், மாதங்களாகலாம் ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம். அவ்வளவு நாட்களுக்கும் எகிப்தில் இருக்கும் நபருக்கான தனிப் பட்ட செலவு மற்றும் மாத சம்பளம், விலை உயர்ந்த பழங்காலப் ப�ொருட்களை அடையாளம் காட்ட அழ வேண்டிய இலஞ்சப் பணச் செலவு, இறுதியில் எகிப்திற்கு அனுப்பப்பட்ட நபருக்கான 2

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ப�ோக்குவரத்துச் செலவு, சுங்கத் துறை அதிகாரிகளுக்குக் க�ொடுக்கப்படவேண்டிய இலஞ்சப் பணச் செலவையும் சேர்த்தால் யானையைக் கட்டித் தீனிப�ோடும் காரியம் ப�ோன்றது இது. இப்படி ஒருவர் இருவர் அல்ல மேற்கத்திய நாடுகளில் பல பணக்காரர்கள் எகிப்திற்கு ஆட்களை அனுப்பி எகிப்தின் பழங்காலப் ப�ொருட்களைத் திருடியிருக்கிறார்கள். பல ஆயிரமாண்டுகாலக் கல்லறைத் திருடர்களையும் கடந்து 19-ஆம் நூற்றாண்டு பணக்காரத் திருடர்களுக்கும் எகிப்திய பார�ோ மன்னர்களின் செல்வ செழிப்பு ஈடுக�ொடுத்திருக்கிறது என்றால் அத்தகைய செல்வ செழிப்பை கட்டியாண்ட பார�ோக்களைக் குறித்து நாம் தெரிந்துக�ொள்ள ஆர்வமாகத்தானே இருக்கும். பிரமிடு புதையல் ஒருபுறம் என்றால் பிரமிடிற்குள் இருந்த மம்மிக்களும் மேற்கத்தியர்களின் கண்களை உறுத்தோ உறுத்துயென்று உறுத்தியிருக்கிறது. மம்மி செய்யப்பட்ட உடலின் பாகங்களில் மிகுந்த மருத்துவக் குணம் இருக்கிறது என்று யார�ோ எப்போத�ோ கிளப்பிவிட்டுவிட்டார்கள். மேற்கத்தியர்களால் மம்மிகளும் வேட்டையாடப்பட்டன. இப்படி எந்த எந்தப் பார�ோக்களின் மம்மிகள் எல்லாம் கள்ளத் தனமாக மேற்குலகத்திற்குக் கடத்தப்பட்டன என்பது குறித்தெல்லாம் கடத்தப்பட்ட மம்மிகளுக்கும் கடத்தியவர்களுக்குமே வெளிச்சம். பிரமிடின் புதையல் மற்றும் மம்மிய�ோடு சேர்த்து பிரமிடு மற்றும் கல்லறை க�ோயில்களில் இருக்கும் சாபங்கள் குறித்தும் மேற்குலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட காலமெல்லாம் உண்டு. இதற்கும் முக்கியக் காரணம் பார�ோ துத்தன்காமூனே. இந்தச் சாபங்களைக் குறித்து உலகம் இப்படித்தான் அறிந்திருந்தது அதாவது ‘பார�ோக்களின் சாபம்’. பெரும் இயற்கை பேரிடர் த�ொடங்கி வயிற்று வலி ந�ோய் வரை இந்தச் சாபங்கள் செய்யும் வேலைகளில் அடங்கும். இன்றைக்கும் எகிப்திர்கு சுற்றுலாவிற்குச் செல்பவர்களில் சிலர் வயிற்று வலி சாபத்தால் பாதிக்கப்படுவதுண்டு. பார�ோக்களின் சாபங்களிலேயே உலகப் புகழ்பெற்றது துதன்காமூனுடைய சாபம்தான் அதன் பெயர் ‘தூத அரசனின் சாபம்’. எகிப்தியர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே இத்தகைய சாபங்கள் குறித்த கதைகளுக்குப் பழகிப்போனவர்கள் ஆனால் இருபதாம் நூற்றாண்டு உலகத்திற்கு இந்தச் சாபங்கள் குறித்த விசயங்கள் மிகப் புதுமையான விசயம். இந்தப் புதுமையான அதே சமயத்தில் சுவாரசியமான சங்கதி த�ொடங்கியதே பார�ோ துதன்காமூனிடமிருந்துதான். துதன்காமூனுடைய கல்லறையில் மிக அதிக அளவில் தங்கம் மற்றும் விலை மதிக்க முடியாத ப�ொருட்கள் மலைப் ப�ோலக் குவிந்திருக்கிறது என்பது செவி வழி செய்திகளில் ஒன்று. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டு மேற்குலகத்தினருக்கும் இந்தச் செவி வழி செய்தியில் அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு. நம்பிக்கை இருந்தால் மட்டும் ப�ோதுமா பார�ோ துதன்காமூனுடைய கல்லறை எகிப்தில் எங்கே ஒளிந்திருக்கிறது என்பது தெரியவேண்டாமா. எகிப்தியர்களுக்கே அந்தக் கல்லறை எங்கிருக்கிறது என்பது தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களே அந்தத் தங்கப் புதையலில் கைவரிசையைக் காட்டியிருக்கமாட்டார்களா. எகிப்தின் பாலைவனத்தில் ஆயிரக் கணக்கான கல்லறைகளுக்கும் நூற்றுக் கணக்கான பிரமிடுகளுக்கும் நடுவே துதன்காமூனுடைய கல்லறையைத் தேடுவது என்பது லேசுப்பட்ட காரியம் கிடையாது என்று எகிப்தில் விரல் சூப்பும் குழந்தைக் கூடச் ச�ொல்லிவிடும். அன்றைய நிலையில் துதன்காமூனின் கல்லறையில் புதையல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாகச் ச�ொல்ல முடியாவிட்டாலும் அதைக் கண்டுபிடிக்கப் பணத்தைத் தண்ணியாகச் செலவு செய்தாக வேண்டும் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்த விசயமாக இருந்தது. பணத்தைத் தண்ணியாகச் செலவு செய்ய 1900-களில் லார்ட் கார்னர்வோன் என்பவர் முன் வந்தார். எகிப்தில் துதன்காமூனுடைய கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் த�ொல் ப�ொருள் ஆராய்ச்சிப் பணிக்கு ஓவர்ட் கார்டர் முன்வந்தார். இதன் பிறகு ஓவர்ட் கார்டர் சுமார் 16 ஆண்டுகளைத் துதன்காமூனின் கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக வேண்டி மட்டுமே ஒட்டும�ொத்தமாகச் செலவு செய்திருக்கிறார்.

நவீனா அலெக்சாண்டர்

3

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

துதன்காமூனின் கல்லறைக் குறித்த அடிப்படைத் தகவல்களை அலைந்து திரிந்து தேடித் தேடி சேகரிப்பதற்கே ஓவர்ட் கார்டருக்கு ஆறு வருடங்கள் பிடித்திருக்கிறது. கல்லறையின் மிகச் சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கும் சேர்த்தேதான் இந்த ஆறு வருடங்கள். அடுத்து கல்லறையின் வாசலைக் கண்டுபிடிப்பதற்கும், கல்லறையின் வாசலுக்கு முன்பிருந்த பாலைவன கல், மணல், தூசி தும்பைகளை அகற்றுவதற்கு என்று மேலும் ஆறு வருடங்கள் பிடித்திருக்கிறது. அதன் பிறகு கல்லறையின் வாசலைத் திறந்து ஒவ்வொரு அறையிலும் இருந்த புதையல் ப�ொருட்களையும் பழங்காலப் ப�ொருட்களையும் கண்காட்சியகத்திற்கு முழுதுமாக நகர்த்தி முடிக்க அடுத்து நான்கு வருடங்கள் பிடித்திருக்கின்றன. இந்தக் காரியங்கள் ஒருபக்கம் நடந்துக�ொண்டிருக்கும்போதே லார்ட் கார்னர்வோனுக்கும் எகிப்திய அரசாங்கத்திற்கும் இடையே முடிவாகியிருந்த ஒப்பந்தத்தை எகிப்திய அரசாங்கம் திடுதிப்பென்று பாதியிலேயே முறித்துக்கொண்டுவிட்டது. அதாவது இந்தக் கண்டுபிடிப்புக் காரியத்திற்கு ஆகும் ம�ொத்த செலவில் சரி பாதியை எகிப்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக முடிவான ஒப்பந்தத்தைத்தான் எகிப்திய அரசாங்கம் முறித்துக்கொண்டுவிட்டது. இந்தக் கண்டுபிடிப்பிற்குச் சல்லிப் பைசாகக் கூடக் க�ொடுக்க முடியாது அதே சமயத்தில் கல்லறையில் இருந்து எடுக்கப்படும் திருகாணி அளவுப் ப�ொருள் கூட எகிப்திய அரசாங்கத்திற்குச் ச�ொந்தம் என்று ச�ொல்லிவிட்டது. எகிப்திய அரசாங்கத்தின் இந்தத் திடீர் பின் வாங்கல் லார்ட் கார்னர்வோனைப் ப�ொறுத்தவரையில் அதிர்ச்சிகரமான விசயம�ோ ஆச்சரியமான விசயம�ோ கிடையாது. பணம் என்பது அவருக்குப் பெரிய விசயமே கிடையாது என்பதால். இருந்தாலும் எகிப்திய அரசாங்கத்தின் பின் வாங்கலைச் சரி கட்ட அவர் டைம்ஸ் பத்திரிக்கையுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துக�ொண்டார். அவருடைய கண்டுபிடிப்பு குறித்த செய்திகளை டைம்ஸ் பத்திரிக்கை மட்டுமே அதிகாரப் பூர்வமாக வெளியிடும் ஒப்பந்தம் அது. இதன் மூலம் கணிசமான த�ொகையை அவர் பத்திரிக்கையிடமிருந்து பெற்றுக்கொண்டார். டைம்ஸ் பத்திரிக்கைக்கும் இது மிக இலாபகரமான ஒப்பந்தம் காரணம் துதன்காமூன் கல்லறைக் கண்டு பிடிப்பு செய்தியை க�ொடுப்பதன் மூலம் உலகளவில் அதனுடைய வாசகர் த�ொகையையும் சந்தாதாரர் த�ொகையையும் பெருக்கிக்கொள்ள முடியுமே. உண்மையில் அதுதான் நடக்கவும் செய்தது. துதன்காமூனை வைத்து டைம்ஸ் பத்திரிக்கை மட்டும் கல்லாக் கட்டினால் மற்ற உலகப் பத்திரிக்கைகள் வேடிக்கையாப் பார்த்துக்கொண்டிருக்கும். கல்லறை கண்டுபிடிப்புக் குறித்த உடனுக்குடனான அதிகாரப் பூர்வ செய்தியை வெளியிட முடியாவிட்டால் என்ன அது குறித்த வதந்திகளை வெளியிட முடியும்தானே. இதுதான் தூத அரசனுடைய சாபம் த�ொடர்பான கதைகளின் ரிஷி மூலம். ஒருபக்கம் டைம்ஸ் பத்திரிக்கை ஓவர்ட் கார்டரின் கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் சில பத்திரிக்கைகள் எகிப்திய சாபங்கள் குறித்த சங்கதிகளைக் கலந்துகட்டி சுவாரசியமான கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தன. அதாவது லார்ட் கார்னர்வோனும், ஓவர்ட் கார்டரும் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு தீமையைக் கண்டுபிடித்து எழுப்பிவிடப் ப�ோவதாகவும், இதன் மூலம் பார�ோ துதன்காமூனுடைய சாபத்தை உலக மக்கள் மீது க�ொண்டு வரப் ப�ோவதாகவும் உலக மக்களின் சுவாரசியத்தைப் பெரும் அளவில் தூண்டிவிட்டார்கள். இந்தக் கதைகளை உண்மையாக்குவதுப்போலத் த�ொடர்ந்து சில மரணச் சம்பவங்களும் நிகழத்தொடங்கின. அவ்வளவுதான் துதன்காமூனுடைய சாபம் வேலை செய்யத் த�ொடங்கிவிட்டதாக அந்தச் சில பத்திரிக்கைகள் கதறின. துதன்காமூனுடைய கல்லறையை ஓவர்ட் கார்டர் 1922-ல் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த ஒரு சில மாதங்களிலேயே லார்ட் கார்னர்வோன் இறந்துப்போனார். இதைத் த�ொடர்ந்து வரிசையாக இந்தக் கண்டுபிடிப்பில் த�ொடர்புடையவர்கள் அகால மரணமடையத் த�ொடங்கினார்கள். இதில் அடுத்ததாக மரணமடைந்தவர் இந்தக் கண்டுபிடிப்பில் ஓவர்ட் கார்டருக்கு பெரும் உதவியாக இருந்த ஏ.சி. மேஸ்.

4

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அடுத்தது ஓவர்ட் கார்டரின் தந்தை தற்கொலை செய்துக�ொண்டார். அவர் தற்கொலை செய்துக�ொள்ளும் ப�ோது எழுதி வைத்திருந்த கடிதம் இப்படிச் ச�ொன்னது, ‘இதற்கு மேலும் அமானுஷ்யங்களின் அட்டகாசங்களை என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நிரத்தர அமைதியை ந�ோக்கி நான் ப�ோகிறேன்.’ அடுத்தது லார்ட் கார்னர்வோனின் நெருங்கிய நண்பரின் மரணம். இந்த மரணப் பட்டியலில் அடுத்து வருபவர் எகிப்தியாலஜிஷ்டும், த�ொல்லியலாளரும், எழுத்தாளருமான வெய்கள். கேட்கவேண்டுமா வதந்திகளுக்கு. துதன்காமூனின் சாபத்தைக் குறித்துப் படித்தும், இந்த மரண நிகழ்வுகளைக் குறித்துப் படித்தும் பீதியடைந்த மேற்குலக அப்பாவிகளில் சிலர் தாங்கள் எப்போதே வாங்கி வைத்திருந்த (அதாவது எகிப்திலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவரப்பட்டுக் கள்ள சந்தையில் விற்கப்பட்ட) எகிப்திய பழமையான ப�ொருட்கள் எல்லாவற்றையும் வாரித் துடைத்து உள்ளூர் கண்காட்சியகங்களுக்குப் பார்சல் செய்துவிட்டார்கள். துதன்காமூன் மரணத் தேவதை மற்றும் அனுபிஸ் கடவுளுடன் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பீதியில். இதில் விசேசம் இறந்த அனைவரும் இயற்கையாக மரணமடைந்தவர்கள். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டுத் துதன்காமூன் சாபத்திற்கு நெய்வார்க்கப்பட்டது. துதன்காமூனுடைய கல்லறையைக் கண்டுபிடித்த ஓவர்ட் கார்டர் மட்டும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பிறகு ஏறத்தாழ பதினெட்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். ஆனால் அந்த உண்மையைக் குறித்துத் துதன்காமூன் சாப சுவாரசிய வதந்திகளைக் கிளப்பிய எந்தப் பத்திரிக்கையும் கண்டுக�ொள்ளவேயில்லை. உலக மக்களும் அது எப்படி, இந்தக் கண்டுபிடிப்பின் மூலகாரணமான அவரை மட்டும் துதன்காமூனுடைய சாபம் ஒன்றுமே செய்யவில்லை என்கிற கேள்வியையும் கேட்கவேயில்லை. பதினெட்டு வருடங்கள் கழித்து ஓவர்ட் கார்டர் இயற்கையாகத்தான் மரணமடைந்தார். சாபங்கள் உண்மைய�ோ இல்லைய�ோ பாக்டீரியாக்களும், சல்பர் ப�ோன்ற விச வாயுக்களும் உண்மை. ஆம் பல ஆயிரம் ஆண்டுகளாகச் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் உள் நுழைய முடியாமல் மூடியே இருக்கும் பிரமிட்களுக்குள்ளும் கல்லறைகளுக்குள்ளும் நுண்ணுயிர்களும், விச வாயுக்களும் சேர்ந்துதானே கிடக்கும். இவை சேர்ந்துக்கிடக்கும் ஒரு அறைக்குள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஒருவர் சென்றால் சில உடல் நலக் குறைவுகள் ஏற்படத்தானே செய்யும். இத்தகைய உடல் நலக் குறைவுகள் எகிப்திய த�ொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பழக்கமான ஒன்று. ஓவர்ட் கார்டரும் கூடத் துதன்காமூன் கல்லறையைக் கண்டுபிடித்து அதன் வாயிற் கதவை திறப்பதற்கு முன்பாக அதில் சிறிய துளையை ஏற்படுத்தி அந்தத் துளைக்கு நேராக மெழுகுவர்த்தித் தீச் சுடரை காட்டியதாகவும், தீச் சுடர் பக்கென்று பிடித்துக்கொண்டதால் அந்த அறைக்குள் விச வாயு சேர்ந்திருப்பதை அறிந்துக�ொண்டு அதை வெளியேற்றிய பிறகே அந்த அறைக்குள் தான் நுழைந்ததாகவும் தன்னுடைய கண்டுபிடிப்பு அனுபவங்களில் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே எழுதாமல் விட்ட ஒரு விசயம், ஒப்பந்தத்திலிருந்து எகிப்திய அரசாங்கம் பின்வாங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் துதன்காமூன் கல்லறையிலிருந்து பல அறிய விலைமதிக்க முடியாத பழமையான ப�ொருட்களை இலண்டனுக்குக் கடத்தியதை. இலண்டன் மையக் கண்காட்சியகத்திலிருக்கும் சில எகிப்திய பழமைப் ப�ொருட்கள் இப்படியாக வந்து சேர்ந்தவைதான். இப்படியான பெயருக்கும், புகழுக்கும், அமர்க்களங்களுக்கும், ச�ொந்தக்காரரான பார�ோ துதன்காமூனைக் குறித்து மேலும் அறிந்துக�ொள்ள நீங்கள் விரும்புவீர்கள்தானே. விரும்பாமலா. ஆனால் துதன்காமூனை பற்றித் தெரிந்துக�ொள்வதற்கு முன்பு எகிப்திய நாகரீகம் கண்ட அதிரடி பார�ோவைக் குறித்து அறிந்துக�ொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் அவருக்கும் துதன்காமூனுக்கும் மிக மிக நெருங்கிய த�ொடர்பு உண்டு. வாருங்கள் அந்த அதிரடி மன்னனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இதற்கு 2300 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்து நாம் எகிப்திற்குப் ப�ோகவேண்டும். ப�ோகலாம். நவீனா அலெக்சாண்டர்

5

அகநேத்தன் கி.மு. 1353 – 1336 (18-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

துத்தன்காமூனுடைய கல்லறையில் ஏகப்பட்ட தங்கப் புதையல் இருப்பதாகப் பழங்காலத்திலிருந்தே ஒரு செவி வழி செய்தி எகிப்து முழுவதும் பரவியிருந்ததை நாம் முன்பே பார்த்தோம். அவன் எகிப்தின் 18-வது பார�ோ வம்சத்தைச் சேர்ந்தவன். எகிப்திய வரலாற்றைப் பார�ோக்களின் பரம்பரையை அடிப்படையாகக் க�ொண்டு பிரிக்கிறார்கள். பதினெட்டாவது வம்சத்தைப் புதிய அரசாட்சி காலகட்டம் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். இது கி.மு. 1539–1069 வரை ஏறத்தாழ 500 வருடங்கள் நீடித்தது. இதே ப�ோல 31 பார�ோ வம்சங்கள் சுமார் 2300 வருடங்கள் எகிப்தை ஆண்டிருக்கிறது. துத்தன்காமூனுடைய தந்தை பார�ோ அகநேத்தன். இவர் கி.மு. 1353 – 1336 வரை ஆட்சி செய்தவர். அதிரடிகளுக்குப் பெயர் ப�ோனவர். இவருக்கு முன் இருந்த பதினேழு பரம்பரை பார�ோக்கள் எவருமே செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்து அதுவரை உலகம் அறிந்திருந்த எகிப்தின் முகத்தையே மாற்றிப்போட்டவர். பார�ோக்கள் கடவுளின் மறு அவதாரங்கள் என்பதே அதுவரை எகிப்தியர்கள் நம்பி வந்த கடவுள் க�ோட்பாடு. எகிப்திய நாகரீகத்தில் கடவுளர்களுக்குக் குறைச்சலே கிடையாது. பிறப்பிற்கு ஒரு கடவுள், இறப்பிற்கு ஒரு கடவுள், சூரியனுக்கு ஒரு கடவுள், சூரிய வெளிச்சத்திற்கு ஒரு கடவுள், இறப்பிற்குப் பிறகான மறு வாழ்விற்கு ஒரு கடவுள், இறந்தவர்களை இருட்டின் ஊடாக அடுத்த உலகிற்கு அழைத்துச் ச�ொல்ல ஒரு கடவுள், செழிப்புக் கடவுள், தாய் கடவுள், தந்தை கடவுள், சட்டத்திற்கு ஒரு கடவுள்….இப்படிப் ப�ோய்க் க�ொண்டே இருக்கும்….. அத்தோர், பெஸ், தாவரித், அமூன், ரா, ஒசிரிஸ், அனுபிஸ், ஸ்ஸூ, ஏதன்….. இத்தகைய கடவுள்களுக்கு என்று சிறப்பு நகரங்களும் நைல் நதி நெடுக்க இருக்கும். இத்தகைய கடவுள்களுக்கு என்று இருக்கும் க�ோயில்களுக்குத் தனித் தனிப் பூசாரிக் கூட்டம் இருக்கும். அமூன் கடவுளுக்குப் பூசை செய்பவர்கள் ஒசிரிஸ் கடவுளுக்குப் பூசை செய்யமாட்டார்கள். அமூன் கடவுளுக்கு என்று இருக்கும் சிறப்பு நகரங்களில் மற்ற கடவுளர் பூசாரிகளின் அதிகாரம் எடுபடாது. இன்னும் ச�ொல்லப்போனால் இந்தப் பூசாரி கூட்டங்களுக்கிடையில் அதிகாரப் ப�ோட்டி தலைவிரித்தாடி இருக்கிறது. நம்மூர் மூவேந்தர்களைப் ப�ோலவே எகிப்திய பார�ோக்களும் அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கடவுளரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடப்படும் கடவுளின் பூசாரி கூட்டத்திற்கு அடிக்கும் இராஜ அதிகார ய�ோகம். ப�ொதுவாக எகிப்தியர்களின் கண் கண்ட தெய்வங்கள் அமூன் மற்றும் ரா. இத்தகைய கடவுளர் பூசாரிகளுக்கு என்று தனித் தனியே தலைமை பூசாரிகளும் இருப்பார்கள். அரசில் பார�ோக்களுக்கு அடுத்து உச்ச நிலை அதிகாரங்கள் க�ொண்டவர்கள் இந்தத் தலைமை பூசாரிகள். 6

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

குறிப்பிட்ட பார�ோ அமூன் கடவுளின் பரம பக்தர் என்றால் அந்தக் கடவுளின் தலைமை பூசாரிக்கு அடிக்கும் உச்ச அதிகார அதிர்ஷ்டம். மற்ற கடவுளரின் பூசாரிகள் வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டியதுதான். கடவுளர்களின் இம்மண்ணுலக உதவியாளர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டவர்கள் பார�ோக்கள். மக்கள் பார�ோக்களின் வழியாகவே கடவுளர்களிடம் வேண்டுதல் செய்ய முடியும். இதன் காரணமாகவே எகிப்தில் கடவுளர்களின் க�ோயில்கள�ோடு சேர்த்து ஒவ்வொரு பார�ோவின் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் க�ோயில்களும் இருக்கும். மக்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் க�ோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதுப�ோல அப்பொழுது ஆட்சியிலிருக்கும் பார�ோவின் க�ோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்வார்கள். பார�ோக்களின் க�ோயில்கள் அவர்களுடைய பிரமிடுகள் இருக்கும் வளாகத்திலேயே அமைத்திருக்கும். ஒரு பார�ோ ஆட்சிக்கு வந்ததும் செய்யும் முக்கியக் காரியங்களில் ஒன்று தன்னுடைய பிரமிடுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரமிடு கட்டும் வேலைகளைத் த�ொடங்குவது. அந்தப் பிரமிடு வளாகத்திலேயே அவரை மக்கள் வழிபடுவதற்கான க�ோயில்களும் கட்டப்படும். அந்தக் க�ோயிலின் சந்நிதியில் ஓசிரிசின் உருவில் அந்தக் குறிப்பிட்ட பார�ோவின் சிலை வைக்கப்பட்டிருக்கும். ஒரு பார�ோ இறக்கும்போது அவருக்குத் திருப்தி தரக் கூடிய விசயங்களில் ஒன்று அவருடைய பிரமிடு கட்டி முடிக்கப்பட்டுத் தயாராக இருப்பதும் ஒன்று. பிரமிடு கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே ஒரு பார�ோ இறந்துவிட்டால் அது ஒரு குறையாகத்தான் பார்க்கப்படும். பார�ோக்களின் மூலமே கடவுளை எகிப்தியர்கள் அடைய முடியும் என்கிற க�ோட்பாட்டை முதல் முறையாக அடித்து ந�ொறுக்கியவர் அகநேத்தன். அடடே அப்படியானால் அகநேத்தன் எகிப்தியர்களின் கடவுள் க�ோட்பாட்டில் ஒரு ஆர�ோக்கியமான மாற்றத்தைக் க�ொண்டு வந்திருப்பார் ப�ோலிருக்கிறது என்று முந்திக்கொள்ளவேண்டாம். கடவுளர்களைப் பார�ோக்களின் வழியாகச் சுற்றி வளைத்துக்கொண்டு வழிபட வேண்டாம் ஏனென்றால் இனி அந்தக் கடவுளே நான்தான் என்று ஒரே ப�ோடாகப் ப�ோட்டுவிட்டார் அகநேத்தன். ஒட்டும�ொத்த எகிப்தும் அதிர்ந்துவிட்டது. மக்கள் அதிர்ந்தார்கள�ோ இல்லைய�ோ பூசாரிகள் எல்லாம் கதிகலங்கிவிட்டார்கள். எகிப்தை சுமார் 2300 வருடங்களாக அரசாண்ட 150-க்கும் மேற்பட்ட பார�ோக்களிலேயே படு வின�ோதமான ஒரே பார�ோ அகநேத்தன் மட்டுமே. எகிப்திய பிரமிடுகளுக்கும் ஏலியன்களுக்கும் த�ொடர்பிருக்கலாம் என்று இன்றைக்குச் சில த�ொலைக்காட்சிகளும் எழுத்தாளர்களும் கதைகட்டுவதற்கு வழிகாட்டியவர் இந்த அகநேத்தன். அகம் பிரம்மாஸ்மி என்று அகநேத்தன் எகிப்தியர்களை மிரள விட்ட சங்கதிகளைப் பார்ப்பதற்கு முன்னர்ப் பிரமிடுகளைக் குறித்துக் க�ொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம். அகநேத்தன் ஆட்சிக் காலத்தில் பிரமிடுகள் வழக்கில் இல்லை. அவனுடைய ஆட்சிக் காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே பிரமிடுகளைக் கட்டும் வழக்கத்தைப் பார�ோக்கள் க�ொஞ்சம் க�ொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அகநேத்தன் காலத்தில் கல்லறைகள் வழக்கிற்கு வந்துவிட்டன. இந்தக் கல்லறைகளை ‘அரசர்களின் சமவெளி’ என்று இன்றைக்கு அடையாளம் காட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பார�ோக்களை அடக்கம் செய்யும் மலை முகடுகளை அரசர்களின் சமவெளி என்று ச�ொல்வதைப் ப�ோலப் பார�ோக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அடக்கம் செய்யும் மலை முகடுகளை ‘அரசிகளின் சமவெளி’ என்று அழைக்கிறார்கள். நாம் இரண்டையும் ப�ொதுவாக அரச குடும்பத்தின் நித்திரை நிலம் என்று வைத்துக்கொள்வோம். குடைவரை என்கிற கட்டிடகலை அமைப்பை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்தவர்கள் எகிப்தியர்கள் என்பதற்கு உதாரணம் இந்த நித்திரை நிலம். குடைவரை கட்டிடக் கலை என்பது மலை முகடுகளில் இருக்கும் பாறைகளைக் குடைந்து கட்டிடமாக மாற்றுவது. (நான் இயக்கிய Ancient Art secrets of India - Mamallapuram என்கிற மாமல்லபுரம் குறித்த நவீனா அலெக்சாண்டர்

7

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஆவணப் படத்தில் எகிப்தியர்களின் குடைவரை கட்டிடக் கலைக்கும் மாமல்லபுரம் குடைவரைகளுக்கும் இருக்கும் த�ொடர்பை பற்றிப் பேசியிருக்கிறேன். இந்த ஆவணப்படத்தை youtube-ல் பார்க்கலாம். Part I - https://www.youtube.com/watch?v=E4LrZEDHWkM Part II - https://www.youtube.com/watch?v=tEwHfKqNNMA). இப்படியான குடைவரைக் கட்டிடத்திற்குப் பின் பக்க வழிய�ோ அல்லது பக்கவாட்டு வழிய�ோ இருக்காது முன் பக்க வழி மட்டுமே இருக்கும். முன் வழியாகச் சென்று முன் வழியாக மட்டுமே வெளியே வர முடியும். இதைத்தான் பார�ோக்கள் விரும்பினார்கள். காலம் காலமாக அவர்களுக்கு இருந்து வந்த ஒரு பெரும் தலைவலியைக் க�ொஞ்சமாவது குறைத்தது இந்தக் குடைவரை கல்லறைகள். வரம் க�ொடுத்த சாமியின் தலையிலேயே கைவைப்பதுப�ோலக் கடவுளின் உதவியாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்ட பார�ோக்களின் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார்கள் கல்லறை க�ொள்ளையர்கள். பிரமிடுகளை இந்தக் க�ொள்ளையர்கள் சூறையாடுவதைப் பார�ோக்களால் தடுக்கவே முடியவில்லை. பிரமிடுகளில் வைக்கப்படும் தங்கத்தின் அளவைச் ச�ொல்லிமாளாது. சில பிரமிடுகளில் உட்புற அறைகளில் இருக்கும் கதவுகள் கூடத் தங்கத்தில் செய்யப்பட்டிருக்கும். சில அறைகளின் சுவர்கள் தங்கத்தில் முலாம் பூசப்பட்டிருக்கும். இத்தோடு தங்கத்தின் கைகள் நின்றுவிடாது. பார�ோக்களின் மம்மிபிகேசன் செய்யப்பட்ட உடலை வைக்கும் சார்கோஃபிகஸ் (கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டி)-களும் சில நேரங்களில் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். சார்கோஃபிகஸ்கள் டன் கணக்கில் எடைக் க�ொண்டவையாக இருக்கும். உதாரணமாகத் துத்தன்காமூனின் சார்கோஃபிகசை மூடியிருந்தது டன் கணக்கில் எடைக் க�ொண்ட அவன் முகம் செதுக்கப்பட்ட தங்கப் பலகை. சார்கோஃபிகஸ்களின் உள்ளேயும் தங்க சரிகை வேலைப்பாடுகள் க�ொண்ட துணிகள் விரிக்கப்பட்டிருக்கும். பார�ோக்களின் மம்மிகளும் தங்கச் சரிகை க�ொண்ட உடைகளால் சுற்றப்பட்டிருக்கும். இதைத் தவிரப் பிரமிடுகளின் உள் அறைகளில் வைக்கப்படும் முழுக்க முழுக்கத் தங்கத்தால் செய்யப்பட்ட இரதங்கள், விலங்குகளின் சிலைகள், சமையலறை ப�ொருட்களையும் கணக்கில் எடுத்தால் பிரமிடுகள் எல்லாம் தங்க சுரங்கங்களுக்கு நிகர். இப்படித் தங்க சுரங்கங்களாக இருக்கும் பிரமிடுகளை யார்தான் விட்டுவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிரமிடுகளுக்குள் இருக்கும் பெரும் அளவிலான தங்கத்தைத் திருட உயிரையும் பணையம் வைக்கக் கல்லறைத் திருடர்கள் தயங்கவில்லை. கல்லறை திருடர்களின் அட்டூழியத்தைத் தடுக்கப் பிரமிடுகளுக்குள் எலிப்பொறி ப�ோன்ற பெரிய பாறைகளால் ஆன ப�ொறிகளைக் கூட அமைத்துவைத்துப் பார்த்துவிட்டார்கள் பார�ோக்கள், ஆனால் க�ொள்ளையைத்தான் தடுக்க முடியவில்லை. பிரமிடுகளின் தங்கம் க�ொள்ளைப் ப�ோவதைக் கூடப் பார�ோக்கள் ப�ொறுத்துக்கொண்டார்கள் ஆனால் தங்கத்தைக் க�ொள்ளையடிக்கிறேன் பேர்வழி என்று கல்லறைக் க�ொள்ளையர்கள் செய்த அராசகங்களைத்தான் அவர்களால் ப�ொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எகிப்தியர்களைப் ப�ொறுத்த வரை மனிதன் இறந்தவுடன் அவன் கரிய இருட்டின் ஊடக நீரில் பயணம் செய்து மறு உலகை அடைகிறான். இந்த மறு உலகப் பயணத்தில் மனிதர்களுக்கு வழித் துணையாக வந்து அவர்களைப் பத்திரமாக மறு உலகில் க�ொண்டு ப�ோய்ச் சேர்ப்பது அனுபிஸ் கடவுள் (எகிப்தியர்கள் இன்பு என்று அழைக்கிறார்கள். அனுபிஸ் என்பது கிரேக்க வடிவம்). இது மாத்திரமல்ல அனுபிஸ் மேலும் பல காரியங்களையும் செய்வார் அவற்றைச் சமயம் வருப்போது பார்க்கலாம். அனுபிஸ் மனித உடலில் நரியின் தலை க�ொண்ட உருவத்திலிருப்பார். பார�ோக்களைப் ப�ொறுத்த வரைக்கும் மறு உலகிலும் அவர்கள் பார�ோக்களாகத்தான் த�ொடர்வார்கள் என்று நம்பினார்கள். மனித உடலுடன் மறு உலகப் பயணத்தை மேற்கொள்ள முடியாது. மனிதனின் ஆன்மா மட்டுமே மறு உலகப் பயணத்தை 8

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மேற்கொள்ள முடியும். ஐந்தாயிரம் வருடத்திற்கு முற்பட்ட எகிப்தியர்கள் இறப்பு என்பதை மூன்று படி நிலைகளாகப் பிரித்திருந்தார்கள். ‘க்கா’, ‘கா’ மற்றும் ‘ப்பா’. என்ன தமிழ் வாடை அடிக்கிறதே என்றுப ய�ோசிக்கிறீர்களா. அந்த ய�ோசனையை அப்படியே ப�ொத்தி பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பண்டை கால எகிப்தியர்களுக்கும் த�ொல் தமிழர்களுக்கும் இருக்கும் பல பலமான த�ொடர்புகளைச் ச�ொல்லக் கூடிய சங்கதிகள் பின்னால் வர இருக்கின்றன. க்கா என்பது இறப்பிற்குப் பிறகான மனிதனின் உடல். அதாவது மனிதனின் பிணம். பிணம் அழியும் தன்மைக�ொண்டதால் அதைப் பாதுகாக்கவே மம்மிபிகேஷன் முறையை எகிப்தியர்கள் கண்டுபிடித்தார்கள். இறப்பிற்குப் பிறகான மறு வாழ்க்கையில் உடல் தேவை என்பதால். இந்த க்கா பிரமிடுகளிலும் கல்லறைகளிலும் மீன் வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும். கா என்பது ஒரு மனிதனின் ஆவி உருவம் ப�ோன்றது. இந்தக் கா ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பிலிருந்தே இருந்து வரக் கூடியது. ஒரு மனிதன் பிறக்கும்போதும், அவன் வாழ்ந்து மடியும்போதும் அவனுடன் கூடவே இருந்து வருவது. அவன் இருந்த பிறகு அவன் பிரமிடில�ோ அல்லது கல்லறையில�ோ ஆவி வடிவில் இருப்பதும் இந்தக் காவே. கா-வே பிரமிடுகளிலும் கல்லறைகளிலும் இறந்தவனுக்குப் படைக்கப்படும் உணவுப் ப�ொருட்களையும் வாசனைப் ப�ொருட்களையும் நுகரக் கூடியது. இது நினைத்த நேரத்தில் எங்கும் உலவித் திரியக் கூடியது என்றும், நினைத்த வடிவை எடுக்கக் கூடியது என்றும் பலமாக நம்பினார்கள் பண்டைய எகிப்தியர்கள். இது இரண்டு மனித கரங்களின் வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தது, ப்பா. இது ஏறக் குறையக் கா ப�ோன்றதே. இதுவும் ஒரு மனிதனின் ஆவி வடிவம்தான். ஆனால் இது மறு உலகத்தில் ரா மற்றும் ஓசிரிஸ் கடவுளருடன் இருக்கக் கூடியது என்பது நம்பிக்கை. இது பறவையின் உடலில் மனிதனின் தலைக் க�ொண்ட உருவமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இறப்பிற்கு எகிப்தியர்கள் இப்படித்தான் அர்த்தம் க�ொடுத்திருந்தார்கள். இறந்து மறு உலகிற்குச் சென்றவுடன் அந்த உலகில் அவர்களுக்கு மீண்டும் உடல் தேவைப்படும் அல்லவா அப்பொழுது இந்த உலகில் அவர்களுக்கு இருந்த அதே உடலைப் பயன்படுத்திக்கொள்வதற்குத்தான் எகிப்தியர்கள் இந்த உலகில் இறந்தவுடன் தங்களின் உடல்களை மம்மிக்களாக மாற்றுவது. இறந்த உடல் ஒழுங்காக மம்மிபிகேசன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அனுபிஸ் கடவுள் அதைச் சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்து உறுதிப்படுத்திக் க�ொண்ட பிறகே மறு உலகிற்கான பயணம் த�ொடங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆக மம்மிபிகேசன் செய்யப்பட்ட உடல் அதி முக்கியம். அதிலும் மறு உலகிலும் பார�ோக்களாகவே த�ொடரப் ப�ோகும் பார�ோக்களுக்கு அது அதி முக்கியத் தேவைதானே. அப்படியாகப்பட்ட மம்மிக்களை எடுத்துப்போட்டு நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்தால் எப்படி இருக்கும். கல்லறைக் க�ொள்ளையர்கள் இந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பார�ோக்களின் மம்மிக்களைச் சுற்றியிருக்கும் துணிகளில் இருக்கும் தங்கத்தையும் ஒட்ட ஒட்ட உருக்கி எடுப்பதற்காக மம்மிக்களை அதனுடைய பிரமிடுகளுக்குள் இருந்த இழுத்து எடுத்து வந்து பாலைவனத்தில் ப�ோட்டு எறித்திருக்கிறார்கள். துணியில் இருந்த தங்கத்தை உருக்கிய மாதரியும் ஆயிற்று பாலைவனக் குளிரில் நெருப்பு காய்ந்த மாதரி ஆயிற்று ஒரே நெருப்பில் இரண்டு லாபம். எந்த உடல் பார�ோக்களுக்கு மறு உலகில் அதி முக்கியம�ோ அதை இந்த உலகிலேயே நெருப்பு வைத்துச் சாம்பலாக்கினால் எப்படி இருக்கும். மறு உலகில் பார�ோக்கள் உடலுக்குப் பிச்சையா எடுக்க முடியும். பார�ோக்களால் கல்லறைக் க�ொள்ளையர்களின் இந்த அராசகத்தைப் ப�ொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தங்கத்தை வேண்டுமானால் க�ொள்ளையடித்துவிட்டுப் ப�ோய்தொலையுங்கள் மம்மிக்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அரசாணை வெளியிடாத குறைதான். இதில் க�ொடுமை, பிரமிடுகளுக்குக் காவலாகப் பார�ோக்களால் நியமிக்கப்பட்டவர்களே நவீனா அலெக்சாண்டர்

9

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கல்லறைக் க�ொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்துக�ொண்டு இந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் மரண தண்டனைதான். கல்லறை க�ொள்ளையில் ஈடுபட்டுப் பிடிபட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்குத் தண்டனை விதிக்கும் சம்பவங்களை எகிப்தியர்கள் பப்பைரஸ் சுருள்களில் ஆவணங்களாக எழுதிவைத்திருக்கிறார்கள். இத்தகைய பப்பைரஸ் சுருள்களைப் படிப்பது படு சுவாரசியமாக இருக்கும். இன்றையிலிருந்து சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் வாழ்க்கை சம்பவங்களை அவர்களின் கைகளினாலேயே எழுதிய பதிவுகளாகப் படிக்கும்போது மீண்டும் அவர்கள் நம் கண் முன் இரத்தமும் சதையுமாக உயிர் பெற்று வருவது ஒரு அலாதியான அனுபவம். பெரும்பாலும் இப்படிப் பிடிபடும் கல்லறைக் க�ொள்ளையர்களை முடிந்தவரை பார�ோக்களுக்கு முன்பு க�ொண்டுப�ோய் நிறுத்துவதற்கு முன்பே அவர்களைத் தப்பிக்க விடுவதைய�ோ அல்லது க�ொலை செய்வது ப�ோன்ற காரியங்களைய�ோ ஓவர்சீயர்கள் (இவர்கள்தான் பிரமிடுகளைக் காவல் புரிவதற்கென்று பார�ோக்களால் நியமிக்கப்பட்டவர்கள்) செய்திருக்கிறார்கள். கல்லறை க�ொள்ளையர்களைப் பார�ோக்களுக்கு முன்பு க�ொண்டுப�ோனால் தங்களின் களவாணித்தனமும் வெளிப்பட்டுவிடும் என்கிற பீதிதான். தங்களுடைய முன்னோர்களின் மம்மி உடல்களைக் காப்பாற்ற ஓவர்சீயர்களை நியமித்தால், அவர்களின் பிராடுத் தனங்களைத் தணிக்கை செய்யவே ஒரு தனி விசாரணைக் குழுவை மாத மாதம் பிரமிடுகளுக்கு அனுப்பிவைப்பது தலைவலியை மேலும் திருகு வலியாக்கியது பார�ோக்களுக்கு. பிரமிடுகளே வேண்டாம்டா சாமி என்று அவர்கள் முடிவெடுக்கவும் இதுதான் முக்கியக் காரணம். பிரமிடுகளுக்கு மாற்றாகக் குடைவரைகளைப் பார�ோக்கள் தேர்ந்தெடுத்தார்கள், தங்களுடைய மம்மிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள. குடைவரை கல்லறைகள் பெரும் அளவில் கல்லறை க�ொள்ளையர்களை வாலாட்டவிடாமல் தடுத்துவிட்டது. குறைந்த பட்சம் பார�ோக்களின் மம்மிகள் தப்பின. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் பெரும்பாலான மம்மிகள் இத்தகைய குடைவரை கல்லறைகளில் இருந்தே வந்தவை. பிரமிடுகளில் இருந்த பெரும்பாலான மம்மிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லறைக் க�ொள்ளையர்களால் எறித்து நாசமாக்கப்பட்டுவிட்டது. சில பிற்காலப் பார�ோக்கள் கல்லறைக் க�ொள்ளையர்களின் கைகளில் அகப்படாமல் தப்பிப் பிழைத்த மம்மிகளையும் சில தங்கப் ப�ொருட்களையும் இந்தக் குடைவரை கல்லறைகளுக்கு மாற்றிப் பாதுகாத்தும் இருக்கிறார்கள். சரி பிரமிடுகள் சமாச்சாரத்தை இப்பொழுதைக்கு நிறுத்திக்கொண்டு அகநேத்தன் சங்கதிக்குத் திரும்புவ�ோம். இவனுடைய உண்மையான பெயர் அமென�ோதெப் IV. இவனுடைய மனைவி எகிப்தின் பேரழகியாகக் கருதப்படும் நெஃப்ரிடீட்டி. கிளிய�ோப்பாட்ராதானே எகிப்தின் பேரழகி என்று நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் சந்தேகமேயில்லை நீங்கள் பள்ளிப் பாட புத்தக வரலாற்றைப் படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் பள்ளிக் கூட வரலாற்றுப் பாட புத்தகங்கள் தவறுகளைத்தான் உண்மைகள் என்று ச�ொல்லிக்கொடுக்கும் மிகச் சிறந்த கருவிகள். நெஃப்ரிடீட்டி பின்னாட்களில் தன்னுடைய பெயரை நெஃப்ர்நெஃபரேட்டன் என்று மாற்றிக்கொண்டாள் கணவன் அகநேத்தனுக்குப் பயந்து. அகநேத்தன் ஏதன் கடவுளின் அதி தீவிர பக்தன். முற்றிய பக்தி ஒரு கட்டத்தில் அகநேத்தனை தான்தான் ஏதன் கடவுள் என்று நினைத்துக்கொள்ளும் அளவிற்குக் க�ொண்டு ப�ோய்விட்டது. பார�ோவாக முடி சூட்டிக்கொண்ட ஒரு சில ஆண்டுகளிலேயே தன்னை ஏதன் கடவுள் என்று அறிவித்தான். அமென�ோதெப் என்கிற தன்னுடைய பெயரையும் அகநேத்தன் என்று மாற்றிக்கொண்டான். இங்கே நாம் க�ொஞ்சம் எகிப்தியர்களின் கடவுளர்களைப் பற்றித் தெரிந்துக�ொள்வது நல்லது. எகிப்தியர்களின் பழைய – எகிப்தைப் ப�ொறுத்தவரையில் பழைமை என்றாலே அது இன்றையிலிருந்து 7000 வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் என்று எடுத்துக்கொள்ள 10

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

வேண்டும் - க�ோயில் எழுத்துக்கள் அதும் என்கிற கடவுள் இந்த உலகத்தையும் எகிப்தின் அரசர்களையும் படைத்ததாகச் ச�ொல்கின்றன. இந்த அதும் கடவுளை தெம் என்றும் அழைப்பார்கள். பெண்ணின் ஆற்றல் என்பது அவருடைய சக்திகளின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது எகிப்தியர்களின் பழமை கடவுள் க�ோட்பாடுகளில் ஒன்று. இதன் காரணமாக எகிப்தியர்களின் கடவுளர் அனைவருக்கும் மனைவிகள் உண்டு. இதன்படி அதும் கடவுளுக்கு நெபெத் ஓதெப் என்கிற மனைவி உண்டு. இவர்கள் இருவருக்கும் ஸ்ஸூ மற்றும் டெஃப்னூட் என்று இரண்டு பிள்ளைகள். ஸ்ஸூவும் டெஃப்னூட்டும் சிங்க உருவம் க�ொண்டவர்கள். இவர்கள் ஒசிரிஸ் கடவுளின் அரசாங்கத்தைக் காவல் புரிபவர்கள். அதும் கடவுளும் ரா என்கிற சூரியக் கடவுளும் ஒன்றுதான் என்றும் கருதப்படுகிறது. ஸ்ஸூவுக்கும், டெஃப்னூட்டுக்கும் பிறந்தவர்கள் கெப் மற்றும் நுட். க�ொப்புக்கும் நுட்டுக்கும் பிறந்தது இசிஸ் இப்படியே ஒசிரிஸ், செத், நெப்தைஸ் என்று ஒரு பட்டியல் ப�ோகிறது. இப்போதைக்கு இதுவரைக்கும் தெரிந்துக�ொண்டால் ப�ோதும். இந்தக் கடவுளர்களின் பட்டியலை ‘இன்னெட் ஆப் ஹெலிய�ோப�ோலிஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அகநேத்தனுக்கு முன்பு 3000 வருடங்களாக அதும் எனப்படுகிற ரா கடவுளையே படைப்பு கடவுளாக எகிப்தியர்கள் வழிபட்டுவர திடுதிப்பென்று நான்தான் படைப்புக் கடவுள், மற்ற கடவுள்கள் இனி கிடையாது என்றால் மக்கள் அதிராமல் பிறகு என்ன செய்வார்கள். மக்கள் இனி மற்ற கடவுளர்களை வழிபடுவதைவிட்டு ஏதன் கடவுளான தன்னையே வழிபடவேண்டும் என்று கட்டளையிட்டான் அகநேத்தன். அனைத்துக் கடவுளர்களின் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டு அவனுடைய வழிபாடே க�ோயில்களில் நடத்தப்பட வேண்டும் என்று பூசாரிகளுக்குக் கட்டளையிடப்பட்டது. தான் கடவுள் என்பதால் தன்னுடைய சிலைகள் மற்ற பார�ோக்களின் சிலைகளைப்போல இருக்கக் கூடாது என்றும் முடிவுகட்டினான். ஏலியன் ப�ோன்ற தலையமைப்பும், கண்ணக் கதுப்புகள் துருத்திக்கொண்டிருக்கும் நீண்ட முகமும், த�ோள்கள் ஒடுங்கிய மெல்லிய உடலும், அடிவயிறு க�ொஞ்சம் பெருத்தும், நீண்ட கால்களும் க�ொண்ட உருவமாகத் தன்னுடைய சிலையைச் செதுக்கி தன்னுடைய கல்லறைக் க�ோயில்களில் மக்கள் வழிபாடு நடத்துவதற்காக நிறுவினான். அகநேத்தனின் இந்தச் சிலையைப் பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஏலியன் உருவமைப்பிலேயே இருக்கும். அகநேத்தன் தன்னைக் கடவுள் என்று நம்பியதால் மற்ற பார�ோக்களின் சிலைகளைப் ப�ோலத் தன்னுடைய சிலைகளையும் வடிக்க அவனுக்கு விருப்பமில்லை. முடிந்தவரை தன்னுடைய சிலை உருவம் மனித உருவ அமைப்பில் இருக்கக் கூடாது என்கிற அவனுடைய எண்ணமே அத்தகைய ஒரு சிலை வடிவமாக வெளிப்பட்டது. கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்து த�ொலைத்தான�ோ என்னவ�ோ! இத்தோடு நிறுத்தவில்லை கடவுளாகிவிட்ட தனக்காக ஒரு தனி நகரமே உருவாக்கவேண்டும் என்று ஒரு நகரத்தை உருவாக்கினான். நம்முடைய பண்பாட்டில் எப்படி முருகக் கடவுளுக்கென்று பழனி, திருச்செந்தூர் ப�ோன்ற சிறப்பு வழிப்பாட்டுத் தளங்கள் இருக்கின்றனவ�ோ அதேப�ோல எகிப்திய நாகரீகத்திலும் கடவுளர்களுக்கென்று சிறப்பு வழிபாட்டுத் தளங்கள் உண்டு. உதாரணமாகத் தீப்ஸ் நகரம் அமூன் கடவுள் வழிபாட்டிற்குரிய சிறப்பு நகரம். அகநேத்தன் என்கிற கடவுளை வழிபட்டுச் சிறப்பிக்க அகடேடன் என்கிற புத்தம் புதிய நகரை உருவாக்கினான். அவனுக்கு முன்பு மூவாயிரம் வருடங்களாக எகிப்திய மக்கள் அறிந்திருந்த மிக முக்கிய நகரங்கள் இரண்டே இரண்டுதான் ஒன்று தீப்ஸ் மற்றது மெம்பிஸ். மூவாயிரம் வருடங்கள் பழமையும் சிறப்பும் மிக்க இந்த இரண்டு நகரங்களையும் இழுத்து மூடிவிட்டு அரச பரிவாரங்களை ஒட்டும�ொத்தமாக அகடேடன் நகரத்திற்கு மாற்றினான். இத்தோடு நிற்கவில்லை அவனுடைய கடவுள் அவதார திருவிளையாடல்கள். உலக மன்னர்கள் ஒருவருமே அவன் காலம் வரையும் ஏன் அவனுக்குப் பிறகும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தான் அவன். அவனுக்கு முன் மூவாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எகிப்தின் வரலாற்றுப் ப�ொக்கிசங்களை அழிக்க உத்திரவிட்டான் அகநேத்தன். நவீனா அலெக்சாண்டர்

11

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

உலகப் புகழ்பெற்ற பிரமிடுகள், பிரமிடு வளாகக் க�ோயில்கள், கர்நாக்கில் (கர்நாக் என்பது நம்முடைய காஞ்சிபுரமும் தஞ்சாவூரும் எப்படிப் பல க�ோயில்களின் நகரங்கள�ோ அதே ப�ோல எகிப்திய நாகரீகத்தின் க�ோயில்களின் நகரம்.) இருந்த பல நூறு க�ோயில்கள் என்று அனைத்திலும் இருந்த மற்ற கடவுள்களின் சிலைகளையும், புடைப்பு சிற்பங்களையும், சித்திரங்களையும் சிதைக்கக் கட்டளையிட்டான். தன்னுடைய நாட்டின் தலை சிறந்த வரலாற்றுப் ப�ொக்கிசங்களைத் தானே அழிக்கும் ஒரு மன்னனை அன்றுதான் உலக வரலாறு கண்டது. மூவாயிரம் ஆண்டுகளாகக் காலம் காப்பாற்றி வந்த வரலாற்று அற்புதங்களைத் தன்னுடைய ஒரே கட்டளையின் மூலம் நிர்மூலமாக்கினான் அகநேத்தன். இப்படிச் சிதைக்கப்பட்ட சிலைகளுக்குப் பதிலாகத் தன்னுடைய ஏலியன் உருவம் க�ொண்ட சிலைகளை நிறுவச் சிற்பிகளையும் கட்டிட கலைஞர்களையும் பூசாரிகளையும் கட்டாயப்படுத்தினான். எகிப்தியர்கள் இனி மற்ற கடவுளர்களின் பெயர்களைத் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்கிற அடுத்த அதிரடி கட்டளையும் அவனிடமிருந்து வந்தது. ஏதன் என்கிற தன்னுடைய பெயரையே மக்களும் மற்ற கடவுள் பூசாரிகளும் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ச�ொன்னது அவனுடைய அரசாணை. இதன் காரணமாகத்தான் அவனுடைய மனைவி எகிப்திய பேரழகி நெஃப்ரிடீட்டி தன்னுடைய பெயரை நெஃப்ர் நெஃப்ரேதன் என்று மாற்றிக்கொண்டாள். எகிப்து முழுவதும் குஞ்சான் குழவான்களிலிருந்து அனைவரின் பெயருக்கு பின்னாலும் ஏதன் ஒட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம். க�ோயில்களில் மற்ற கடவுளரின் சிலைகள் ஒழுங்காகச் சிதைக்கப்படுகிறதா, மக்களும் பூசாரிகளும் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஏதன் என்று சேர்த்துத் தன்னைச் சிறப்பிக்கிறார்களா என்று கண்காணிக்க ஒரு தனிப் படையே ஏற்பாடு செய்தான் அவன். மேலை எகிப்து மற்றும் கீழை எகிப்து என்று எகிப்து முழுவதும் சுற்றித் திரிந்து மற்ற கடவுளர்களின் சிலைகளை அழிப்பதுதான் இந்தப் படைக்குப் பிரதான வேலையே. இந்தப் படைக்கு உள்ளூர் பூசாரிகளும் உதவ வேண்டும் இல்லையென்றால் பூசாரிகளின் தலைதப்பாது. அவன் காலத்திற்கு முன்பு வரை கடவுளர்களின் சிலைகள் காலையும் மாலையும் நகரின் தெருக்கள் வழியாக ஊர்வலம் ப�ோவது வழக்கம். அகநேத்தன் அதற்கும் தடைவிதித்தான். ஏதன் கடவுளாகிய தான் தன்னுடைய க�ோயிலுக்குக் காலையும் மாலையும் குதிரைகள் பூட்டிய இரதத்தில் சென்று திரும்புவதை மக்கள் வழியெங்கும் திரண்டு நின்று சிறப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அகநேத்தனுடைய இத்தகைய நடவடிக்கைள் ஒன்றை மிக உறுதியாகத் தெளிவுபடுத்தியது. அது, எகிப்திய நாகரீகம் அதுவரை அறிந்திருந்த அனைத்துக் கடவுளர்களையும் இல்லாமல் ஆக்கிவிட்டு இனி எகிப்தில் கடவுள் என்றால் அது தான் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவனுடைய தீவிர சிந்தனையை. எகிப்தியர்கள் கடவுளர்களுக்கும் குடும்பம் உண்டு என்று பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் என்பாதல் தன்னுடைய மனைவி மற்றும் ஆறு பெண் குழந்தைகளையும் கூடக் கடவுள்கள் என்று அறிவித்தான். எகிப்தியர்கள் வருடா வருடம் செட் மற்றும் ஓபெட் என்கிற திருவிழாக்களைக் க�ொண்டாடுவார்கள். இந்த இரண்டு திருவிழாக்களையும் இனி எகிப்தியர்கள் தன்னைச் சிறப்பிக்கும் திருவிழாக்களாகக் க�ொண்டாட வேண்டும் என்று மற்றொரு அதிரடியைக் கிளப்பிவிட்டான். நான் கடவுள் என்று தான் செய்யும் அழிச்சாட்டியங்களைப் ப�ொறுக்க முடியாமல் மக்கள் க�ொதித்தெழுந்து தன்னுடைய உயிருக்கு ஆபத்தை உண்டுப் பண்ணாலும் பண்ணிவிடுவார்கள் என்கிற பயம் அவனுக்கு ஒரு பக்கம் இருந்துக�ொண்டேதான் இருந்தது. இதன் வெளிப்பாடாக அவனுடைய அரண்மனைக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாதுகாவல் படையில்லாமல் அவன் நகர்ந்தது கிடையாது. காலையும் மாலையும் தான் கடவுளாக இருக்கும் க�ோயிலுக்குத் தானே சென்று வரும் சடங்கை கூடப் பாதுகாவல் படையின் 12

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

துணையுடன்தான் செய்வான். தான் உருவாக்கிய புதிய நகரத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்குக் குறைச்சல் இல்லாமல் பார்த்துக்கொண்டான். தன்னுடைய பாதுகாவல் படையில் பெரும்பாலும் நுபிய மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்த படை வீரர்களையே வேலைக்கு அமர்த்தியிருந்தான். தலைமை பூசாரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்து, அரசாங்க அதிகாரிகளைத் தங்களின் கைகளுக்குள் ப�ோட்டுக்கொண்டு தன்னைக் க�ொலை செய்தாலும் செய்யலாம் என்கிற பீதியில் தன்னுடைய அரசாங்கத்திலும் அதிகாரமிக்கப் பதவிகளிலும் வெளி நாட்டவர்களையே நியமித்தான். இதெல்லாம் எகிப்திய மக்கள் அதுவரை பார்த்திராத விசயங்கள். கடவுளாகத் தன்னைக் கருதிக்கொண்டவனுக்கு இந்தப் பூமியில் இருந்தவரைக்கும் பயத்திற்குப் பஞ்சமே இல்லை. ஆனால் அவன் எதிர்பார்த்தபடி மக்கள் அவனை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அவன் காலத்திய எகிப்தியர்களின் சராசரி ஆயுட் காலம் 40 வயதுதான் என்று கிடைக்கும் த�ொல்பொருட்கள் உறுதிப்படுத்துகின்றன. அவன் ஆட்சி காலத்திய மக்கள் ஊட்டச் சத்து குறைபாடு க�ொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இவ்வளவிற்கும் நையல் நதியின் விவசாயச் செழிப்பு அன்றைய காலத்திலேயே உலகப் புகழ்பெற்றது. சிந்து நதி விவசாயச் செழிப்புப�ோல. அப்படி இருந்தும் அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து இருந்ததற்குக் கடும் உழைப்புக் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எகிப்திய நாகரீகம் என்றாலே பிரம்மாண்டமான பார�ோ கட்டிடக் கலைதான். அன்றைக்கு எகிப்திய நாகரீகத்தோடு சம காலத்திலிருந்த சுமேரிய மற்றும் சிந்துவெளி நாகரீகங்களைவிடவும் மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் எகிப்தில் உருவாக்கப்பட்டது. இத்தகைய மிரட்டும் கட்டிடக் கலைக்குத் தேவைப்படும் ப�ொருளாதாரத் தேவையை நைல் நதியின் செழிப்புப் பார்த்துக்கொள்ள மனித உழைப்பை எகிப்திய மக்கள்தான் க�ொடுக்கவேண்டியிருந்தது. இந்தக் கடும் உழைப்பே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது. அகநேத்தனுடைய வீழ்ச்சி அவனுடைய தாய் டெயியின் இறப்போடு த�ொடங்கியது. இந்தத் துக்கத்திலிருந்து அவன் மீள்வதற்கு முன்பே அவன் மிகவும் நேசித்த அவனுடைய இரண்டாவது மகள் மெகேத்தன் அவளுடைய ஏழாவது வயதிலேயே இறந்தது அவனை மேலும் உலுக்கிவிட்டது. இதிலிருந்து அவன் மீண்டதாகத் தெரியவில்லை. அவனுடைய 17-வதி ஆட்சி ஆண்டில் (கி.மு. 1336-ல்) அகநேத்தன் இறந்துப்போனான். தன்னுடைய மம்மியை வைக்கப்போகும் சார்கோஃபிகசின் நான்கு மூலையிலும் எகிப்திய பழமை கடவுளரின் சிலை உருவத்தை வைக்கக் கூடாது என்பது அவன் உயிருடன் இருந்தப�ோதே அறிவித்துவிட்ட விசயம். அதற்குப் பதிலாகத் தன்னுடைய மனைவி நெஃப்ரிடிடியின் சிலை உருவை வைக்கவேண்டும் என்றும் அறிவித்திருந்தான். அதன் படியே செய்யப்பட்டது. இதுவும் அதுவரை எகிப்து நாகரீகம் அறியாத ஒன்று. அகநேத்தனுடைய மம்மி உடலில் இருந்த ஈரம் கூடக் காய்ந்திருக்காது அதற்குள் எகிப்தில் பழைய நிலைமை படு வேகமாகத் திரும்பிவிட்டது. அமூன் கடவுளின் தலைமை பூசாரி அகநேத்தனுடைய மரணத்திற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல இனி எகிப்தியர்கள் பழையபடி அமூன் கடவுளை வழிபடலாம் என்று அறிவித்தார். இதற்கு அகநேத்தனுடைய குடும்பத்தினரிடையேயும் பெரும் ஆதரவு இருந்திருக்கிறது முக்கியமாக நெஃப்ரிட்டி இதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவன் இறந்ததும் ஆட்சி நெஃப்ரிடிடியின் கைக்கு வந்தது. ஆனால் அகநேத்தனுடைய அந்தப்புர பெண்களில் ஒருவருக்குப் பிறந்த மென்காரா என்பவன் தன்னை எகிப்தின் பார�ோவாக அறிவித்துக்கொண்டு கி.மு. 1333–1332 வரை ஆட்சியிலிருந்தான். இதற்கு ஒரு முடிவுகட்ட நெஃப்ரிடிடியும் எகிப்தின் தலைமை பூசாரிகளும் ஒன்று சேர்ந்து ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள். அதன்படி அகநேத்தனுக்கும் அந்தப்புர பெண்களில் நவீனா அலெக்சாண்டர்

13

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஒருத்திக்கும் பிறந்த துதன்கேத்தன் என்பவனுக்கு நெஃப்ரிடிடியின் மூன்றாவது மகளான அன்கேஸ்னேத்தனை திருமணம் செய்துவைத்துத் துதன்கேத்தனை அதிகாரப் பூர்வ பார�ோவாக அறிவிப்பது என்று முடிவானது. இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஏதன் என்கிற ஒட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள் எல்லாம் அகநேத்தனுடைய திருவிளையாடல்தான்.

14

நவீனா அலெக்சாண்டர்

துத்தன்காமூன் கி.மு. 1332 – 1322 (18-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

துதன்கேத்தனும் அன்கேஸ்னேத்தனும் திருமணம் செய்துக�ொண்ட பிறகு தங்களுடைய பெயர்களைத் துத்தன்காமூன், அனக்ஸ்னமூன் என்று மாற்றிக்கொண்டார்கள். அமூன் கடவுளின் பெயர் மீண்டும் எகிப்தியர்களின் பெயர்கள�ோடு வந்து ஒட்டிக்கொண்டதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. துத்தன்காமூன் கி.மு. 1332-ல் மேலை மற்றும் கீழை எகிப்து என்று ஒட்டும�ொத்த எகிப்திர்கும் பார�ோவாகப் பதவியேற்றான். இங்கே மேலை எகிப்து மற்றும் கீழை எகிப்து என்றால் என்னவென்று பார்த்துவிடுவ�ோம். நைல் நதி எகிப்திர்குள் நுழையும் பகுதியை மேலை எகிப்து என்றும் நைல் நதி மத்திய தரைக் கடலில் கலக்கும் பகுதியை கீழை எகிப்து என்றும் கி.மு. 3000 ஆண்டு த�ொடங்கியே எகிப்தியர்கள் பிரித்து அறிந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பகுதியையும் பிரிக்கும் மத்திய எகிப்து என்று அழைக்கப்படுவது தீப்ஸ் நகரம். தீப்ஸிலிருந்துக்கொண்டு இரண்டு பகுதிகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே எகிப்திய பார�ோக்களின் தலைநகரம் ப�ோலச் செயல்பட்டு வந்தது தீப்ஸ். இந்த நகரத்தைத்தான் அகநேத்தன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இழுத்து மூடியது. துத்தன்காமூன் சிறு வயதிலேயே பார�ோவாகப் பதவியேற்றவன். இவனுக்குச் சிறு வயதிலேயே ஒரு கால் எலும்பில் ஊனம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக இவன் சிறுவயதிலேயே ஊன்றுக�ோலுடன்தான் நடக்க வேண்டியிருந்திருக்கிறது. இந்த உடல் ஊனம் காரணமாக இவன் மிகுந்த வலி வேதனையுடன்தான் தன்னுடைய வாழ் நாளைக் கழித்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தன்னுடைய உடல் வேதனைகளையும் தாண்டி துதன்காமூன், அவனுடைய தந்தை அகநேத்தன் செய்து வைத்துவிட்டுப்போன அலங்கோலங்களைப் படுவேகமாகச் சீர்ப்படுத்தத் த�ொடங்கினான். எகிப்து முழுவதும் அகநேத்தன் சிதைத்த கடவுளர் சிலைகளைச் சீராக்கி புதுபிக்கக் கட்டளையிட்டான். எகிப்தியர்கள் பழையபடி தங்கள் விருப்ப தெய்வங்களை வழிபட எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்தான். இப்படி எகிப்திய மக்களின் மனம் குளிர ப�ோய்க்கொண்டிருந்த துத்தன்காமூனுடைய ஆட்சி பத்து ஆண்டுகளைத் தாண்டவில்லை. துத்தன்காமூன் அற்பாயுசில் ப�ோய்ச் சேர்ந்துவிட்டான். மிக இளவயதிலேயே இறந்த பார�ோக்களில் துத்தன்காமூன் ஒருவன். இவனுடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். துத்தன்காமூன் அரண்மனை சதியின் காரணமாகக் க�ொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்குப் புறவய ஆதாரங்கள் இருப்பதாகச் ச�ொல்கிறார்கள். துத்தன்காமூன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் இஷ்டத்திற்கு மதச் சுதந்திரம் க�ொடுத்துவிட்டாலும் அவனுடைய இரகசிய திட்டம் அவனுடைய தந்தை அகநேத்தனின் மதத் திட்டத்தையே மீண்டும் அதிகப் பலத்துடன் மக்களின் தலையில் திணிப்பதாக இருந்திருக்கலாம். அதாவது 15

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அகநேத்தனே எகிப்தின் ஒரே கடவுள் என்கிற நிலையை உண்டாக்குவது. இதை ம�ோப்பம் பிடித்துவிட்ட தலைமை பூசாரிகள் சூழ்ச்சி செய்து அவனைக் க�ொலை செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒரு குழு நம்புகிறது. இதற்கு அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது அவனுடைய மம்மி மண்டைய�ோட்டில் இருக்கும் சிறிய துளை. பின் மண்டையில் ஆயுதத்தால் தாக்கியதில் அவன் இறந்திருக்கவேண்டும் என்று ஒரு குழு நம்பினால் மற்றொரு தரப்பு அவனுடைய உடல் ஊனமே (எலும்புருக்கி ந�ோய்) அவனை இள வயதில் க�ொன்று விட்டது என்கிறது. சூழ்ச்சியால் க�ொலை செய்யப்பட்டானா அல்லது இயற்கையாகவே மரணமடைந்தானா என்பதில் மர்மம் நீடித்தாலும் அவனை அடக்கம் செய்த கல்லறையில் சாதாரண மனிதன் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிற்குத் தங்கப் ப�ொருட்கள் இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. உதாரணத்திற்கு அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த சார்கோஃபிகசை மூடியிருந்தது அவனுடைய முழு உருவமும் செதுக்கப்பட்ட தங்கத்தாலான பலகை. பார�ோ என்றதுமே உங்கள் நினைவில் வரும் பார�ோ உருவம் (பெரும்பாலும் த�ொலைக்காட்சிகளிலும், ஆலிவுட் படங்களிலும், பத்திரிக்கைகளிலும் வரும் தங்கத்தாலான பார�ோ முகம் க�ொண்ட புகைப்படம்) துத்தன்காமூனுடைய சார்கோஃபிகசை மூடியிருந்த தங்க பலகையில் இருந்து வந்ததுதான். இது உலகப் புகழ்பெற்ற புகைப்படம். ஏறத்தாழ இருநூறு நூற்றாண்டுகளாக உலக மக்கள் இந்தப் பார�ோ முகத்திற்குப் பழக்கமானவர்கள். அந்த வகையில் இன்றைய உலக மக்களின் மிக அபிமானப் பார�ோ துத்தன்காமூனே. இதற்குக் காரணம் அவனுடைய மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மமும் அவனுடைய கல்லறையில் இருந்த அளவிட முடியாத தங்கமும். இன்றைய தேதியில் எகிப்து பார�ோக்கள் குறித்த திரைப்படம் அல்லது த�ொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் அது நிச்சயம் துத்தன்காமூனை த�ொடர்புப்படுத்தியதாகத்தான் இருக்கும். கூகுளில் அதிகம் தேடப்படும் பார�ோவும் இவனே. இவனுடைய கல்லறையைத் த�ொல் ப�ொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சமயத்தில் அதற்குள் இவனுடைய மம்மி இல்லை என்பது இவனைக் குறித்த அடுத்தச் சுவாரசியம். அரசர்களின் சமவெளியில் இருந்த இவனுடைய கல்லறையை ஓவர்ட் கார்டர் கண்டுபிடித்துத் திறந்து பார்த்தப�ோது அதற்குள் ம�ொத்த தங்கப் ப�ொருட்களில் கால்வாசிப் ப�ொருட்கள் மட்டுமே எஞ்சியிருந்திருக்கிறது. கல்லறை திருடர்கள் அவனுடைய கல்லறையில் இருந்த முக்கால் வாசிப் ப�ொருட்களைக் க�ொள்ளையடித்துவிட்டதுமில்லாமல் அவனுடைய மம்மியையும் ஏத�ோ செய்து அழித்துவிட்டார்கள் என்றுதான் முதலில் கார்டர் தீர்மானித்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு மம்மிக்கு உரியக் கல்லறையில் துத்தன்காமூனுடைய மம்மியும் அவனை அடக்கம் செய்தப�ோது வைக்கப்பட்டிருந்த தங்கப் ப�ொருட்களும் எத்தகைய சேதமும் இல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏதேச்சையாகக் கிடைக்கப்பெற்றது. துத்தன்காமூனுடைய மம்மி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றால் அதை ஆராய்ச்சியாளர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு படு சுவாரசியமான வாசிப்பை க�ொடுக்கக் கூடியது. இது குறித்து நேஷனல் ஜீய�ோகிராபிக் த�ொலைக்காட்சி மிக அருமையான பல குறும்படங்களை எடுத்து ஒளிபரப்பியிருக்கிறது. இந்த வகையிலும் துத்தன்காமூன் மக்களின் சுவாரசியத்தைத் தூண்டிவிட்டான்.

மம்மிபிகேசன் துத்தன்காமூனுடைய மம்மி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையே ஒரு தனிக் கட்டுரைத் தலைப்பாக எழுதலாம். அதை நாம் இங்கே செய்யப்போவதில்லை. ஆனால் மம்மி செய்யும் முறையைப் பற்றிப் பார்க்கப்போகிற�ோம். வரலாற்றின் தந்தை என்று சிறப்பிக்கப்படும் ஹிரட�ோடஸ் (இவர் இன்றையிலிருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்கர். இவரே முதன் முதலாக மத்திய தரைக்கடல் பகுதிகளின் வரலாற்றைத் 16

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

த�ொகுத்து எழுதியவர். இவருடைய புத்தகத்தின் பெயர் ஹிஸ்டோரிஸ். இது ஒரு அருமையான புத்தகம். இது அப்பழுக்கற்ற வரலாற்றுப் புத்தகம் என்றாலும் இதை அவர் ஒரு வரலாற்றுப் புதினம் ப�ோல் படு சுவாரசியமாக எழுதியிருப்பார்) எகிப்தில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து எகிப்து குறித்துத் தன்னுடைய புத்தகத்தில் ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார். அதில் எகிப்தில் மம்மிகள் எப்படிச் செய்யப்படுகிறது என்று ஒரு விளக்கம் தந்திருக்கிறார். எகிப்தில் மம்மிகள், பார�ோக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் ஒரு வகையிலும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வகையிலும் ஏழைகளுக்கு ஒரு வகையிலும் என்று பல முறைகளில் செய்யப்பட்டிருக்கிறது. முதலில் பார�ோக்களின் மம்மிகள் எப்படித் தயாரிக்கப்படும் என்பதைப் பார்ப்போம். (இது முழுக்க முழுக்க ஹிரட�ோடஸின் புத்தகத்தில் ச�ொல்லப்பட்டிருப்பதை அடிப்படையாகக் க�ொண்டது). பார�ோக்கள் இறந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்துதான் அவர்களுடைய உடல் பிரமிடுகளுக்குள்ளோ அல்லது குடைவரை கல்லறைகளுக்குள்ளோ வைக்கப்படும். அதுவரை அவர்களுடைய உடல் மம்மிக்களாக மாற்றப்படும் சடங்கு நடைபெறும். ஒரு பார�ோ இறந்ததும் அவருடைய உடல் அவருடைய உடலை வைக்கத் தயாராக இருக்கும் பிரமிடை பராமரிக்கும் பூசாரியிடம் க�ொடுக்கப்படும். இந்தப் பூசாரிக்குக் கீழ் பல வைத்தியர்கள் இருப்பார்கள். அவர்களும் பூசாரிகள்தான். அவர்கள் செய்யும் முதல் காரியம் பார�ோவின் மூக்கின் வழியாக ஒரு கம்பிப�ோன்ற கருவியை நுழைத்து மூளையை வழித்து எடுத்து வெளியே தூக்கிப்போடுவது. எகிப்தியர்களைப் ப�ொறுத்தவரை மூளை என்பது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பு அல்ல. இதயமே மனிதனின் சிந்திக்கும் உறுப்பு என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. பிறகு கண்களை எடுப்பார்கள். இரண்டு கண்களையும் ஒரு ஜாடிக்குள் வைத்துவிடுவார்கள். அந்த ஜாடிக்குள் உப்பு மற்றும் மூலிகைகள் க�ொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்போன்ற திரவம் இருக்கும். இது மனித உடல் உறுப்புகளைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கக் கூடிய வீரியம் மிகுந்ததாக இருந்திருக்கிறது. இந்த இரசாயனக் கலவையின் தயாரிப்புக் குறித்து எகிப்திய மருத்துவப் பூசாரிகள் பரம இரகசியம் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தவிரச் சாதாரண எகிப்திய குடிமகனுக்கு இந்த இரசாயனக் கலவைகள் குறித்த தயாரிப்பு முறைகள் ஒரு இம்மியளவு ஏன் வதந்தியாகக் கூடத் தெரியாது. இந்த இரசாயனக் கலவைத் தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் பல மூலிகைகள் மத்திய கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிலிருந்து எகிப்திற்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து இடுப்புக்கு மேலே வயிற்றின் அடிப்பாகத்தில் வலது புறமும் இடது புறமும் சிறிதாகக் கிழித்து அதே கம்பிக் கருவியைக் க�ொண்டு குடல் மற்றும் வயிற்றுப் பாகங்களை எடுத்து எறிந்துவிடுவார்கள். பிறகு இதயம் பத்திரமாக எடுக்கப்பட்டு மற்றொரு ஜாடியில் வைக்கப்படும். இவை முடிந்த பிறகு ஒரு பெரிய குண்டான் ப�ோன்ற பாத்திரத்தில் உப்பும் மூலிகைகளும் கலந்து தயாரிக்கப்பட்ட தண்ணீரில் பார�ோவின் உடலை ஏறக் குறைய ஒரு மாத காலத்திற்கு ஊரப் ப�ோட்டுவிடுவார்கள். உப்பைத் தவிர மூலிகைப் ப�ொருட்களின் கலவை இரகசியம் குறித்து ஹிரட�ோடசிற்கும் கூடச் ச�ொல்லப்படவில்லை. ஹிரட�ோடஸ் எகிப்திறகு சென்ற காலத்தில் மம்மிபிகேசன் செயல் முறை பெரும் அளவிற்கு வழக்கில் இல்லையென்ற ப�ோதிலும் கூட. அமூன் க�ோயில் பூசாரிகள் அது குறித்து வாய் திறக்க மறுத்துவிட்டதாக அவர் எழுதுகிறார். ஒரு மாத காலம் மூலிகைப் ப�ொடிக் கலக்கப்பட்ட தண்ணீரில் ஊறிய பார�ோவின் உடல் எடுக்கப்பட்டு மூக்குத் துவாரம் வழியாக உப்பும் மூலிகைப் ப�ொடியும் ஒரு வித எண்ணெய்யும் செலுத்தப்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் கிழிக்கப்பட்ட துவாரம் வழியாகவும் இதே முறையில் செய்யப்படும். இப்படியே ஒரு வாரக் காலம் நடைபெறும். அடுத்து உடல் முழுவதும் மீண்டும் ஒரு வகை மூலிகை எண்ணெய் பூசப்பட்டுப் பருத்தி நவீனா அலெக்சாண்டர்

17

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

துணிக் க�ொண்டு அந்த உடல் சுற்றப்படும். உடல் முழுவதும் பருத்தி துணி சுற்றிக் கட்டப்பட்டதும் அதன் மேல் மீண்டும் மூலிகை எண்ணெய் பூச்சுச் செய்யப்படும். பிறகு பூசாரி அந்த உடலை அரச குடும்பத்திடம் ஒப்படைப்பார். இந்தக் காரியங்களைச் செய்யும்போது பூசாரிகள் ஓநாயின் முகம் ப�ோன்ற முகமூடியை அணிந்துக�ொள்வார்கள் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ச�ொல்கிறார்கள். காரணம் அனுபிஸ் கடவுள்தான் மம்மிபிகேசன் வேலைகளுக்கும் மறு உலகப் பயணத்திற்கும் துணை செய்யும் கடவுள் என்பதை முன்பே பார்த்திருக்கிற�ோம். இதற்கு வலு சேர்க்கும் விதமாகப் பிரமிடின் உட்பக்க சுவர்களில் இருக்கும் ஓவியங்களும் மனித உடலில் ஓநாய் முகம்கொண்ட அனுபிஸ் கடவுள் பார�ோவின் உடலை மம்மியாக்கும் வேலையில் ஈடுபடுவதைக் காட்டுகின்றன. பார�ோவின் உடல் சகல மரியாதைகளுடனும் பிரமிடிற்கு எடுத்துச் செல்லப்படும். கூடவே வண்டி வண்டியாகத் தங்கத்தாலான ஆடம்பரப் ப�ொருட்களும் சமையல் சட்டிகளும் எடுத்துச் செல்லப்படும். இவை அனைத்தும் அந்தப் பார�ோ உயிருடன் இருந்த சமயத்தில் பயன்படுத்தியவை. ஒரு பார�ோ இறந்துவிட்டால் உயிருடன் இருக்கும் அவருடைய அன்புக்குப் பாத்திரமான வேலைக்காரர்களும் மம்மியாக வேண்டியதுதான். மறு உலகத்திற்கும் சென்று பார�ோவிற்குப் பணிவிடை செய்யத்தான். இப்படியான வேலை ஆட்கள் உயிருடன் இருக்கும்போதே நாம் மேலே பார்த்த மம்மிபிகேசன் காரியங்கள் இவர்கள் மீது நடத்தப்பட்டதா அல்லது விசம் க�ொடுத்துக் க�ொன்ற பிறகு அவர்கள் மம்மியாக்கப்பட்டார்களா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுடைய மூளையும் வயிற்றுப் பாகங்களும் எடுக்கப்பட்டுப் பின்னர் அவர்கள் மம்மிகளாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். காரணம் பிரமிடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பார�ோவின் வேலையாட்களின் மம்மி உடல்கள் ஆயுதம் க�ொண்டு க�ொல்லப்பட்டதற்கான அடையாளங்களைய�ோ அல்லது விசம் க�ொடுத்துக்கொல்லப்பட்டதற்கான அடையாளங்களைய�ோ காட்டவில்லை என்பதுதான். பார�ோவின் மம்மி உடல�ோடு சேர்த்து அவருடைய வேலையாட்களின் மம்மி உடல்களும் பிரமிடிற்குள் வைக்கப்படும். கூடவே மறு உலகப் பயணத்தின்போது வழியில் சமைத்து சாப்பிடத் தேவையான உணவுப் ப�ொருட்களும் வைக்கப்படும். இந்த இடத்தில் நாம் மற்றொரு முக்கியமான விசயத்தைத் தெரிந்துக�ொள்ள வேண்டும். ஆனால் இதுபற்றி ஹிரட�ோடஸ் குறிப்பிடவில்லை. ஒருவேலை அவருக்கு இதுபற்றிச் ச�ொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். நாம் தெரிந்துக�ொள்ள வேண்டிய அந்த விசயம் ‘இறந்தவர்களின் புத்தகம்’ பற்றியது. அதற்கு முன்னால் சாதாரணக் குடிமகன் ஒருவனின் இறந்த உடல் எப்படி மம்மியாக்கப்பட்டது என்பதைப் பார்த்துவிடுவ�ோம். இந்தக் காரியத்தையும் பூசாரிகளே செய்வார்கள். ஆனால் பார�ோக்களின் உடலைப்போலக் கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமெல்லாம் ஆகாது சாதாரணக் குடிமகனின் உடலை மம்மியாக்க. ம�ொத்த செயல்பாடும் மூன்றே நாளில் முடிந்துவிடும். மூளையும், வயிற்றுப் பகுதி உறுப்புகளும் வெளியே எடுக்கப்பட்ட பிறகு உப்பும் மூலிகை எண்ணெய்யும் உடல் முழுவதும் பூசப்பட்டு இரண்டு நாட்களுக்கு வைக்கப்படும். உடல் மூலிகை எண்ணெய்யில் ஊறிய பிறகு மூன்றாம் நாள் பருத்தி துணியால் சுற்றி சவப்பெட்டிக்குள் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். உறவினர்கள் அந்த மம்மியை நைல் நதியின் மேற்கு கரை பாலைவனப் பகுதியான ‘இறந்தவர்களின் நிலத்தில்’ குழித் த�ோண்டிப் புதைத்துவிடுவார்கள். இப்படியான பல சாதாரணக் குடி மக்களின் மம்மிகளையும் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் த�ொல்பொருள் ஆராய்ச்சிகளின்போது கண்டுபிடித்து வருகிறார்கள். எகிப்தியர்கள் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகள் இறந்துப�ோனால் அதையும் மம்மியாக்கியிருக்கிறார்கள். பூனை, நாய் ப�ோன்றவற்றின் மம்மிகளும் கூடத் த�ொல் ப�ொருள் ஆராய்ச்சிகளின்போது கிடைக்கின்றன. எகிப்தியர்களின் வளர்ப்புப் பிராணிகளில் பூனைக்கு மிக உயர்ந்த இடமுண்டு. பூனை, ரா கடவுளின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது. பூனை தீய சக்திகளை ஓட ஓட விரட்டும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 18

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இறந்தவர்களின் புத்தகம் ஸ்டிபென் ச�ோமர்ஸ் இயக்கத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்து உலகம் முழுவதிலும் சக்கைப்போடு ப�ோட்ட தி மம்மி திரைப்படம் குறித்து அனேகமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் படத்தின் நடுப்பகுதியில் தி புக் ஆப் தி டெட் என்று ஒன்றைத் தூக்கிக்கொண்டு சில கதாப்பாத்திரங்கள் அலைவதைப் பார்க்க முடியும். அந்தப் புத்தகம் இறந்தவர்களுக்கு உயிர் க�ொடுக்கும் மந்திரங்களைக் க�ொண்டது என்று அந்தப் படத்தில் ச�ொல்லப்படும். உண்மையில் தி புக் ஆப் தி டெட் என்று ஒன்று எகிப்திய வரலாற்றில் இருந்ததா என்றால் ஆம் இருந்தது. இன்றும் கூட இருக்கிறது என்பதே உண்மை. இந்தப் புத்தகத்தை எகிப்தியர்கள் ரெயு நு பெர்ட் எம் ஹிரு (எகிப்திய உச்சரிப்பு) என்று அழைத்தார்கள். அந்தத் திரைப்படத்தில் காட்டப்படுவதைப் ப�ோல இந்தப் புத்தகத்தைப் படித்து இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் க�ொடுக்க முடியுமா என்றால்? நிச்சயமாக அது முடியாது. இது மதச் சடங்கு பாடல்களும் மந்திரச் சடங்கு வார்த்தைகளும் க�ொண்ட ஒரு த�ொகுப்பு. இந்தப் புத்தகம் பெரும் பாலும் இறந்த பிறகு மனிதனுக்கு என்ன நடக்கும் என்றும் மறு உலகில் மனிதன் எத்தகைய வாழ்வை மேற்கொள்வான் என்றும் ச�ொல்லக் கூடியது. சுமார் 8000 வருடங்களுக்கு முற்பட்ட மனிதனின் மரணம் குறித்த புரிதல்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கும் சடங்கு பாடல்களும் மந்திரச் ச�ொற்களும். இந்தப் புத்தகம் கடந்த 8000 வருடங்களில் மூன்று முறை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. முதல் திருத்தம் கி.மு. 3500 வாக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை ‘ஹெலிய�ோப�ோலிசன் திருத்தம்’ என்கிறார்கள். இந்தத் திருத்தப்பட்ட வடிவம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து ஐந்தாவது பார�ோ வம்சாவளி காலகட்டம் வரைக்கும் புழக்கத்திலிருந்திருக்கிறது. இதற்குப் பிறகு இந்தப் புத்தகத்தில் நடந்த திருத்தத்தை ‘தீபென் திருத்தம்’ என்கிறார்கள். இது பதினெட்டாம் வம்சாவளி காலகட்டம் த�ொடங்கி இருபத்திரண்டாம் வம்சாவளி காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து நடந்த திருத்தத்தை ‘செல்ட் திருத்தம்’ என்பார்கள். இந்தத் திருத்தப்பட்ட புத்தகம் இருபத்தாறாம் வம்சாவளி காலகட்டம் த�ொடங்கித் தாலமி காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடையில் விடுபட்ட காலங்களில் இந்தப் புத்தகம் பல முறை தவற விடப்பட்டு மீண்டும் கண்டு எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலிருக்கும் சடங்கு பாடல்களையும் மந்திரச் ச�ொற்களையும் பிரமிடு சுவர்களிலும், மம்மிகள் வைக்கப்படும் சார்கோஃபிகஸ்களிலும், பிரமிடுக்குள் வைக்கும் பப்பைரஸ் சுருள்களிலும், கல்லறை க�ோயில்களிலும் எழுதிவைப்பார்கள். எகிப்தியியல் வல்லுநர்கள் (எகிப்தாலஜிஸ்ட்) – உலக நாகரீகங்களிலேயே எகிப்திய நாகரீக வரலாற்று ஆராய்ச்சி ஒன்றிற்கு மட்டுமே ஒரு தனித் துறையே இருக்கிறது எகிப்தியாலஜி என்பது அதற்குப் பெயர். காரணம் அவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் எகிப்திய வரலாற்றில் க�ொட்டிக்கிடக்கிறது. மற்ற உலக நாகரீகங்கள் எழுத்து வடிவ வரலாற்றுத் தகவல்கள் இல்லாமல் திணறிக்கொண்டிருக்க எகிப்திய நாகரீகம் ஒன்று மட்டுமே இருக்கும் எழுத்து வடிவ வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து வெளியிடத் திணறிக்கொண்டிருக்கிறது – இந்தப் புத்தகத்தின் பூர்வீகம் எகிப்திய நாகரீகத்தைச் சேர்ந்ததில்லை என்று கருதுகிறார்கள். இந்தப் புத்தகத்தின் மரணம் மற்றும் மறு வாழ்வு குறித்த கருத்துக்கள் மெசப்பட்டோமியா மூலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று அவர்கள் ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். இதில் விசேசம் மெசப்பட்டோமிய நாகரீகம் சமூக வாழ்வின் பல கருத்தியல்களைத் தமிழர்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இப்படிச் ச�ொன்னால் நம்முடைய ஆட்களே சிரிப்பார்கள். சிரித்தால் சிரித்துவிட்டுப் ப�ோகட்டும் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இது திராவிடக் கருத்தியல் கிடையாது. வரலாற்று உண்மை. மெசப்பட்டோமியாவில் ஊர்க் என்று ஒரு நகரம் இருந்தது. இன்றையிலிருந்து 9000 வருடங்களுக்கும் மேல் பழமைக்கொண்டது. இந்த ஊர்க் என்கிற நகரை மெசப்பட்டோமிய பகுதியில் உருவாக்கி நவீனா அலெக்சாண்டர்

19

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மெசப்பட்டோமிய நாகரீகத்தில் சமூக வாழ்வு குறித்த கருத்தியல்களை விதைத்தவர்கள் நம்மவர்களேதான். ஊர் என்று பெயர் ஒற்றுமை இருந்தாலே உடனே அது நம்முடையது என்று ச�ொல்லிவிடுவதா என்று மேலும் நீங்கள் சிரித்தால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நம்மைப் பார்த்துச் சிரிப்பது கண்களுக்குத் தெரியாது. காரணம் ஊர் என்கிற பெயர் திராவிட ம�ொழி மூலத்திலிருந்து வந்திருக்கவேண்டும் என்று மெசப்பட்டோமிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். திராவிட ம�ொழியின் மூலம் எது என்பது ஊர் உலகமே அறிந்த விசயம். ஆக எகிப்தியர்கள் தமிழர்களின் மரணம் மற்றும் மறு வாழ்வு குறித்த கருத்தியல்களை மெசப்பட்டோமியர்கள் வழியே பெற்றிருக்கிறார்கள் என்று ச�ொல்வது வரலாற்றுக் குற்றமாகிவிடாது என்று நம்புகிறேன். எகிப்து ஒன்றாக்கப்பட்ட காலகட்டத்திற்குப் பிறகு (இன்றையிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு) ‘இறந்தவர்களின் புத்தகத்தை’ எழுதியது த�ோத் என்கிற கடவுள் என்று நம்பத்தொடங்கினார்கள் அன்றைய எகிப்தியர்கள். த�ோத் கடவுள் மற்ற கடவுள்களின் செயல்களைப் பதிவு செய்யும் எழுத்தராக இருப்பவர் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள். இவர் ஓசிரிஸ் கடவுளின் பணியாளாகக் கருதப்படுபவர். இந்தப் புத்தகத்தோடு சேர்த்து ‘உயிர் மூச்சின் புத்தகம்’ என்றொரு புத்தகமும் இருக்கிறது. இதுவும் இறந்தவர்களின் புத்தகம் ப�ோன்றதே. உயிர் மூச்சின் புத்தகத்தில் வரும் பாடல்களில் த�ோத் கடவுளே இந்த இரண்டு புத்தகங்களையும் எழுதியதாக ஒரு குறிப்பு வருகிறது. மம்மியானது பிரமிடுக்குள் வைக்கப்பட்டதும் இந்த இரண்டு புத்தகங்களும் கூடச் சேர்த்து வைக்கப்படும். பிரமிடிற்குள் இருக்கும் அறைகளில் எதாவது ஒன்றில் இந்தப் புத்தகங்களை வைப்பதற்கென்றே மாடம் கட்டப்பட்டிருக்கும். சில சமயங்களில் மம்மியின் துடைகளுக்குக்கிடையில் கூட இந்த இரண்டு புத்தகங்களையும் வைப்பதுண்டு. இப்படியான சடங்குகள் முடிந்தவுடன் பிரமிடின் கதவு இழுத்து மூடப்பட்டுச் சீல் வைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தில் பிரமிடுகளின் த�ோற்றம் குறித்து அறிந்துக�ொள்ளவேண்டியிருக்கிறது. பிரமிடுகளின் த�ோற்றமும் எகிப்திய பார�ோ பரம்பரையின் த�ோற்றமும் பிரிக்க முடியாதது. இறந்த பிறகான மறு உலக வாழ்க்கைப் பயணத்திற்கு மிக முக்கியமானது என்பதையும் தாண்டி சமாதிகள் மற்றொரு அரசியல் சமாச்சாரத்திற்காகவும் பயன்பட்டது. அது, சமாதிகள் தங்களுடைய ஆளுமையையும் பலத்தையும் அறிவித்து எதிரிகளை மிரட்டக் கூடிய மிக முக்கியக் கருவிகளில் ஒன்று என்று எகிப்தை ஆண்ட வரலாற்றிற்கு முற்றப்பட்ட காலகட்ட அரசர்கள் கருதியிருக்கிறார்கள்.

20

நவீனா அலெக்சாண்டர்

எகிப்திய நாகரீகத்தின் பூர்வீகம் கி.மு. 5000-க்கு முந்தைய காலகட்டம் (வரலாற்றிர்கு முற்ப்பட்ட காலகட்டம்)

பிரமிடுகளின் மூலத்தைக் குறித்துத் தெரிந்துக�ொள்ள உட்காருகிற�ோம் என்றால் பார�ோக்களின் த�ோற்றம் குறித்துத் தெரிந்துக�ொள்ளப் ப�ோகிற�ோம் என்பது எகிப்திய நாகரீகத்தின் அறிவிக்கப்படாத விதி. அந்த அந்த விதியை நாம் மீற முடியாது. எகிப்திய நாகரீகத்தின் முதல் பார�ோவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரலாற்றுக்கு முற்பட்ட எகிப்தைக் குறித்துப் பார்த்துவிடலாம். எகிப்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான த�ொல் ப�ொருள் ஆதாரங்கள் நப்தா பிளேயா என்கிற இடத்திலிருந்து வருகிறது. இந்த இடம் எகிப்து மற்றும் சூடான் நாடுகளின் எல்லையில் இருக்கும் வடமேற்கு பாலைவனப் பகுதியில் இருக்கிறது. எகிப்தின் வடக்குப் பகுதிகளிலேயே முதன்முதலில் விவசாய நாகரீகம் த�ோன்றியதற்கான அடையாளங்கள் கிடைக்கிறது. விவசாய நாகரீகம் த�ோன்றிய சமயத்தில் எகிப்திற்குள் மற்றொரு இன மக்களின் ஊடுருவல் நடந்திருக்கவேண்டும் என்று மானுடவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எது அந்த மக்களினம் என்பது குறித்துச் சர்ச்சை இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களில் சிலர் அந்த இனம் மெசப்பட�ோமியவை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். மற்றொரு குழு இந்த மக்களினம் தூறக் கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள். விவசாய நாகரீகம் த�ோன்றிய காலகட்டத்தில் அதாவது இன்றையிலிருந்து சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பு தூர கிழக்கில் மிகப் பெரிய நாகரீகமாக இருந்தவர்கள் தமிழர்கள். கடல்கோள்களால் தங்களுடைய செழிப்பு மிக்க நிலங்களை இழந்துக�ொண்டிருந்தவர்களும் தமிழர்கள்தான். இந்த இடத்தில் த�ொல்காப்பியம் குறிப்பிடும் ஃபற்றுளி ஆற்று நிலம், கபாடபுரம் ப�ோன்ற நிலப் பகுதிகளைக் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகள் இடைவெளியில் இந்தியப் பெருங்கடல் த�ொடர்ந்து தமிழர்களின் விவசாய நிலங்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கத் தமிழர்கள் அதிகம் அதிகம் கடலைவிட்டு வடக்கு ந�ோக்கி மேடான நாடுகளுக்குள் செல்ல வேண்டியிருந்தது. கடல் அவர்களின் நிலங்களை அழித்துக்கொண்டிருந்தப�ோது தமிழர்கள் அந்தக் கடலை எதிர்த்து அதன் மேல் எப்படிக் கலம் செலுத்துவது என்று கற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாகவே பெருங் கடல்களில் கப்பல் செலுத்தும் த�ொழில் நுட்பத்தையும் முதன் முதலாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பும் தமிழர்களுக்கே வாய்த்தது. இயற்கை அவர்களின் நிலங்களின் மீது தாக்குதல் த�ொடுக்க அதே இயற்கையை பயன்படுத்திப் புதிய புதிய நிலங்களைச் சென்று அடைந்தவர்கள் தமிழர்கள். இன்றைக்கு இலங்கைக்குத் தெற்கில் இருந்த தங்களுடைய நிலங்களைக் கடல் மெல்ல மெல்ல விழுங்கத் தமிழர்கள் பெரும் அளவில் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் வடக்கு, வட மேற்கு மற்றும் வட கிழக்கு என்று 21

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மூன்று திசைகளிலும் புதிய நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இந்த வகையில் கடல் தாண்டி புதிய புதிய குடியிருப்புகளை முதன் முதலில் உருவாக்கியவர்களும் தமிழர்களே. இந்தியப் பெருங்கடலில் வட மேற்காகக் கூட்டம் கூட்டமாகச் சென்ற தமிழர்கள் கரையேறியது எகிப்தின் வட கிழக்குப் பகுதியில். தமிழர்களின் இந்தக் குடிபெயர்விற்குப் பிறகே எகிப்தின் வடக்குப் பகுதியில் விவசாய நாகரீகம் த�ோன்றியிருக்கவேண்டும். இந்தியப் பெருங்கடலில் வடக்குத் திசையாகச் சென்றவர்களே சிந்துவெளி நாகரீகத்தையும் த�ோற்றுவித்திருக்கச் சாத்திய கூறுகள் அதிகம் இருக்கின்றன. எகிப்தில் விவசாய நாகரீகம் த�ோன்றியதும் மூன்று பெரு நகரங்கள் உருபெற்றன. அவை ‘ஜென்னி, நுபுத் மற்றும் நெக்கேன்’. இந்த மூன்று பெரு நகரங்கள் உருவாவதற்கு முன்பிலிருந்தே அதாவது கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே எகிப்தியர்களிடம் நிலவிய செவி வழி செய்தி (நன்றாகக் கவனிக்கவும் கதை அல்ல செய்தி) ஒசிரிஸ் என்பவரே எகிப்திர்க்கு நாகரீகத்தையும் விவசாயத் த�ொழில் நுட்பத்தையும் க�ொண்டவந்தவர் என்கிறது. அன்றை எகிப்தியர்கள் ஒசிரிசை மரணம் மற்றும் அதற்குப் பிறகான மறுவாழ்விற்கான கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஒசிரிசை கடவுளாக்கிவிட்டாலும் அவன் வரலாற்றுக் கால மனிதன் என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை. நிச்சயம் ஒசிரிஸ் எகிப்திய பூர்வீகத்தை உடையவன் இல்லை என்பதிலும் ஆராய்ச்சியாளர்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் எந்த நாகரீகத்தைச் சேர்ந்தவன் என்பதற்கு மட்டும் இன்றுவரை விடைக் கிடைக்கவில்லை. (நம்முடைய பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகள் என்ன செய்துக�ொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஏன் நம்மூரில் வரலாற்றுத் துறையில் ஆய்வுப் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்பவர்கள் ஒசிரிசுக்கும் தமிழர்களுக்கும் ஏதும் த�ொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவில்லை? முன்னெடுப்பதில்லை? ஆய்வுப் பட்டத்திற்கு ஆசைப்பட்டுச் சினிமா கதைகளையும் பாடல்களையும் ஆராய்பவர்கள் இருக்கும் இடத்தில் இத்தகைய கேள்விகள் எல்லாம் நகைப்பிற்கு உரியதுதான்! இவ்வளவு வாய் கிழிக்கும் நீ இத்தகைய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியதுதானே என்று கேட்டால் தனி மனிதர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளை முன்னெடுத்துவிட்டுப் ப�ோகலாம் என்றால் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகள் பிறகு என்னதான் செய்யும்?) இன்றையிலிருந்து 7000 வருடங்களுக்கு முன்பே எகிப்தியர்கள் ஒசிரிஸ் குறித்த செய்திகளை விலங்குகளின் எலும்புத் துண்டுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் பயன்படுத்திய எழுத்து வடிவம் ஹெக்ரோகிலிப்ஸ். இது சித்திர வடிவ எழுத்து வகை. அன்றைய காலகட்டத்திலிருந்தே எகிப்தியர்கள் தங்களுடைய சமூக வாழ்வை எழுத்துக்களாகப் பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். இந்த ஆர்வம் அடுத்த 5000 ஆயிரம் வருடங்களுக்கும் அவர்களை விட்டுப் ப�ோகவேயில்லை. இந்த எழுத்துப் பழக்கத்தின் த�ொடர்ச்சியாகவே முதல் பார�ோ த�ொடங்கி 31-வது பரம்பரையின் கடைசிப் பார�ோ வரையிலும் தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகள் த�ொடங்கி அரசியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் எழுத்துக்களாகப் பதிவு செய்ய அவர்கள் தவறவேயில்லை. இதற்கு என்றே எழுத்தர் என்று ஒரு அரசாங்கப் பதவியை உருவாக்கி அதில் எழுத்தர்களை நியமித்திருக்கிறார்கள். சுமார் 6000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்தியர்களின் எழுத்துக்களில் இருந்து நமக்குத் தெரியவரும் ஒசிரிஸ் குறித்த செய்தி இதுதான். ஒசிரிஸ் தன்னுடைய மனைவியான இசிஸ் மற்றும் உடன் பிறந்த சக�ோதரனான செத் உடன் எகிப்திற்கு வந்து எகிப்திய பூர்வ குடிகளுக்குச் சமூக வாழ்வைக் குறித்தும் விவசாயத் த�ொழில் நுட்பம் குறித்தும் கற்றுத் தருகிறான். இந்தச் செயல் அவனுக்கு எகிப்திய பூர்வ குடிகளிடம் மிகுந்த மரியாதையையும் செல்வாக்கையும் பெற்றுத் தருகிறது. ஒசிரிசுக்கு கிடைத்த மரியாதையும் செல்வாக்கும் அவனுடைய தம்பி செத்திற்குப் 22

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ப�ொறாமையை உண்டாக்குகிறது. ப�ொறாமையைக் கட்டுப்படுத்த முடியாமல் செத் தன்னுடைய உடன் பிறந்த சக�ோதரனைக் கண்டம் துண்டமாக வெட்டி திசைக்கொன்றாக வீசிவிடுகிறான். இதுவரைக்குமான விவரிப்பு ஒசிரிசும் இசிசும் வரலாற்றில் வாழ்ந்த இரத்தமும் சதையும் கலந்த மனிதர்களாகக் காட்டிவிட்டு இதற்குப் பிறகு அவர்களுக்கு தெய்வத் தன்மையைக் க�ொடுத்துவிடுகிறது. துண்டு துண்டாகிவிட்ட ஒசிரிசின் உடலை இசிஸ் தன்னுடைய மந்திர சக்தியின் மூலம் ஒன்று சேர்த்து எடுத்துக்கொண்டு செத்துக்குப் பயந்து எகிப்தின் வடக்கு பகுதிக்கு சென்றுவிடுகிறாள். இதற்குப் பிறகு இசிசுக்கு, ஓரஸ் என்று ஒரு மகன் பிறக்கிறான். ஓரஸ் தன்னுடைய தந்தையின் க�ொலைக்குப் பழிவாங்க செத் துடன் கடுமையாக ம�ோதுகிறான். இரண்டு தரப்பிலும் அதிகமாக இரத்தம் சிந்தப்பட்ட சண்டையை முடிவிற்குக் க�ொண்டுவர கடவுளர்களுக்கு முன் இந்தத் தகராறு க�ொண்டு செல்லப்படுகிறது. கடவுளர்கள் ஒசிரிஸ் பக்கமும் ஓரஸ் பக்கமும் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொண்டு ஒசிரிசின் உடலுக்கு மீண்டும் உயிர் தருகிறார்கள். பிறகு அவனை மரணம் மற்றும் மறு உலகின் கடவுளாகவும் அரசனாகவும் அறிவிக்கிறார்கள். ஓரசை எகிப்தின் அரசனாக அறிவிக்கிறார்கள். செத் தீமையின் அடையாளமாக அறிவிக்கப்பட்டு அழிக்கப்படுகிறான். ஒசிரிஸ் மற்றும் ஓரஸ் குறித்த இந்தச் செய்திகளை எகிப்தின் பார�ோக்கள் அதி தீவிரமாக நம்பினார்கள். இதன் காரணமாகவே பார�ோக்கள் தாங்கள் உயிருடன் இருக்கும்போது தங்களை ஓரசின் மறு ரூபமாகவும், இறந்த பிறகு ஒசிரிசின் மறு ரூபமாகவும் கருதிக்கொண்டார்கள். ஜென்னி, நுபுத் மற்றும் நெக்கேன் நகரங்களுக்கிடையே த�ொடக்கத்திலிருந்தே ஒட்டும�ொத்த எகிப்தையும் யார் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்வது என்பது குறித்த அரசியல் அதிகாரப் ப�ோட்டி இருந்துவந்தது. இந்த மூன்று நகரங்களுக்கும் இடையில் அதிகார சண்டைகள் த�ொடர்ந்து நடந்திருக்கிறது. இது பல நூறு ஆண்டுகள் த�ொடர்ந்திருக்கிறது. இத்தகைய சண்டையில் ஈடுபட்ட அரசர்கள் குறித்தும் இதில் எந்த நகரத்தின் கை ஓங்கியிருந்தது என்பதைக் குறித்தம் எழுத்து ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவை நிச்சயம் எதிர்காலத் த�ொல் ப�ொருள் ஆராய்ச்சியில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நெக்கேன் நகரப் பகுதியில் நடைபெற்ற த�ொல் ப�ொருள் ஆய்வின் ப�ோது ஆராய்ச்சியாளர்கள் கல்லால் செதுக்கப்பட்ட பட்டையம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். எகிப்திய த�ொல் ப�ொருள் ஆய்வு வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிக மிகப் பழமையான த�ொல் ப�ொருள் இதுதான். இதன் காலம் இன்றையிலிருந்து 5000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஓயாத சண்டையில் இறுதி வெற்றி பெற்றது எந்த நகரம் என்றும் அதன் அரசன் யார் என்பதையும் அடையாளம் காட்டுகிறது இந்தக் கல் பட்டையத்திலிருக்கும் புடைப்புச் சிற்பம். இந்தப் பட்டையத்தில், வாட்ட சாட்டமாக நிற்கும் ஒரு உருவம் தன்னுடைய இடது கையில் தரையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் தலை முடியைக் க�ொத்தாக இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கிறது. வாட்டசாட்டமாக நிற்கும் உருவம் வலது கையில் ஒரு தடியை பிடித்தபடி கீழே விழுந்து கிடப்பவனின் தலையில் ஓங்கி அடிக்கத் தயாராக வலது கையை ஓங்கியபடி இருக்கிறது. கீழே விழுந்து கிடக்கும் உருவம் எத்தகைய எதிர்ப்பும் இன்றிச் சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டதைப் ப�ோலத் துவண்டுப்போய்க் கிடக்கிறது. அந்த உருவத்திற்கும் கீழே மேலும் இரண்டு உருங்கள் துவண்டு விழுந்து கிடக்கின்றன. கல் பட்டையத்தின் இடதுபுறம் ஒரு சிறிய உருவம் ஒரு கையில் தண்ணீர் குவலையையும் மறு கையில் பாத அணிகளையும் பிடித்துக்கொண்டு நிற்கிறது. வலது புறம் மனித கரங்கள் உடைய ஒரு கழுகு துண்டாக்கப்பட்ட மனித தலை ஒன்றை கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறது. இது, கல் பட்டையத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை விளக்க அதிகச் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு மிகத் தெளிவான காட்சி அமைப்பு.

நவீனா அலெக்சாண்டர்

23

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ப�ோரில் வெற்றி பெற்ற ஒருவன் அவனிடம் த�ோற்று கீழே விழுந்து கிடப்பவனின் தலை முடியை இழுத்துப்பிடித்து அவன் மண்டையைத் தடியால் அடித்து ந�ொறுக்கப்போகிறான். ஏற்கனவே இரண்டு பேரை அவன் அப்படிச் செய்திருக்கிறான் என்பதும் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆக இந்தப் பட்டையத்தில் இருப்பவன் நிச்சயம் ஒரு அரசனாகத்தான் இருக்கவேண்டும். ஆம் அப்படியேதான். மேலும் அந்தப் பட்டையம் நார்மர் என்கிற பெயரையும் க�ொடுத்தது. இந்தப் பெயரே ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பட்டையம் எந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது என்பதை அடையாளம் காண உதவியாக அமைந்தது. இந்த இடத்தில் நாம் மானித்தோ என்பவரைக் குறித்து அறிந்துக�ொள்ள வேண்டும். இவர் எகிப்திய பூசாரிகளில் ஒருவர். இவர் வாழ்ந்தது இன்றையிலிருந்து சுமார் 2300 வருடங்களுக்கு முன்பு. இவர் சுமார் கி.மு. 300 ஆண்டு வாக்கில் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அது எகிப்திய நாகரீகம் குறித்த செய்திகளைத் த�ொகுத்து ஒரு வரலாற்றுப் புத்தகம் எழுதியது. இவர் பூசாரி என்பதால் எகிப்தின் க�ோயில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரமாயிரம் பப்பைரஸ் சுருள்களை எவ்வித அனுமதியும் தடையும் இல்லாமல் பார்க்கும் அதிர்ஷ்டம் பெற்றவர். எகிப்திய க�ோயில்களில் குவிந்து கிடக்கும் சுருள்களைச் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் பார�ோக்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகத்தை எழுதினார். பப்பைரஸ் சுருள்கள் பதிவு செய்திருந்த முதல் பார�ோ த�ொடங்கி 31-வது வம்சத்தின் இறுதி பார�ோ வரையான தகவல்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் த�ொகுத்துதார். மிக மிகக் கடினமான காரியம் இது. மண்டைக் காய்ந்துவிடுவது மாத்திரமில்லாமல் இடுப்பும் ஒடியக் கூடிய வேலை. இன்றைக்கு நான் எகிப்திய பார�ோக்கள் குறித்த அட்டவணையை மிக எளிதாக உங்களுடன் பகிர்ந்துக�ொள்கிறேன் என்றால் அதற்கு முழு முதல் காரணம் மானித்தோ. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட பார�ோக்களை வரிசையாகத் த�ொகுத்தார�ோ அதையே இன்று வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைவிட ஒருவர் சிறப்பாக நூற்றுக்கணக்கான பார�ோக்களின் தகவல்களைத் த�ொகுத்திருக்க முடியாது என்பதால் நவீன ஆராய்ச்சியாளர்கள் அதில் கைவைக்கத் துணியவில்லை. மானித�ோ எகிப்தின் முதல் பார�ோ ‘மென்னிஸ்’ என்று த�ொடங்குகிறார். இவனுக்கு நார்மர் என்றும் ஓர்-ஆ என்றும் வேறு பெயர்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நாம் மேலே பார்த்த கல் பட்டையத்தின் இரகசியம் மெல்ல மெல்ல அவிழ்ந்துவிட்டது.

24

நவீனா அலெக்சாண்டர்

முதல் பார�ோ நார்மர் கி.மு. 3000 (முதல் அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

ஜென்னி நகரின் அரசன் நார்மர் சுமார் கி.மு. 3000 வருடங்கள் வாக்கில் நுபுத் மற்றும் நெக்கேன் நகரின் அரசர்களைப் ப�ோரில் த�ோற்கடித்து அந்த நகரங்களை நிர்மூலமாக்கியிருக்கிறான். அவனுடைய வெற்றியின் சிறப்பை இந்த உலகிற்கு அறிவிக்கும் விதமாகவே நெக்கேன் நகரில் அந்தக் கல் பட்டையம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கல் பட்டையத்தில் கீழே கிடப்பவனின் மண்டையில் அடிப்பதுப�ோல் வாட்டசாட்ட உருவமாக நிற்பது நார்மர். இந்த வெற்றிக்குப் பிறகு தனித் தனி நகரங்களாகப் பிரிந்து கிடந்த எகிப்தை ஒன்றாக்கி ஒரு குடையின் கீழ் க�ொண்டுவந்து எகிப்தை ஒரு நாடாக மாற்றினான். தன்னை ஒன்றிணைந்த எகிப்தின் முதல் பார�ோவாகக் கி.மு. 2950 வாக்கில் அறிவித்தான். எகிப்தின் பார�ோ வம்சம் இவனிலிருந்தே த�ொடங்குகிறது. இவனிலிருந்தே எகிப்தின் முதல் அரச வம்சாவளி த�ொடங்குகிறது. இதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழைய அரசாட்சி காலகட்டம் என்று வசதிக்காக மேலும் ஒரு பகுப்பாகப் பகுத்திருக்கிறார்கள். பழைய அரசாட்சி காலகட்டம் கி.மு. 2950–2575 வரை சுமார் 400 ஆண்டுகளுக்கு நீள்கிறது. இந்தப் பகுப்பு மூன்றாம் அரச வம்சத்தோடு முடிவடைகிறது. ப�ோரில் த�ோற்ற எதிரியின் தலைமுடியை க�ொத்தாகப் பிடித்துத் தலையில் அடித்துக்கொல்லும் இந்தக் காட்சியமைப்பை அவனுக்குப் பின் வந்த அனைத்து பார�ோக்களும் தங்களுடைய வெற்றியை அறிவிக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தக் காட்சியமைப்பை அனைத்துப் பார�ோக்களின் க�ோயில்களிலும் பிரமிடுகளிலும் குடைவரைக் கல்லறைகளிலும் பார்க்க முடியும். பெண் பார�ோக்களாக இருந்தவர்களும் கூட இந்தக் காட்சியமைப்பில் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இடத்தில் எகிப்திய பார�ோ வம்சத்தின் ம�ொத்தப் பட்டியலையும் தருவது ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். த�ொடக்க வம்சாவளி காலம் கி.மு. 2950–2575 முதல் வம்சாவளித் த�ொடங்கி மூன்றாம் வம்சாவளி வரை பழைய அரசாட்சி காலம் கி.மு. 2575 - 2125 நான்காம் வம்சாவளித் த�ொடங்கி எட்டாம் வம்சாவளி வரை முதல் இடைநிலைக் காலம் கி.மு. 2125–2010 பத்தாம் வம்சாவளித் த�ொடங்கி பதின�ோராம் வம்சாவளி வரை இடை அரசாட்சி காலம் கி.மு. 2010–1630 பன்னிரெண்டாம் வம்சாவளித் த�ொடங்கி பதினான்காம் வம்சாவளி வரை 25

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இரண்டாம் இடைநிலைக் காலம் கி.மு. 1630–1539 பதினைந்தாம் வம்சாவளித் த�ொடங்கி பதினேழாம் வம்சாவளி வரை புதிய அரசாட்சிக் காலம் கி.மு. 1539–1069 பதினெட்டாம் வம்சாவளித் த�ொடங்கி இருபதாம் வம்சாவளி வரை மூன்றாம் இடைநிலைக் காலம் கி.மு. 1069–664 இருபத்திய�ோராம் வம்சாவளித் த�ொடங்கி இருபத்தைந்தாம் வம்சாவளி வரை பிற்கால காலம் கி.மு. 664–332 இருபத்தியாராம் வம்சாவளித் த�ொடங்கி முப்பத்திய�ோராம் வம்சாவளி வரை இதற்குள் அடங்கியிருக்கும் பார�ோக்களின் பெயர் பட்டியலை தருவது சலிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை இங்கே நான் குறிப்பிடவில்லை. நார்மருக்கு முன்பு எகிப்தில் இருந்த வம்சாவளிகளைக் குறித்துக் க�ொஞ்சமே க�ொஞ்சம் தகவல்களைப் பப்பைரஸ் சுருள்கள் தருகின்றன. அந்த வம்சாவளிகளின் பெயர்கள் டைசான், படாரியன் மற்றும் நாகடா. இந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசர்களே நாம் மேலப் பார்த்த மூன்று நகரங்களையும் ஆட்சி செய்திருக்கிறார்கள். நார்மர் இதில் எந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசன் என்று தெளிவாகத் தெரியவில்லை. தமிழர்கள் குறித்த மானுடவியல் வாசிப்பு அனுபவம் உடையவர்களுக்கு நாகடா என்கிற பெயரைப் பார்த்ததும் க�ொஞ்சம் நெறிடியிருக்கும். எகிப்தின் நாகடாக்கள் தமிழர்களின் த�ொல் பழங்கால வேட்டை நாகரீக குடிகளில் ஒன்றான நாகர்களாக இருக்கும�ோ என்று சந்தேகம் எழலாம். இந்தச் சந்தேகம் உண்மையாகவும் கூட இருக்க வாய்ப்புகள் பிரகாசம்தான். இத்தகைய அற்புதமான ஆராய்ச்சித் தகவல்களைக் க�ொண்டு எகிப்திய நாகரீகத்திற்கு விவசாயத்தையும், அரசமைப்பையும் அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை இந்த உலகிற்கு அறிவிக்கவேண்டிய நம்முடைய பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சித் துறை என்ன செய்துக�ொண்டிருக்கிறது என்பது அதற்கே தெரியாத நிலையில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஆங்கில வரலாற்றுத் துறைகள், ஒப்புக்குப் பெறாத துப்புக் கிடைத்தாலே அதை வைத்துக்கொண்டு பிரமிக்கத்தக்க வரலாற்று உண்மைகளை வெளியே க�ொண்டுவந்துக�ொண்டிருக்கின்றன. ஆனால் எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுகள் குறித்து இவ்வளவு வலுவான மறைமுக வரலாற்று ஆதாரங்கள் இருந்தும் நம்முடைய வரலாற்றுத் துறைகள் தூங்கி வழிந்துக�ொண்டிருப்பதை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது. சங்டப்பட்டும் வருத்தப்பட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று புரிகிறதுதான் இருந்தாலும் ஆதங்கம் அடங்கவில்லை. நல்லத�ோர் வீணைச் செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிபவர்களை நீங்கள் பார்த்தது இல்லையென்றால் அதற்காகக் கவலையேப்படவேண்டாம் காரணம் நாம்தான் அந்த அறிவீளிகள். உலக நாகரீகங்களுக்கெல்லாம் வழிகாட்டிய நம்முடைய சிறப்புகளை இப்படி அறியாமைப் புழுதியில் த�ொலைத்துக்கொண்டிருக்கும் நாம் முட்டாள்கள் இல்லாமல் வேறு என்ன! டைசான், படாரியன் மற்றும் நாகடா வம்சாளியைச் சேர்ந்த அரசர்கள் தங்களுடைய வல்லமையை எதிரிகளுக்கு எடுத்துக்காட்ட தங்களுடைய கல்லறைகளையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவைதான் பிற்காலத்தில் பார�ோக்களின் பிரமிடுகளாக வளர்ச்சியடைந்தவை. அந்த வகையில் பிரமிடுகளின் த�ொடக்கம் என்பது சுமார் கி.மு. 6000 ஆண்டுகளிலிருந்து த�ொடங்குகிறது. த�ொடக்கத்தில் இருந்தவை கற்குவியலைக் க�ொண்டு உருவாக்கப்பட்ட மணல் மேடு ப�ோன்றவையாக இருந்திருக்கிறது. இதற்குள் அறைகள் எல்லாம் கிடையாது. அரசர்களின் உடல்களும் மம்மிக்களாக 26

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மாற்றப்பட்டு இந்தக் கற்குவியல்களுக்கு அடியில் வைக்கப்பட்டதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

மஸ்டபாஸ் இந்தக் கற்குவியல் கல்லறைகளின் அடுத்த நிலை வளர்ச்சியான மஸ்டபாஸ் நார்மரின் காலப் பகுதியில் த�ோன்றுகிறது. நார்மரின் உடலே ஒரு மஸ்டபாவிற்குள்தான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நார்மரின் இந்த மஸ்டபா இன்றைய அபைட�ோஸ் பகுதியில் இருக்கிறது. மஸ்டபாஸ் சுட்ட செங்கற்களைக் க�ொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இவை நீள் சதுர வடிவம் க�ொண்டவை. காலத்தால் முற்பட்ட மஸ்டபாக்களின் கீழே அறைகள் இல்லாமல்தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மஸ்டபாக்களுடன் இறந்த பார�ோக்களை வழிப்பட என்று மேற் கூரையில்லாத க�ோயில்களும் ஒரு சில பலிபீடங்களும் இருந்திருக்கின்றன. இந்தத் த�ொடக்கக் கால மஸ்டபாக்களில் வைக்கப்பட்ட பார�ோக்களின் இறந்த உடல்கள் மம்மிபிகேசன் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்தபாடில்லை. நார்மர் காலத்திய மஸ்டபாக்களின் கீழே இரண்டு அறைகள் க�ொண்ட அமைப்பு வழக்கத்திற்கு வந்திருக்கின்றன. நார்மரின் மஸ்டபாவாக இன்றைக்கு அடையாளம் காணப்பட்டிருக்கும் மஸ்டபா அடித்தளத்தில் இரண்டு அறைகளைக் க�ொண்டிருக்கிறது. இதில் நார்மரின் மம்மி உடல் வைக்கப்பட்டிருந்திருக்கலாம். மஸ்டபாவைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. இது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கே மிக உன்னத அரசரின் கல்லறை இருக்கிறது என்பதை அடையாளம் காட்டுவதற்கு. சுற்றுச் சுவருக்கு அருகில் இறந்த பார�ோவை வழிபடவும் பார�ோவுக்கான உணவுப் ப�ொருட்களைப் படைக்கவுமான க�ோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் க�ோயில்களில் வருடத்தின் 365 நாட்களும் மூன்று வேலையும் தவறாமல் பார�ோவிற்கு உணவுப் ப�ொருட்கள் படைக்கப்பட்டிருக்கிறது. பார�ோ பரம்பரையின் த�ொடக்கக் காலங்களில் மஸ்டபாக்களில் வைக்கப்படும் மம்மி உடலுக்குள் இறந்த பார�ோ புகுந்து அவருக்குப் படைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவார் என்கிற நம்பிக்கையும் இருந்திருக்கிறது. மம்மி உடல் மறு வாழ்வில் அவருக்குப் பயன்படுவதற்கு என்கிற நம்பிக்கையையும் தாண்டி. பிற்காலத்திலும் இந்த நம்பிக்கை த�ொடர்ந்திருக்கிறது. மஸ்டபா கட்டிட வளாகத்திற்குள் பல சிறு க�ோயில்கள் கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் க�ோயில்களில் காலையும் மாலையும் மக்கள் வந்து நறுமணப் ப�ொருட்களை வைத்துக் கூடவே உணவுப் ப�ொருட்களையும் படைப்பார்கள். மஸ்டபா வளாகக் க�ோவில்களில் குறிப்பிட்ட பார�ோவின் சிலையும் அவருடைய குடும்பத்தினர்களின் சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கும். இந்தக் க�ோவில்களின் சுற்றுச் சுவர்களில் அந்தப் பார�ோவின் சிறப்புகள் புடைப்புச் சிற்பங்களிலும், ஹெக்ரோகிலிப்ஸ் எழுத்துக்களிலும் செதுக்கப்பட்டிருக்கும். பார�ோவின் மஸ்டபா வளாகக் க�ோவில்களைப் பராமரிக்க என்று தனியே பூசாரிகளும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்தப் பூசாரிகளுக்கும் சேர்த்தே பிரமிடின் வளாகத்தில் வசிப்பிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. உயிருடன் இருக்கும் நாட்களில் பார�ோ தனக்கான மஸ்டபாவிற்கும், அதைச் சுற்றியுள்ள தன்னுடைய சிலைகள் நிறுவப்பட்ட க�ோவில்களுக்கும் சுற்றுப் பயணம் வருவதும் நடக்கும். சில மஸ்டபாக்கள் அருகிலிருக்கும் மற்றொரு பார�ோவின் மஸ்டபா கட்டிட செங்கற்களை உருவியெடுத்தும் கட்டப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்யப்பட்டதின் காரணமாகச் சில பழங்காலப் பார�ோக்களின் மஸ்டபாக்கள் இன்றைக்கு நமக்குக் கிடைக்காமல் ப�ோய்விட்டன. முதல் பார�ோ வம்சாவளித் த�ொடங்கி மூன்றாம் வம்சாவளி காலகட்டம் வரைக்கும் மஸ்டபா கட்டிடமும் இறந்த உடலை மம்மி ஆக்கும் செயலும் பார�ோக்களுக்கு மட்டுமான அரச உரிமையாக மட்டுமே இருந்திருக்கிறது. மற்ற எந்த நவீனா அலெக்சாண்டர்

27

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

எகிப்திய குடிமகனுக்கும் இந்த உரிமை கிடையாது. மூன்றாம் வம்சாவளி காலகட்டத்திற்குப் பிறகே அரசியல் காரணங்களுக்காக - அதாவது தங்களுடைய அதிகாரத்தை மேலும் வலுவாக்கித் தக்கவைத்துக்கொள்ள - பார�ோக்கள் மஸ்டபா கட்டிக்கொள்ளும் உரிமையையும் உடலை மம்மி ஆக்கும் உரிமையையும் ந�ொமார்குகளுக்கு (மாநிலங்களின் சிற்றரசர்கள்) விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். நார்மர் எகிப்தை ஒன்றாக்கிய பிறகு அதைப் பல மாநிலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாநிலத்தின் நிர்வாகப் ப�ொறுப்பையும் அந்தப் பகுதிகளில் இருக்கும் செல்வாக்கு மிகுந்த உள்ளுர் தலைவர்களிடம் க�ொடுத்தான். இவர்களின் செயல்பாடுகள் ஒருவகையில் பார�ோ அரசவையின் பிரபுக்கள் ப�ோலவும் மற்றொரு வகையில் பார�ோவின் கீழ் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் ப�ோலவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவர்களை ந�ொமார்குகள் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காண்கிறார்கள். இவர்கள் ஒருவகையில் அந்த மாநிலங்களின் சிற்றரசர்களாக இருந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பல பார�ோக்களின் ஆட்சியைக் குப்புறத் தள்ளி குழி பறிக்கவும் காரணமாக இருந்தவர்கள் இந்த ந�ொமார்குகள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், இவர்கள் செய்த கிளர்ச்சியின் காரணமாக மீண்டும் ஒருமுறை எகிப்து பார�ோக்களுக்குக் கட்டுப்படாமல் பல அதிகாரம் மிக்க மாநிலங்களாகப் பிரிந்துப்போனது. அந்தச் சமயத்தில் பார�ோ மென்டோதெப் II இவர்களின் கிளர்ச்சிகளை அடக்கி நார்மருக்குப் பிறகு இரண்டாம் முறையாக எகிப்தை ஒரு குடையின் கீழ் க�ொண்டுவந்தான். இது நடந்தது இடை அரசாட்சி காலகட்டத்தில் அதாவது பதின�ொராவது பார�ோ வம்சாவளி காலத்தில். நார்மருக்குப் பின் சுமார் 1000 வருடங்கள் கழித்து இது நடைபெற்றது.

28

நவீனா அலெக்சாண்டர்

மென்டோதெப் II கி.மு. 2010 – 1960 (11-வது அரசபரம்பரை, இடை அரசாட்சி காலகட்டம்)

மென்டோதெப் II. எகிப்து கண்ட மிகச் சிறந்த பார�ோக்களில் இவனும் ஒருவன். தீப்ஸ் நகரின் ப�ோர் கடவுளான ம�ோன்டுவின் நினைவாகவே இவனுக்கு மென்டோதெப் என்று பெயர் வைக்கப்பட்டது. மென்டோதெப் பார�ோ வமிசத்தைச் சேர்ந்தவன் கிடையாது. அதாவது முதல் பார�ோவான நார்மரின் நேரடியான இரத்த வழியில் வந்தவன் கிடையாது. நார்மருக்கு அடுத்து புதிய பார�ோ வமிசத்தைத் த�ொடங்கிவைத்தவன் என்று ச�ொல்லலாம். இவன் த�ொடங்கி வைத்த பார�ோ வமிசத்தை ஆராய்ச்சியாளர்கள் இடை அரசாட்சி காலகட்டம் என்று பகுத்திருக்கிறார்கள். நார்மரின் நேரடி இரத்த த�ொடர்புடைய பார�ோ வம்சம் எட்டாவது வம்சத்துடுன் முடிவடைந்துவிடுகிறது. அதன் கடைசிப் பார�ோ நெஃப்ரிகாரா. நெஃப்ரிகாராவிற்கு அடுத்து வந்த ஒன்பது, பத்து மற்றும் பதின�ொராவது வம்சாவளிக் காலத்தில் (கி.மு. 2125 – 2010) எகிப்தை ஆண்டவர்களை அரசர்கள் என்று மட்டுமே குறிப்பிட முடியும். காரணம் அவர்கள் மாநிலங்களின் ஆளுநர்கள். எகிப்தில் அன்றைய காலகட்டத்தில் ம�ொத்தமாக 22 இரண்டு மாநிலங்கள் இருந்தன. இந்த மாநிலங்களுக்குத் தனித் தனி ஆளுநர்கள் உண்டு (ந�ொமார்குகள்). இவர்களே எட்டாம் வமிசத்தின் கடைசிப் பார�ோவான நெஃப்ரிகாரா இறந்ததும் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய மாநிலங்களின் அரசர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டார்கள். இந்த நிலை ஏற்படக் காரணமாக இருந்த சமூக மற்றும் அரசியல் விசயங்களைப் பற்றி நாம் தெரிந்துக�ொள்வது அவசியம்தானே. இதற்கு நமக்கு எகிப்தின் நிலவியல் குறித்தும் தெரிந்திருப்பது அவசியமாகிறது. நாம் முன்பே பார்த்திருக்கிற�ோம் எகிப்தானது மேலை எகிப்து என்றும் கீழை எகிப்து என்றும் இரு பிரிவுகளைக் க�ொண்டது என்று. இந்தப் பிரிவுகளுக்கு மூல காரணம் நைல் நதி. உலகின் மிகச் சிறந்த மனித நாகரீகத்தை ஒரு நதியால் வடிவமைக்க முடியுமா என்கிற கேள்விக்குச் சிந்துவெளி, சுமேரிய மற்றும் சீன நாகரீகங்கள் பதில்களாக இருந்தாலும் எகிப்து என்கிற பதில் மிகச் சிறந்த பதிலாக இருக்க முடியும். அந்த அளவிற்கு எகிப்தியர்களின் தினசரி வாழ்க்கை த�ொடங்கி அவர்களின் மதக் க�ோட்பாடு, அரசியல் க�ோட்பாடு இறுதியாகப் பார�ோனிக் க�ோட்பாடு என்று அனைத்தையும் வடிவமைத்தது நைல் நதி.

நைல் நதி நைல் என்கிற ஒரு நதி இல்லையென்றால் இன்றைக்குப் பிரமிடுகள் என்பது இருந்திருக்காது. மம்மிகள் இருந்திருக்காது. முடிவற்ற சுவாரசிய வரலாற்றுக் கதைகள் இருந்திருக்காது. நைலின் வெள்ளப் பெருக்கே எகிப்தை உருவாக்கியும் இருக்கிறது சமயங்களில் அழித்துமிருக்கிறது. அந்த நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளமே எகிப்தின் விவசாய உற்பத்தி. உலகின் மற்ற நாகரீகங்கள் நதியின் கரையில் த�ோன்றியிருந்தாலும் அவற்றின் 29

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

விவசாய உற்பத்தி என்பது மழையை நம்பியும் கடுமையான உடல் உழைப்பையும் நம்பி இருந்த ஒன்று. ஆனால் எகிப்தியர்கள் தங்களுடைய விவசாயத்திற்கு நம்பியிருந்ததெல்லாம் நைல் நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஒன்றை மட்டும்தான். எகிப்தியர்கள் காலம் தவறாத மழையை நம்பி விவசாயம் செய்தவர்கள் கிடையாது. காரணம் எகிப்தை சுற்றியிருந்ததெல்லாம் பாலைவனம் மட்டுமே. வடக்கில் இருந்த மத்திய தரைக்கடலைத் தவிர. எகிப்தின் மேற்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருப்பதெல்லாம் சுட்டெரிக்கும் பாலைவன மணற் பரப்புத்தான். இத்தகைய நிலவியல் அமைப்பில் வருடம் தவறாத மழை என்பதெல்லாம் ப�ொய் கதைகள். நைல் நதியும் இல்லையென்றால் எகிப்து என்பது பாலைவனமே. நைல் நதியை எகிப்தியர்கள் இட்ரு என்று அழைத்தார்கள். இதற்கு அர்த்தம் ஆறு என்பது. நைல் நதி எத்திய�ோப்பியாவின் மேட்டு நிலப் பகுதியில் ம�ொழியும் மழையிலிருந்து உருவெடுக்கிறது. பல நீர்வீழ்ச்சிகள் ஒன்றாகச் சேர்ந்து நீல நைல் என்றும் வெள்ளை நைல் என்றும் பிரிந்து எகிப்தின் தெற்கு எல்லையான கார்டூம் பகுதிக்குள் நுழைகிறது. பழங்கால எகிப்தியர்களைப் ப�ொறுத்தவரை இதுவே நைல் பிறப்பெடுக்கும் இடம். பிறகு நைல் 500 ச�ொச்சம் கில�ோ மீட்டர்கள் வடக்கில் ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. எகிப்தியர்கள் தங்கள் நாடானது நைல் நதி பிறப்பெடுக்கும் மேடான பகுதியில் த�ொடங்கி அது கடலில் கடக்கும் தாழ்வான பகுதியில் முடிவடைகிறது என்று நம்பினார்கள். அதன் காரணமாகவே நைல் நதி எகிப்திற்குள் நுழையும் தெற்குப் பகுதியை மேல் எகிப்து என்றும் நைல் மத்திய தரைக்கடலில் கலக்கும் பகுதியை கீழ் எகிப்து என்றும் அழைத்தார்கள். நைல் வருடா வருடம் பெரும் சத்தத்துடன் காட்டாற்று வெள்ளத்தை இழுத்துக்கொண்டு எகிப்திர்குள் நுழையும். இந்தக் காட்டாற்று வெள்ளம் தன்னுடன் கருப்பு நிற வண்டல் மணலையும் இழுத்துக்கொண்டு வந்து வழி நெடுக்க இரண்டு கறைகளிலும் க�ொட்டிவிட்டுச் செல்லும். இதுதான் எகிப்தின் விவசாயத்திற்கான உயிர்நாடி. எகிப்தியர்கள் இந்த வண்டல் மணலின் மீது விதைகளைத் தூவினாலே ப�ோதும் மூன்று மாதம�ோ ஆறு மாதம�ோ கழித்து அறுவடை செய்துவிடலாம். மண்ணை உழவேண்டிய அவசியம�ோ நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம�ோ கிடையாது. ஒவ்வொரு வருடமும் எகிப்திய மக்கள் நைலின் வெள்ளப் பெருக்கிற்குக் காத்திருப்பார்கள். வெள்ளம் வந்து வடிந்த பிறகு விவசாயத்தை மேற்கொள்வார்கள். மிக எளிதான வேலை. ஆனால் எகிப்தியர்களின் விவசாய உற்பத்தியை எளிதாக்கி பெரும் செழிப்பைத் தரும் நைலின் வெள்ளப் பெருக்கே அவர்களின் உயிருக்கும் உலைவைக்கக் கூடியது. வெள்ளப் பெருக்கு மிக அதிக அளவில் இருந்தால் நைல் நெடுக்க இரு கரைய�ோரமாக இருக்கும் எகிப்திய நகரங்களும் நீருக்குள் முழ்கிவிடும். வெள்ளம் வடிந்துவிட்டாலும் அதிக நீர் தேங்கிய நிலம் விவசாயம் செய்ய விடாமல் செய்துவிடும். அந்த வருடம் பஞ்சம்தான். நைலில் வெள்ளப் பெருக்குக் குறைந்தாலும் பிரச்சனைதான். விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் ப�ொய்துவிடும். பஞ்சம்தான். இதைச் சமாளிக்க நீர்ப்பாசன முறைகளை எகிப்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அது நிரந்தரத் தீர்வாக அமையவேயில்லை. நைலின் வெள்ளப் பெருக்கு என்பது அதிகரித்தாலும் சரி குறைந்துவிட்டாலும் சரி அளப்பரியது. நைலின் வெள்ளப் பெருக்கிற்கு உதாரணம் வெள்ள நீர் இரண்டு கறைகளையும் தாண்டி பாலைவன மணற்பரப்பில் ஏறி வழியக் கூடியது. எகிப்தின் வரலாறு நெடுக இந்த வெள்ள நீர் இரு கரைகளிலும் சில பாலைவனச் ச�ோலைகளையும் உருவாக்கி இருக்கிறது. இத்தகைய சக்திப் படைத்த நைலின் வெள்ளப் பெருக்கை நிச்சயத் தன்மையுடன் நிதானிக்க முடியாது என்பதுதான் எகிப்தியர்களைப் ப�ொறுத்த வரை அதன் பாதகமான விசயம். வேறு வார்த்தைகளில் ச�ொல்வதென்றால் நைலின் வெள்ளப் பெருக்கு நிச்சயத்தன்மையற்றது. எகிப்தியர்களின் வாழ்க்கை நைல�ோடு பின்னப்பட்டது என்பதால் அவர்களின் வாழ்க்கையும் நிச்சயமற்ற தன்மையைக் க�ொண்டதாக மாறிப்போனது. இந்த நிச்சயமற்ற தன்மையே 30

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

எகிப்திய நாகரீகத்தின் சமூக, கலை, இலக்கிய, அரசியல் வாழ்வின் உள்ளுறை அம்சமாக இருக்கக் கூடியது. நைலின் நிச்சயமற்ற தன்மையே த�ொல் பழங்கால எகிப்தியர்களை மரணத்தைக் குறித்து அதிகமதிகமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது. மரணத்தையும் மறு வாழ்வையும் க�ொண்டாட வைத்திருக்கிறது. எகிப்திய நாகரீகத்தைத் தவிர வேறு எந்த நாகரீகமும் மரணத்தைப் பிரம்மாண்ட சடங்குகளின் மூலமும் பிரம்மாண்ட கட்டிடங்களின் மூலமும் க�ொண்டாடியதில்லை. மரணத்தின் கடவுளான ஒசிரிஸ் எகிப்திய நாகரீகத்தின் முழு முதற் கடவுளாகக் கூடச் சில காலம் இருந்திருக்கிறார். பழங்கால எகிப்தியர்களிடம் மூன்று விதமான படைப்புக் க�ோட்பாட்டுக் கதைகள் இருந்தாலும் அந்த அனைத்துக் கதைகளின் மையக் கருத்தும் நைல் நதியின் வெள்ளப் பெருக்கையே அடிப்படையாகக் க�ொண்டது. அவற்றில் ஒன்றை இப்போது பார்க்கலாம். படைப்புக் கடவுளான நுண் (பிற்காலத்தில் ரா கடவுளுக்கும் நுண் கடவுளுக்கும் பெரும் வித்தியாசமில்லாமல் ப�ோனது) மிக மிகத் த�ொல் பழங்காலத்தில் நைல் நதியில் ஏற்பட்ட ஒரு வெள்ளப் பெருக்கு வடிந்த பிறகு, அது உருவாக்கிய வண்டல் மணல் முகட்டில் முளைத்திருந்த தாமரை மலரில் த�ோன்றியதாகக் கி.மு. 3000 வருடங்களுக்கு முற்பட்ட எலும்புத் துண்டு எழுத்துகள் ச�ொல்கின்றன. எகிப்திய மக்கள் செழிப்பான நிலப்பகுதியை கெமெத் (கருமை) என்று அடையாளப்படுத்தினார்கள். மூன்று திசையிலும் பரந்து கிடக்கும் பாலைவனத்தை டேசரெட் (சிவப்பு) என்று அழைத்தார்கள். அன்றாடம் நேரம் தவறாமல் உதிக்கும் சூரியன் நைல் நதியின் இரு கரைகளிலும் இருக்கும் பயிர்களுக்கு உயிர் க�ொடுப்பதால் நைலின் இரு கரையையும் ‘செழிப்பின் நிலம்’ என்றார்கள் எகிப்தியர்கள். இருளை மரணத்தின் குறியீடாகப் பார்த்ததால் சூரியன் மறையும் திசையான மேற்கு திசையில் இருக்கும் பரந்த பாலைவனத்தை ‘மரணத்தின் நிலம்’ என்று அழைத்தார்கள். இதன் காரணமாகவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அரசர்களையும் பிற்காலத்தைய பார�ோக்களையும் அடக்கம் செய்யவும் அவர்களுக்கான கல்லறைகளையும், மஸ்டபாக்களையும், பிரமிடுகளையும் கட்டவும் மேற்கு திசையிலிருந்த பாலைவனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நைல் நதி எகிப்தில் ஓடி மத்திய தரைக்கடலில் கலக்கும் வழி நெடுக்கப் பல சிறிய நீர்வீழ்ச்சி ப�ோன்ற அமைப்பை ஏற்படுத்தி செல்கிறது. இவற்றை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கேட்டராக்ட்ஸ் என்று பிரித்திருக்கிறார்கள். இவையே சில மாநிலங்களின் எல்லைகளாக அமையக் கூடியவை. நார்மரின் காலத்தில் எகிப்தில் 42 மாநிலங்கள் இருந்தன என்பதைப் பார்த்தோம். இந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்த ந�ொமார்குகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் பார்த்தோம். பார�ோக்களைவிட இந்த ஆளுநர்களையே எகிப்திய மக்கள் பெரிதும் சார்ந்திருந்தார்கள். நைலில் வெள்ளப் பெருக்குப் ப�ொய்த்துப்போனால் உண்டாகும் பஞ்சத்தைப் ப�ோக்க உடனடியாகச் செயல்படுபவர்கள் இவர்களே. எகிப்தின் உண்மையான அதிகாரம் என்பது அதன் மாநிலங்களின் ஆளுநர்கள் கைகளிலேயே இருந்தது. பார�ோக்கள் இவர்களைத் தங்களின் கைகளுக்குள் வைத்துக்கொண்டதன் மூலமே எகிப்திய நாகரீகத்தை உச்ச நிலைக்குக் க�ொண்டுப�ோனார்கள். இப்படிப் ப�ோகிற ப�ோக்கில் ச�ொல்லிச் செல்வது வேண்டுமானால் சாதாரணமான காரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மாநிலங்களின் ஆளுநர்களை வழிக்குக் க�ொண்டுவர பார�ோக்கள் அனைத்து விதமான சாத்திய கூறுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் மேல் படையெடுத்தும் கூடச் சென்றிருக்கிறார்கள். இவர்களை வழிக்குக் க�ொண்டுவர பார�ோக்களுக்கு இருந்த மிக எளிய வழி இவர்களுக்குப் பட்டங்களையும் அதிகார சலுகைகளையும் வாரி வழங்குவது. இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான சலுகை, ஆளுநர்களும் பார�ோக்களுக்கு நிகராக மஸ்டபாக்களையும் கல்லறை க�ோயில்களையும் கட்டிக்கொள்ளலாம் என்பது. எகிப்தியர்கள் எப்படி மரணத்தைக் க�ொண்டாடக் கூடியவர்கள் என்பதை முன்பே நவீனா அலெக்சாண்டர்

31

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

பார்த்தோம். பார�ோக்களைப் ப�ோலத் தங்களுக்கான மஸ்டபாக்களைக் கட்டிக்கொள்வது என்பது ஆளுநர்களுக்கு மிகப் மிகப் பெரிய மரியாதையையும் மதிப்பையும் க�ொடுக்கக் கூடிய விசயம். இந்த ஒரு சலுகைக்காகவே பர�ோக்களின் எல்லாக் கட்டளைகளுக்கும் தாளம் ப�ோடுவார்கள். பார�ோக்கள் இப்படியான சலுகையை ஆளுநர்களுக்குத் தருவது என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல. அரசின் கசானாவையே தீர்த்துக்கட்டும் சலுகை இந்தச் சலுகை. ஒரு பார�ோ எவ்வளவிற்கு ஆளுநர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்தச் சலுகையைத் தருகிறார�ோ அவ்வளவிற்குத் தன்னுடைய கசானாவிற்குத் தானே வேட்டு வைத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். இருந்தாலும் முதல் பார�ோவான நார்மர் த�ொடங்கி இந்தச் சலுகை மிகவும் நம்பிக்கையான அதே சமயத்தில் பணிவுள்ள ந�ொமார்குகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை உண்டு. பார�ோவின் மஸ்டபாச் சுவர், மம்மியை வைக்கும் சார்கோஃபிகஸ், கல்லறை க�ோயில் சுவர்கள் ஆகியவிற்றில் மட்டுமே மறு வாழ்வு பயணத்திற்கும் மறு வாழ்வு உயிர்த்தெழுதலுக்கும் உதவும் ‘இறந்தவர்களின் புத்தகம்’ (Book of the Dead), ‘உயிர் மூச்சின் புத்தகம்’ (Book of the Breathings) மற்றும் ‘வழியின் புத்தகம்’ (Book of the Way) ஆகிய புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் ச�ொற்களையும் எழுதவேண்டும். பார�ோவைத் தவிர மற்றவர்கள் இந்தப் புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் ச�ொற்களையும் தங்களுடைய மஸ்டபாக்களிலும், கல்லறை க�ோயில்களிலும், சவப் பெட்டிகளிலும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காரணம் பார�ோவே பூமியில் ரா மற்றும் ஓரஸ் கடவுள்களின் பிரதிநிதி என்பதால் அவருக்கு மட்டுமே மறு வாழ்வு உயிர்த்தெழுதலுக்காக இந்த மந்திரங்களையும் பாடல்களையும் பயன்படுத்தும் உரிமை இருந்ததாகக் கருதப்பட்டது. பாரவ�ோவின் மனைவி உட்பட வேறு யாருக்கும் இந்த உரிமை கிடையாது என்று தடை செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகைக் கிடைக்கப் பெறாதா அதே சமயத்தில் பார�ோவின் தலைமைக்குக் கட்டுப்பட விரும்பாத ந�ொமார்குகள் பார�ோனிக் வரலாறு நெடுக தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துக�ொண்டே இருந்தார்கள். நார்மருக்குப் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கழித்துப் பார�ோக்களின் ஆட்சியை மிரட்டும் கிளர்ச்சி ஒன்று உருவானது. இரண்டாம் வம்சாவளி காலகட்டத்தின் முடிவில் இது நடந்தது. நார்மர் உருவாக்கிய பார�ோ வம்சம் முந்நூறே ஆண்டுகளில் முடிவிற்கு வர இருந்த சமயத்தில் பார�ோ காசேகெம்வே தன்னுடைய தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த ந�ொமார்குகளின் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட வேட்டையாடி கிளர்ச்சிகளை ஒரு முடிவிற்குக் க�ொண்டுவந்தான். இது நடந்தது சுமார் கி.மு. 2650 வாக்கில். இவன் மட்டும் இல்லாது ப�ோயிருந்தால் எகிப்திய நாகரீகத்தின் தலையெழுத்து வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும். இவன் காலத்திற்குப் பின்னால் வந்த பார�ோ கூஃபு கட்டிய ‘கீசாவின் அதிசய பிரமிட்’ என்கிற உலக அதிசயங்களில் ஒன்று நமக்குக் கிடைக்காமல் ப�ோயிருக்கும். இவன் காலத்திற்குப் பின்னால் த�ோன்றிய பார�ோக்களுக்கு, தங்களுடைய ஆட்சி நிலைக்க வேண்டுமானால் மேலும் மேலும் அதிகமாக மாநில ஆளுநர்களைச் சாந்தப்படுத்த வேண்டும் என்கிற இடைவிடாத நிர்பந்தம் ஏற்படத் த�ொடங்கியது. அதன் காரணமாகக் கண்ணில் படும் ஆளுநர்களுக்கெல்லாம் பிரமிடுகளையும் அத�ோன�ோடு கூடிய கல்லறை க�ோயில்களையும் தங்களுடைய ச�ொந்த செலவிலேயே கட்டிக் க�ொடுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கினார்கள். (பார�ோ காசேகெம்வேக்கு அடுத்து பார�ோவாகப் பதவியேற்ற பார�ோ ஜ�ோசரே உலகின் முதல் பிரமிடைக் கட்டியவன். இவன் கட்டிய பிரமிட் ஸ்டெப் பிரமிட் வகையைச் சேர்ந்தது. வேறு வார்த்தைகளில் ச�ொல்வதென்றால் பிரமிடுகளின் தந்தை ப�ோன்றது இந்த ஸ்டெப் பிரமிட்) தன்னுடைய அரசவையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்குமான பிரமிடுகளையும் கல்லறைக் க�ோவில்களையும் கட்டுவதுடன் மாத்திரம் ஒரு பார�ோவின் கடமை முடிந்துவிடாது. (இவற்றுக்கே அரச கருவூலம் பாதிக் காலியாகிவிடும் என்பது வேறு விசயம்.) அவற்றில் உலகம் இருக்கும் வரைக்கும் 32

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

வருடத்தின் 365 நாட்களுக்கும், ஒரு நாளின் மூன்று வேலையும் உணவுகள் படைப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். எக்காரணத்தைக் க�ொண்டும் இந்த உணவு படைக்கும் காரியம் மட்டும் நிறுத்தப்படவே கூடாது. மேலும் அந்தக் கல்லறைக் க�ோயில்களைப் பராமரிக்கும் பூசாரிகளுக்கும் மாத சம்பளமும் க�ொடுத்தாக வேண்டும். இந்தக் காரியங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாது அப்படிச் செய்வது பார�ோவிற்கு அவமானம். தன்னுடைய பிரமிட் மற்றும் கல்லறைக் க�ோயில்களைக் கட்டுவதும் அவற்றில் வருடம் முழுக்க உணவுப் படைக்க ஏற்பாடு செய்வதுமே ஒரு பார�ோவிற்குப் பெரும் ப�ொருளாதாரச் சுமையாக இருக்கும்போது தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இதைச் செய்வதென்றால் பார�ோவின் அரச கருவூலம் தாக்குப்பிடிக்குமா? தாக்குப்பிடிக்கவில்லை. பார�ோக்கள் ஆளுநர்களை அளவிற்கு அதிகமாகச் சாந்தப்படுத்த முயற்சி செய்ததின் விளைவு, பார�ோக்கள் யாரை தங்களின் அதிகாரத்திற்குக் கீழ் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும�ோ அவர்களையே கையாளாகாதவர்களைப் ப�ோல மேலும் மேலும் சார்ந்திருக்கும்படியானது. இது ப�ோதாது என்று பார�ோவின் குடும்பத்தினரே பார�ோவின் தனிப்பட்ட உரிமையில் (பிரமிடுகளிலும், சவப்பெட்டியிலும், கல்லறை க�ோவில்களிலும் எழுதப்படும் மறு வாழ்விற்கான மந்திரச் ச�ொற்கள்) பங்கு கேட்டுப் பிரச்சனை செய்தார்கள். இதை முதலில் த�ொடங்கிவைத்தது ஆறாவது வம்சாவளியின் கடைசிப் பார�ோவான பெப்பி II-வின் ஒன்றுவிட்ட சக�ோதரி நெய்த். இது நடந்தது கி.மு. 2200 வாக்கில். அவள் தன்னுடைய பிரமிடில் ‘இறந்தவர்களின் புத்தகம்’(Book of the Dead), ‘உயிர் மூச்சின் புத்தகம்’ (Book of the Breathings) மற்றும் ‘வழிகளின் புத்தகம்’ (Book of the Way) ஆகியவற்றின் சடங்குப் பாடல்களையும் மந்திரச் ச�ொற்களையும் எழுதிக்கொண்டாள். பார�ோவின் தனிப்பட்ட உரிமை பறிப�ோனது. பார�ோவின் பலம் ஆதாள பாதாளத்திற்குப் ப�ோய்விட்டது என்பதற்கான வெளிப்படையான மற்றும் வலுவான ஆதாரம் நெய்தின் இந்த நடவடிக்கை. இவளைத் த�ொடர்ந்து ந�ொமார்குகளும் தங்களுடைய பிரமிடுகளிலும் கல்லறைக் க�ோவில்களிலும் மறுவாழ்விற்கான மந்திரச் ச�ொற்களை எழுதத் த�ொடங்கிவிட்டார்கள். வெந்தப் புண்ணில் உப்பை வைத்துத் தேய்க்கும் கதையாக, ந�ொமார்குகளுக்கும் அரசவை சகாக்களுக்கும் பார�ோ தன்னுடைய ச�ொந்த செலவில் கட்டித்தரும் பிரமிடுகளிலும் இந்த மந்திரச் ச�ொற்கள் எழுதப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். பார�ோக்களின் கருவூலம் தேய்ந்துக�ொண்டே ப�ோக ந�ொமார்குகளின் பலம் மீண்டும் வளர்ந்துக�ொண்டே வந்தது. இதன் விளைவு பார�ோ பெப்பி II-க்கு பிறகு வந்த பார�ோக்களால் அவர்களுடைய ச�ொந்த பிரமிடுகளையே கட்ட முடியாமல்போனது. பின்னால் வரும் பார�ோக்கள் சேர்ந்தார்போல ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்தாலே மிகப் பெரிய விசயமாகப் பார்க்கப்பட்டது. எகிப்திய கட்டிட வல்லுநர்கள் அந்தக் குறிப்பிட்ட பார�ோவின் பிரமிடிற்கான அஸ்திவார பணிகளைக் கூட முடித்திருக்க மாட்டார்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்தப் பார�ோவிற்குப் பதிலாக ஆட்சியில் வேறு ஒரு பார�ோ உட்கார்ந்திருப்பார். சரி இந்தப் பார�ோவிற்கே இந்தப் பிரமிடை கட்டிவிடலாம் என்று சுற்றுச் சுவரை எழுப்பிவிட்டு உட்காரும் நேரத்தில் வேறு ஒரு பார�ோ ஆட்சியில். எட்டாவது வம்சாவளி காலகட்டத்தின் (கி.மு. 2175 - 2125) இடைப்பட்ட ஆண்டுகளில் அஸ்திவாரம் எடுக்கப்பட்டு அப்படியே கைவிடப்பட்ட பார�ோகளின் பிரமிடுகள் நிறைய உண்டு. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பார�ோ இபி மட்டுமே ஒரு முழுமையான பிரமிடு கட்டும் அளவிற்கு முழுமையாக ஆட்சியிலிருந்தவன். இப்படி ஊசலாடிக்கொண்டிருந்த பார�ோக்களின் வல்லமை எட்டாவது வம்சாவளியின் இறுதி பார�ோ நெஃபிர்காராவ�ோட முடிவிற்கு வந்தது. ந�ொமார்குகளின் பலம் முழுமையாகப் பார�ோனிக் சகாப்தத்தைச் சாய்த்துவிட்டது. முதல் பார�ோ நார்மர் த�ொடங்கிவைத்த பார�ோ வம்சம் மம்மியாகி பிரமிடிற்குள் ப�ோய்படுத்துக்கொண்டுவிட்டது. அது மீண்டும் உயிர்த்தெழவைக்கப்பட அடுத்த 100 வருடங்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்த எகிப்தில் நவீனா அலெக்சாண்டர்

33

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மிகவும் பலம் ப�ொருந்திய மாநிலமாக இருந்தது ஹிராக்லிய�ோப�ோலிஸ் (இன்றைக்கு இது இன்ஷையா-எல்-மெதினா நகரம்) இது எகிப்தின் மத்திய பகுதி. இதன் அரசனாக இருந்தவன் கெட்டி. மிகக் க�ொடூரமான அரசனாக இருந்தவன் என்று எகிப்திய வரலாற்று ஆசியிரியர் மானித்தோ பதிவு செய்கிறார். எகிப்தின் அடுத்தப் பார�ோவாக வந்துவிடவேண்டும் என்கிற முனைப்பில் மற்ற மாநிலங்களின் ஆளுநர்களின் மீது படையெடுத்து அகப்படும் ஆளுநர்களைக் க�ொடூரமாகக் க�ொலை செய்துக�ொண்டிருந்தான். அவனுக்கு எதிராக ஒருவரும் மூச்சு கூட விடக்கூடாது என்பதை மறைமுகமாகத் தெளிவாக்கியது அவனுடைய அரசியல் நடவடிக்கைகள். அவனுடைய க�ொடூர செயல்களையும் தாண்டி அவனுக்குச் சிம்மச�ொப்பனமாக இருந்த ஒரே மாநிலம் எகிப்தின் தெற்கில் இருந்தது. நைல் நதியின் கிழக்குக் கரையில் இருந்த எகிப்தின் நான்காவது மாநிலம் அது. அதன் தலைநகரம் தீப்ஸ். இந்த நகரத்தின் எல்லைகளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு பாலைவனங்களை ஊடறுத்துச் செல்லும் பாலைவனப் பாதைகள் சந்தித்துக்கொண்டன. இந்த நகரத்திலிருந்து மேற்குத் திசையில் நைலை ஒட்டி ஒரு பாதை பழங்காலச் சிறப்பு மிக்க அட்ஜூ நகரம் வரைக்கும் சென்றது. இந்த நகரின் கிழக்கு திசையிலும் ஒரு பாதை நைல் நதி ஓடும் திசையிலேயே ஓடி எகிப்தின் தெற்குப் பகுதிகளை அடைந்தது. இந்த நகரம் எகிப்தின் பழைய அரசாட்சி (கி.மு. 2575 – 2125) காலகட்டத்திலிருந்து முக்கியத்துவம் பெறத் த�ொடங்கியிருந்தது. இந்த நகருக்கு அருகிலேயே பழங்கால எகிப்தியர்களின் புண்ணியத் தளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இப்ட்சட் இருந்தது (இது இன்றைய கர்நாக்). கெட்டிக்கு நிகராக எகிப்தின் மற்ற மாநிலங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தவன் இன்டெஃப். தீப்சின் ஆளுநர். அதாவது அரசன். இன்டெஃப்பின் ப�ோர்த் தந்திரம் கெட்டியினுடையது ப�ோல இருக்கவில்லை த�ொடக்கக் காலகட்டங்களில். ஹிராக்லிய�ோப�ோலிசுக்கு தான் அடங்கியிருப்பவன் என்று காட்டிக்கொண்டே மறைமுகமாகத் தன்னுடைய படை பலத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய மாநிலத்தின் ப�ோர் தந்திர�ோபய முக்கியத்துவம் குறித்து அவன் நன்றாகவே கணித்துவைத்திருந்தான். ஹிராக்லிய�ோப�ோலிஸ் அரசன் கூட்டிய ஆளுநர்களின் கூட்டங்களுக்குத் தான் ப�ோகாமல் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்புவது அவனுடைய தந்திரங்களில் ஒன்று. இப்படிச் செய்வதன் மூலம் கெட்டிக்கு தான் அடங்கியவன் என்று காட்டிக்கொண்டே தான் கெட்டியையும் மதிக்காதவன் என்கிற த�ோற்றத்தை மற்ற ஆளுநர்கள் மத்தியில் ஏற்படுத்தினான். இதன் காரணமாகவே மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் இவன் மீது சந்தேகத்துடனேயே திரிந்துக�ொண்டிருந்தார்கள். இவனுடைய மாநிலத்திற்கு அடுத்து இருந்த மூன்றாம் மாநில அரசனான அன்கிடிபி வெளிப்படையாகவே ஹிராக்லிய�ோப�ோலிஸ் அரசனை எதிர்த்துக்கொண்டிருந்தவன். தன்னுடைய பலத்தை ஹிராக்லிய�ோப�ோலிசுக்கு உணர்த்தத் திட்டமிட்ட அவன் பல சின்ன மாநிலங்களைத் தன்னுடைய படை பலத்தின் மூலம் இணைத்துக்கொண்டு தீப்சைத் தாக்கினான். ஒரு மிகப் பெரிய ப�ோருக்குத் தயாராகிக்கொண்டிருந்த தீப்சின் இன்டெஃப் இந்தப் ப�ோரில் தன்னுடைய பலத்தை வீணாக்க விரும்பாமல் அமைதியாக இருந்துவிட்டான். அன்கிடிபியின் படை தீப்சை முற்றுகையிட்டுப் பார்த்துவிட்டு வெல்ல முடியாமல் பின்வாங்கிப் ப�ோய்விட்டது. தீப்சின் முற்றுகையிலேயே தன்னுடைய பலத்தை இழந்துவிட்ட அன்கிடிபியின் படையைக் கெட்டி சுலபமாக வேட்டையாடிவிட்டான். இதன் பிறகு வந்த அடுத்த நூறு வருடங்களுக்குக் கெட்டியின் தலைமுறைக்கும் இன்டெஃப்பியின் தலைமுறைக்கும் இடையில் மட்டுமே எகிப்தின் அடுத்தப் பார�ோ யார் என்கிற ப�ோட்டி நிலவியது. இரண்டு மாநில அரசர்களும் அடுத்த மூன்று தலைமுறைகளாக ஒருவர் மீது ஒருவர் ப�ோர் த�ொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த நூறு வருட பார�ோ அரியணைப் ப�ோருக்கு இறுதி முடிவுகட்டியவன் மென்டோதெப் II. இவனுடைய காலத்தில் எகிப்தின் பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்களைத் தங்களுக்குள் இணைத்துக்கொண்டுவிட்டதால் மாநிலங்களின் எண்ணிக்கை 22-ஆகக் குறைந்திருந்தது. மென்டோதெப் II ப�ோர் 34

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

திட்டமிடல்களில் படு கில்லாடி. எங்கு எகிறி அடிக்கவேண்டும் எங்குப் பதுங்கிப் பாயவேண்டும் என்பதை முன் கூட்டியே மிகத் துல்லியமாகக் கணிக்கக் கூடியவன். அவன் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டன் முப்பாட்டன்களைப் ப�ோல வருடத்திற்கு ஒருமுறை ஹிராக்லிய�ோப�ோலிசின் கெட்டி அரச தலைமுறைகளுடன் ப�ோய் ம�ோதிவிட்டு வருவதை விரும்பவில்லை. ஒரே ஒரு படையெடுப்பு ஒரே அடி ஹிராக்லிய�ோப�ோலிசின் கதை முடிந்துவிட வேண்டும் என்பதே அவனுடைய திட்டம். இதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருந்தான் அரசனாகியும் பதின�ொரு வருடங்கள் வரை. ஹிராக்லிய�ோப�ோலிசின் கதையை முடிப்பதற்கு முன்னால் அவன் தாக்கியது வடக்கிலிருந்த மெம்பிசை. ஹிராக்லிய�ோப�ோலிஸ் நகரம் படை உதவிக்காக மெம்பிசை அணுகிவிடக் கூடாது என்பதற்காக. இதை முடித்துவிட்டு நேராக அவன் ப�ோய் நின்றது ஹிராக்லிய�ோப�ோலிசில். அவன் திட்டமிட்டிருந்த இறுதி அடி ஹிராக்லிய�ோப�ோலிஸ் நகரின் தலையில் இறங்கியது. கெட்டி அரச குடும்ப உறுப்பினர்கள் மேற்கிலும் கிழக்கிலும் இருந்த பாலைவனத்திற்கு ஓடியும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. கெட்டி அரச குடும்பத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் மறு உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். என்ன அதற்கு அவர்களுக்குப் பிரமிடு மற்றும் மம்மி உடல் உதவி செய்யாமல் மென்டோதெப் படையினரின் ஆயுதங்களே உதவி செய்தன. மென்டோதெப்பை எதிர்க்க வேறு எந்த மாநில அரசர்களுக்கும் பலம் கிடையாது என்பதால் அவனுக்கு அடங்கிப்போய்விட்டார்கள். மென்டோதெப் கி.மு. 2010-ல் தன்னை எகிப்தின் பார�ோவாக அறிவித்தான். தனக்கான பார�ோனிக் பெயராக நெட்ஜரி-ஹெட்ஜட் என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து எகிப்திய மண்ணில் மீண்டும் பார�ோ சகாப்தம் த�ொடங்கியது. முதல் பார�ோ செய்த அதே காரியத்தைச் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இரண்டாம் முறையாக மென்டோதெப் செய்தான். அதனால் இவனை ‘மறு ஒருங்கிணைப்பாளின்’ என்று குறிப்பிடுகிறார்கள். இவன் காலத்திலிருந்தே எகிப்தின் இடை அரசாட்சி காலகட்டம் (கி.மு. 2010 – 1630) த�ொடங்குகிறது. பதின�ொராவது வம்சத்தின் இடைக் காலத்தையும் த�ொடங்கிவைத்தவன் இவனே. இவன் காலத்திற்குச் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரமிடு கட்டிடக் கலையும் இளைத்துத் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டிருந்தது. எல்லாம் திறமையில்லாத பார�ோக்களின் கைவண்ணம்தான். இந்தக் காலகட்டங்களிலேயே மம்மியை வைக்கும் சர்கபேகஸ்களின் மேல் மறு வாழ்விற்கான பாடல்களும் மந்திரங்களும் எழுதப்படும் வழக்கம் த�ோன்றியது. காரணம் பிரமிடுகள் கட்ட முடியாத காரணத்தால் பிரமிடுகளின் சுவரிலும் கல்லறை க�ோயில்களின் சுவரிலும் எழுதப்பட வேண்டிய மந்திரங்கள் சவப்பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் எழுதும்படியாகிப்போனது. இந்தக் காலகட்டங்களிலேயே சவப் பெட்டி வடக்குத் தெற்காக வைக்கப்பட்டுச் சவப் பெட்டிக்குள் வைக்கப்படும் மம்மியின் முகம் கிழக்கு திசையைப் பார்க்கும்படி திருப்பிவிடும் வழக்கமும் த�ோன்றியது. காரணம் எகிப்தியர்கள் சூரிய உதயம் பூமிக்கு உயிரைக் க�ொண்டுவருகிறது என்று நம்பியதால், இறந்தவரின் மம்மி சவப் பெட்டிக்குள் இருந்தபடி சூரியன் உதிக்கும் கிழக்கு திசையைப் பார்ப்பதின் மூலம் உயிர்த்தெழுவார் என்று நம்பினார்கள். அதற்கு வசதியாகச் சவப் பெட்டியின் கிழக்குப் பக்கத்தில் இரண்டு கண்களை வரைந்தும் வைக்கத் த�ொடங்கினார்கள். அந்தக் கண்களின் வழியாக மம்மி சூரிய உதயத்தைப் பார்க்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. பிரமிடுகளின் சுவரிலும் கல்லறை க�ோயில்களின் சுவரிலும் விவசாயம் செய்வது, மீன் பிடிப்பது, உணவு சமைப்பது, காய்கறி நறுக்குவது, பழங்களைப் பறிப்பது, கால்நடைகளை வளர்ப்பது ப�ோன்ற ஓவியங்களை மிகப் பழங்காலம் த�ொட்டே எகிப்தியர்கள் வரைந்து வைப்பது வழக்கம். விவசாயத்தின் மூலமும், மீன் பிடிப்பதன் மூலமும் கால்நடைகளை வளர்ப்பதன் மூலமும் கிடைக்கும் உணவுப் ப�ொருட்கள் இந்த ஓவியங்களின் வழியாகச் சவப் பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுத் தேவைகளை நவீனா அலெக்சாண்டர்

35

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

நிறைவேற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. பிரமிடுகளே இல்லை என்றான காலகட்டம் வந்த பிறகு எங்கிருந்து இந்த ஓவியங்களை வரைவது. திறமையான ஓவியர்கள் பிரமிட் வேலையில்லாமல் வேறு வேலைகளுக்குச் செல்லும்படி ஆகிப்போனதால் இந்தக் காலகட்டத்தில் கல்லறைகளில் இத்தகைய ஓவியங்களை வரைய ஆட்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகிப்போனது. இந்தச் சங்கடத்தைச் சரிக்கட்ட இந்தக் காலகட்ட எகிப்தியர்கள் செய்த காரியம் இன்றைக்கு நமக்கு மிகச் சிறந்த காலக் கண்ணாடியாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயம், மீன் பிடிக்கும், கால்நடை வளர்க்கும், உணவுத் தயாரிக்கும் ப�ொம்மைகளைச் செய்து கல்லறைகளில் வைத்துவிட்டார்கள். இந்தப் ப�ொம்மைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் விலைமதிப்பில்லாதவை. அன்றைய மனிதர்களின் உடை அமைப்பு, விவசாயக் கருவிகள், மீன் படி கருவிகள், உணவுத் தயாரிப்பு ப�ொருட்களின் அமைப்புகள், படகுகளின் அமைப்புகள் என்று இவற்றிலிருந்து நாம் பெறும் தகவல்களை அடுக்கிக்கொண்டே ப�ோகலாம். எகிப்தின் கலை மற்றும் இலக்கியச் சிறப்புகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தான் மென்டோதெப். பிரமிடுகள் மீண்டும் அதன் பழைய பிரம்மாண்டத்தைப் பெறத் த�ொடங்கின. நாம் இதுவரை மஸ்டபாக்களின் த�ோற்றத்தைப் பார்த்துவிட்டோம் ஆனால் பிரமிடுகளின் பிறப்பை பார்க்கவில்லைதானே. பிரமிடை முதன் முதலில் கட்டிய பார�ோ யார்? இதற்கான வரலாற்று விடையை நாம் முன்பே பார்த்திருக்கிற�ோம் அது பார�ோ ஜ�ோசர். இது நடந்தது மூன்றாம் வம்சத்தின் த�ொடக்கக் காலத்தில். அதாவது பழைய அரச வம்சாவளி காலகட்டத்தில் கி.மு. 2650-களில்.

36

நவீனா அலெக்சாண்டர்

ஜ�ோசர் கி.மு. 2650 – 2620 (3-வது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

எகிப்தின் முதல் பிரமிடு குறித்துத் தெரிந்துக�ொள்ளப் பார�ோ மென்டோதெப் காலத்திலிருந்து 600 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். வாருங்கள் ‘மரணத்தின் நிலம்’ என்று அழைக்கப்படும் எகிப்தின் மேற்கு கரை பாலைவனம் வழியாகப் ப�ொடி நடையாக நடந்து எகிப்தின் முதல் பிரமிடை தேடிச் ச�ொல்வோம். நாம் ப�ோய்ச் சேரவேண்டிய இடத்தின் பெயர் ஸக்கரா. இந்த இடம் எகிப்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது. அதாவது கீழ் எகிப்தில். மென்டோதெப்-க்கு விடை க�ொடுத்துவிடுவ�ோம். அவன் அவனுடைய கல்லறை க�ோயிலுக்குப் ப�ோக வழி விட்டுவிடுங்கள். ஸக்கராவிற்கான பயணத் தூரம் க�ொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் என்ன. வழித் துணைக்கு நம்மிடம் எகிப்திய சுவாரசிய கதைகளுக்குப் பஞ்சமா என்ன! முதல் பார�ோ நார்மர் காலத்திற்கு முன்பிலிருந்தே மேலை எகிப்து பகுதியில் இருந்த அட்ஜூ பாலைவனப் பகுதி அரசர்களின் நெக்ரோப�ோலிசாக இருந்திருக்கிறது. நெக்ரோப�ோலிஸ் என்றால் மிகப் பெரிய கல்லறைத் த�ோட்டம் என்று ப�ொருள். பழங்கால எகிப்திய அரசர்கள் தங்களின் மஸ்டபாக்கள் இந்த இடத்திலேயே கட்டப்படவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த இடத்திற்கு ஒரு புனித தன்மை வந்து ஒட்டிக்கொண்டது. இந்த விருப்பத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. நார்மரும் தனக்கான மஸ்டபாவையும் கல்லறைக் க�ோயிலையும் இந்த இடத்திலேயே கட்டிக்கொண்டான். இதை அவன் பெருமையாகவும் கருதியிருக்கிறான். அவனுக்குப் பின் வந்த ஏழு பார�ோக்களும் தங்களின் மஸ்டபாக்களை இந்த நிலத்திலேயே கட்டிக்கொண்டார்கள். ஏறத்தாழ 1000 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்தப் பாரம்பரியத்திற்கு முடிவு கட்டப்பட்டது இரண்டாம் வம்சாவளியின் ஆட்சிக் கால முடிவில். இந்த முடிவுகட்டலுக்குப் பிறகே மூன்றாம் வம்சாவளியின் கால கட்டம் த�ொடங்குகிறது. இதைச் செய்தவன் பார�ோ ஹெட்டெசகேமி, மூன்றாம் வம்சத்தின் முதல் பார�ோ. இது நடைபெற்றது கி.மு. 2750-கள் வாக்கில். அட்ஜூ நிலப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட கடைசிப் பார�ோ இவனுடைய தந்தை பார�ோ குவா. பார�ோ ஹெட்டெசகேமி தனக்கான மஸ்டபாவையும் கல்லறைக் க�ோயிலையும் கட்டத் தேர்ந்தெடுத்த நிலம் ஸக்கரா. ப�ொதுவாகப் பழங்கால எகிப்தியர்கள் பாரம்பரியத்தை மீறி நடக்கக் கூடியவர்கள் கிடையாது. பழம் பாரம்பரியத்தை அப்படியே பின் த�ொடர்வதைத் தங்களின் பெருமைகளில் ஒன்றாகக் கருதக் கூடியவர்கள். அப்படியிருக்கையில் என்ன காரணத்திற்காகப் பாரம்பரியத்தை மீறும் இந்த முடிவை பார�ோ ஹெட்டெசகேமி எடுத்தான் என்பதற்கான எழுத்துப் பூர்வ ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக அவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஸக்கராவில் கட்டப்பட்ட முதல் மஸ்டபா அனேகமாக இவனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். 37

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

தன்னுடைய மஸ்டபாவிற்கான ஒரு புதிய இடத்தைத் தேர்ந்தெடுத்துப் புதுமை செய்ததைதுப்போல மஸ்டபா கட்டிக் கலையிலும் பல புதுமையான மாறுதல்களை அறிமுகப்படுத்திய முதல் பார�ோவும் இவனே. மஸ்டபாக்களின் கீழே இருக்கும் கல்லறை அறைகளைச் சுட்ட செம்மண் செங்கற்களால் கட்டாமல் பாறைகளில் செதுக்கி அதற்கு மேல் சுட்ட செங்கற்களைக் க�ொண்ட மஸ்டபாவை கட்டியெழுப்பினார்கள் இவன் காலத்திய கட்டிட வல்லுநர்கள். அதே ப�ோலக் கல்லறை அறைகளின் அமைப்பிலும் புதுமைகளை நுழைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை கல்லறை அறைகள் என்பது இப்படித்தான் இருக்கும். ஒரு பெரிய அறை அதில் பார�ோவின் சவப்பெட்டி சர்கபேகஸ் வைக்கப்படும். அதைச் சுற்றிலும் சிறிய சிறிய அறைகள் கட்டப்படும் அவற்றில் உணவுப் ப�ொருட்களும் மற்ற ஆடம்பரப் ப�ொருட்களும் வைக்கப்படும். இந்த அமைப்பை கைவிட்டுவிட்டுக் கல்லறை அறையைக் கிட்டத்தட்ட அரண்மனை அறைகள் ப�ோன்ற அமைப்பிலேயே பாறையில் குடைந்துவிட்டார்கள் அவன் காலத்திய கட்டிட வல்லுநர்கள். கல்லறை அறை என்பது பார�ோவின் மம்மிக்கான சாப்பிடும் குடிக்கும் அறையாக மட்டும் இருப்பதில் ஹெட்டெசகேமிக்கு விருப்பம் இல்லை. தான் வாழும் அரண்மனைப் ப�ோன்றே தன்னுடைய மம்மியின் கல்லறை அறைகளும் இருக்கவேண்டும் என்று பெரிதாக விரும்பினான். அவன் விருப்பத்தைச் செயல்படுத்திக்காட்டினார்கள் அவன் காலத்திய கட்டிடக் கலைஞர்கள். இவனுக்கு அடுத்த வந்த பார�ோக்களும் இதே கட்டிடக் கலையைத் தங்களுடைய மஸ்டபாக்களிலும் த�ொடர்ந்தார்கள். இத�ோ ஸக்கரா வந்துவிட்டது நண்பர்களே. பயணக் கலைப்பே தெரியாமல் வந்து சேர்ந்துவிட்டோம் பாருங்கள். சரி சரி வாருங்கள் பார�ோக்களின் ஆயிரமாயிரம் ஆண்டுக்கால நித்திரையைக் கலைத்துவிடாமல் இன்றைய பிரமிடுகளின் தந்தையாகக் கருதப்படும் அந்த முதல் பிரமிடைத் தேடிச் செல்வோம். அத�ோ அதுதான் நண்பர்களே பார�ோ ஜ�ோசரின் ஸ்டெப் பிரமிட். பிரமிடுகளின் தந்தை அதுவேதான். அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். இத�ோ இந்த மேடையில் ஒரு பெயர் கல்வெட்டாக எழுதப்பட்டிருக்கிறது பாருங்கள் இதுதான் இந்தப் பிரமிடை உருவாக்கியவரின் பெயர். ஆம் சரியாகப் படித்துவிட்டீர்கள் ஈம�ோதெப்பெதான். எகிப்தின் முதல் பிரமிடை வடிவமைத்துக் கட்டியெழுப்பிய கட்டிடக் கலை வல்லுநர். மனித இன வரலாற்றிலேயே அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு கலைஞனின் கற்பனைக்காக மிகப் பெரும் நாகரீகத்தின் அரசு என்கிற இயந்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்குமானால் அது ஈம�ோதெப் என்கிற இந்த மனிதனுக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.

ஈம�ோதெப் இந்த நடவடிக்கை பார�ோ ஜ�ோசர், ஈம�ோதெப் மீதும் அவனுடைய திறமைகளின் மீதும் வைத்திருந்த கண் மூடித்தனமான நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. ஈம�ோதெப் பார�ோ ஜ�ோசரை எந்த அளவிற்குக் கவர்ந்திருந்தான் என்பதற்கு மற்றொரு உதாரணம் மிக மதிப்பு மற்றும் அதிகாரம் மிக்கப் பல அரசு பட்டங்கள் அவனுக்கு வழங்கப்பட்டிருப்பதிலிருந்து தெரியவருகிறது. ‘அரச முத்திரை உடமையாளன்’, ‘பார�ோவிற்கு அடுத்த அதிகாரி’, ‘பெருமைமிக்கப் பண்ணையின் ஆட்சியாளன்’, ‘கனவான்களில் ஒருவன்’, ‘கண்காணிப்பாளர்களில் மூத்தவன்’ மற்றும் ‘சிற்பிகள், ஓவியர்களின் மேற்பார்வை அதிகாரி’ இவை ஈம�ோதெப்பை அலங்கரிக்கும் அரசு பட்டங்கள். பார�ோ ஜ�ோசர் தன்னுடைய பிரமிடின் நுழைவாயிலில் தன்னுடைய பெயருக்குப் பக்கத்திலேயே ஈம�ோதெப்பின் பெயரையும் குறிப்பிடும்படி செய்திருக்கிறான். அதைத்தான் நீங்கள் சற்று முன் வாசித்தது. பார�ோனிக் வரலாற்றிலேயே இல்லாத செயல் இது. பார�ோ ஜ�ோசருக்குப் பின்னால் வந்த பார�ோக்கள் ஈம�ோதெப்பை கடவுளாக்காதது ஒன்றுதான் குறை. அடுத்து வந்த 3000 வருடங்களுக்கு எகிப்தியர்களின் அறிவியல், மருத்துவம், வானியல், கலை என்று பல துறைகளின் தந்தை பிம்பமாக மாறிப்போனவர் ஈம�ோதெப். எகிப்திய நாகரீகத்தின் சின்னங்களில் அவரும் ஒன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மனிதரைக் குறித்த 38

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

விரிவான பப்பைரஸ் வரலாற்று எழுத்துப் பதிவுகள�ோ அல்லது பிரமிட் எழுத்துக்கள�ோ இல்லையென்பது எகிப்திய சுவாரசிய மர்மங்களில் ஒன்று. பார�ோ ஜ�ோசரின் அரண்மனை எழுத்தர்கள் கூடத் தாங்கள் பதிவு செய்திருக்கும் ஜ�ோசரின் அரசியல் செயல்பாடுகள் குறித்த பதிவுகளில் ஏழே முறைதான் ஈம�ோதெப்பைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். பார�ோவே தலை வணங்காத குறையாகப் பெரிதும் மதித்த ஈம�ோதெ ப�ோன்ற ஒரு தலை சிறந்த அறிஞரைக் குறித்து எகிப்திய வரலாற்றுப் பதிவுகள் ம�ௌனம் காப்பது இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் புருவம் தூக்க வைத்திருக்கிறது. ஒருவேளை அவரைக் குறித்த பதிவுகள் க�ொண்ட பபப்பைரஸ் சுருள்கள் இனி வரும் காலங்களில் த�ொல் ப�ொருள் ஆய்வுகளின்போது கிடைக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். காலம் தன் இரகசியப் பெட்டகத்தைத் திறந்து ஈம�ோதெப் குறித்து வெளிப்படுத்தும் வரை நாமும் காத்திருக்கத்தான் வேண்டும் வேறு வழியில்லை. ஈம�ோதெப் குறித்து நமக்கு அதிகம் தெரியவில்லையென்றாலும் அவர் கட்டிய உலகின் முதல் பிரமிட் அவருடைய பன்முகத் தன்மை க�ொண்ட திறமைகளுக்கு உன்னத எடுத்துக்காட்டு. இன்றைய நவீனகாலப் ப�ொறியியலாளர்கள், வானியல் அறிஞர்கள், ஓவியக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று அனைவரையும் தன்னுடைய பன்முகத் தன்மை மூலம் வாய் பிளக்கவைப்பவர். இவருடைய பன்முகத் தன்மையைக் குறித்து ஒரு உதாரணம் மூலம் ச�ொல்வதென்றால் இன்றைக்கு நாம் நன்கு அறிந்திருக்கும் லியானர்டோ டாவின்சி, மைக்கேல் ஏன்ஜல�ோ, கலீலிய�ோ, ஹிப்போகிரேட்ஸ் (மருத்துவத்தின் தந்தை) மற்றும் நியுட்டன் ப�ோன்றவர்களை ஒரு குடுவைக்குள் ப�ோட்டு நன்றாகக் குலுக்கி பிறகு வடிகட்டினால் வருவது ஈம�ோதெப்பாக இருக்கும். வெள்ளை இனத்தைச் சேராத இப்படியான சிறந்த மனிதர்களைக் கண்டால் மேற்கத்திய அறிவுலகத்திற்குப் ப�ொறுக்காது அல்லவா அதன் விளைவு இன்றைக்கு ஈம�ோதெப் உலகின் தலை சிறந்த வில்லன்களில் ஒருவராகச் சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். மேற்கத்திய சிறுவர்கள் படிக்கும் காமிக் புத்தகங்களில் தலைகாட்டும் புகழ்பெற்ற வில்லன்களில் ஈம�ோதெப்பும் ஒருவர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த தி மம்மி திரைப்படத்தின் வில்லன் ஈம�ோதெப். இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்திலும் வில்லன் ஈம�ோதெப்தான். எகிப்தியர்களுக்கு என்று இல்லாமல் மனித நாகரீகத்திற்கே ப�ொதுவான ஒரு தலைசிறந்த அறிஞரை இதைவிட அற்புதமாகச் சிறப்பிக்க முடியாதுதானே! க�ொஞ்சமே க�ொஞ்சம் கிடைக்கும் தகவல்கள் ஈம�ோதெப் ஹிராக்லிய�ோப�ோலிஸ் நகரைச் சேர்ந்தவர் என்றும் அந்த நகரில் இருந்த ரா கடவுள் க�ோயிலின் தலைமைப் பூசாரிகளின் தலைவராக இருந்தவர் என்றும் ச�ொல்கிறது. பார�ோ ஜ�ோசருக்கு எப்படி அறிமுகமானார், முதல் பிரமிட் குறித்த தன்னுடைய ப�ொறியியல் திட்டத்தை எப்படிப் பார�ோவின் கவனத்திற்குக் க�ொண்டுவந்தார் என்பது குறித்தெல்லாம் ச�ொல்வதற்கு வரலாற்றுத் தகவல்கள் இல்லை. நாமே ஒரு அனுமானத்தின் பேரில் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்துக�ொள்ளவேண்டியதுதான். ஈம�ோதெப்பின் முதல் பிரமிடுக்கு முன்பு கட்டப்பட்ட பார�ோக்களின் மஸ்டபாக்கள் வானியல் அறிவியலின் அடிப்படையில் கட்டப்பட்டதற்கான புறவய ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஈம�ோதெப் கட்டிய பிரமிட் முழுக்க முழுக்க வானியல் அறிவியலை அடிப்படையாகக் க�ொண்டு கட்டப்பட்டது. இன்னும் ச�ொல்லப்போனால் அது ஒரு வானியல் ஆய்வுக் கூடம். இன்னும் இறங்கிச் ச�ொல்வதென்றால் அது ஒரு நாட்காட்டி கட்டிடம். இதற்கான ஆதாரங்களை இன்றைய வானியல் அறிஞர்களும் ப�ொறியியல் அறிஞர்களும் க�ொஞ்சம் க�ொஞ்சமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட உலகின் முதல் வானியல் ஆய்வு கட்டிடமாக இருக்கப் ப�ோகிறது தன்னுடைய பிரமிட் என்றால் எந்தப் பார�ோதான் அதற்காகத் தன்னுடைய ஆட்சியையே பணையம் வைக்கத் துணியமாட்டார்கள். பார�ோ ஜ�ோசர் கிட்டதட்ட ஆட்சியைப் பணயம் வைக்கும் காரியத்தைதான் செய்தான். ஈம�ோதெப் முன்வைத்த பிரமிட் திட்டம் மிகுந்த ப�ொருட் நவீனா அலெக்சாண்டர்

39

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

செலவையும் மனித உழைப்பையும் விழுங்க கூடியது என்பதை எடுத்த எடுப்பிலேயே ஜ�ோசர் உணர்ந்துக�ொண்டிருக்கவேண்டும். இத்தகைய ஒரு பிரம்மாண்டமான திட்டத்திற்கு அதுவரை வழக்கத்திலிருந்த அரசு அமைப்பு ஈடுக�ொடுக்க முடியாது என்பதையும் அவன் புரிந்துக�ொண்டிருக்கவேண்டும். இதன் விளைவு பார�ோ ஆட்சி முறைத் த�ொடங்கிச் சுமார் 300 ஆண்டுகளாக வழக்கிலிருந்த அரச அமைப்பை முதல் முறையாக மாற்றியமைத்தான். திறமை இல்லையென்றாலும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் என்கிற ஒரே காரணத்திற்காக அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உட்கார்ந்துக�ொண்டு அரசிற்குப் பல வழிகளிலும் இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவர்களை எல்லாம் முதல் வேலையாக வீட்டிற்கு அனுப்பிவிட்டான். விசியர் என்கிற உச்ச அதிகாரமிக்கப் பதவி உருவாக்கப்பட்டது. இந்தப் பதவியில் அமருபவர் பார�ோவின் முதன்மை அமைச்சரைப் ப�ோலச் செயல்படுவார். பார�ோவிற்கு அடுத்து அரசாங்கத்தில் உச்சக்கட்ட அதிகாரம் படைத்த பதவி இது. இந்தப் பதவியில் இருப்பவர் பார�ோவிற்கு மட்டுமே பதில் ச�ொல்லக்கடமைப்பட்டவர். வேறு எவரும் இவருடைய அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாது. பார�ோவின் மனைவி உட்பட. இந்த அதி உச்சபட்ச அதிகாரம் க�ொண்ட பதவி ஈம�ோதெப்பிற்காகவே உருவாக்கப்பட்டு அவர் அதில் அமரவைக்கப்பட்டார். பார�ோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் மாநிலங்களின் நிர்வாகிகளாகவும், படை மற்றும் படை கருவிகள் தயாரிக்கும் த�ொழிற்சாலைகளுக்குத் தலைவராகவும், அரண்மனை எழுத்தர்களின் தலைவராகவும், கப்பல் படையின் தலைவராகவும், வரி வசூல் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பார�ோவின் நேரடி கட்டுப்பாட்டில் வரக் கூடியவர்கள். இவர்கள் விசியர் ஈம�ோதெப்பின் ஆணைகளுக்கும் அடிபணிய வேண்டியவர்களாக அரசமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மாற்றங்களின் மூலம் அரசாங்கத்தின் கருவூலத்திற்குப் ப�ொருள் வரத்து அதிகரிக்கத் த�ொடங்கியது. மேலும் பார�ோவால் நினைத்த நேரத்தில் பெரும் அளவிலான மனித உழைப்பிற்குத் தேவையான வேலையாட்களைச் சிரமமில்லாமல் திரட்ட முடிந்தது. ஈம�ோதெப்பின் பிரமிட் திட்டத்திற்காகப் பார�ோ ஜ�ோசர் உருவாக்கிய இந்த அரசு அமைப்பே பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் 31-வது வம்சத்தின் கடைசிப் பார�ோ வரைப் பின்பற்றப்பட்டது. இதன்படி பார்த்தால் பார�ோக்கள் பிரமிடுக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்பவில்லை பிரமிடுகளே பார�ோனிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறது. ஈம�ோதெப் வானில் நிகழும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நகர்வை மிகத் துல்லியமாக்க அறிந்தவராக இருந்திருக்கிறார். இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு இத்தகைய அறிவுப் பெற்ற ஒரு சராசரி மனிதர் செய்திருக்கக் கூடிய காரியம் பார�ோவிற்குச் ச�ோசிய குறிப்புகளைத் துல்லியமாக்கக் கணித்துக்கொடுத்து அரசவையில் பட்டங்களையும் மரியாதைகளையும் பெரும் ப�ொருளையும் சம்பாதித்திருப்பது. அவர் காலத்தோடு அவர் மண்ணோடு மண்ணாகியும் ப�ோயிருப்பார். ஆனால் பெரும் ப�ொருளுக்கு ஆசைப்படாமல் தன்னுடைய அறிவைக் காலத்தைக் கடந்தும் நிலை நிறுத்தவேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் ஈம�ோதெப். தான் வானில் காணும் நிகழ்வுகளைப் பூமியில் நிலை நிறுத்த ஒரு பிரம்மாண்டமான கட்டிட அமைப்பைக் கட்ட அவர் திட்டமிட்டிருக்கவேண்டும். அது வரை பூமியில் வாழ்ந்த வாழ்ந்துக�ொண்டிருக்கும் எந்த ஒரு மனிதனும் நினைத்து கூடப் பார்த்திருக்க முடியாத அந்தப் பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்டத் தேவைப்படும் ப�ொருளாதார வசதியும் மனித உழைப்பைத் திரட்டும் வசதியும் அவரிடம் நிச்சயம் இல்லை. அவர் காலத்தில் அவருடைய திட்டத்தைச் செயல்படுத்த கூடிய சக்திப் படைத்த ஒரே நபர் பார�ோ மட்டும்தான். ஈம�ோதெப் பார�ோ ஜ�ோசரின் அரசவையில் பணியில் இருந்தபடியே முதல் பிரமிட் திட்டத்தை உருவாக்கினாரா அல்லது இந்தத் திட்டமே பார�ோ ஜ�ோசர் ஈம�ோதெப் என்கிற அதி புத்திசாலியை அடையாளம் காண உதவியதா என்பதை அனுமானிக்க முடியவில்லை.

40

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை அனுமானங்களாக வைத்துக்கொண்டு வரலாற்றுப் புனைவுக் கதைகள் எழுதுபவர்களுக்கு ஈம�ோதெப்பின் வாழ்க்கையும் சாதனைகளும் மிகச் சிறந்த வேட்டை களம். ஆங்கில வணிக எழுத்தாளர்கள் ஈம�ோதெப் என்கிற வாய்ப்பைத் தவறவிடுவார்களா என்ன! மேலைநாட்டு காமிக் புத்தகங்கள் அவரை வில்லனாகச் சித்தரிக்கும் வேலையில் ஒருபுறம் கங்கணம் கட்டி வேலை செய்ய, மறுபுறம் புனை கதை எழுத்தாளர்கள் ஈம�ோதெப்பை மையமாக வைத்துப் பல பெஸ்ட் செல்லர் வரலாற்று நாவல்களை எழுதியிருக்கிறார்கள். நிச்சயம் ஈம�ோதெப் பல மாதங்கள் ஏன் பல ஆண்டுகளாகக் கூடத் தன்னுடைய முதல் பிரமிட் திட்டம் குறித்துப் பார�ோ ஜ�ோசருக்கு விளக்கியிருக்க வேண்டும். செயல் முறையில் வானில் தான் கண்ட அற்புதங்களைப் பார�ோவிற்கு விளக்கிச் ச�ொல்லியிருக்கவேண்டும். தன்னுடைய கட்டிடம் மாய மந்திர சக்திகளை அல்ல கடைந்தெடுத்த வானியல் அறிவியலை உள்ளடக்கியது என்று புரியவைத்திருக்கவேண்டும். இதற்கு முன்னோட்டமாக அவர் ச�ோதிக் காலெண்டர் என்கிற நாட்காட்டி முறையைப் பார�ோ ஜ�ோசருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ப�ொதுவாக எகிப்திய நாகரீக நாட்காட்டி தமிழர்களுடையதைப் ப�ோலச் சந்திரனை அடிப்படையாகக் க�ொண்டது. சூரிய நாட்காட்டியை விடச் சந்திர நாட்காட்டி மிகத் துல்லியமானது. எகிப்தியர்களுக்கு மூன்றாவதாக ஒரு நாட்காட்டியும் தேவைப்பட்டது. அது நைல் நதியின் வெள்ளப் பெருக்கை கணக்கில் க�ொண்டு தங்களுடைய வருடப் பிறப்பை த�ொடங்க. ஈம�ோதெப் காலத்திற்கு முன்வரை இதற்கென்று ஒரு நாட்காட்டி இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. முதன் முதலாக ஈம�ோதெப்பே இதற்கென்று புதிதாக உருக்கியது ச�ோதிக் காலெண்டர். இந்த நாட்காட்டிக் குறித்த வானியல் அறிவியல் விளக்கங்களுக்குள் ப�ோக நான் விரும்பவில்லை. அது உங்களைக் குழுப்புவதுடன் இந்த வரலாற்றுப் புத்தகத்தின் ப�ோக்கைச் சிதைத்துவிடும் என்பதால். ஈம�ோதெப்பின் ச�ோதிக் காலெண்டர் மிகச் சரியாக ஒவ்வொரு 1460 வருடங்கள் கழித்தும் சந்திரனை அடிப்படையாகக் க�ொண்ட நாட்காட்டியுடன் ஒன்றினையும். இந்த நாட்காட்டியை பார�ோ ஜ�ோசர் எகிப்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்திவைத்தான். இதற்குப் பிறகே எகிப்தியர்களின் வருடப் பிறப்பு என்பது இந்த நாட்காட்டியை அடிப்படையாகக் க�ொண்டு த�ொடங்கப்பட்டது. இந்த நாட்காட்டிக்கான ஒரு ஆய்வுக் கூடமே ஈம�ோதெப் முன்வைக்கும் முதல் பிரமிட் திட்டம் என்பதைப் பார�ோ ஜ�ோசர் சரியாகப் புரிந்துக�ொண்டிருந்திருக்கவேண்டும். இந்த இடத்தில் நாம் மற்றொரு அனுமானமும் செய்யவேண்டியிருக்கிறது. ஈம�ோதெப்பின் திட்டத்தைத் தனக்கான கல்லறை கட்டிடமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்கிற ய�ோசனையை முன்வைத்தது பார�ோ ஜ�ோசராகத்தான் இருக்கவேண்டும். காரணம் காலம் காலமாக விண்வெளியில்தான் தங்களுடைய மறுவாழ்விற்கான பயணம் நடைபெறுகிறது என்பதைத் திடமாக நம்புபவர்கள் பார�ோக்கள். பார�ோ ஜ�ோசரும் அத்தகைய நம்பிக்கைக்கு விதிவிலக்கானவன் கிடையாது. அப்படியிருக்கையில் விண்வெளியைக் கண்காணிக்கும் பூமியின் முதல் கட்டிடமே ஏன் தன்னுடைய மறுவாழ்வையும் சாத்தியப்படுத்தும் கல்லறையாகவும் இருக்கக் கூடாது என்று பார�ோ ஜ�ோசர் கருதியிருக்கவேண்டும். உலகின் முதல் பிரமிட் திட்டம் பூமியின் முதல் வானியல் ஆய்வுக் கூடமாக ஈம�ோதெப்பால் முன்வைக்கப்பட்டுப் பிற்பாடு பார�ோ ஜ�ோசரின் ய�ோசனையின் பெயரில் அது கல்லறையாகவும் மாற்றப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான திடமான ஆதாரம் இந்தப் பிரமிடின் வளாகத்திலேயே இருக்கிறது. கீழ் வானில் அதிகாலை நேரத்தில் த�ோன்றும் சைரஸ் (விடிவெள்ளி?) நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தை மிகத் துல்லியமாக்கப் பிரதிபலிப்பதே ஈம�ோதெப் திட்டமிட்ட பிரமிடின் வடிவமைப்பு. இந்த அம்சமே பார�ோ ஜ�ோசரை கவர்ந்திருக்கவேண்டும். இறந்த பிறகு தங்களுடைய ஆன்மாவானது (ப்பா – இது குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிற�ோம்) கீழ் திசையில் அதிகாலையில் உதிக்கும் சூரியன�ோடு சேர்ந்துக�ொண்டு பகல் முழுவதும் விண்வெளியில் பயணம் செய்து மேற்கில் சூரியன் மறையும் தருணத்தில் அதை விட்டு விலகி நவீனா அலெக்சாண்டர்

41

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மீண்டும் தங்களுடைய கல்லறைக்குத் திரும்பிவிடும் என்பது பார�ோக்களின் நம்பிக்கை. கல்லறையிலிருந்து அவர்களுடைய ஆன்மாவைச் சூரியனிடம் அழைத்துச் சென்று விட்டுவிட்டு மாலையில் மீண்டும் அந்த ஆன்மாவைக் கல்லறைக்கு அழைத்து வருவது மனித உடலில் கழுகுத் தலை க�ொண்ட ஓரஸ் கடவுள். அதிகாலையில் அவர்களுடைய ஆன்மாவைச் சூரியனிடம் க�ொண்டுப�ோய்ச் சேர்க்க ஓரசுக்கு வழிகாட்டுவது சைரஸ் நட்சத்திரம் என்பதும் பார�ோக்கள் காலம் காலமாக நம்பிவரும் விசயங்களில் ஒன்று. கடவுள் ஓரசுக்கே வழிகாட்டும் ஒரு நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தைப் பிரதிபலிக்கப் பூமியில் ஒரு பிரமாண்ட கட்டிடம் என்றால் பார�ோக்களுக்குக் கசக்குமா என்ன. பார�ோ ஜ�ோசருக்கும் கசக்கவில்லை. பூமியின் முதல் வானியல் ஆய்வுக் கட்டிடத்தைப் பார�ோ தனக்கான கல்லறையாகவும் மாற்றியமைக்கும் படி ச�ொன்னப�ோது ஈம�ோதெப் எத்தகைய உணர்வுகளைக் கடந்திருப்பார் என்பது சுவாரசிய அனுமானங்களை வஞ்சனையில்லாமல் வழங்க கூடியவை. ஈம�ோதெப் தன்னுடைய வானியல் கட்டிடத்தின் த�ோற்றத்தை முதலிலேயே பிரமிட் வடிவமைப்பில் வடிவமைத்தாரா அல்லது பார�ோவின் வேண்டுக�ோளுக்குப் பிறகு சில தேவையான மாற்றங்களைச் செய்து இப்பொழுதிருக்கும் பிரமிடுகளின் முக்கோண வடிவைக் க�ொண்டுவந்தாரா என்பதைச் ச�ொல்வதற்கும் இதுவரையில் எத்தகைய எழுத்து ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இன்றைக்குப் பிரமிடின் முக்கோண வடிவமைப்பே மந்திர தந்திர சக்திகளின் உறைவிடம் என்று அறிவியலைத் தாண்டி ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பிரமிடின் மினியேச்சர் வடிவங்களைச் செய்து அதை வீடுகளில் வைத்தால் சக்தி சகட்டுமேனிக்கச் சதிராடும் என்று ஒரு த�ொழில் நடந்துக�ொண்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களின் காதுகளையும் எட்ட இன்றைய நவீன டிஜிட்டல் கருவிகளைக் க�ொண்டு பிரமிடுகளின் உள்ளே, வெளியே, பக்கவாட்டுப் பகுதிகள், உச்சி என்று பல நிலைகளில் ஆராய்ந்து பார்த்தார்கள். ச�ொல்லிவைத்தார் ப�ோல அனைத்து நவீன கருவிகளும் தாறுமாறான கிறுக்கல் க�ோடுகளில் உலறிக் க�ொட்டிவைத்ததுதான் மிச்சம். அந்தக் கருவிகளால் பிரமிடுகளை நிதானிக்கவே முடியவில்லை. இதன் காரணம் இன்னமும் விளங்கவில்லை. அப்படியென்றால் பிரமிடுகளுக்கு உண்மையிலேயே அமானுசிய சக்திகள் இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று ச�ொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதாலேயே அதற்கு அமானுசிய சக்திகள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று ச�ொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் பிரமிடுகள் நாம் இன்றைய நவீன அறிவியலின் துணைக�ொண்டு அறிந்துக�ொள்ள முடியாத அல்லது இதுவரை அறிந்துக�ொள்ளாத ஒரு விண்வெளி இயங்குப் புதிரை தனக்குள் க�ொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதைச் சாத்தியப் படுத்தியது ஈம�ோதெப்பின் பிரமிட் வடிவமைப்பு. இன்றைய அறிவியலின் வளர்ச்சிகளைக் க�ொண்டு ஈம�ோதெப்பின் முதல் பிரமிடுக் குறித்து நாம் அறிந்துக்கொண்டவைகள் அது பிக் டிப்பர் என்று அழைக்கப்படும் நட்சத்திர கூட்டங்களின் (வடக்கு வானில் இந்த நட்சத்திரக் கூட்டம் ஒன்று சேர்ந்து எருதின் த�ொடை உருவத்தை உண்டாக்கும்) துணை க�ொண்டு சைரஸ் நட்சத்திரத்தின் விண்வெளி இயக்கத்தையும் ச�ோதிக் சுழற்சியையும் கணிக்கப் பயன்படக் கூடியதாக இருந்திருக்கிறது என்பது. (ச�ோதிக் சூழற்ச்சி என்பது பூமியின் வட துருவ அச்சுப் பயணத்தைக் கணிக்கக் கூடியது. பூமியானது விண்வெளியில் தன்னைத் தான் சுற்றிக்கொள்ளும் ப�ோது ஒரே இடத்தில் ஆணியடித்ததைப் ப�ோல நின்றுக�ொண்டு சுற்றாது. பூமித் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கும்போது அதனுடைய வட துருவப் பகுதி ஒரு வட்டத்தை உண்டாக்கும். அந்த வட்டத்தின் த�ொடக்கப் புள்ளிக்கு மீண்டும் வந்து சேர பூமிக்கு 28000 ஆண்டுகள் பிடிக்கும்.) ஈம�ோதெப் ச�ோதிக் சுழற்சி 26000 ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும் என்று கணித்தார். பூமி அதுவரை கண்டிராத மிகப் பெரிய கல் கட்டிடம் பார�ோ ஜ�ோசரின் ஸ்டெப் பிரமிட். ஆறு அடுக்குத் தளங்களைக் க�ொண்டது. இன்றைய அளவில் ச�ொல்வதென்றால் 20 மாடிக் 42

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கட்டிடம் ஒன்றின் உயரம் க�ொண்டது. இதை அவர் கட்டி முடித்த பிறகு பார�ோ மட்டுமல்ல எகிப்திர்கு வந்து ப�ோய்க் க�ொண்டிருந்த மற்ற நாகரீகத்தின் வணிகர்கள் கூடப் பிரமித்துப் ப�ோயிருப்பார்கள். பார�ோ ஜ�ோசர் ஈம�ோதெப்பின் அறிவின் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய அரசமைப்பையே மாற்றியது எந்த வகையிலும் தவறான செயல் இல்லை என்று உச்சி குளிர்ந்திருப்பார். உலகம் அதுவரை கண்டும் கேட்டுமிராத ஒரு கல் கட்டிடம், விண்வெளிக்கு ஏறிச் செல்லும் படிகள் ப�ோன்று விண்ணை முட்டிக்கொண்டிருந்த ஒரு கட்டிடம், தன்னுடைய மறுவாழ்விற்கான பயணத்திற்குத் தயாராகி நிற்பதை பார�ோ ஜ�ோசர் எத்தகைய பெருமிதத்துடன் எதிர் க�ொண்டிருப்பான் என்பதை வார்த்தைகளில் விவரிக்காமல் அவனுடைய உணர்ச்சிகள் ப�ொங்கிய முகத்தைக் கற்பனை செய்து க�ொள்ளும்படி விட்டுவிடுவது இன்னும் மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தப் பிரமிட், பாலைவனத்தில் 37 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட பகுதியின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உள்ளே இருக்கும் அறைகளை இணைக்கும் பாதையின் நீளமே சுமார் 6 கில�ோ மீட்டர்கள் நீளம். இது ம�ொத்தம் 11.6 மில்லியன் கியுபிக் அடிகள் க�ொண்ட கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட் அடங்கியிருந்த 37 ஏக்கர் நிலமும் பெரிய சுற்றுச் சுவரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. பிரமிடின் தென் கிழக்குப் பக்கத்தில் பல கல்லறைக் க�ோயில்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமிடிற்குள் இருக்கும் பார�ோவின் கல்லறை அறைக்குச் செல்ல குகைப�ோன்ற பாதை இருக்கிறது. இந்தப் பாதை மேலும் பல அறைகளை ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பு பிரமிடிற்குள் புதிதாக நுழையும் ஒருவரைத் தலைச் சுற்ற விட்டுவிடும். இன்றைக்கும் இதற்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டியைத் தவறவிட்டுவிட்டால் கதை முடிந்தது. பார�ோ ஜ�ோசரின் ஆன்மாவ�ோடு ஒன்றாக ஐக்கியமாகிவிடவேண்டியதுதான். இதற்குள் இரண்டு பிரதான பாதைகள் இருக்கின்றன. இந்தப் பாதைகள் பூமியின் கீழ்மட்டத்திற்கும் ஒருவரை அழைத்துச் செல்லும். இவை இரண்டுமே ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டு மேலும் மூன்று பாதைகளாகப் பிரியும். இந்த மூன்று பாதைகளும் பல்வேறு அறைகளுக்கு ஒருவரை அழைத்துச் செல்லும். அறைகள் எல்லாமே அரண்மனை அறைகள் ப�ோன்ற த�ோற்றத்தை அடிப்படையாகக் க�ொண்டிருக்கின்றன. இந்த அறைகளில் ஒன்றில் பார�ோவிற்குத் தேவையான உணவுப் ப�ொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்றில் பார�ோ ஜ�ோசரின் சிலை உருவம் சடங்குகளைச் செய்வதைப் ப�ோல வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. கிழக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு அறையில் கல்லால் செய்யப்பட்ட 40,000 பாத்திர பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை பார�ோ ஜ�ோசரின் மூதாதையர்களுடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஒரு அறையில் சில சவப்பெட்டிகளும் அதில் மனித எலும்புக் கூடுகளும் இருந்திருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள் மம்மி த�ொழில் நுட்பம் வராத காலத்தில் இறந்துப்போன முதல் பார�ோ நார்மரின் மூதாதையர்களுடையதாக இருக்கலாம் என்றும் ச�ொல்லப்படுகிறது. மேலும் இதற்குள் நூற்றுக் கணக்கில் ப�ோலி அறைகள் இருக்கின்றன. அதாவது பார�ோ ஜ�ோசரின் சவப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறைப் ப�ோன்றே இருக்கும் அறைகளைப் ப�ோலி அறைகள் என்கிறார்கள். இந்த அறைகளை ஒரு குழப்ப வடிவில் இணைப்பவைதான் குகை ப�ோன்ற பாதை அமைப்பு. ஈம�ோதெ ப�ோன்ற ஒரு உன்னதக் கட்டிட வல்லுநர் ஜாங்கிரியைப் பிழிந்துவிட்ட கதையாகப் பல அறைகளைக் கட்டி அவற்றை ஏன் ஒரு குழப்ப வடிவில் இணைத்திருக்கவேண்டும்? எல்லாம் திருவாளர்கள் கல்லறை திருடர்களிடமிருந்து பார�ோ ஜ�ோசரின் கல்லறை ச�ொத்துக்களைக் காப்பாற்றத்தான். பிரமிடிற்குள் நுழையும் கல்லறைத் திருடர்கள் எது பார�ோ ஜ�ோசரின் சவப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறை என்று எளிதாகக் கண்டுபிடிக்கவிடாமல் பல நாட்களுக்குச் சுத்த விடுவதற்குத்தான் இந்த ஏற்பாடு.

நவீனா அலெக்சாண்டர்

43

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இன்றைய பிரமிட் ஆராய்ச்சியாளர்கள் ச�ொல்லும் ஒரு விசயம் பிரமிடிற்குள் ஒரு மனிதர் த�ொடர்ந்தார் ப�ோல ஆறு நாட்கள் இருந்தாரேயானால் ஒன்று அவர் இறக்க நேரிடும் அல்லது மூளைக் குழம்ப நேரிடம் என்கிறார்கள். இதற்கான காரணம் பிராண வாயு ப�ோதாமையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை அறியமுடியவில்லை. காரணம் பிரமிடிற்குள் ஒரு மனிதன் சுவாசித்து உயிர் வாழக் கூடிய அளவிற்குப் பிராணவாயு ஓட்டம் இருக்காது. பிரமிடிற்குள் நுழையும் கல்லறை திருடர்கள் பார�ோ ஜ�ோசரின் சவப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் உண்மையான அறையைக் கண்டுபிடிக்க முடியாமல் நாட்கணக்கில் சுற்றி அலைந்து மண்டையைப்போட்டு மேலே ப�ோய்ச் சேருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. பதினெட்டாம் நூற்றாண்டில் த�ொல் ப�ொருள் ஆராய்ச்சியாளர்கள் சில பிரமிடுகளைத் திறந்துக�ொண்டு உள்ளே நுழைந்தப�ோது அவர்களை வரவேற்ற முதல் விசயமே பார�ோவின் உண்மையான சவப்பெட்டி அறையைக் கண்டுபிடிக்க முடியாமலும் நாட்கணக்கில் பிரமிடைவிட்டு வெளியே வர முடியாமலும் அதற்குள்ளேயே சுற்றி இறந்துப்போய்க் கிடந்த சில கல்லறை க�ொள்ளையர்களின் உடல்களைத்தான். திருடுவதற்காகப் பிரமிடிற்குள் நுழைபவர்களில் பாதிப்பேர் உயிருடன் திரும்பி வராது ப�ோனதே பிரமிடுகளின் சாபம் குறித்த கட்டுக் கடங்காத கதைகள் உருவாகக் காரணமாகிப் ப�ோனது. பிரமிடுகளுக்குள் பார�ோக்களின் ஆன்மாக்கள் உட்கார்ந்துக�ொண்டு உள்ளே வருபவர்களுக்குப் பேய் பயம் காட்டி க�ொன்று ப�ோடுகின்றன என்கிற உலகின் படு சுவாரசியமான பேய் கதைகள் கடந்த 4500 வருடங்களாக வலம் வந்துக�ொண்டிருக்கின்றன. கல்லறை க�ொள்ளையர்களுக்கு வயிற்றில் பீதியைக் கரைத்த இந்தக் கதைகளே அவர்களுக்குத் த�ொழில் ப�ோட்டிகளையும் குறைத்திருக்கிறது. உயிருக்கு அஞ்சாத கல்லறைக் க�ொள்ளையர்களே பிரமிடுகளுக்குள் புகுந்து பார�ோக்களின் தங்கத்தை அள்ளிக்கொண்டு ப�ோயிருக்கிறார்கள். எமகாதகர்கள். பல பிரமிடுகளுக்குள் புகுந்து திருடி அனுபவப்பட்ட பல கல்லறைத் திருடர்கள் தங்களின் த�ொழில் இரகசியங்களைத் தங்களின் பிள்ளைகளுக்கும் ச�ொல்லிக் க�ொடுத்துக் கல்லறை க�ொள்ளைத் த�ொழிலை தலைமுறை தலைமுறையாக வளர்த்து எடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய திறமை எப்பேர்ப்பட்டது என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஈம�ோதெப் த�ொடங்கி அவருக்குப் பின் வந்த பல புரமுட் கட்டிட வல்லுநர்களின் முதல் சவாலே இந்தக் கல்லறைக் க�ொள்ளையர்கள்தான். ஆனால் எகிப்தின் பல சுவாரசியங்களைப் ப�ோலக் கட்டிட வல்லுநர்களுக்கும் கல்லறை க�ொள்ளையர்களுக்கும் இடையே நடந்த நீயா நானா ப�ோட்டியில் பல தலைமுறைகளுக்கு வெற்றி பெற்றவர்கள் கல்லறைக் க�ொள்ளையர்களே. உலகின் முதல் பிரமிடே உலகின் முதல் விண்வெளி ஆய்வு மையம் என்பதற்கு வலுவான வரலாற்று ஆதாரம் பிரமிடின் வடக்குத் திசையில் இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லறை க�ோயில்களுக்கு அடுத்து இருப்பது செர்டாப் க�ோர்ட் கட்டிடம். இதில் தனியாகத் துருத்திக்கொண்டு ஒரு சுவர் இருக்கிறது அதில் இரண்டு துளைகள் இருக்கின்றன. இதற்குப் பின்னால் பார�ோ ஜ�ோசரின் சிலை இருக்கிறது. அதன் இரண்டு கண்களிலிருந்து த�ொடங்கி இரண்டு நீள் க�ோடுகளை அதற்கு முன்னால் இருக்கும் இரண்டு துளைகளின் வழியாக வடக்கு வானம் வரைக்கும் இழுத்தால் அந்தக் க�ோடு வானில் முடியும் இடம் பிக் டிப்பர் நட்சத்திரக் கூட்டத்தில் ஒன்றாக இருக்கும் அல்காய்ட் நட்சத்திரத்தில். அல்காய்ட் நட்சித்திரம் வடக்கு வானில் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுற்றி வந்து நிற்கும் இடத்தைத்தான் அந்த இரண்டு துளைகள் வழியாகப் பார�ோ ஜ�ோசரின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறது 4600 வருடங்களைக் கடந்து இன்றும் இந்த ந�ொடியும். இந்த அல்காய்ட் நட்சத்திரத்தின் பயணமே ஈம�ோதெப் ச�ோதிக் சுழற்சியை நிதானிக்க உதவியிருக்கவேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஈம�ோதெப்பின் முதல் பிரமிடிற்குப் பிறகு எகிப்தில் கட்டப்பட்ட அனைத்துப் பிரமிடுகளும் வானியலை அடிப்படையாகக் க�ொண்டு கட்டப்பட்டவையே. இதன் உச்சம் ஈம�ோதெப் காலத்திற்குப் பிறகு 100 வருடங்கள் கழித்துக் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக 44

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இருக்கும் பார�ோ கூஃபுவின் கிரேட் பிரமிட் ஆப் கீசா. ஈம�ோதெப் காலத்திற்குப் பிறகு பிரமாண்ட கட்டிடக் கலை என்பது எகிப்தின் பிரிக்க முடியாத அங்கமாகிப்போய்விட்டது. ஈம�ோதெப் கிளப்பிவிட்ட பிரமாண்டம் என்கிற தீ பத்தொன்பதாம் வம்சாவளி காலம் வரைக்கும் க�ொழுந்துவிட்டு எறிந்திருக்கிறது. அதாவது ஈம�ோதெப் காலத்திற்கு அடுத்து சுமார் 2500 வருடங்கள் கழித்தும். அப்படியென்றால் எப்படிப்பட்ட தாக்கத்தை ஈம�ோதெப்பின் முதல் பிரமிட் எகிப்திய பார�ோக்களின் மனதில் உண்டாக்கியிருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு உதாரணப் புருசர் ப�ோன்ற பார�ோ ஒருவனைத் தெரிந்துக�ொள்ள வேண்டுமா அப்படியென்றால் அத�ோ அப்படிச் சிறிது நேரம் உட்காருங்கள். சூரியன் மரணத்தின் நிலத்தில் மறைந்துக�ொண்டிருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் பாலைவனத்தின் குளிர் காற்று நம்மைச் சந்திக்க வந்துவிடும். பாலைவன குளிருக்கு கதகதப்பாக இருக்க உங்களுக்காகக் க�ொஞ்சம் சுள்ளிகளைப் ப�ொறுக்கி வந்து நெருப்பு மூட்டுகிறேன். பிறகு ஆளுக்கொரு க�ோப்பை சூடாகத் தேநீர் அருந்திக்கொண்டே அந்தப் பார�ோவைக் குறித்த தெரிந்துக�ொள்ளலாம். தேநீர் குடித்தப் க�ோப்பையை அப்படி வைத்துவிட்டு இந்த ர�ொட்டியையும் வெண்ணெய் தடவிய வாத்துக் கறியையும் ஆளுக்கு ஒன்றாகக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்ப எதுக்கு ர�ொட்டியும் வாத்துக் கறியும்னு ய�ோசிக்கறீங்களா? இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு நாம் உட்கார்ந்து குளிர்காய்ந்துக�ொண்டிருக்கும் இந்த மண்ணில் நடமாடிய பார�ோக்களின் விருப்ப உணவு இவை. இன்னும் ஆடு, மாடு, கருவாடு (பார�ோக்களும், அரச குடும்பத்தினரும், பிரபு குடும்பத்தினரும் நைல் நதி மீனைச் சாப்பிடமாட்டார்கள் ஆனால் அதை உலர்த்திக் காயவைத்து கருவாடாகத்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். காரணம் தெரியவில்லை) காய்கறிகளில் பட்டாணி, பூண்டு, வெங்காயம் மற்றும் வெள்ளரி, பழங்களில் திராட்சை, தர்பூசணி, பேரிச்சை என்று சாப்பிட்டிருக்கிறார்கள். இவை பார�ோ மற்றும் எகிப்திய குடிமக்கள் என்று அனைவருக்கும் ப�ொதுவான உணவு வகைகள். எகிப்தில் மூலிகை வகையிலான கீரை வகைகள் கிடையாது. இவற்றை எகிப்தியர்கள் புண்ட் என்கிற நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். புண்ட் என்பது எந்த நாடாக இருந்திருக்கும் என்பதை இன்றைக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் உறுதியாகச் ச�ொல்ல முடியவில்லை. புண்ட் என்பது நிச்சயமாகத் திராவிட ம�ொழி உச்சரிப்பைத் தருகின்றது என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய வரலாற்றுத் துறை இதைக் குறித்து ஆராய்ச்சி செய்யலாம். (அப்படிக் கனவு வேண்டுமானால் காணலாம். நாமும் எகிப்திய நாகரீகத்திற்கும் தமிழர்களுக்கும் இருக்கும் த�ொடர்பை பார்த்துக்கொண்டேதான் வருகிற�ோம் ஆனால் இதை விட உங்களை அதிரவிடும் ஒரு த�ொடர்பும் இனி வர இருக்கிறது.) பார�ோக்களும் சாதாரண எகிப்திய குடிகளும் ஒன்று ப�ோலக் க�ோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட கள்ளை (பீர்) நாம் தேநீர் அருந்துவதைப் ப�ோல அருந்தியிருக்கிறார்கள். இது ப�ோதை வஸ்துவல்ல என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. ஏனென்றால் சமூகத்தில் ஆண் பெண் என்று இரு தரப்பும் இந்தக் க�ோதுமைக் கள்ளை குடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் அதைத் தராமல் ஏன் எங்களுக்குத் தேநீரை குடுத்தியாம் என்று கேட்காதீர்கள். (இந்தப் புத்தகத்திற்குக் கீழே ஸ்கிர�ோலிங்கில் மது, புகை நாட்டிற்கும் வீட்டிற்கும் கெடு என்று ப�ொது நல விளம்பரம் இருக்கிறது பாருங்கள்!) சரி க�ொஞ்சம் நெருக்கத்தில் வந்து உட்கார்ந்துக�ொள்ளுங்கள் அப்பொழுதுதான் நெருப்பின் கத கதப்பு மேலும் உங்கள் உடலில் இதமாகப் பரவும். அப்படியே க�ொஞ்சம் தலையை நிமிர்த்தி நாம் உட்கார்ந்துக�ொண்டிருக்கும் பாலைவனம் ப�ோல நம் தலைக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியைப் பாருங்கள். ப�ோதும் இனி அந்தப் பார�ோவைக் குறித்த வரலாற்றை உங்களுக்குச் ச�ொல்லப் ப�ோகிறேன். பார�ோ துத்தன்காமூனை உங்களுக்குத் தெரியும்தானே ஆம் அகநேத்தனுடைய மகனேதான். மிகச் சிறுவயதிலேயே பார�ோவாகி தன்னுடைய பத்தொன்பது வயதிலேயே மர்மமாக இறந்து ப�ோனானே அவனேதான். நவீனா அலெக்சாண்டர்

45

ராமேசிஸ் II கி.மு. 1279 – 1213 (19-வது அரசபரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

துத்தன்காமூன் பார�ோவாக முடிசூட்டிக்கொண்டப�ோது அவன் ஒன்பது வயதே ஆன சிறுவன் என்பதால் அவன் பெயருக்கு மட்டுமே பார�ோ. எகிப்தின் முழு ஆட்சி அதிகாரமும் ஓரெம்ஹெப் என்கிற இராணுவத் தளபதியிடமே இருந்தது. துத்தன்காமூன் இள வயதை அடைந்தும் கூட ஆட்சி அதிகாரம் ஓரெம்ஹெப் இடம்தானிருந்தது. இவன் இராணுவத் தளபதி என்பதால் அரசு அமைப்பில் அனைத்துப் பதவிகளிலும் தனக்கு நம்பிக்கையான சக இராணுவத் தளபதிகளையே நியமித்துப் பார�ோ ஆட்சியை ஒரு இராணுவத்தின் ஆட்சிப�ோல மாற்றியமைத்துக்கொண்டான். இதற்குக் காரணம் எகிப்தின் அடுத்தப் பார�ோவாகத் தான் வரவேண்டும் என்கிற இரகசிய ஆசையும் இவனுக்கு இருந்ததுதான். துத்தன்காமூன் இளைஞனாகி வருவது இவனுடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போடும் விசயம் என்பதால் துத்தன்காமூனுடைய மரணத்தில் இவனுடைய சூழ்ச்சிக்கும் பங்கு இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் துத்தன்காமூன் அரண்மனையில் இறந்த சமயத்தில் ஓரெம்ஹெப் இருந்தது சிரியா நாட்டின் எல்லைப் பகுதியில். அங்கே எகிப்தின் பரம்பரை எதிரிகளான ஹிட்டைட்களின் தூண்டுதலின் பேரில் எகிப்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துக�ொண்டிருந்த கலகக்காரர்களை அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். தன் மீது க�ொலைப் பழி விழுந்துவிடாமலிருக்கத் தான் எகிப்திற்கு வெளியே இருக்கும் சமயத்தில் தன்னுடைய ஆதரவாளர்களின் மூலம் அரண்மனையில் சூழ்ச்சி செய்து அவன் துத்தன்காமூனைக் க�ொன்று இருக்கவேண்டும். துத்தன்காமூன் க�ொலை செய்யப்பட்டவுடன் அவனுடைய இளவயது மனைவி அனக்சினமூன், வேறு வழியில்லாமல் பார�ோக்களின் படு பயங்கரமான பரம்பரை எதிரிகளான ஹிட்டைட்களிடமே உதவிக் கேட்டுத் தூதர்களை அனுப்பியிருக்கிறாள். பார�ோக்களின் வம்சத்தில் வராத ஓரெம்ஹெப்பின் சூழ்ச்சியை முறியடிக்கவே அவள் இந்தக் காரியத்தைப் பார்த்திருக்கவேண்டும். தான் ஹிட்டைட் அரசனின் மகன்களில் ஒருவனைத் திருமணம் செய்துக�ொண்டு அவனை அடுத்தப் பார�ோவாக முடிசூட்டி பார�ோவின் வம்சத்தை நிலை நிறுத்துவதும், அதே நேரத்தில் பரம்பரை பரம்பரையாகத் த�ொடர்ந்துவரும் ஹிட்டைட் பார�ோ ம�ோதலை முடிவிற்குக் க�ொண்டுவரவும், இதன் மூலம் ஓரெம்ஹெப்பின் பார�ோ கனவில் இடியை இறக்குவதும் அவளுடைய இராச தந்திரமாக இருந்திருக்கவேண்டும். இந்தத் திட்டம் அன்றைய ஹிட்டைட் அரசனுக்கும் பிடித்துப்போகத் தன்னுடைய மகன்களில் ஒருவனான ஸன்னன்ஸா என்பவனை எகிப்திற்கு அனுப்பிவைத்தான். அவனை அனுப்பி வைத்தத�ோடு சரி மீண்டும் அவன் தன்னுடைய மகனை உயிருடன் பார்க்கவேயில்லை. ஸன்னன்ஸா எகிப்தை அடைவதற்கு முன்பே ஓரெம்ஹெப்பால் தீர்த்துக்கட்டப்பட்டுவிட்டான். இறுதியில் பலித்தது ஓரெம்ஹெப்பின் பார�ோ கனவுதான். 46

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

பதினெட்டாவது வம்சத்தின் இறுதிப் பார�ோவாகத் தன்னை அறிவித்துக்கொண்டான் ஓரெம்ஹெப். இவனுடைய ஆட்சியில் எகிப்திய நாகரீகம் முழுக்க முழுக்க இராணுவ மயமானது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்தான். எகிப்தின் பார�ோனிக் பாரம்பரியத்திற்கு முடிவுக்கட்டிவிட்டு எகிப்தில் இராணுவப் பாரம்பரியத்தைத் த�ொடங்கிவைத்தான். இவ்வளவு சிரமப்பட்டு இராணுவ சூழ்ச்சி செய்து பார�ோவான ஓரெம்ஹெப் தனக்குப் பிறகு எகிப்தை ஆள ஒரு வாரிசை உருவாக்கும் தந்தையாகாமல் ப�ோனான். ஆட்சியைச் சூழ்ச்சி செய்து பிடித்துவிடலாம் ஆனால் தன்னுடைய இரத்தத்தில் வர வேண்டிய வாரிசைச் சூழ்ச்சி செய்து பெற முடியாது அல்லவா. அதுதான் அவனுக்கும் நடந்தது. தான் உருவாக்கிய இராணுவமயமான எகிப்தை துத்தன்காமூனுடைய உறுவினர்களிடம் ஒப்படைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அதற்குப் பதிலாகத் தன்னுடைய குண நலன் வார்பிலிருக்கும் ஒருவனை நம்பிக்கைக்குரிய தளபதிகளின் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்து எகிப்தின் அடுத்தப் பார�ோவாக அறிவித்தான். ஓரெம்ஹெப் அறிவித்த அந்த அடுத்தப் பார�ோவின் பெயர் பரமேசு. என்ன நண்பர்களே அட்சர சுத்தமாகத் தமிழ்ப் பெயர் ப�ோலவே இருக்கிறதா. பரமேசு என்கிற பெயரில் இருக்கும் தமிழ் ஒலியியலை அடையாளம் காண்பது நிச்சயமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சிக்கு நிகரானது கிடையாதுதான் ஆனால் நடைப் பிணமாகிவிட்ட தமிழர்களின் வரலாற்று உணர்வு விண்வெளி ஆராய்ச்சியைத்தான் கண்டதா, பரமேசு என்கிற எகிப்திய பார�ோவைத்தான் கண்டதா! இதைக் குறித்தெல்லாம் ஆதங்கப்பட்டும் ஒரு பிரய�ோசனமும் கிடையாது. நம்முடைய வரலாற்று உணர்வு என்பது நடைப் பிணத்திலும் செவிட்டு நடைப்பிணம். அந்தச் செவிட்டு நடைப்பிணத்தின் காதில் எகிப்திய பார�ோக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் வரலாற்றுத் த�ொடர்பை ஊதினால் என்ன ஊதாமல் ப�ோனால்தான் என்ன! பரமேசு, பார�ோ ஓரெம்ஹெப்பின் இராணுவப் பிரதி. ஆனால் ஒரு விசயத்தில் பரமேசுக்கும் ஓரெம்ஹெப்புக்கும் வித்தியாசம் இருந்தது. அது இவனுக்கு ஆண் வாரிசு இருந்தது. பத்தொன்பதாம் வம்சத்தின் முதல் பார�ோவாகப் பரமேசு முடி சூட்டிக்கொண்டதும் தன்னுடைய பெயரை ரமேசு (ரமேசு - அமூன் கடவுளின் தாசன் ) என்று மாற்றிக்கொண்டான். அதுவே பிற்பாடு ராமேசிஸ் - I என்றானது. இன்றைக்கும் நம்மூரில் பரமேசு, ரமேசு என்கிற பெயர்களுக்குப் பஞ்சமே கிடையாது. ஆனால் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத்தான் பஞ்சம். ராமேசிஸ் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டப�ோதே 60 வயதுகளைக் கடந்துவிட்டிருந்தான். தன்னுடைய நிலையைக் கருத்தில் க�ொண்டே பார�ோவானக் கைய�ோடு தன்னுடைய மகன் செட்டியை - I தனக்குப் பிறகான பார�ோவாக அறிவித்துவிட்டான். எதிர்பார்த்ததுப�ோலவே ராமேசிஸ் பார�ோவான பதினெட்டு மாதங்கள் கழித்து மம்மியாகிவிட்டான். செட்டி (இந்தப் பெயரும் தமிழ் ஒலியமைப்பைக் க�ொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு இந்தத் தமிழ் வார்த்தை ஒரு சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது ஆனால் இந்த வார்த்தையின் வேர்ச் ச�ொல் ஆராய்ச்சி இந்த வார்த்தை வேறு ப�ொருளை குறிக்கப் பயன்பட்டிருக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தும்) அடுத்தப் பார�ோவானான். இது நடந்தது கி.மு. 1290-ல். பார�ோ செட்டியும் அவனுடைய தந்தையைப் ப�ோலவே மிகச் சிறந்த இராணுவ வீரன். இவனுடைய காலத்திலும் பார�ோ ஆட்சி இராணுவமயம்தான் என்றாலும் கட்டிடக் கலையில் பிரம்மாண்டம் என்கிற பார�ோனிக் வழக்கத்தை இவன் மீட்டு எடுத்தான். கட்டிடக் கலைஞர்களும், ஓவியக் கலைஞர்களும், கல் சுரங்கத் த�ொழிலாளர்களும் இவனுடைய காலத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் த�ொடங்கிவிட்டார்கள். பார�ோ செட்டி மற்றொரு சிறப்பான காரியத்தையும் செய்தான். சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு பார�ோ ஹ�ோடெப்கேசமி காலத்தில் கைவிடப்பட்ட பழம்பெருமை மிக்க அட்ஜூ நகரத்தின் கட்டிடக் கலைகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தான் பார�ோ செட்டி. எகிப்தின் கண் கண்ட தெய்வங்களான ஓரஸ், இசிஸ், ஒசிரிஸ், அமூன்-ரா, ரா-ஒராக்டி, ப்தா, நவீனா அலெக்சாண்டர்

47

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

நெஃப்ர்டெம் மற்றும் ப்தா-ச�ோகார் ஆகியவற்றுக்கு அட்ஜூ நகரில் மிகப் பிரம்மாண்டமான க�ோயில் ஒன்றைக் கட்டினான். இந்தக் க�ோயிலின் வளாகத்தில் தன்னுடைய க�ோயிலையும் கட்டிக்கொண்டான். இந்தக் க�ோயிலில் தன்னுடைய மகனான ராமேசிஸ் II பழங்காலப் பார�ோக்களின் பெயர்களை ஒரு பப்பைரஸ் சுருளைப் பார்த்துப் படிப்பது ப�ோன்ற சிலை ஒன்றையும் செதுக்கிவைத்தான். ராமேசிஸ் II சிலையின் கையில் இருக்கும் சுருளில் செட்டிக்கு முற்பட்ட 67 பார�ோக்களின் பெயர்களும் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் படிக்க முடியும். முதல் பார�ோ நார்மர் த�ொடங்கிப் பார�ோ செட்டியின் பெயர் வரைக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சில விடுபடல்களுடன். அந்தப் பெயர் பட்டியலில் ஹைக்கோஸ் பரம்பரை அரசர்களின் பெயர்களும், பார�ோ ஹெத்செப்சத் மற்றும் பார�ோ அகநேத்தன் பெயர்களும் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் விடுபடல்களே இவர்கள் எகிப்திய நாகரீகத்தில் எத்தகைய பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். இவர்களுடைய பெயர்களைத் தங்களுடைய பட்டியலில் குறிப்பிடுவது தங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பின்னர் வந்த பார�ோக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இது. அட்ஜூ நகர் பார�ோ செட்டியின் மதப் புனித யாத்திரை நகரமாகவே மாறிப�ோய்விட்டது. இந்த நகரில் தான் கட்டிய க�ோயிலுக்கு மானியமாக ஏக்கர் கணக்கில் நிலங்களை எழுதிக்கொடுத்திருக்கிறான். இந்த நிலங்கள் பெரும்பாலும் அவன் வென்று அடக்கிய நுபிய நாட்டைச் சேர்ந்தது. இந்த நிலத்தின் மூலம் பெறப்படும் உற்பத்திப் ப�ொருட்களைப் படகுகளின் மூலம் இந்தக் க�ோயிலுக்குக் க�ொண்டு வந்து குமிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறான். பார�ோவின் க�ோயில் என்றால் அதில் தங்கமில்லாமலா? க�ோயிலுக்குத் தங்கத்தால் செய்யப்பட்ட ப�ொருட்களை வருடா வருடம் வழங்குவதற்காக எகிப்தின் தூர கிழக்கு பாலைவனப் பகுதியில் புதிதாக ஒரு தங்க சுரங்கத்தை உருவாக்கினான். (சுமார் 9000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே எகிப்தின் மிக முக்கியமான தங்க சுரங்கமாக இருந்து வருவது எகிப்தின் கிழக்கு பாலைவன மலைப் பகுதிகள்). இந்தத் தங்கச் சுரங்கத்தை அவனே நேரில் சென்று ஆய்வு செய்ததாக அவனுடைய அரசவை எழுத்தர் பதிவு செய்திருக்கிறார். இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் குறிப்பு கீழே, ‘மேன்மை தங்கியவரின் திரு உள்ளம் சிறப்பான தங்கம் வரும் சுரங்கங்களைப் பார்க்க விரும்பியதால் அவரே மலைகள் வரை பரந்து விரிந்திருக்கும் மலை நாடுகளைக் கண்காணிக்க வந்தார்’ இந்தக் க�ோயில் மாத்திரம் இல்லாமல் தீப்சில் இருக்கும் ‘அரசர்களின் சமவெளியிலும்’ தன்னுடைய கல்லறையையும் மிகப் பிரம்மாண்டமாகச் செதுக்கிக்கொண்டான். (இவன் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரமிடுகள் கட்டப்படுவது கைவிடப்பட்டுவிட்டது). தீப்சின் மலைப் பாறை முகட்டில் மிக ஆழமாகவும் நீளமாகவும் செதுக்கப்பட்ட ஒரே கல்லறை இவனுடையதுதான். இந்தக் கல்லறையின் சுவர்களில் ஒரு இன்ஞ் கூட விட்டுவைக்காமல் கண்ணைக் கவரும் வர்ணங்களின் ஓவியங்களால் நிரப்பித்தள்ளிவிட்டார்கள் இவன் காலத்திய ஓவியர்கள். இவனுடைய காலத்தில் இவன் தலைமையில் எகிப்தின் எல்லைப் பகுதி நாடுகளுடன் நடந்த ப�ோர்களின் தாக்கம் அடுத்தப் பல பார�ோக்களின் தலைமுறைகளுக்கும் எதிர�ொலித்திருக்கிறது. சில இராணுவ வெற்றிகளை இவன் பெற்றாலும் எகிப்தின் வீழ்ச்சியானது இவன் காலத்திலிருந்தே த�ொடங்கியது. இவனுக்கு அடுத்து பார�ோவாக வந்தவன் ராமேசிஸ் II. பைபிள் குறிப்பிடும் ம�ோசே காலத்து பார�ோ இவனாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் செய்கிறார்கள். எகிப்திய சிற்பக் கலை, கட்டிடக் கலை மற்றும் ஓவியக் கலைகளைப் பிரம்மாண்டத்தின் உச்ச நிலைக்கு நகர்த்தி மற்ற நாகரீக மக்களின் கலை வெளிப்பாடுகளையெல்லாம் வாயடைத்துப்போக வைத்தவன் ராமேசிஸ் II. மூவாயிரம் ஆண்டுகளாக எகிப்தின் தெற்கு 48

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

எல்லையில் த�ொடங்கி வடக்கு எல்லை வரை 31 வம்சப் பார�ோக்களால் கட்டப்பட்ட ம�ொத்த நினைவுச் சின்னங்களையும் கணக்கெடுத்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்களைப் பார�ோ ராமேசிஸ் II-வே கட்டியிருப்பான். வடக்குத் த�ொடங்கித் தெற்கு வரை எகிப்தின் அனைத்து மாநிலங்களிலும் பார�ோ ராமேசிஸ் II-வின் நினைவுச் சின்னங்கள் உண்டு. நமக்குத்தான் இன்றைக்கு எகிப்து என்றால் பிரமிடுகளும் மம்மிகளும் நினைவிற்கு வரக் கூடியவை ஆனால் இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கு எகிப்து என்றால் ராமேசிஸ் II-வின் பிரம்மாண்ட சிலைகள்தான் நினைவிற்கு வரும். எகிப்திலிருக்கும் எந்தப் பழமையான க�ோயிலுக்குப் ப�ோய் நின்றாலும் அங்கே ராமேசிஸ்-II சிலை நமக்கு முன்னால் பிரம்மாண்டமாக நின்றுக�ொண்டிருக்கும். பார�ோ அகநேத்தன் பழமையான சிலைகளை அழித்துத் தன்னுடைய சிலைகளை மக்களின் மனதில் பதியவைக்க வெறிப்பிடித்து அலைந்தான் என்றால் ராமேசிஸ்-II பிரம்மாண்டமான சிலைகளை எழுப்பி மற்ற நாகரீக மக்களை வாய் பிளக்க விட்டான். இவன் உருவம் க�ொண்ட சிற்பங்கள் அமெரிக்கா வரை எதிர�ொலித்திருக்கிறது. அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டாவில் இருக்கும் மெளண்ட் ரஸ்மோர் மலை முகட்டில் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் முன்னால் பிரதமர்களின் (ஜார்ஜ் வாசிங்டன், தாமஸ் ஜெபர்சன், திய�ோடர் ரூஸ்வெல்ட்மற்றும் ஆபிரகாம் லிங்கன்) முகங்கள் க�ொண்ட மெளண்ட் ரஸ்மோர் நெஷனல் மெம�ோரியல் சிற்பம் முழுக்க முழக்க ராமேசிஸ் II-வின் பிரம்மாண்ட சிலைகளின் தாக்கத்தால் உருவானது. பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களின் மனங்களில் தாக்கத்தைச் செலுத்தும் சிலைகளுக்குச் ச�ொந்தக்காரனான ராமேசிஸ் II தாழ்வு மனப்பான்மை க�ொண்டவனாக இருந்திருக்க வேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அத்தகைய மனப்பான்மையின் காரணமாகவே அளவிற்கு மீறித் தன்னைப் பிரகடனப்படுத்தும் இத்தகைய பிரம்மாண்ட கட்டிடங்களை அவன் கட்டியிருக்கவேண்டும் என்று அனுமானிக்கிறார்கள். அவன் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகக் கட்டினானா இல்லை தான் க�ொண்ட தற்பெருமையின் வெளிப்பாடாக இத்தகைய படு பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டினானா என்பது ஒரு புறம் இருக்கட்டும் எகிப்து முழுக்கப் பிரமாண்டத்தின் பிரமாண்ட கட்டிடங்களைக் கட்டியெழுப்ப கட்டிட, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களின் முதுகை ஓடித்துவிட்டான் என்பது மட்டும் எத்தகைய சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மை. மேற்குலகின் கலைக்கு அடித்தளமாக இருப்பது கிரேக்கத்தின் கலைகள். கிரேக்க கலைக்கு அடித்தளமாக இருப்பவை எகிப்திய கலைகள். அதிலும் முக்கியமாக ராமேசிஸ் II-வின் கட்டிடங்களே. எகிப்தின் மிகப் பழம் பெருமை க�ொண்ட நகரங்களான ஈனு, ஹிராக்லிய�ோப�ோலிஸ், அட்ஜூ மற்றும் தீப்ஸ் நகரங்களில் இவன் கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு முன்பு இருந்த பார�ோக்கள் கட்டிய கட்டிடங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவனுடைய க�ோயில் கட்டிடங்களின் சிறப்பு அம்சம், இரண்டு கைகளையும் த�ொடையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்துக�ொண்டிருக்கும் இவனுடைய 20 அடி உயரச் சிற்பங்கள். க�ோயில் நுழைவு வாயிலின் பக்கவாட்டுப் பகுதிகளில் உட்கார்ந்திருக்கும் இவனுடைய 20 அடி உயர சிலைகளைக் கடந்துதான் நாம் க�ோயிலுக்குள்ளேயே நுழைய முடியும். இவன் கட்டிடக் கலையின் அடுத்தச் சிறப்பு அம்சம் ஆப்லிஸ்க். நம்மூர் க�ோயில்களில் இருக்கும் க�ொடி மரம் ப�ோன்றது இந்த ஆப்லிஸ்க். எகிப்தில் பிற்காலத்தில் பாறைக் கற்களால் கட்டப்பட்ட பிரமிடுகளைத் (ஈம�ோதெப்பிற்குப் பிறகு) தவிர ‘மரணத்தின் நிலத்தில்’ இருக்கும் மஸ்தபாக்கள் மற்றும் உள்ளூரில் இருக்கும் க�ோயில்கள் அனைத்திற்கும் அற்ப ஆயுள்தான். முந்நூறு நானூறு வருடங்கள் கழித்து வரும் பார�ோக்கள் தாங்களும் தங்களுடைய பெயரை நிலை நிறுத்தும் பிரம்மாண்டமான கட்டிடங்களைத் தங்களுடைய ஆயுள் முடிவதற்குள்ளேயே கட்டிவிடவேண்டும் என்கிற நவீனா அலெக்சாண்டர்

49

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

நிர்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாகத் தனக்கு முன்னால் இருந்த பார�ோக்கள் கட்டிய கட்டிடங்களின் கட்டுமான ப�ொருட்களான கற்கள் மற்றும் மர ப�ொருட்களைத் தங்களுடைய கட்டிடங்களுக்காக உருவி எடுத்துவிடுவார்கள். இதன் காரணமாகப் பல பார�ோக்களின் கட்டிடங்கள் ஓரிடத்திலிருந்து மறைந்து மற்றொரு பார�ோவின் கட்டிடங்களாகப் பிறப்பெடுத்து மீண்டும் மற்றொரு பார�ோவின் கட்டிடமாகப் பரிணமித்துவிடும். இந்த வகையில் மற்ற எந்தப் பார�ோவையும் விட ராமேசிஸ் II-வே மிக அதிக அளவில் தன்னுடைய பிரம்மாண்டமான கட்டிடங்களுக்காக மற்ற பார�ோக்களின் கட்டிடங்களை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறான். இவன் அதிகமாகக் கைவைத்துக் கற்களை உருவியெடுத்தது பார�ோ அகநேத்தனுடைய கட்டிடங்களிலிருந்துதான். எகிப்திய மக்கள் நினைத்தும் பார்க்க விரும்பாத பார�ோ அகநேத்தன் தீப்ஸ் மற்றும் அகடேடன் நகரங்களில் கட்டியிருந்த ஏதன் க�ோயில்களின் கட்டுமான ப�ொருட்களைத் தன்னுடைய கட்டிடங்களுக்காகத் தரைய�ோடு தரையாக வழித்து எடுத்துவிட்டான் ராமேசிஸ் II. இந்தச் செயலின் மூலம் எகிப்திய மக்கள் விரும்பாத அகநேத்தன் பார�ோவின் நினைவுச் சின்னங்களை அழித்த மாதரியும் ஆயிற்று தன்னுடைய பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிய மாதரியும் ஆயிற்று என்பது அவனுடைய கணக்கு. அடுத்து இவன் தன் வேலையைக் காட்டியது தீப்சில் இருக்கும் லக்சார் க�ோயிலில். சாதாரணமாகவே பிரம்மாண்டத்தைக் கட்டிக்கொண்டு சாமியாடும் பேர்வழி ராமேசிஸ் II, அப்படியிருக்கையில் லக்சார் க�ோயில் ப�ோன்ற எகிப்திய நாகரீகத்தின் மிகப் பழமையான அதே சமயத்தில் அதி முக்கியமான இடத்தை மட்டும் விட்டுவைத்துவிடுவானா என்ன. எகிப்தியர்கள் வருடா வருடம் க�ொண்டாடும் திருவிழாக்களில் ஒன்று ஓபெத். இந்தத் திருவிழாவின்போது பார�ோக்கள் மக்களின் முன்னிலையில் சில மதச் சடங்குகளைச் செய்வார்கள். அதற்கென்று க�ோயில்களில் பெரிய திறந்த வெளியும் அதைச் சுற்றிய கட்டிடங்களும் கட்டப்பட்டிருக்கும். கிரேக்கர்களின் தியேட்டர் என்கிற கட்டிட அமைப்பு இதிலிருந்து பெறப்பட்டதே. அப்படியான சடங்கு செய்யும் தியேட்டர் ஒன்று லக்சார் க�ோயிலில் இருந்தாலும் தன்னுடைய பிரம்மாண்டத்தை அதில் புகுத்த நினைத்தான் ராமேசிஸ் II. அந்தத் தியேட்டர் மிகப் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு அங்கே கண்களைத் திருப்பும் இடங்களிலெல்லாம் 20 அடி உயரம் க�ொண்ட அவனுடைய சிலைகள் நிறுத்தப்பட்டன. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ச�ொல்லும் அளவிற்கு அடுத்தத் திட்டம் தயாரானது அபு சிம்பல் என்கிற இடத்தில். எகிப்து என்றாலே பிரமிடுகளுக்கு அடுத்து அடையாளப்படுத்தப்படும் வரலாற்று கலைச் சின்னம் அபு சிம்பலில் இருக்கும் ராமேசிஸ் II-வின் புடைப்புச் சிற்பங்கள்தான். இது பாறையால் ஆன குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் க�ோயில். ராமேசிஸ் II-வின் க�ோயில்களுக்கே உரிய அமைப்பில் நுழைவாயிலின் இரண்டு பக்கமும் பக்கத்திற்கு இரண்டு சிலைகள் என்று நான்கு சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நான்குமே ராமேசிஸ் II-வின் உருவங்கள்தான். பாறை மலையின் முக்கால் பங்கு உயரத்திற்குச் செதுக்கப்பட்ட சிலைகள். அப்படியென்றால் பிரம்மாண்டத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தச் சிலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதற்கே ஒருவருக்கு ஒரு நாள் ப�ோதாது. நாம் இதையே பார்த்துக்கொண்டிருக்க முடியாதல்லவா வாருங்கள் அந்தக் க�ோயிலுக்குள் செல்லலாம். அடுத்தப் பிரம்மாண்ட அதிரடி வரவேற்பு அறையின் தூண்களில் இருக்கிறது. தூண்கள் அனைத்தும் தூண்கள் கிடையாது அவை 20 அடி உயரம் க�ொண்ட ராமேசிஸ் II சிலைகள். ஒசிரிஸ் கடவுளின் உருவத்திலிருக்கும் ராமேசிஸ் II உருவம். அறையின் இரண்டு பக்கமும் வரிசையாக நின்றுக�ொண்டிருக்கின்றன. இந்தக் க�ோயிலின் வாசலிலேயே ஆச்சரியத்தில் பிளந்த உங்களின் வாய் இதைப் பார்த்த பிறகு இன்னும் க�ொஞ்சம் அதிகமாகப் 50

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

பிளந்திருக்கும். இப்படிப் பார்ப்பவர்கள் தன்னைக் கண்டு வாயைப் பிளக்கவேண்டும் என்பதுதான் ராமேசிஸ் II-வின் எண்ணமும். மனித வரலாற்றில் வேறு எந்த ஒரு அரசனும் ராமேசிஸ் II அளவிற்குப் பிரம்மாண்ட சிற்ப உருவங்களின் மூலம் சுய விளம்பரம் செய்துக�ொண்டது கிடையாது. சுய விளம்பரத்தின் உச்சம் அப்பு சிம்பல் சிற்பங்கள். அடுத்த அறையில் ப்தா, அமூன் மற்றும் ரா-ஓரக்தி ஆகிய கடவுளர்களின் சிலைகள் இருக்கின்றன. இவற்றோடு சேர்த்து அங்கேயும் ராமேசிஸ் II-வின் ஒரு சிலை உண்டு. வருடத்தின் இரண்டு நாட்களில் (பிப்ரவரி 21 மற்றும் நவம்பர் 21) சூரிய உதயத்தின் முதல் ஒளி உள் அறையில் இருக்கும் இந்த நான்கு சிலைகளின் மீதும் விழுகின்றது. மியூசியம் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ராமேசியம் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா! பிற்காலத்தில் வரும் சந்ததிகள் அப்படியான ஒரு வார்த்தையைத் தன் பெயரிலேயே உருவாக்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் ராமேசிஸ் II-வின் அடுத்த அதிரடி நெத்தியடி கட்டிடக் கலைத் திட்டம். எகிப்தின் பார�ோ என்னதான் ஆண்டு அனுபவித்து இருந்தாலும் அவருடைய கல்லறை என்பதே அவருடைய ஆட்சிக்கும் அவருடைய பெருமைக்கும் உறிய உச்சக்கட்ட அடையாளம். அப்படியான ஒரு விசயத்தில் ராமேசிஸ் II க�ோட்டைவிட்டு விடுவானா என்ன. தன்னுடைய கல்லறை க�ோயிலைக் கட்ட அவன் தேர்ந்தெடுத்த இடம் தீப்ஸ். அது நைல் நதியின் மேற்கு கரைய�ோரம் அமைந்த இடம். இந்த இடத்தின் ம�ொத்த பரப்பளவு சுமார் 12 ஏக்கர். இந்தக் கல்லறைக் க�ோயில் இன்றைக்கு நமக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. இடிந்த கட்டிட சிதைவுகளாகத்தான் கிடைக்கிறது. ஆனால் அந்தச் சிதிலங்களே பார்ப்பவர்களை மிரள அடிக்கக் கூடியது. அது முழுமையாகக் கிடைத்திருந்தால்! இந்தக் கல்லறைக் க�ோயிலிலும் ராமேசிஸ் II-ன் 20 அடி உயர சிலைகளுக்குப் பஞ்சமே இல்லை. தூணிலும் துரும்பிலும் ராமேசிஸ் II மயம்தான். இந்தக் கல்லறைக் க�ோயிலுக்குள் ஒரு தானியக் களஞ்சியமும் இருக்கிறது. பார�ோ ராமேசிஸ் II மக்களைச் சந்திக்கும்போத�ோ அல்லது திருவிழாக் காலங்களில் சடங்குகளைச் செய்யும்போத�ோ கூடும் மக்களுக்கு உணவுத் தயாரிக்கவேண்டி தேவைப்படும் க�ோதுமையைச் சேமித்து வைக்கக் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் களஞ்சியம் பின்னால் வந்த பல பார�ோக்களால் பஞ்ச காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் களஞ்சியத்தை முழுதாக நிரப்ப சுமார் 75,00,000 க�ோதுமை மூட்டைகள் தேவைப்படும் என இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். இது இன்றைய தீப்ஸ் நகர மக்களுக்கே ஒரு வருட காலத்திற்குப் ப�ோதுமான உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்யக் கூடியது. அப்படியென்றால் இன்றையிலிருந்து 3200 வருடங்களுக்கு முன்பான நிலையைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இப்ட்சட், லக்சர், அபு சிம்பல் மற்றும் ராமேசியம் ப�ோன்ற இடங்களில் இருக்கும் ராமேசிஸ் II-வின் கட்டிடங்கள் நமக்கு வேண்டுமானால் திகைப்பையும் ப�ோதும் ப�ோதும் என்கிற பிரமிப்பையும் தரலாம் ஆனால் ராமேசிஸ் II-விற்கு இவற்றால் மனசு நிறைந்தப்பாடாகத் தெரியவில்லை. தனக்கு முன்னால் இருந்த பார�ோக்கள் பல நூறு வருடங்களாக எகிப்தின் பல நூறு மைல்கள் தூரம் எங்கும் கட்டிவைத்த கட்டிட அற்புதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தினான். உலகம் இதுவரை பார்த்திராத அந்தத் திட்டத்தைக் குறித்துப் பார்ப்பதற்கு முன்பு ராமேசிஸ் II குறித்துத் தனிப்பட்ட முறையில் க�ொஞ்சம் தெரிந்துக�ொள்ளலாம் என்றால் வேண்டாம் என்றா ச�ொல்வீர்கள். எகிப்தின் பார�ோக்களிலேயே அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவன் இவன் ஒருவனாகத்தான் இருக்கும். அன்றைய நாட்களில் எகிப்தியர்களின் சராசரி ஆயுட் காலம் என்பது 40 வருடங்கள்தான். இந்தச் சராசரி ஆயுட் காலத்திற்குப் பார�ோவா, பரதேசியா என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது. மிகக் குறுகிய ஆயுட் காலம் க�ொண்ட ஒரு மக்களினம் உலகின் பிரம்மாண்டமான கட்டிடக் கலையையும் ஓவியக் கலையையும் உருவாக்கியது எகிப்திய நாகரீகத்தின் பல ஆச்சரியங்களில் பத்தோடு ஒன்று பதின�ொன்று. நவீனா அலெக்சாண்டர்

51

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ராமேசிஸ் II தன்னுடைய வாழ் நாளிலேயே தன்னுடைய பல வாரிசுகள் ‘அரசர்களின் சமவெளியில்’ ப�ோய் அடக்கமானதைப் பார்த்திருக்கிறான். அவன் வாரிசுகளின் இழப்புகளைவிட வாழ் நாள் முழுவதும் அவனைப் பாதித்த ஒரு விசயம் அவனுடைய மனைவி நெஃப்ர்டாரியின் இழப்பு. ராமேசிஸ் II-விற்கு ம�ொத்தம் எட்டு மனைவிகள் இருந்தார்கள். இவர்களில் எகிப்திய நாகரீகம் கண்ட பல தனித்துவமான பெண்களில் ஒருத்தியான நெஃப்ர்டாரியும் அடக்கம். மிகச் சிறந்த படிப்பாளி. ராமேசிஸ் II அவளை நினைத்துப் பெருமிதம் அடைந்த விசயங்களில் அவளுடைய அழகும் அவளுடைய படிப்பறிவும் பிரதான விசயங்கள். ஒரு பெண்ணிடத்தில் அழகும் அறிவும் ஒற்றினைவது அற்புதமான விசயம்தானே. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல ப�ொதுப் புத்தியின் கருத்தையே இங்கே உபய�ோகித்திருக்கிறேன். ப�ோர் க�ொடி தூக்கலாமா என்று ய�ோசிக்கத் துணியும் பெண்ணியவாதிகள் ப�ொதுப் புத்திக்கு எதிராக எதையாவது தூக்கிக்கொள்ளவும்) நினைத்து நினைத்துப் பெருமிதம் அடைந்த, தான் மிகவும் நேசித்த நெஃப்ர்டாரியை முழு ஆயுளுக்கு (40 வயது) பறிக�ொடுத்த ராமேசிஸ் II மிகவும் உடைந்துப்போய்விட்டான். உடைந்து ப�ோன நிலையிலும் தன்னுடைய அன்பு மனைவியின் நினைவு இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்று முடிவு செய்த அவன் எகிப்திய அரச குடும்பப் பெண்களை அடக்கம் செய்யும் ‘அரசிகளின் சமவெளியில்’ நெஃப்ர்டாரிக்கு என்று பிரம்மாண்டமான கல்லறையைக் குடைவித்தான். முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய அன்பு மனைவிக்கு என்று இந்த உலகம் அதுவரை பார்த்திராத ஒரு அற்புதமான கல்லறையைக் கட்டிய முதல் பேரரசன் ராமேசிஸ் II. பார�ோனிக் நாகரீகத்தின் அதி அற்புதமான ஓவியங்களைக் க�ொண்டது நெஃப்ர்டாரியின் கல்லறை. அவளுடைய கல்லறையில் ப�ொறிக்கப்பட்டிருக்கும் ராமேசிஸ் II-வின் வாசகம் “அவள் மீதான என்னுடைய அன்பு தனித்துவமானது – யாரும் அவளுக்குப் ப�ோட்டியாக வரமுடியாது, மிக அழகான பெண் அவள், என் இதயத்தைத் திருடிச் சென்றுவிட்டாள்”. பிற்காலத்தில் ராமேசிஸ் II-வின் மம்மியே மரத்தாலான சவப்பெட்டியில்தான் வைக்கப்பட்டது ஆனால் நெஃப்ர்டாரியின் மம்மி மிகவும் மதிப்பு வாய்ந்த சிகப்பு பளிங்குக் கல்லால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. நெஃப்ர்டாரியின் கல்லறையில் அவளுடைய மறு உலக வாழ்வு பயணத்திற்கு உதவி செய்யும் கடவுளர்களின் ஓவியங்களைத் தானே முன் நின்று மேற்பார்வை செய்திருக்கிறான் ராமேசிஸ் II. அதில் இசிஸ் கடவுள் ஆன்க் (இது சிலுவை ப�ோன்ற உருவமைப்புக் க�ொண்டது) எனப்படும் என்றும் அழியாத பெரு வாழ்விற்கான சாவியை நெஃப்ர்டாரியிடம் க�ொடுக்கும் ஓவியம் கண்கொள்ளாக் காட்சி. ராமேசிஸ் II-வின் வாழ்வைப் ப�ொருத்தவரைக்கும் துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் அதன் வெளிப்பாடு பிரம்மாண்ட கட்டிடக் கலைதான். சரி இனி ராமேசிஸ் கட்டிடக் கலைகளில் உச்சமாகக் கருதப்படும் அந்த மிகச் சிறந்த கட்டிடக் கலைக் குறித்துப் பார்க்கலாம். அதன் பெயர் பெர்-ராமேசிஸ் அதாவது ராமேசிஸின் வீடு என்பது ப�ொருள். பெயருக்குத்தான் அது வீடு ஆனால் அது நிதர்சனத்தில் மிக மிகப் பிரம்மாண்டமான அரண்மனைகளின் நகரம். இத்தகைய ஒரு அரண்மனைகளின் நகரத்தை அவனுக்கு முன்பும் சரி அவனுக்குப் பின்பும் சரி எந்த ஒரு பேரரசனும் தங்களின் கனவில்கூடக் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கமாட்டார்கள். இந்த அரண்மனைகளின் நகரம் இன்றைக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. இதன் சிதிலமடைந்த அடிப்படைக் கட்டுமானங்களே நமக்கு இதன் பிரம்மாண்டத்தை அனுமானிக்க உதவி செய்கிறது. இதன் அற்புதத்தை மிக எளிதாக அதே சமயத்தில் அதன் பிரம்மாண்டத்துடன் நீங்கள் கற்பனை செய்ய உங்களுக்கு உதவ இப்படிச் செல்லலாம், இந்த உலகில் இருக்கும் அனைத்து அதி அற்புதமான அரண்மனை கட்டிடங்களையும் ஒரே இடத்தில் க�ொண்டுவந்து வைத்தால் அதுதான் பெர்-ராமேசிஸ். பெர்-ராமேசிஸின் மையமாக இருந்தது அமூன்52

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ரா, ஓராக்தி மற்றும் அதும் ஆகிய திரிமூர்த்திகளின் பிரம்மாண்டமான க�ோயில். இந்தக் க�ோயிலுக்கு முன்னால் 20 அடிகளுக்கும் அதிகமான உயரம் க�ொண்ட ராமேசிஸ் II-வின் நான்கு உருவச் சிலைகள் இருந்திருக்கிறது. இதற்குள் இன்றைய தரத்திற்கு நிகரான செம்பு உருக்கு ஆலை ஒன்றும் இருந்திருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 3300 வருடங்களுக்கு முன்பே உலகின் முதல் பெரு நகரமாக இருந்திருக்கிறது பெர்-ராமேசிஸ். இந்த நகரத்திற்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் காய்கறி பழங்களையும் தடையில்லாமல் உற்பத்தி செய்வதற்கு என்றே இந்த நகரைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கியிருக்கிறான் ராமேசிஸ் II. இந்த அரண்மனை நகரமும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களுமே அகதிகளாகத் திரிந்துக�ொண்டிருந்த யூதர்களை எகிப்தை ந�ோக்கி இழுத்திருக்கவேண்டும் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பிழைப்புத் தேடித் திரிந்த யூதர்கள் பெர்-ராமேசிஸ் நகரில் தஞ்சம் அடைந்து அந்த நகரின் பித்தோம் அல்லது பெர்-அதும் (இன்றைய டெல்-எல்-மஸ்குதா) பகுதியையும் ராமேசிஸ் பகுதியையும் கட்டியிருக்கவேண்டும் என்று இன்றைக்கு அனுமானிக்கப்படுகிறது. கட்டுமான வேலையில் ஈடுபடுத்தப்பட்ட யூதர்கள் அடிமைகளைப் ப�ோல நடத்தப்பட்டார்களா என்பதற்கு எவ்வித எழுத்து மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும் அவர்களுடைய வாழ் நிலை அடிமைகளைப் ப�ோல்தான் இருந்திருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் விவிலியத்தின் யாத்திராகமமும் குறிப்பிடுகிறது. ஆனால் இவற்றைக் குறித்து எகிப்திய பப்பைரஸ் மற்றும் கல்லறை எழுத்துக்கள் அழுத்தமான மெளனமே சாதிக்கின்றன. என்னத்தான் ராமேசிஸ் II எகிப்தின் பிரம்மாண்டமாக இருந்தாலும் எகிப்து என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது பிரமிட்தான். அதிலும் பிரமிட் என்றாலே நம் கண்களுக்குள் த�ோன்றுவது தி கிரேட் பிரமிட் ஆப் கீசாதான். இது குறித்த தெரிந்துக�ொள்ள நாம் ராமேசிஸ் II காலத்திலிருந்து 1300 வருடங்கள் பின்னோக்கி செல்லவேண்டும். வாருங்கள் செல்வோம்.

நவீனா அலெக்சாண்டர்

53

ஸ்னெப்ரு கி.மு. 2575 – 2545 (4-வது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாரீசில் கட்டப்பட்ட ஈபீல் டவருக்கு முன்பு வரை இந்த உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்துவந்தது தி கிரேட் பிரமிட். அது கட்டப்பட்டுக் கடந்த 4500 வருடங்களாக உலகின் மிகப் பெரிய அதே சமயத்தில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இந்தப் பிரமிடுக்குப் பின் அறிவியல் த�ொடங்கி அமானுஷ்ய மர்மம் வரை பல கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏலியன்கள், உலகின் முதல் அணு உலை, உலகின் முதல் மின்சார உற்பத்தி மையம், உலகின் முதல் வானியல் ஆராய்ச்சி மையம் இப்படிப் ப�ோய்க் க�ொண்டே இருக்கிறது இந்தப் பிரமிட் குறித்த இன்றைய ஆராய்ச்சிகள். இதில் விசேசம் இந்தக் கதைகளைச் ச�ொல்பவர்கள் அனைவரும் ஆராய்ச்சியாளர்களே. எகிப்தியாலஜியில் இந்தப் பிரமிட் குறித்த ஆராய்ச்சிக்கென்றே தனித் துறை கூட இருக்கிறது. இந்தப் பிரமிட் கட்டப்பட்ட காலத்திலிருந்து உலகின் அனைத்து நாகரீக மக்களையும் இன்றைக்கு வரைக்கும் அதிசயத்து மலைத்துப்போக வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பிரமிட் பழைய அரசாட்சி காலகட்டத்தைச் சேர்ந்த நான்காவது வம்சாவளி பார�ோக்களில் இரண்டாம் பார�ோவான கூஃபுவிற்காகக் கட்டப்பட்டது. ஆனால் இந்தப் பிரமிடிற்குள் பார�ோ கூஃபுவின் மம்மி வைக்கப்படவேயில்லை என்பது இந்தப் பிரமிட் குறித்த மர்மங்களின் த�ொடக்கப் புள்ளி. இன்றைய பிரமிட் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரமிட் கல்லறை பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டதில்லை என்கிற முடிவிற்கு வரக் காரணம் இதற்குள்ளிருந்து பார�ோ கூஃபுவினுடைய மம்மி மாத்திரம் அல்ல அவனுக்குப் பின் வந்த வேறு எந்த ஒரு பார�ோவின் மம்மியும் கூட இதிலிருந்து கண்டெடுக்கப்படவில்லை என்பதே. உலகின் மிகப் பெரிய கல் கட்டிடம் ஒன்றை தன்னுடைய மறு வாழ்வு பயணத்திற்கான கல்லறை கட்டிடமாகக் கட்டிய பார�ோ கூஃபுவின் மம்மி அதற்குள் வைக்கப்படாமல் வேறு ஒரு பிரமிடில் வைக்கப்பட்டதற்கான காரணமென்ன. இது குறித்துத் தெரிந்துக�ொள்வதற்கு முன்பு நாம் பார�ோ கூஃபுவின் தந்தையான பார�ோ ஸ்னெப்ரு-வின் பிரமிட் கட்டிடக் கலை முயற்சிகளைக் குறித்துத் தெரிந்துக�ொள்வது நல்லது. பார�ோ கூஃபு உலகின் மிகப் பெரிய கல் கட்டிடமான தி கிரேட் பிரமிடை கட்டுவதற்கான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தவன் பார�ோ ஸ்னெப்ரு. இவன் தன்னுடைய காலத்தில் தனக்கென்று மூன்று பெரிய பிரமிடுகளைக் கட்டிக்கொண்டான். பார�ோ ஸ்னெப்ரு (கி.மு. 2575 – 2545), நான்காம் வம்சாவளியின் முதலாவது பார�ோ. இவன் காலத்திலேயே எகிப்தியர்கள் மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் த�ொழில் நுட்பத்திற்குள் நுழைகிறார்கள். பிரம்மாண்ட பிரமிடுகளைக் கட்டுவதற்கான மனித உழைப்பை க�ொடுக்கப் ப�ோர் கைதிகளாகப் பிடிபட்ட 7000 நுபிய அடிமைகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 54

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இவர்கள் பெயருக்குத்தான் அடிமைகள். ஆனால் உண்மையில் பார�ோ ஸ்னெப்ரு இவர்களுக்கு எகிப்திய குடியுரிமை க�ொடுத்திருக்கிறான். அது மாத்திரமல்ல இவர்களுக்கு வரி விலக்கும் கூடக் க�ொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கென்று தனிக் குடியிருப்பும் கூட ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறான் பார�ோ ஸ்னெப்ரு. இந்தச் சலுகைகளுக்கெல்லாம் நன்றிக் கடனாக இவர்களிடமிருந்து உறிந்துக�ொள்ளப்பட்டது முதுகை உடைத்து இரண்டு கூறுகளாக்கும் பிரமிட் கட்டுமானப் பணி. பார�ோ ஸ்னெப்ரு காலத்தில் எகிப்திய நாகரீகம் சமூக வாழ்வு, அரசியல், கலை மற்றும் பிரமிட் கட்டிடக் கலை என்று அனைத்திலும் அடுத்த நிலைக்கு அடியெடுத்து வைத்தது. ஈம�ோதெப் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பிரமிட் கட்டிடக் கலையை மேலும் அதிகமாக அறிவியல் அடிப்படையிலான கட்டுமானமாக மாற்றியவர்கள் பார�ோ ஸ்னெப்ருவின் பிரமிட் கட்டிடக் கலை வல்லுநர்கள். மூன்றாம் வம்சாவளியைச் சேர்ந்த பார�ோ ஹெட்டெசகேமி பழம் பாரம்பரியத்தை உடைத்து ஸக்கராவை ஸ்டெப் பிரமிடுகள் கட்டுவதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்ததைப் ப�ோலப் பார�ோ ஸ்னெப்ரு மீண்டும் ஒருமுறை பழம் பாரம்பரியத்தை உடைத்து மெய்டுமை தன்னுடைய பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டுவதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான். இவன் காலத்திற்கு முன்புவரை கட்டப்பட்ட மஸ்தபாக்களும் ஸ்டெப் பிரமிடுகளும் வடக்கு திசைய�ோடு ஒத்திசைவாகக் கட்டப்பட்டு வந்தது. இதையும் முதல் முறையாக மாற்றித் தன்னுடைய பிரம்மாண்ட பிரமிடுகளைக் கிழக்கு மேற்கு திசைய�ோடு ஒத்திசைவாகக் கட்டினான் பார�ோ ஸ்னெப்ரு. மெய்டுமில் கட்டப்பட்ட இவனுடைய முதல் பிரமிடே வெளிப்பக்க சரிவுகளில் சுண்ணாம்பு கல் பூச்சுக்கொண்ட முதல் பிரமிட். இந்தப் பிரமிட் எட்டு அடுக்குகளைக் க�ொண்டதாக இருந்திருக்கவேண்டும் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். இன்றைக்கு இரண்டு அடுக்குகள் மாத்திரமே முழுமையாக இருக்கிறது. இந்தப் பிரமிட் பார�ோ ஸ்னெப்ரு ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இது இடிந்தும் விழுந்திருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரமிட் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ப�ோதே இடிந்து விழுந்து கட்டிடப் பணியாளர்களைப் பலிவாங்கியிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பிரமிட் இடிந்து விழுந்ததன் எதிர�ொளியே இவன் கட்டிய இரண்டாம் பிரமிடின் வடிவமைப்பில் எதிர�ொலித்திருப்பதாக்க ஆராய்ச்சியாளர்கள் அனுமானம் செய்கிறார்கள். பார�ோ ஸ்னெப்ரு தனக்கான முதல் பிரமிட் இடிந்துவிழுந்துவிட்டதால் மற்றொரு புதிய பிரமிடைக் கட்டியெழுப்ப நினைத்தானா அல்லது த�ொடக்கத்திலேயே தனக்கென்று பல பிரமிடுகள் கட்ட நினைத்ததன் த�ொடர்ச்சிதான் மெம்பிசின் தெற்குப் பகுதியில் (இன்றைய தாஷுர்) கட்டப்பட்ட இரண்டாவது பிரிமிடா என்பது விவாதத்திற்குரிய விசயமாக இருந்துவருகிறது. இன்றைக்கு வேண்டுமானால் இது த�ொடர்பாக நாம் விவாதம் செய்துக�ொண்டிருக்கலாம் ஆனால் பார�ோ ஸ்னெப்ரு மிகத் தெளிவான திட்டமிடலுடனே இதைக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. அவனுக்கு முன்பு இருந்த எந்த ஒரு பார�ோவுமே டாசூர் பகுதியில் எத்தகைய கல்லறை கட்டிடங்களையும் கட்டியதில்லை. இவனுடைய இரண்டாவது பிரமிடே டாசூர் பகுதி கண்ட முதல் கல்லறை கட்டிடம். இன்றைக்குப் பிரமிட் என்றால் நம் கண்களுக்கு முன்பாகத் த�ோன்றும் பிரமிடின் முக்கோண வடிவத்தின் முழுமையான த�ோற்றம் இந்தப் பிரமிடிலிருந்தே த�ொடங்குகிறது. எகிப்தின் முதல் கேத்திர வடிவ பிரமிட் இந்தப் பிரமிடே. இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரமிடிற்குப் பென்ட் பிரமிட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காரணம் அதன் த�ோற்றம். இந்தப் பிரமிடின் அடிப்பகுதிக்கென்று ம�ொத்தமாக 8-1/2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எட்டரை ஏக்கர் நிலத்தை அடைத்துக்கொண்டு ஒரு கட்டிடம் என்றால் அதன் பிரம்மாண்டத்தைக் கற்பனை செய்துக�ொள்ளுங்கள். ஒருவகையில் இந்தப் பிரமிடே இவனுடைய மகனான பார�ோ கூஃபுவின் தி கிரேட் பிரமிடின் முன் மாதரி என்று துணிந்து ச�ொல்லலாம். நவீனா அலெக்சாண்டர்

55

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஈம�ோதெப் பார�ோ ஜ�ோசருக்கு கட்டிய ஸ்டெப் பிரமிட் எகிப்திய பிரமிட் கட்டிடக் கலையின் ஒரு மைல் கல் என்றால் பார�ோ ஸ்னெப்ரு-வின் பென்ட் பிரமிட், பிரமிட் கட்டிடக் கலையின் அடுத்த மைல் கல். தரையிலிருந்து இந்தப் பிரமிடின் உச்சி 500 அடிகள் உயரத்திலிருக்கிறது. அதாவது இந்தப் பிரமிடின் ம�ொத்த உயரம் 150 மீட்டர்கள். தரையிலிருந்து முதல் 45 மீட்டர்கள் உயரம் வரை இந்தப் பிரமிடின் நான்கு பக்கங்களும் 60 டிகிரி க�ோணத்தில் வானத்தை ந�ோக்கி மேலே எழுகிறது. பிறகு 45 டிகிரி க�ோணத்தில் உள் பக்கமாக வளைந்து பிரமிடின் உச்சியைத் த�ொடுகிறது. வானத்தை ந�ோக்கி எழும் பாதையின் நடுவழியில் இந்தப் பிரமிடின் நான்கு பக்கங்களும் 45 டிகிரிக் க�ோணத்தில் வளைந்திருப்பதே இந்தப் பிரமிடிற்குப் பென்ட் பிரமிட் என்று பெயர் வரக் காரணம். இந்தப் பிரமிடின் 45 டிகிரிக் க�ோண வளைவிற்கு இரண்டு காரணங்கள் ச�ொல்லப்படுகின்றன. முதலாவது காரணம், இந்தப் பிரமிட் 45 மீட்டர்கள் உயரம் வரை கட்டப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் பார�ோ ஸ்னெப்ரு-வின் முதல் பிரமிட் இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்றும் அதே நிலைமை இந்தப் பிரமிடிற்கும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில் இந்தப் பிரமிடை கட்டிக்கொண்டிருந்த கட்டிடக் கலை வல்லுநர்கள் இதன் பக்கவாட்டு சுவர்களின் க�ோணத்தை 45 டிகிரிகளாக வளைத்துவிட்டார்கள் என்பது. அடுத்தக் காரணம், எகிப்து அதுவரை கண்டிராத இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கான கட்டுமானப் ப�ொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே கட்டிடக் கலை வல்லுநர்கள் இதன் 60 டிகிரி க�ோணத்தை 45 டிகிரிகளாக வளைத்துவிட்டார்கள் என்பது. இதில் இரண்டாவதாகச் ச�ொல்லப்படும் காரணம் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பே கிடையாது. எகிப்தில் கற்களுக்குப் பஞ்சமே கிடையாது. வெட்ட வெட்டக் குறையாத கல் குவாரி மலைகள் எகிப்தில் ஏராளம். அதனால் முதல் காரணமே ப�ொருத்தமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பிரமிடிற்கு வடக்குப் பக்கம் ஒன்று மேற்குப் பக்கம் ஒன்று என்று இரண்டு நுழைவாயில்கள் இருக்கிறது. இந்த ஏற்பாடு அனேகமாகப் பிரமிட் க�ொள்ளையர்களைக் குழப்புவதற்காக இருக்கவேண்டும். இந்தப் பிரமிடிற்கு அருகிலேயே தெற்கில் மற்றொரு சிறிய பிரமிடும் இருக்கிறது (இவற்றைச் செட்டிலைட் பிரமிட் என்பார்கள்). கிழக்கில் கல்லறை க�ோயில் இருக்கிறது. இவற்றை உள்ளடக்கும் படி ஒரு மிகப் பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்தச் சுற்றுச்சுவரின் சுவடு கூட இல்லை. சுற்றுச்சுவரின் கற்கள் பிற்காலப் பார�ோக்களால் உருவியெடுக்கப்பட்டுத் தங்களுக்கான கல்லறை க�ோயில்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்டுவதற்கான ப�ொருளாதார மற்றும் உணவுத் தேவைகளை ஈடுகட்டுவதற்கென்றே எகிப்தில் புதிதாக 35 பண்ணை நிலம் க�ொண்ட நகரங்களையும் 122 கால்நடை பண்ணைகளையும் உருவாக்கியிருக்கிறான் பார�ோ ஸ்னெப்ரு. இந்தச் செய்தியை அவனுடைய ஆட்சியின் பதினான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு நமக்குத் கம்பீரமாகத் தெரிவிக்கிறது. இதே கல்வெட்டு இந்தப் பிரமிடின் உள் கட்டுமான தேவைகளுக்கென்று 40 படகுகள் முழுக்க மிகப் பெரிய மரத் துண்டுகள் வந்தன என்று ச�ொல்கிறது. பார�ோ ஸ்னெப்ரு-வின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய பிரம்மாண்ட பிரமிட் கட்டுமானத்தின்போது செய்து காட்டினான் பார�ோ கூஃபு. இராட்சத த�ோற்றத்தில் பென்ட் பிரமிட் எழுந்து நின்றுவிட்டிருந்தாலும் பார�ோ ஸ்னெப்ருவின் பிரம்மாண்டத் தாகம் அடங்கியபாடில்லை. இந்த இரண்டு பிரமிடுகளைக் கட்டி முடிப்பதிலேயே அவனுடைய ஆட்சியின் இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தது. தனக்கான மூன்றாவது பிரமிட் ஒன்றையும் கட்டத் திட்டமிட்டான் பார�ோ ஸ்னெப்ரு. கட்டிடக் கலை வல்லுநர்களுக்குப் பகீர் என்றது. எகிப்தியர்கள் அற்பாயுசுக் க�ொண்டவர்களாக இருந்ததால் தாங்களும் பார�ோவும் உயிருடன் இருக்கும்போதே இந்த முன்றாவது பிரமிடையும் கட்டி முடித்துவிட முடியுமா என்கிற பீதியே அவர்களின் பகீருக்குக் காரணம். பார�ோ ஸ்னெப்ரு கட்டிடக் கலை வல்லுநர்களின் இந்தப் பீதியை 56

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கண்டுக�ொண்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய மற்ற இரண்டு பிரமிடுகளுக்குச் செய்த முன் ஏற்பாடுகளைவிடப் பல மடங்கு அதிகமாக அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய மூன்றாவது பிரமிட் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். எகிப்தியப் பார�ோக்களின் வரிசையில் மிக வேகமாகத் தான் உயிருடன் இருக்கும்போதே மூன்று மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளை முப்பதே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஒரே பார�ோ ஸ்னெப்ரு-வாகத்தான் இருப்பான். இவனுடைய ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளில் எகிப்திய பிரமிட் கட்டிடத் த�ொழிலாளர்கள் வருடத்திற்கு 46,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்களைப் பதித்திருக்கிறார்கள். இது இவனுடைய முதல் பிரமிட் கட்டுமானத்தின்போதான வேகம். இவனுடைய இரண்டாவது பிரமிடான பென்ட் பிரமிட் கட்டப்பட்ட அடுத்தப் பத்தாண்டுகளில் வருடத்திற்கு 1,05,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்களைப் பதித்திருக்கிறார்கள். இவன் இனி கட்டவிருக்கும் சிகப்புப் பிரமிட் கட்டப்பட்ட அடுத்தப் பத்தாண்டுகளில் வருடத்திற்கு 2,00,000 கியூபிக் யார்ட்ஸ் என்கிற கணக்கில் பிரமிடில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இவனுடைய இந்த அசூர பிரமிட் கட்டுமான வேகத்தை இவனுக்குப் பிறகும் சரி இவனுக்கு முன்பும் சரி வேறு எந்த ஒரு பார�ோவும் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. தி கிரேட் பிரமிடிற்கு முன்னோடியான ஸ்னெப்ருவின் சிகப்புப் பிரமிட் இவனுடைய ஆட்சியின் முப்பதாம் ஆண்டு முடிவிற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இவனுடைய காலம் வரை எகிப்திய தி லேண்ட் ஆப் டெட் கண்ட மிகப் பெரிய பிரமிட் சிகப்புப் பிரமிட்தான். இதற்குச் சிகப்புப் பிரமிட் என்று பெயர் வர காரணம் இதன் வெளிப்புறம் சிகப்புச் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டதுதான். சிகப்புப் பிரமிடைக் கட்டியதன் மூலம் பார�ோ ஸ்னெப்ரு பிரமிட் கட்டிக் கலையில் 16 அடி பாய்ந்திருந்தான். இவனுக்கு அடுத்த எகிப்தின் பார�ோவானவன் இவனுடைய மகன் கூஃபு.

நவீனா அலெக்சாண்டர்

57

கூஃபு கி.மு. 2545 – 2525 (நான்காவது அரசபரம்பரை, பழைய அரசாட்சி காலகட்டம்)

இவனைச் சிய�ோப்ஸ் என்று வேறு பெயரால் அழைத்தார்கள் கிரேக்கர்கள். வரலாற்றின் தந்தையான ஹிரட�ோடஸ் இவனைச் சிய�ோப்ஸ் என்றுதான் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பார�ோ கூஃபு பிரமிட் கட்டிக் கலையில் தன் தந்தையைவிடப் பல 16 அடிகள் முன்நோக்கி பாய்ந்துவிட்டான். நாம் முன்பே பார்த்தது ப�ோலப் பாரீசில் ஈபிள் டவர் கட்டப்படும் வரை அதாவது ஏறத்தாழ அடுத்த 4500 ஆண்டுகள் இந்த உலகின் மிகப் பெரிய கட்டிடமாக இருந்து வந்தது இவன் தனக்கான கல்லறையாகக் கட்டிய தி கிரேட் பிரமிட். எகிப்திய நாகரீகத்தில் பிரமிட் கட்டுமானம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பிரம்மாண்டத்தையும் உச்சத்தையும் அடைந்தது பார�ோ கூஃபுவின் கீசா பிரமிடில்தான். வாழ்க்கை ஒரு சக்கரம�ோ இல்லைய�ோ ஆனால் வரலாறு என்பது 180 டிகிரிக் க�ொண்ட ஒரு அரைச் சக்கரம். வரலாற்றில் ஒரு கட்டத்தில் உச்சத்திற்குச் செல்லும் எதுவாக இருந்தாலும் அது கீழே சரிய வேண்டும் என்பது புவியீர்ப்பு விசையைப் ப�ோன்று தவிர்க்க முடியாது ஒரு விசயம். அந்தத் தவிர்க்க முடியாத வரலாற்றின் விதியின் படி பார�ோ கூஃபுவின் காலத்தில் உச்சத்திற்குச் சென்ற பிரமிட் கட்டிடக் கலை அதற்குப் பிறகு சரிவைச் சந்தித்து இறுதியில் பார�ோக்கள் பிரமிட் கட்டும் வழக்கத்தையே கைவிடும் தேய் நிலைக்குப் ப�ோய்விட்டது. எகிப்தின் பல விடைக் காண முடியாத மர்மங்களில் ஒன்று இந்தக் கீசா பிரமிடும். இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவு இந்தப் பிரமிட் மனித செயல்பாட்டால் கட்டப்பட்டதல்ல பதிலாக வேற்றுக் கிரக ஏலியன்களால் இந்தப் பூமியில் கட்டப்பட்ட கட்டுமானம் என்று அடித்துக் கூறுகிறார்கள். ஏலியன்கள் இந்தக் கீசா பிரமிட் கட்டுமானத்தை அணு ஆயுத உற்பத்தி சாலையாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டு பிறகு கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டன என்று கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் ச�ொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாறும் த�ொல்லியலும் கற்பூர சத்தியத்தையெல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. மற்றொரு பிரிவு ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள்தான் இந்தப் பிரமிடை கட்டின என்பதில் உடன்பட்டாலும் அணு ஆயுத உற்பத்தி சாலையாக இது பயன்பட்டதே இல்லை அதற்கு மாறாக மின்சார உற்பத்தி மையமாக இது செயல்பட்டது என்று எகிப்திற்குச் சுற்றுலா செல்லும் அனைவரின் தலைமீதும் சாமி சத்தியமா என்று சத்தியம் செய்துக�ொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்லாவின் மின் உற்பத்தி ஆராய்ச்சிகள�ோடு இந்தப் பிரமிடை முடிச்சுப்போட்டு காட்டுகிறார்கள். இதில் விசேசம் என்னவென்றால் இந்த இரண்டு தரப்பினரின் வாதங்களுக்கும் அடிப்படை ஆதாரம் கூடக் கீசா பிரமிடில் இதுவரை கிடைத்தபாடில்லை. ஒரு பிரிவு ச�ொல்வது ப�ோல இது ஏலியன்களின் அணு ஆயுத தயாரிப்புக் கூடமாக இருந்திருந்தால் அணுக் கதிர்வீச்சிற்கான அடையாளங்கள் நிச்சயம் இப்பொழுதும் 58

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இந்தப் பிரமிடில் மிச்சமிருக்க வேண்டும். ஆனால் அப்படியான எத்தகைய அணுக் கதிர் வீச்சுகளுக்கான சிறு கீற்றுக்கூடக் கீசாப் பிரமிடில் இதுவரை கிடைத்தபாடில்லை. அப்படிய�ொன்று இருந்தால்தானே கிடைக்க. மற்றொரு பிரிவு ச�ொல்வது ப�ோல இது மின்சாரத் தயாரிப்புக் கூடமாக இருந்திருந்தால் நிச்சயம் அதற்கான கருவிகளும், குறைந்த பட்சம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைக் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கம்பிப�ோன்ற மிச்ச ச�ொச்சங்களாவது இந்தப் பிரமிடிற்குள் இருந்திருக்க வேண்டும்தானே. ஆனால் இதுவரை அத்தகைய த�ொல்பொருள் ஆதாரங்களும் கூட இந்தப் பிரமிடிலிருந்து கண்டெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இதற்கெல்லாம் மேல் வேறு ஒரு குழப்பத்தை உண்டாக்கும் அதே நேரத்தில் த�ொல்லியல் மற்றும் நிலவியல் ஆதாரங்களின்படி தவிர்க்க முடியாத ஒரு வலுவான ஆதாரம் இருக்கிறது. அதாவது கீசா பிரமிட் இன்றைய நவீன வரலாற்று ஆய்வுகள் ச�ொல்வதுபடி இன்றையிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்புக் கட்டப்பட்டதல்ல அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே அதாவது இன்றையிலிருந்து 8000 ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட ஒரு கட்டிடம் என்று ச�ொல்லும் ஆதாரம். இந்த ஆதாரத்தின்படி பார்த்தால் பார�ோ கூஃபு இந்தப் பிரமிடைக் கட்டியிருக்க வாய்ப்பே இல்லை. மேலும் எகிப்திய பார�ோக்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகில் இருந்த வேறு ஒரு மக்களினம் கீசா பிரமிடை கட்டியிருக்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தும் தவிர்க்க முடியாத ஆதாரம். கீசா பிரமிடிற்கு அந்தப் பெயர் வரக் காரணம் அது எகிப்தின் கீசா பீடபூமியில் இருப்பதால் அதற்கு அந்தப் பீடபூமியின் பெயரையே அடையாளப் பெயராக இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வைத்துவிட்டார்கள். இதைத் தி கிரேட் பிரமிட் என்றும் அடையாளப்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய பிரமிடான இதற்கு அருகில் மேலும் இரண்டு பிரமிடுகள் இருக்கின்றன. இவை இரண்டுமே உருவில் சிறியவை. ஒன்று பார�ோ காப்ரே-க்கு ச�ொந்தமானது மற்றொன்று பார�ோ மென்காரினுடையது. பார�ோ காப்ரே, கூஃபுவின் மகன். பார�ோ மென்கார் கூஃபுவினுடைய பெயரன். கிரேட் பிரமிடின் நிலவியல் மர்மம் முதலில் வெளிவரக் காரணமாக இருந்தது பார�ோ காப்ரேவின் பிரமிட் வளாகத்திலிருக்கும் தி ஸ்பிங்ஸ். உட்கார்ந்திருக்கும் சிங்கம் ப�ோன்ற மிருகத்தின் உடம்பில் மனித முகத்துடன் காட்சியளிக்கும் அந்தச் சிலையை நீங்களும் பார்த்திருக்கக் கூடும். எகிப்திய நாகரீகத்தின் சின்னங்களில் இந்த ஸ்பிங்ஸ் சிலையும் ஒன்று. இது 241 அடிகள் உயரம் க�ொண்டது. கீசா பீட பூமியில் துருத்திக்கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையை ஸ்பிங்ஸாகச் செதுக்கியிருக்கிறார்கள். இன்றைய நிலவியல் ஆராய்ச்சிகள் இந்த ஸ்பிங்ஸ் சிலை சில ஆயிரம் ஆண்டுகள் கடல் நீரில் மூழ்கியிருந்திருப்பதை எத்தகைய சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கின்றன. அந்தச் சிலையைப் பார்க்கும்போதே ஒன்று தெளிவாகத் தெரியும் அது அந்தச் சிலை முழுவதும் வரி வரியாக உப்பு நீர் அரிப்பு ஏற்பட்டதற்கான தடையம். அதே ப�ோல நான்காயிரம் ஆண்டுகள் கழித்துக் கிரேட் பிரமிட் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சிக்கென்று திறக்கப்பட்டப�ோது மிக அதிக அளவில் உப்புப் படிவம் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த உப்புப் படிவம் கடல் நீரால் உண்டாக்கப்பட்டது என்பதும் ஆராய்ச்சிகளின் முடிவு. இந்த உண்மை தற்போது மற்றொரு பிரிவு ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடும் ஸ்பிங்ஸ் சிலையும் எகிப்தியர்கள் கட்டியதாக இருக்க முடியாது அவர்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்களினத்தால் கட்டப்பட்டுப் பிற்பாடு கடல் பெருக்குக் காரணமாகக் கடலுக்குள் மூழ்கியிருந்திருக்கவேண்டும் என்று ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் ச�ொல்லும் வரலாற்று ஆதாரம் அட்லாண்டிஸ் நில அழிவும் பைபிளில் கூறப்படும் ந�ோவா காலத்திய உலக அழிவும். இத்தகைய சர்ச்சைகளும் விளக்கங்களும் ஒரு பக்கம் ப�ோய்க்கொண்டேயிருக்கட்டும் நாம் கிரேட் பிரமிடை நெருங்கி மேலும் அதிகமாகத் தெரிந்துக�ொள்ள முயற்சி நவீனா அலெக்சாண்டர்

59

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

செய்வோம். கிரேட் பிரமிடுடன் எகிப்திய நாகரீகத்தில் பிரமிட்களின் சகாப்தம் முடிவிற்கு வந்துவிடுவதாலும் இதற்குப் பிறகு நாம் பிரமிடுகள் குறித்துப் பார்க்கப் ப�ோவதில்லை என்பதாலும் பிரமிடுகளைக் கட்டியெழுப்பிய த�ொழிலாளர்கள் யார் அவர்கள் எப்படிப் பிரமிடு கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதைக் குறித்து முதலில் தெரிந்துக�ொள்வோம் வாருங்கள்.

குடிமக்களின் வீடுகளும் பார�ோவின் அரண்மனைகளும் எகிப்து என்றாலே அது பார�ோக்களின் நிலம். அங்குக் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணும் இடங்களிலெல்லாம் வரலாற்றுச் சான்றுகளாக நின்றுக�ொண்டிருப்பது பார�ோக்களின் பிரமிடுகளும், கல்லறைக் க�ோயில்களும், கடவுளர்களின் க�ோயில்களும்தான். ஒரு சாதாரண எகிப்திய குடிமகனின் குடிசை வீடு என்கிற அளவில் கூடச் சாமானிய எகிப்தியனின் வரலாற்றுத் த�ொல்லியல் சான்றுகளை எகிப்தில் காண்பது மிகவும் அரிது. காரணம் பார�ோக்களின் எகிப்து என்பது சாதாரண மக்களின் நகரமயமாதல் வளர்ச்சியை அடிப்படையாகக் க�ொண்டது கிடையாது. பார�ோக்களின் பிரம்மாண்ட கட்டுமானங்களையே அடிப்படையாகக் க�ொண்டது. சாமானிய எகிப்திய குடிமகனின் வாழ்வும் உழைப்பும் பார�ோக்களின் கல்லறை க�ோயில்களுடனேயே பின்னப்பட்டிருந்தது. எகிப்திய குடிமகனின் உற்பத்திப் ப�ொருட்கள் அனைத்துமே பார�ோக்களின் கல்லறைக் க�ோயில் ச�ொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கிறது. பார�ோக்களுக்காகத்தான் எகிப்தியக் குடிமகனே தவிரக் குடிமக்களுக்காகப் பார�ோக்கள் இல்லை என்கிற நிலை எகிப்திய நாகரீகத்தின் அரசியல் அடிப்படை. இதன் காரணமாக எகிப்திய குடிமக்களின் நகரமயமாக்கல் என்பதை உலகின் மற்ற நாகரீகங்கள�ோடு ஒப்பிடக் கூட முடியாது. அப்படியே எகிப்தின் நகரமாயக்கல் குறித்துத் தெரிந்துக�ொள்ள வேண்டும் என்றால் அதற்கும் நாம் பார�ோக்களின் உதவியைத்தான் நாடியாக வேண்டும். தங்களுடைய பிரமிடுகளைக் கட்டுவதற்கும் பிற்காலத்தில் அரசர்களின் சமவெளி மற்றும் அரசிகளின் சமவெளி ஆகிய இடங்களில் தங்களுக்கான கல்லறைகளைக் குடைவதற்கும் பணியாட்களை அமர்த்துவதற்கு முன்பாகப் பார�ோக்கள் அந்தப் பணியாட்கள் தங்கி வேலை செய்வதற்கான நகரக் குடியிருப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தகைய நகரக் குடியிருப்புகள் ஒன்றிரண்டு இன்றைக்கும் தப்பிப் பிழைத்திருப்பதன் காரணமாகவே நமக்கு 4500 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்திய சாமானிய மக்களின் சமூக வாழ்க்கை முறைக் குறித்த த�ொல்லியல் மற்றும் வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துவருகின்றன. பார�ோ பணியாட்களின் இத்தகைய நகரங்கள் தப்பிப் பிழைத்திருக்கக் காரணம் இவை பார�ோக்களின் கல்லறை கட்டிடங்களுக்கு அருகிலேயே அதாவது தி லேண்ட் ஆப் டெடிலேயே அமைக்கப்பட்டிருந்ததுதான். எகிப்தின் முக்கிய நகரங்களாக இருந்த மெம்பிஸ், அபைட�ோஸ், தீப்ஸ், எடுபு, ஹெரக்லிய�ோப�ோலிஸ் ப�ோன்றவை முழுக்க முழுக்கப் பார�ோக்களின் நிர்வாகக் குடியிருப்புகளாக இருந்தவை. அதாவது இராணுவ அதிகாரிகளின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் குடியிருப்புகளாகவே இவை இருந்திருக்கின்றன. இந்தப் பெரு நகரங்களில் சாமானிய எகிப்திய குடிமகனுக்கான இடம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விசயம். எகிப்திய சாமானியனின் குடியிருப்பு என்பது நைல் நதியின் இருபக்க கரைய�ோரமும் வளைந்து நெளிந்து செல்லும் விவசாய நிலங்களில்தான். அத்தகைய விவசாய நில குடியிருப்பு கட்டிடங்களையும் கட்டிடப் ப�ொருட்களையும் பல நூறு ஆண்டுகளாக அடுத்தடுத்த வந்த தலைமுறைகள் த�ொடர்ந்து மறு கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தியதால் இன்றைக்கு அத்தகைய குடியிருப்புகளில் ஒன்றும் எஞ்சியில்லாமல் சுத்தமாக அழிந்துவிட்டன. எகிப்தின் முதல் பார�ோவான நார்மர் காலத்திற்கு முன்பிருந்தே எகிப்திய மாகாண 60

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அரசர்களின் கல்லறைகளைக் கட்டுவதில் எகிப்திய குடிமக்களின் உழைப்பு பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் முன்பே பார்த்ததுப�ோல எகிப்தில் விவசாயம் என்பது பருவ மழை சுழற்சியை சார்ந்திருக்காமல் நைல் நதியின் வெள்ளப் பெருக்கை நம்பியிருப்பதாலும், நைல் நதியின் வெள்ளப் பெருக்குக் காரணமாக இரு கரைய�ோரமாக இருக்கும் விவசாய நிலங்களும் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் நீரில் மூழ்கியிருப்பதாலும் எகிப்தின் விவசாயக் குடியானது வருடத்தின் பெரும் பகுதி நாட்கள் வேலையேதும் இல்லாமல் அக்கடா என்றுதான் இருக்கும். நாட்டின் குடி மக்கள் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வேலையேதும் இல்லாமல் இருந்தால் அரசியல் பேசுவார்கள், பேசினால் கலகம் செய்வார்கள், கலகம் செய்தால் அது ஆளும் வர்க்கத்திற்குத் தலைவலி என்பதை ஆளும் வர்க்கம் மிக நன்றாக அறிந்துவைத்திருந்த காரணத்தினாலேயே அரசர்களுக்குக் கல்லறைக் கட்டும் பணியில் எகிப்திய விவசாயக் குடியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்கள் நைல் நீரில் மூழ்கியிருக்கும் காலம் வரை விவசாயிகள் கல்லறைக் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். வெள்ள நீர் வடிந்து நிலம் விவசாயத்திற்குத் தயாரானதும் கல்லறைக் கட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். எகிப்திய பார�ோக்களின் காலத்திற்கு முன்பு வரை விவசாயிகளைக் கல்லறைக் கட்டும் பணியில் ஈடுபடுத்துவது என்பது ஆளும் வர்க்க நிர்பந்தம் மூலம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் எகிப்தில் பார�ோக்களின் சாம்ராஜ்யம் த�ொடங்கிய முதல் நாள் முதல் விவசாயக் குடிமக்கள் த�ொடங்கி எகிப்தின் அனைத்து சாமானிய குடிமக்களும் பார�ோக்களின் மஸ்தபாக்கள் மற்றும் பிரமிடுகள் கட்டும் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார்கள். இதன் மூலம் கடை நிலை எகிப்திய குடிமகன் வரை ஒட்டும�ொத்த மக்களையும் எகிப்தின் பார�ோக்களால் தங்களுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் வைத்துக்கொள்ள முடிந்தது. விவசாயக் குடிகளைத் தவிர்த்து கல்லறைகளைக் கட்டும் த�ொழில் தேர்ச்சிப்பெற்ற ஒரு சமூகமும் எகிப்தில் இருந்தது. ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கைவினைஞர்கள் ப�ோன்றவர்களை உள்ளடக்கிய இந்தச் சமூகத்தை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ராயல் ஒர்க்மென் என்று அழைக்கிறார்கள். இந்தச் சமூகத்திற்கென்று பார�ோக்கள் தனிக் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு பார�ோ மரணத்தின் நிலம் என்று அழைக்கப்படும் எகிப்தின் மேற்குத் திசை பாலைவனத்தில் தனக்கான மஸ்தபாவ�ோ அல்லது பிரமிட�ோ கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ததும் அடுத்துச் செய்யும் முதல் காரியம் அந்த இடத்திற்கு அருகிலேயே ராயல் ஒர்க்மென் சமூகமத்திற்கு ஒரு குடியிருப்பை உண்டாக்குவதுதான். குறிப்பிட்ட பார�ோவின் மஸ்தபாவ�ோ பிரமிட�ோ கட்டி முடிக்கப்பட்டதும் இந்தக் குடியிருப்பு கைவிடப்பட்டுவிடும். இந்தக் குடியிருப்பில் தங்கியிருந்த ராயல் ஒர்க்மென் அடுத்தப் பிரமிட் கட்டும் இடத்திற்குக் குடிபெயர்ந்துப் ப�ோய்விடுவார்கள். இப்படிக் கைவிடப்பட்ட குடியிருப்புகள் எகிப்தின் மேற்கு கரை பாலைவனம் நெடுக்க நூற்றுக் கணக்கில் இருந்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் இன்றைக்கு மூன்று குடியிருப்புகள் மட்டும் த�ொல்லியளாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அவை காவுன் என்கிற இடத்திலும், இரண்டாவது, தீப்சில் புதிய அரசாட்சி காலகட்ட பார�ோக்களின் குடைவரை கல்லறைகளைக் கட்டுவதற்கென்று உண்டாக்கப்பட்ட குடியிருப்பு டையர் எல்-மெதினா என்கிற இடத்திலும், மூன்றாவது குடியிருப்பு டெல் எல்-அமர்னா என்கிற இடத்திலும் கிடைத்திருக்கிறது. இந்த மூன்று குடியிருப்புகளும் பல நூறு ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டிருந்தாலும் இந்தக் குடியிருப்புகளின் அடிப்படை கட்டுமான திட்டத்திலும், உபய�ோகத்திலும் சிறிது கூட மாற்றமில்லாமல் இருக்கின்றன. இந்தக் குடியிருப்புகள் சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர்களுக்குள் இருக்கின்றன. இந்தக் குடியிருப்புகளைக் காவல் காப்பதற்கென்று காவலர் படைகளையும் பார�ோக்கள் ஏற்படுத்தியிருந்தது பப்பைரஸ் எழுத்துக்களின் மூலம் தெரியவருகிறது. நவீனா அலெக்சாண்டர்

61

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பிரமிட் கட்டுமான இடத்திற்கு வேகு அருகிலேயே ராயல் ஒர்க்மென் குடியிருப்புகளைக் கட்டி அதற்குக் காவல் படையும் உண்டாக்க வேண்டிய அவசியம் ஏன்? மேலும் இந்தக் குடியிருப்பில் இருந்த கலைஞர்கள் எகிப்தின் சாதாரணக் குடிமக்களுடன் எத்தகைய உறவும் எந்த வகையிலான த�ொடர்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக வேண்டி அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் மஸ்தபாவின் அல்லது பிரமிடின் உள் அறைகளில் வேலை செய்பவர்கள் இந்தக் கலைஞர்கள். அதாவது ஒரு பிரமிடின் உள் அறைகளின் வரை படத் தகவல் தெரிந்தவர்கள் இவர்கள். தாங்கள் வேலை செய்யும் பிரமிடிற்குள் எத்தனை அறைகள் இருக்கின்றன, எந்த அறையில் பார�ோவின் சர்கபேகஸ் வைக்கப்படும், எந்த அறையில் விலை மதிக்க முடியாத ப�ொருட்கள் வைக்கப்படும், எந்த அறைகள் ப�ோலி அறைகள், எந்த இடத்தில் கல்லறை திருடர்களைக் க�ொல்லும் பாறை கண்ணிவைக்கப்படும், பிரமிடிற்கு எத்தனை வாசல்கள் என்பது ப�ோன்ற அனைத்து இரகசியங்களும் தெரிந்தவர்கள் இந்த ராயல் ஒர்க்மென். எகிப்தின் விவசாயக் குடிகளும் மற்ற சாதாரணக் குடிகளும் பிரமிடின் வெளிக்கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ப�ோது இவர்கள் பிரமிடின் உள்ளே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். இரண்டு த�ொழிலாளர்களும் எந்த விதத்திலும் சந்தித்துக்கொள்ள முடியாதபடி கடும் காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சில பிரமிடுகளில் வெளிக் கட்டுமானப் பணிகள் முழுதாக முடிந்து சாதாரணக் குடிமக்கள் வெளியேற்றப்பட்ட பிறகே பிரமிடின் உள் அறைகளில் ராயல் ஒர்க்மென்களைக் க�ொண்டு வேலைகள் த�ொடங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் ராயல் ஒர்க்மென் கலைஞர்களில் சிலர் உள்ளூர் சந்தையில் திருட்டு நகைகளை வாங்கும் வியாபாரிகளுடனும், கல்லறைத் திருடர்களுடனும் த�ொடர்பிலிருந்து தண்டிக்கப்பட்டதற்கான எழுத்து ஆதாரங்கள் ஏகப்பட்டது இருக்கின்றன. சில நிகழ்வுகளில் இவர்களில் சிலரே கல்லறைத் திருடர்களாகவும், கல்லறைத் திருடர்களுடன் கூட்டுச் சேர்ந்துக�ொண்டு பிரமிடுகளின் தங்கங்களைச் சூறையாடியதற்கான எழுத்து ஆதாரங்களும் இருக்கின்றன. கல்லறைத் திருட்டு ஒருபுறம் இருக்கட்டும். நாம் ராயல் ஒர்க்மென்களுக்கான வீடுகளின் அமைப்புக் குறித்துத் தெரிந்துக�ொள்வோம். இந்த வீடுகளின் அமைப்பே, இன்றையிலிருந்து 5000 வருடங்களுக்கு முந்தைய சாதாரண எகிப்திய குடிமக்களின் வீடுகளும் அவர்களுடைய அன்றாட வாழ்வும் எப்படி இருந்திருக்கும் என்பதை நமக்குக் காலக் கண்ணாடி ப�ோலக் காட்டக் கூடியது. நாம் நடந்துக�ொண்டிருப்பது பிரமிடுகள் சூழ்ந்த சுட்டெரிக்கும் பாலைவனம் என்பதால் தலையில் குல்லாய் ப�ோல் எதையாவது கவிழ்த்துக்கொள்ளுங்கள். நாம் இப்பொழுது நுழைந்துக�ொண்டிருப்பது காவுன் நகருக்குள். அதாவது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு ராயல் ஒர்க்மென் கூலியாட்களுக்கு என்று பிரமிட் கட்டுமான பாலைவனப் பகுதியிலேயே கட்டப்பட்ட பல குடியிருப்புகளில் இன்றைக்கும் முழுதும் அழியாமல் கிடைத்திருக்கும் வீடுகளின் த�ொகுதிக்குத்தான் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் காவின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதையாவது வைத்துவிட்டுப் ப�ோகட்டும் நாம் வந்த காரியத்தைக் கவனிப்போம். பார்த்தீர்களா இந்தக் குடியிருப்பு வீடுகள் தீப்பெட்டிகளை வரிசையாக அடுக்கிவைத்ததைப்போல ஒரே சீராகத் தெற்கு த�ொடங்கி வடக்குப் பக்கம் வரை நீண்டிருக்கிறது. ஆம் இந்தக் குடியிருப்பில் இருக்கும் சில வீடுகள் சுட்ட செங்களில் கட்டப்படப்பட்டுக் களி மண்ணால் சுவர்கள் பூசப்பட்டு வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்ணைக் கவரும் வண்ணக் கலவையால் பூசப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அறைகள் இருக்கின்றன. ஒன்று வரவேற்பு மற்றும் தினப்படி புழங்கும் அறை. அடுத்தது சமையலறைய�ோடு சேர்ந்த சாப்பிடும் அறை. அடுத்தது பெண்கள் புழங்கும் அறை. இவற்றைக் கடந்து குளியல் மற்றும் கழிப்பறை இருக்கிறது. அனைத்தும் தளம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகளாக இருக்கின்றன. வீட்டின் ம�ொட்டை மாடிக்குச் 62

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

செல்ல வீடுகளுக்குள்ளேயே மாடிப்படிகளும் இருக்கின்றன. நம் ஊர் கிராமப் புற வீடுகளில் குதிர்என்று ஒன்று இருக்குமே அதே ப�ோல இந்தக் குடியிருப்பு வீடுகளிலும் வட்ட வடிவில் தானியங்களைச் சேகரித்து வைக்கும் குதிர்களும் இருக்கின்றன. ப�ொதுவாக வீடுகளின் நுழை வாயிலுக்கு அருகில் இருக்கும் அறையில் கற்களால் கட்டப்பட்ட கட்டில் ப�ோன்ற இருக்கை இருந்திருக்கிறது. இது அனேகமாக நம் கிராமப் புறங்களில் இருக்கும் திண்ணையும் அதில் இருக்கும் இருக்கையும் ப�ோன்றது. வீட்டின் சுவர்களில் மாடங்கள் இருந்திருக்கின்றன. வீட்டின் உள்ளே இருக்கும் பெரிய அறையில் இரண்டிற்கு மேற்பட்ட தூண்கள் வீட்டின் மேற் கூறை தளத்தைத் தாங்கியபடி இருந்திருக்கிறது. மேற் கூறை தளமானது மரப் பலகைகளால் சாரம்போல் வைக்கப்பட்டு அதன் நடுவே வைக்கோலும் காரையும் கலந்த கலவையால் நிரப்பப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. வசதிப் படைத்த குடியானவனின் வீட்டுத் தளம் கருங்கல் பலகையால் கட்டப்பட்டிருக்கிறது. சில வீடுகளில் இந்தப் பெரிய அறையின் நடுவே இறந்த குழந்தைகளைப் புதைத்ததற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதேப் ப�ோன்று மற்ற பல இடங்களில் நடந்த த�ொல்லியல் ஆராய்ச்சியின்போதும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நமக்கு நிச்சயமாகத் தெரிய வருவது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியர்கள் இறந்த குழந்தைகளை வீட்டின் உள்ளே புதைக்கும் பழக்கத்தைக் க�ொண்டிருந்தவர்கள் என்பது. நம் தமிழரிடையேயும் வயதிற்கு வந்த இறந்த பெண்களை வீட்டின் உள்ளே புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சமையலறை என்பது ப�ொதுவாக வீட்டின் பின் புறத்திலிருந்திருக்கிறது. சமையலறையில் இரண்டு பகுதிகள் இருந்திருக்கிறது. அடுப்பு இருக்கும் பகுதி மேற் கூறை இல்லாமல் திறந்த வானத்தைப் பார்த்தபடி இருந்திருக்கிறது. இந்த மேற் கூறையற்ற சமையலறையிலேயே தானியங்களை மாவாக்கும் கல்லால் ஆன அறவை இயந்திரங்களும் இருந்திருக்கிறது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எகிப்தியர்கள் ப�ொதுவாகத் தங்களுடைய வீடுகளுக்கு நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள். நீலமும் மஞ்சள் வண்ணமும் எகிப்தியர்களுக்குப் பிடித்த வண்ணமாக இருந்திருக்கிறது. அனேகமாகப் பார�ோக்களின் அரண்மனைகளும் பெரும்பாலும் இந்த இரண்டு வண்ணங்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்திருக்கவேண்டும். மர சாமான்களைப் ப�ொருத்த வரையில் இன்றைக்கு நாம் உபய�ோகப்படுத்தும் நாற்காலி, மேசை, கட்டில், நகை ப�ோன்ற ப�ொருட்களை வைக்கும் பெட்டிகள் என்று அனைத்தையும் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய எகிப்தியர்களும் உபய�ோகித்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கும் வடிவங்களில் அல்ல. மிகவும் கலை நயம் மிக்க வடிவங்களில். கழிவறைகளைப் ப�ொருத்த வரையில் அவையும் ஏறக்குறைய இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கழிவறைகளைப் ப�ோலவே இருந்திருக்கின்றன. குளியல் அறைய�ோடு சேர்ந்த கழிவறைகளைத்தான் எகிப்தியர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சாலைகளுக்குக் க�ொண்டு சென்று அங்கிருந்து பாலைவனங்களுக்குக் க�ொண்டு செல்லும் வடிகால் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். மழைக் காலத்தில் வீட்டின் தளத்தில் விழும் நீரையும் இதே வடிகால்கள் வழியே வெளியேற்றும் அமைப்பும் இருந்திருக்கிறது. இன்றைக்கு இருக்கும் பிளாஸ்டிக் பைப்புகள் ப�ோன்று உருண்டையான பைப்புகளைக் களிமண்ணில் செய்து பிறகு நெருப்பில் சுட்டு கெட்டியாக்கி அவற்றைக் கழிவு நீரையும் மழை நீரையும் கால்வாய்களில் க�ொண்டு சேர்க்க பயன்படுத்தியிருக்கிறார்கள். களி மண் பைப்புகள் இரண்டு முனைகளிலும் அரை இஞ்சு சுற்றளவு குறைவாக இருக்கிறது. இன்றைக்கு நாம் உபய�ோகிக்கும் கனக்டெர்களைப் ப�ோன்றே களி மண் பைப்புகளை இணைக்கக் கனெக்டர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கனெக்டர்களைப் ப�ொருத்தவே களி மண் பைப்புகளின் இரண்டு முனையும் அரை இஞ்சு குறைவாகச் செய்யப்பட்டிருக்கிறது. வீடுகளின் தரைகள் நன்றாகப் பூசி மெழுகப்பட்டிருக்கின்றன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் ப�ோன்ற அமைப்புகளின் மூலம் பாலைவனத்தின் ஒரு பகுதியிலேயே நவீனா அலெக்சாண்டர்

63

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

சுட்டெரிக்கும் வெயிலில் ஆவியாகும்படி விடப்பட்டிருக்கிறது. இந்தக் குடியிருப்பு வீடுகளைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் சுற்றுச் சுவர் இருக்கிறது. இந்தச் சுற்றுச் சுவரும் சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. சில வீடுகள் மாத்திரம் சுட்ட செங்கற்களால் அல்லாமல் அருகிலிருக்கும் மலைகளில் இருந்து க�ொண்டுவரப்பட்ட கற்களின் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இப்படிக் கட்டப்படக் காரணம் சுட்டச் செங்கற்கள் இந்தக் குடியிருப்புகள் கட்டப்படும் காலத்தில் ப�ோதுமான அளவில் அதே நேரத்தில் தேவைப்பட்ட நேரத்தில் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள். எது எப்படிய�ோ இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் ஒரே அமைப்பைக் க�ொண்டவையாக இருக்கின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு மத்தியில் அக்ரோப�ோலிஸ் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் சில வீடுகளும் இருக்கின்றன. இவை ராயல் ஒர்க்மென் கூலியாட்களைக் கண்காணித்த அதிகாரிகளின் வீடுகள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த அக்ரோப�ோலிஸ் வீடுகள் மற்ற குடியிருப்பு வீடுகளை விடத் தரைதளத்திலிருந்து சற்று உயரமாக இருக்கிறது. இந்த வீடுகளிலிருந்து சற்றுத் தாழ்வாகச் சுற்றியிருக்கும் குடியிருப்பு வீடுகளை நன்றாகக் கவனிக்க முடிவதை நீங்களும் பார்த்தீர்கள்தானே. அக்ரோப�ோலிஸ் வீடுகளுக்கு மத்தியில் ஒரு மிகப் பெரிய வீடு இருக்கிறது பாருங்கள். அதுதான் தலைமை அதிகாரியின் வீடாக இருந்திருக்கும். வாருங்கள் அந்த வீட்டிற்குள் செல்வோம். என்ன என்ன ச�ொல்கிறீர்கள் இது வீடு ப�ோல இல்லை அரண்மனை ப�ோல இருக்கிறதே என்றா! இருக்கலாம் காரணம் தன்னுடைய பிரமிட் கட்டப்பட்டுக் க�ொண்டிருக்கும் நிகழ்வைக் காண வரும் பார�ோ பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலிலா காய்ந்துக�ொண்டு தன்னுடைய பிரமிட் கட்டப்படும் நிகழ்வைப் பார்ப்பார். சாதாரணக் குடிமக்கள் மண்டையைத் திறக்கும் வெயிலில் பார�ோவுக்கான பிரமிடைக் கட்டுவது அவர்களின் தலைவிதி பார�ோவுக்கும் அந்தத் தலைவிதிப் ப�ொருந்துமா என்ன! சனநாயகத்தில் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் ச�ொகுசு வாழ்வில் திளைக்கும்போது வரிக் கட்டி ஓட்டாண்டியாகும் சனநாயகத்தின் தூண்களான சாதாரணக் குடிமகன் நாயாய் பேயாய் சீரழிவதைப்போலத்தான் 5000 வருடங்களுக்கு முந்தைய சாதாரண எகிப்திய குடிமகனும். இன்றைக்கும் அன்றைக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் பார�ோக்களுடையது மன்னராட்சி நம்முடையது சனநாயக ஆட்சி. பெயர் வித்தியாசம் மாத்திரமே மற்றபடி வேறு ஒன்றும் கிடையாது. இந்த அரண்மனை ப�ோன்ற வீட்டின் முகப்பிலேயே ஒரு அறையைப் பார்த்தீர்கள் அல்லவா அது வாயில் காப்போரின் அறை. அந்த அறையைத் தாண்டினால் அத�ோ தெரிகிறது பாருங்கள் மிகப் பெரிய கதவு அதைத் திறந்துக�ொண்டுதான் இந்த அரண்மனைக்குள் செல்லவேண்டும். இந்தக் கதவை நான் ஒருவன் மாத்திரம் திறந்துவிட முடியாது வாருங்கள் நாம் அனைவரும் ஒரு கைப�ோட்டு தள்ளித் திறப்போம். இம் அப்படித்தான் பாத்து மேலே மணல் தூசிகள் விழும்தான். பின்ன நட்ட நடுப் பாலைவனத்தில் 5000 வருடப் பழமையான ஒரு அரண்மனையின் கதவைத் திறந்தால் பிறகு வேறு என்ன விழும். இப்பொழுதே ச�ொல்லிவிடுகிறேன். இந்தக் கதவைத் திறந்துவுடன் ஒரு நீண்ட குறுகலான பாதை வரும் அதன் வழியேதான் மற்ற அறைகளுக்குப் ப�ோக முடியும். அப்பாடா கதவைத் திறந்துவிட்டோம். வாருங்கள் உள்ளே ப�ோகலாம். முதலில் வரும் இந்த அறைகள் எல்லாம் அரண்மனை வேலையாட்கள் தங்கும் அறைகள். அத�ோ தெரிகிறது பாருங்கள் பெரிய பெரிய தூண்கள் தாங்கிய அறைகள் அவை எல்லாம் இந்த அரண்மனை ச�ொந்தக்காரரின் தனிப்பட்ட அறைகள். இந்த அறைகளில் ஒன்றில்தான் இந்த அரண்மனைக்குச் ச�ொந்தக்காரர் தன்னுடைய தினப்படி அலுவல்களைப் பார்த்திருக்கிறார். சரி வாங்க அப்படியே ப�ொடி நடையா நடந்து அடுத்தப் பகுதிக்குப் ப�ோகலாம். பார்த்தீர்களா நம்மூர் கிராமப் புறங்களில் உள் முற்றம் வைத்துக் கட்டியிருப்பார்களே அதே ப�ோன்ற உள் முற்றம் க�ொண்ட அமைப்பு இங்கேயும் 64

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இருக்கிறது. இதற்கு எதிர்த் திசையில் அங்கே இருக்கிறது பாருங்கள் வரிசையாகத் தூண்கள் க�ொண்ட ஒரு அறை அதுதான் இந்த அரண்மனைக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று அவர்களை மகிழ்விக்கும் பகுதி. ஒன்று ச�ொல்லட்டுமா இந்த அரண்மனை முழுவதும் இருக்கும் தூண்களின் வடிவமைப்புதான் கிரேக்க கட்டிடக் கலையின் மூலாதாரம். இந்த வரவேற்பு அறையை அடைவதற்கு மற்றொரு வாயிலும் உண்டு. நாம் முன்புக் கதவைத் திறந்துக�ொண்டு உள்ளே வந்தோமே அதற்குப் பக்கவாட்டில் இருக்கிறது அந்த வாயில். அதற்கு வாயில் கதவு கிடையாது. தெருவிலிருந்து இந்த அரண்மனைக்குச் ச�ொந்தக்காரரைப் பார்க்க வரும் நபர்கள் நேரடியாக அந்த வாயில் வழியாக இந்த வரவேற்பறைக்குள் வர முடியும். அப்படித்தான் வந்திருக்கிறார்கள். நாம் வந்த வாயில் இந்த அரண்மனையின் உரிமையாளர் பயன்படுத்திய வாயில். இந்த வரவேற்பு அறையைச் சுற்றி பல்வேறு அறைகள் இருக்கிறதுதானே. இவை அனைத்தும் தனிப்பட்ட புழக்கத்திற்கானது. இதில் அரண்மனைக்கு உரிமையாளரின் தனிப்பட்ட அறையும் இருக்கிறது. அப்படியே அண்ணாந்து பார்த்தபடியே என்னுடன் வாருங்கள் அந்த அறைக்குள் ப�ோகலாம். பார்த்துப் பார்த்து மேலே பார்த்தபடியே வருகிறேன் என்று கீழே நடு அறையில் இருக்கும் நீர்த் த�ொட்டியில் காலை இடறிக்கொள்ளப் ப�ோகிறீர்கள். இந்த நீர்த் த�ொட்டியில் நீர் நிரப்பப்பட்டு இருந்திருக்கவேண்டும் என்று ஆராய்ச்சிகள் ச�ொல்கின்றன. இந்த நீர்த் த�ொட்டி கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நீர்த் த�ொட்டி இருக்கும் இடத்திற்கு மேல் தளம் கிடையாது. திறந்த வானத்தைப் பார்க்கிறீர்கள்தானே. இன்றைய எகிப்திய த�ொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த அரண்மனையில் இருந்தவர்கள் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள இந்த நீர்த்தொட்டியைப் பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். நம்மூர் பகுதிகளில் இருக்கும் உள் முற்றத்தில் இருக்கும் நீர்த் த�ொட்டிக் ப�ோலவே இதுவும் இருக்கிறது. பன்னிரண்டு தூண்கள் தாங்கிய அறைகளுக்கு நடுவில் வானம் பார்த்து இந்த நீர்த்தொட்டி இருக்கிறது. இறை வழிபாட்டுச் சடங்குகளின் ப�ோது இந்த அரண்மனையில் இருந்தவர்கள் தங்களைச் சுத்த படுத்திக்கொள்வதற்காக இந்தத் த�ொட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நீர்த் த�ொட்டிகள் சாதாரணக் குடியானவனின் வீடுகளிலும் உண்டு. எகிப்தியர்கள் அனைவரும் மதச் சடங்குகளின் ப�ோது தங்களைச் சுத்திப்படுத்திக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். இந்தத் த�ொட்டி இருக்கும் அறைதான் அவர்களின் குளியல் அறையா என்கிற சந்தேகம் உங்களுக்கு வருகிறதுதானே. அப்படியில்லை குளியல் அறை என்று ஒன்று தனியாக இருக்கிறது. இந்த நீர்த் த�ொட்டி கால்களையும் கைகளையும் சுத்தப் படுத்திக்கொள்வதற்காக இருக்கலாம். சரி த�ொட்டியை சுற்றிக்கொண்டு ப�ோகலாம் வாருங்கள். அத�ோ தெரிகிறது பாருங்கள் அடுத்தப் பெரிய கதவு அந்தக் கதவைத் திறந்தால் என்ன வரும் தெரியுமா. பெண்கள் அப்படி ஒதுங்கிக்கொள்ளுங்கள் ஆண்கள் மட்டும் இப்படி என்னிடம் காதைக் க�ொடுங்கள். அது அதுதாங்க அது…..அட அந்தப்புரமுங்கோ. அட உங்கள் முகங்களில்தான் எவ்வளவு பிரகாசம். இப்பொழுதும் அந்த அந்தப்புரத்திற்குள் எகிப்திய பேரழகிகளைப் பார்க்கலாமா என்றெல்லாம் குசும்புப் பண்ணக் கூடாது. வேண்டுமானால் 5000 வருடங்களுக்கு முன்பு இந்த அந்தப்புரத்திலிருந்த பேரழகிகளின் ஆவிகள் சுற்றித் திரியலாம். ம�ோகினிப் பிசாசு பயம்கொண்ட ஆண்கள் என்னுடன் மேற்கொண்டு வரவேண்டாம். பெண்கள் எத்தகைய தயக்கமும் இன்றி என்னுடன் மேற்கொண்டு வரலாம் உங்களைப் பார்த்து ம�ோகினிகள் பயந்து ஓடாமல் இருந்தால் சரி(பெண்ணியவாதிகள் மன்னிக்கவும் இது சும்மா உலுலாய்க்கு!). அந்தப்புரத்தைத் தாண்டினால் வருவது தானியங்களையும் உணவுப் ப�ொருட்களையும் சேமித்துவைக்கும் அறைகள். இந்த அறைகளையும் தாண்டினால் அரண்மனையின் பின்புறத் த�ோட்டம் வந்துவிடும். நாம் இப்போது பார்த்துக்கொண்டிருப்பது பிரமிட் நவீனா அலெக்சாண்டர்

65

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கட்டும் பகுதியில் இருக்கும் அரண்மனை ப�ோன்ற ஒரு கட்டிடம் என்றாலும் ப�ொதுவாகப் பார�ோக்களின் அரண்மனைகளும் இதே அமைப்பில்தான் இருந்திருக்கின்றன. ஆனால் அளவில் சற்றுப் பெரிதாக. அதே வேலையில் சாதாரண எகிப்தியக் குடிமக்களின் வீடுகள் ராயல் ஒர்க்மென் குடியிருப்புகளைப் ப�ோலிருந்திருக்கின்றன. அப்பாடா. ஒரேயடியாக எவ்வளவு தூரம் சுற்றிவிட்டோம். வாருங்கள் அப்படிக் க�ொஞ்சம் உட்கார்ந்துக�ொள்வோம். உங்களுக்கு ஏதும் தேநீர் தயாரிக்கட்டுமா. என்ன கேள்வி இது செய்யேன் என்றுதானே மனதிற்குள் பேசிக்கொள்கிறீர்கள். இத�ோ ஆகிவிடும் உங்களுக்கான தேநீர். பார�ோக்களின் பிரமிடுகளைக் கட்டும் த�ொழிலாளர்களின் குடியிருப்புகளின் வழியே நாம் அன்றைய சாதாரண எகிப்தியர்களின் வீடுகளையும் பார�ோக்களின் அரண்மனைகளையும் குறித்துத் தெரிந்துக�ொண்டோம். இந்த வீடுகளிலும் அரண்மனைகளிலும் அவர்கள் எப்படிப் புழங்கி வாழ்ந்திருப்பார்கள் என்பதை நாம் தான் மனக்கண்ணில் கற்பனை செய்துக�ொள்ளவேண்டும். நீங்கள் கற்பனை செய்துக�ொண்டே இருக்கும் இடைவெளியில் நான் தேநீர் தயாரித்துவிடுவேன். பிறகு நாம் கீசா பிரமிடிற்குச் செல்வோம். அதற்கு நாம் இந்தப் பாலைவனத்திலேயே வடந�ோக்கி பயணம் செய்யவேண்டும்.

கீசாவின் ஆச்சரியப் பிரமிட் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனம். கீழ் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து நிற்கும் பாதி இடிந்த பிரமிடுகள் மற்றும் மஸ்டபாஸ்கள். தலைக்கு மேலே நீல வனத்தில் மேகங்கள் அற்ற வானம். கையில் ஆவிப் பறக்கும் தேநீர் அருமையான சூழ்நிலை அப்படித்தானே! ப�ொறுமையாகத் தேநீரை அருந்துங்கள். நாம் தேநீர் அருந்தும் நேரத்தில் வரலாற்றின் தந்தையான ஹீரட�ோடஸ் கீசா பிரமிட் குறித்துச் ச�ொன்ன விசயங்களைச் ச�ொல்லிவிடுகிறேன். பிறகு நாம் கீசா பிரமிட் பயணத்தைத் த�ொடங்குவ�ோம். இவருடைய சிறப்பு என்னவென்றால் தான் நேரில் பார்த்து அறிந்த விசயங்களையே தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். தான் கேட்கும் அனைத்து விசயங்களையும் அப்படியே நம்பிவிடாமல் ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு வேண்டிய நடுநிலையுடனும் ஆராய்ச்சியுடனுமே தான் பார்த்த கேட்ட விசயங்களை எழுதியிருக்கிறார். இதனாலேயே இவரை வரலாற்றின் தந்தை என்று சிறப்பிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்தான் இப்படி வரலாற்றை எழுதிய முதல் நபரா என்பதெல்லாம் வேறு விசயம். இவர் எகிப்திற்கு நேரடியாகப் பயணம் செய்திருக்கிறார். அவர் எகிப்தில் கண்ணால் கண்ட விசயங்களையே தன்னுடைய புத்தகத்திலும் பதிவு செய்கிறார். கீசா பிரமிட் கட்டப்பட்டுச் சுமார் 2000 ஆண்டுகள் கழித்தே இவருடைய எகிப்து பயணம் நிகழ்கிறது அதாவது கி.மு. 440 வாக்கில். இவர் கீசாப் பிரமிடைப் பார்த்த காலங்களில் அது முழுமையாக மணலுக்குள் புதையுறாமல் இருந்திருக்கிறது. ஹீரட�ோடஸ் கீசா பிரமிடைப் பார்த்து வாய் பிளப்பதை அவருடைய எழுத்துக்களிலேயே படிக்க முடியும். இவர் பார்த்த காலங்களில் கீசாப் பிரமிட் பளபளவென்று மின்னிக் க�ொண்டிருந்திருக்கிறது. இதற்குக் காரணம் கீசா பிரமிடின் வெளிப்புறத்தில் அதாவது அதன் மேல் பரப்பில் பூசப்பட்டிருந்த மஞ்சள் நிற சுண்ணாம்பு கலவை. இன்றைக்கு அது கீசா பிரமிடின் உச்சியில் மட்டுமே சிறிதாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. பெரும் பகுதி உதிர்ந்துவிட்டது. ஹீரட�ோடஸ் இந்தப் பிரமிடின் பிரம்மாண்டம் குறித்து ஆத்து ஆத்து ப�ோகிறார். பின்னே பூமியில் அது ப�ோன்ற ஒரு கட்டிட அற்புதத்தை எந்த மானிடனும் கண்டும் கேட்டிருக்கவுமில்லையே. ஹீரட�ோடஸ் கீசா பிரமிடைப் பார்த்து அசந்துப்போனாலும் அவருடைய வரலாற்றுத் தேடல் அவரை அப்படியே அசந்துப் ப�ோகும்படியே விட்டிருக்கவில்லை. இந்தப் பிரமிட் குறித்த வரலாற்றுத் தகவல்களை அவர் பலரிடமும் கேட்டுத் தேடி அலைந்திருக்கிறார். அப்படி அவர் எகிப்து முழுவதும் தேடி அலைந்து 66

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

பெற்ற விசயங்களை நான் இப்போது உங்களுக்குச் ச�ொல்கிறேன். பெரும் பாலும் இந்தத் தகவல்களை அவர் எகிப்திய க�ோயில் பூசாரிகளிடமிருந்துதான் பெற்றிருக்கிறார். க�ோயில் பூசாரிகளும் எகிப்திய க�ோயில்களுமே பல ஆயிரம் வருடத்திய எகிப்திய பப்பைரஸ் சுருள் ஆவணங்களின் பாதுகாவலர்கள் என்பதால் ஹீரட�ோடஸ் அவர்கள் ச�ொல்லிய விசயங்களை வரலாறு என்கிற க�ோணத்தில் நம்பி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அவருக்கு எகிப்திய க�ோயில் பூசாரிகள் ச�ொல்லிய தகவல்களின்படி கீசா பிரமிடைக் கட்ட பார�ோ கூஃபு ஒட்டும�ொத்த எகிப்தின் ப�ொருளாதாரத்தையே சுரண்டியிருக்கிறார். அப்படிச் சுரண்டியும் ப�ோதாமல் அரச கருவூலம் திவாலாகிவிட்டது. பார�ோவிற்கு அடுத்த நிலையில் இருந்த விசர் ப�ொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் மஞ்சக் கடுதாசிக் க�ொடுத்துவிட்டிருக்கிறார். கருவூலமே காலி என்றால் பிறகு கூஃபு எங்கே ப�ோவது. தன்னுடைய மகளையே இதற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் பார�ோ கூஃபு. அதாவது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி. இதைக் கேட்க உங்களுக்கே ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும்தானே இருக்கிறது. ஹீரட�ோடசுக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. அவர் ஒன்றுக்குப் பல முறை இது குறித்து எகிப்தில் ப�ோகும் இடமெல்லாம் கேட்டிருக்கிறார். எகிப்தின் மூலை முடுக்குகளில் இருந்தவர்களும் இதே தகவலைத்தான் அவருக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது குறித்து எத்தகைய பப்பைரஸ் எழுத்து ஆவணத்தையும் ஹீரட�ோடஸ் தன் கண்களால் பார்க்காததால் இந்தத் தகவலை ஒரு சந்தேகத்துடனையே தன்னுடைய புத்தகத்தில் எழுதிச் செல்கிறார். பார�ோ கூஃபு தனக்கான கீசா பிரமிடை கட்டுவதற்காகப் பெரும் செல்வந்தர்களிடமும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகர்களிடமும் ப�ொருள் திரட்டுவதற்காகத் தன்னுடைய மகளை உள்ளூர் மது பானக் கடைகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருந்ததாக அன்றைய எகிப்திய செவி வழி செய்தி ச�ொல்கிறது. எகிப்திய இளவரசியிடம் சல்லாபிக்க அன்றாடம் காய்ச்சியா ப�ோய் வர முடியும். பெரும் செல்வந்தர்களாலும் வணிகர்களாலும்தானே முடியும்! இது எவ்வளவிற்கு வரலாற்று உண்மை என்பது கேள்விக்குறியே காரணம் இந்தச் செய்தியை நிரூபிக்கும் எத்தகைய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை. அதே ப�ோலத் தன்னுடைய மிகப் மிகப் பெரிய கீசா பிரமிடைக் கட்டுவதற்காகக் கூஃபு எகிப்திய குடிமக்கள் அனைவரின் முதுகெலும்பையும் உடைக்கும் அளவிற்கு வேலை வாங்கியதாகவும், மிகவும் க�ொடுமையாகவும் கடுமையாகவும் நடந்துக�ொண்டதாகவும் செவி வழி செய்திகள் ச�ொல்கின்றன. இந்தப் பிரமிடை முழுமையாகக் கட்டி முடிக்க 15-20 வருடங்கள் பிடித்திருக்கிறது. கூஃபு தனக்கான இந்தக் கீசா பிரமிடை தன்னுடைய அரசவையின் தலைமை மந்திரவாதியான செடி வகுத்துக் க�ொடுத்த திட்டத்தின்படியே கட்டியதாகவும் ச�ொல்லப்படுகிறது. இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்து கீசா பிரமிட் கட்டப்பட்டிருந்தாலும் கடைசி வரை பார�ோ கூஃபுவின் மம்மி இந்தப் பிரமிடில் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் இந்தப் பிரமிட் முதன் முதலாகத் திறக்கப்பட்ட ப�ோது அதற்குள் எத்தகைய மம்மியையும் யாரும் பார்த்திருக்கவில்லை. நல்லது தேநீர் க�ோப்பைகளை அப்படியே வைத்துவிடுங்கள். நாம் அந்த மிகப் பிரம்மாண்டமான எகிப்திய நாகரீகத்தின் முகங்களில் ஒன்றாகிப்போய்விட்ட கீசா பிரமிடை ந�ோக்கிப் ப�ோகலாம். அத�ோ அங்கே தெரிகிறது பாருங்கள் மலை ப�ோல் அதுதான் அதேதான் கீசா பிரமிட். வாய் பிளந்தது ப�ோதும் வாருங்கள் அருகே செல்வோம். இந்தப் பிரமிட் கட்டிடத்தின் ம�ொத்த நிலப்பரப்பு 13 ஏக்கர்கள். அதாவது 8 கால்பந்து விளையாட்டு மைதானங்களை இதற்குள் வைத்து அடக்கிவிடலாம். இந்தப் பிரமிட் ஒட்டும�ொத்தமாக 2.5 க�ோடி கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் 2.5 டன் எடைக்கொண்டவைகள். சில கற்கள் 5 டன் எடைக்கும் அதிகமானவை. நிலத்திலிருந்து இந்தப் பிரமிடின் ம�ொத்த உயரம் 480.6 அடி. இத்தகைய உயரத்திற்கு இரண்டரை மற்றும் ஐந்து டன் எடைக்கொண்ட கற்களை எப்படிக் க�ொண்டுப�ோயிருப்பார்கள் என்பது இன்றைய நவீன காலப் ப�ொறியியலாளர்களும் வியக்கும் விசயம். இத�ோடு மாத்திரம் நின்றுவிடவில்லை இன்றைய ப�ொறியியலாளர்கள் நவீனா அலெக்சாண்டர்

67

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இந்தப் பிரமிட் குறித்து வாய் பிளக்கும் விசயம், இந்தப் பிரமிடின் மிகத் துள்ளிய அளவீடுகளும் இன்றைய நவீன உலகக் கட்டுமான விற்பன்னர்களைத் தலை சுற்ற விடுகிறது. இன்றைய அதி நவீன த�ொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு கூட நம்மால் கீசா பிரமிட் அளவிற்கு மிகத் துல்லியமான அளவீடுகள் க�ொண்ட ஒரு குடிசையைக் கூடக் கட்ட முடியவில்லை. இன்றைய அதி நவீன கட்டுமான த�ொழில் நுட்பங்கள் கையேந்தி நிற்கும் பல கட்டுமான த�ொழில் நுட்ப அற்புதங்கள் இந்தக் கீசாப் பிரமிடில் இருக்கிறது. இதன் நான்கு பக்க அடித்தள முனைகளும் பால்-அண்ட-சாக்கெட் கார்னர் ஸ்டோன் த�ொழில் நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய த�ொழில் நுட்பம் எத்தகைய இயற்கை பேரிடருக்கும் தாக்குப்பிடித்து நிற்கக் கூடியது. அதனால்தான் கடந்த 4500 வருடங்களாகக் கீசா பிரமிடும் நின்றுக�ொண்டிருக்கிறது. வானியல் அறிவியல்படியும் மிகத் துல்லியமாக்கக் கட்டப்பட்டது இந்தப் பிரமிட். நாமிருக்கும் பால்வெளி பிரபஞ்சத்தின் ஓரியின் பெல்ட் நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படும் நட்சத்திரங்கள�ோடு மிகத் துல்லியமாக்க (துல்லியம் என்றால் மயிரிழைக் கூடப் பிசகாத துல்லியம்) ப�ொருந்திப்போகிறது இது. இந்தப் பிரமிடின் நான்கு பக்கங்களும் சற்றே குவிந்த அமைப்புக் க�ொண்டவையாகக் கட்டப்பட்டிருக்கிறது. வெறும் கண்களுக்கோ அல்லது புகைப்படங்களில�ோ இந்த அமைப்பு தென்படாது. காலைப் ப�ொழுதில�ோ அல்லது மாலைப் ப�ொழுதில�ோ வானிலிருந்து பார்க்கும்போதுதான் இந்த அமைப்பு நம் கண்களுக்குத் தென்படும். இந்த நான்கு பக்க குவியமைப்பின் வளைவு க�ோணமும் பூமியின் சுற்றளவுடன் ஒத்துப்போகிறது. இப்படியான கட்டிடத் த�ொழில் நுட்பம் எப்படி 4500 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்குச் சாத்தியப்பட்டது என்று இன்றைய நவீன த�ொழில் நுட்பம் தலையைச் ச�ொறிந்துக�ொண்டிருக்கிறது. இன்னும் இருக்கிறது. இந்தப் பிரமிடின் நான்கு பக்க மூலையும் இந்தப் பூமியின் நான்கு திசைகளான வடக்கு, கிழக்கு, தெற்கு. மேற்கு ஆகியவற்றுடன் மிகத் துல்லியமாக்க இணைக்கப்பட்டிருக்கிறது. மயிரிழை பிசகு கூட இதில் இல்லை. ஒட்டும�ொத்த பூமி நிலப்பரப்பின் மையமாகக் கருதப்படும் இடத்தை மிகத் துல்லியமாக்கக் கணித்து (அந்த இடம் இந்தப் பிரமிட் கட்டப்பட்டிருக்கும் கீசா பாலை வனப் பகுதிதான்) அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இந்தப் பிரமிடை அதன் மேல் கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்வதற்குப் பூமியின் ஒட்டும�ொத்த நில அமைப்பு கணித அறிவும் தேவை. வானில் செயற்கை க�ோள்களால் ப�ோக்குவரத்து நெரிசல் ஏற்படும் இன்றைய காலங்களில் இது சாத்தியமான விசயம் ஆனால் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியர்களுக்கு இது எப்படிச் சாத்தியமானது? இப்படி முடிவே இல்லாமல் பல ஆச்சரியமான கேள்விகளைக் கீசா பிரமிட் எழுப்பியபடி இருக்கிறது. இதன் காரணமாகப் பல ஆண்டுகளின் இடைவெளியில் ஆராய்ச்சியாளர்கள் ர�ோப�ோக்களை இந்தப் பிரமிடிற்குள் மனிதன் நுழைய முடியாத பகுதிகளுக்குள் அனுப்பி இன்றைக்கு ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒவ்வொரு ஆராய்ச்சிகளின் ப�ோதும் மேலும் பல புதிர் கேள்விகள் எழுகின்றனவே தவிர இருக்கும் கேள்விகளுக்கு விடைகள்தான் கிடைத்தபாடில்லை. இந்தப் பிரமிடிற்குள் மூன்று அறைகள் இருக்கின்றன. பிரமிடின் தரை தளத்திற்கு மேல் ‘அரசிகள் அறையும்’ இதற்கும் மேலே ‘அரசர்கள் அறையும்’ இருக்கிறது. பிரமிடின் தரை தளத்திற்குக் கீழே ‘பாதாள அறை’ இருக்கிறது. இந்தப் பிரமிடின் உண்மையான நுழைவாயில் வடக்கு பக்க சுவரில் இருக்கிறது. அதுவும் மிக உயரத்தில் எவர் கண்ணிலும் பட்டுவிடாத பகுதியில். இதை மறைத்து ஒரு கல்லும் இருக்கிறது. இதன் வழியே நுழைந்தால் பிரமிடின் கீழ் ந�ோக்கிச் செல்லும் பாதை நம்மைத் தரை தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. தரை தளத்திற்குச் சற்று மேலே இந்தப் பாதை இரண்டாப் பிரிகிறது. ஒன்று பிரமிடின் மேல் ந�ோக்கியும் மற்றது த�ொடர்ந்து கீழ் ந�ோக்கியும் ப�ோகிறது. பிரமிடின் மேல் ந�ோக்கிச் செல்லும் பாதையில் சென்றால் சற்று உயரத்தில் அந்தப் பாதை மேலும் இரண்டாகப் பிரிகிறது. சம தளத்தில் பிரியும் பாதை நம்மை அரசிகள் அறைக்கு அழைத்துச் செல்கிறது. 68

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மேல் ந�ோக்கிச் செல்லும் பாதை அரசர்கள் அறைக்கு அழைத்துச் செல்கிறது. அரசிகள் அறையில் மற்றொரு இரகசிய பாதையும் இருக்கிறது அது பிரமிடின் தரை தளத்திற்குக் கீழே இருக்கும் பாதாள அறைக்குப் ப�ோகும் பாதை. அரசர்கள் அறைக்குச் செல்லும் பாதையில் ஒரு ப�ோலி அறையும் இருக்கிறது. இந்த அறை கல்லறைத் திருடர்களைக் குழுப்புவதற்காகக் கட்டப்பட்டது. அதாவது பார�ோ கூஃபுவின் உண்மையான மம்மி வைக்கப்பட இருக்கும் அறையைக் கல்லறைத் திருடர்களின் கண்களில் இருந்து மறைப்பதற்காக இந்தப் ப�ொய் அறை. இந்த அறையில் ஒரு இரகசிய வழி இருக்கிறது இதன் மூலமே அரசர்கள்அறைக்குப் ப�ோக முடியும். அரசர்கள் அறையிலும், அரசிகள் அறையிலும் வடக்கு மற்றும் தெற்கு திசை ந�ோக்கிய இரண்டு சன்னல் ப�ோன்ற அமைப்பு இருக்கிறது. இதன் வழியே இந்த இரண்டு அறைகளுக்கும் வெளிச்சமும் காற்றும் வருகிறது. எகிப்திலிருக்கும் மற்ற வேறு எந்தப் பார�ோவின் பிரமிடிலும் இந்தச் சன்னல் அமைப்புக் கிடையாது. இந்தச் சன்னலும் மிகத் துல்லியமான வானியல் அளவுகளின் படி இந்த அறைகளில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தச் சன்னல்கள் வானில் இருக்கும் சிரஸ் நட்சத்திரத்தின் இருப்புடன் ஒத்துப்போகிறது. அரசர்கள்அறையில் பார�ோ கூஃபுவின் மம்மியை வைப்பதற்கான சர்கபேகஸ் இருக்கிறது. பல டன் எடைக்கொண்ட இந்தச் சர்கபேகசை எப்படி இந்தப் பிரமிடிற்குள் ஏற்றிக் க�ொண்டுவந்திருப்பார்கள் என்று இன்றைய ஆராய்ச்சி உலகம் மண்டைக் காய்ந்து நிற்கிறது. இதில் வின�ோதம் இந்தச் சர்கபேகஸில் கூஃபுவின் மம்மி வைக்கப்படவேயில்லை. மம்மி வைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளமும் இல்லை. கல்லறைத் திருடர்களை நசுக்கி சாகடிக்கவேண்டி பல இடங்களில் கருங்கல் கண்ணிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் உள்ளே சென்று பார்த்து அறிந்தவை. இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நுழைய முடியாத பல பகுதிகள் இந்தப் பிரமிடிற்குள் இருக்கின்றன. பல இரகசிய அறைகளும் இருக்கின்றன. அவற்றில் என்ன விதமான ஆச்சரியங்கள் மற்றும் புதையல்கள் மறைந்துகிடக்கின்றன என்பது இந்தப் பிரமிடை கட்டியவர்களுக்கும் பார�ோ கூஃபுவிற்குமே வெளிச்சம். மற்றொரு வின�ோதம் இந்தப் பிரமிடில் எத்தகைய எழுத்துக்கள�ோ ஓவியங்கள�ோ வண்ணங்கள�ோ தீட்டப்படவேயில்லை என்பது. ஆனால் 2013-ல் இந்தப் பிரமிடிற்குள் அனுப்பப்பட்ட கேமிராப் ப�ொருத்தப்பட்ட ர�ோப�ோ சிவப்பு வண்ணத்தால் தீட்டப்பட்ட சுவர் ஓவியம் ஒன்றைப் படமெடுத்திருக்கிறது. இது படம் எதைக் குறிக்கிறது என்று இன்றைக்கு ஆராய்ச்சிகள் ஒருபக்கம் ப�ோய்க்கொண்டிருக்கின்றன. இப்படிப் பல ஆராய்ச்சிகள் ப�ோய்க்கொண்டிருக்கிறது இந்த வேளையிலும் நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த ந�ொடியிலும். இதே ப�ோல 1993-ல் இதற்குள் சென்ற ஒரு ர�ோப�ோ செம்பு துண்டு ஒன்றை எடுத்து வந்தது. அது என்னவாக இருக்கும் என்று இன்றைக்கு வரைக்கும் ஆராய்ந்துக�ொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு அது இந்தப் பிரமிடிற்குள் இருக்கும் ஏத�ோ ஒரு இரகசிய அறையைத் திறக்கும் சாவியாக இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கீசா பிரமிடைப் பார்த்து குழம்பிப் ப�ோய்கிடக்க 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய பப்பைரஸ் சுருள் ஆவணங்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயே பார�ோ கூஃபு குறித்தும் இந்தக் கீசா பிரமிட் குறித்தும் வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றன. இந்தச் சுருள் ஆவணங்கள் ஹெமினு என்பவன் கூஃபு கீசா பிரமிடை கட்டி முடிக்க மிகப் பெரும் உதவிகளைச் செய்ததாகச் ச�ொல்கின்றன. அடிப்படை திட்டமிடல் த�ொடங்கிக் கீசா பிரமிடின் முழுமை வரை இவனே அனைத்துக் காரியங்களையும் கவனித்திருக்கிறான் 20 வருடங்களுக்கு. இன்றைய ஆராய்ச்சிகள் கீசா பிரமிடை கட்டி முடிக்கக் குறைந்தது 10,000 த�ொழிலாளர்கள் 20 வருடங்களுக்கு இடைவிடாமல் வேலை செய்திருக்கவேண்டும் என்று ச�ொல்கின்றன. இந்தப் பிரமிட் கட்டுமானத்தின் ப�ோது த�ொழிலாளர்களுக்குப் பல ஆபத்தான விபத்துகளும் மரணங்களும் நவீனா அலெக்சாண்டர்

69

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

நிகழ்ந்திருப்பதை இந்தப் பிரமிடிற்கு அருகிலிருக்கும் கெர்ஜெட் கூஃபு மற்றும் ராயல் ஒர்க்மென் குடியிருப்புகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சில த�ொழிலாளர்களின் எலும்புக் கூடுகள் சாட்சி ச�ொல்கின்றன. ஆனால் இது குறித்தெல்லாம் பப்பைரஸ் ஆவணங்கள் வாயே திறக்கவில்லை.

ஸ்பிங்ஸ் மற்றும் கீசா பிரமிட் மர்மங்கள் கீசா பிரமிட் இருக்கும் பகுதியிலேயே ஸ்பிங்ஸ் சிலையும் இருக்கிறது என்பதை நாம் முன்பே பார்த்தோம். இந்தச் சிலையின் உடல் பகுதி பல ஆண்டுகள் நீரில் முழ்கியிருந்ததற்கான அழிக்க முடியாத நிலவியல் ஆதாரம் இருப்பதையும் பார்த்தோம். ஆனால் பாரம்பரிய எகிப்தியாலஜி இந்தச் சிலை அடி முதல் முடி வரை பார�ோ காஃப்ரியால் கட்டப்பட்டது என்று அடம் பிடிக்கிறது. இவன் பார�ோ கூஃபுவின் மகன். நிலவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஸ்பிங்சின் உடல் பகுதி பார�ோ காஃப்ரி காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அடித்துச் ச�ொல்கின்றன. அதாவது மிகச் சரியாகச் ச�ொல்வதென்றால் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே. பார�ோ காஃப்ரி அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டுப் பாழடைந்துக�ொண்டிருந்த ஸ்பிங்ஸ் சிலையின் தலைப் பகுதியை மட்டும் செப்பனிட்டுப் புதுப்பித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை வளப்படுத்த அவர்கள் தரும் வரலாற்று ஆதாரம் ‘இன்வென்டரி ஸ்டிலே’. இது கீசா பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் த�ொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுப் பலகை. இது பார�ோ கூஃபுவால் வெளியிடப்பட்டது. இந்தக் கல்வெட்டு ச�ொல்லும் செய்தி, ஸ்பிங்ஸ் சிலைக்கு அருகில் ஒரு க�ோயில் கட்டப்படவேண்டும் என்பது. அதாவது கூஃபுவின் காலத்திலேயே இந்த ஸ்பிங்ஸ் சிலை அங்கே இருந்திருக்கிறது அதன் பக்கத்தில் ஒரு க�ோயில் கட்டப்படவேண்டும் என்பது கூஃபுவின் கட்டளை. கூஃபுவின் காலத்திலேயே இருந்த ஒரு சிலையை அவனுடைய மகன் காஃப்ரி எப்படிக் கட்டியிருக்க முடியும்? நியாயமான கேள்விதானே. அப்படியென்றால் யார் இந்த ஸ்பிங்ஸ் சிலையைச் செதுக்கியிருப்பார்கள்? என்ன ந�ோக்கத்திற்காகச் செதுக்கியிருப்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கு இரண்டு விதமான பதில்களை ஆராய்ச்சியாளர்கள் தருகிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய நாகரீகத்திற்கு முன்பிருந்த பிறகு அழிந்துப்போன அட்லாண்டிஸ் நில மக்கள் இந்தச் சிலையைச் செதுக்கியிருப்பார்கள் என்று ச�ொல்கிறார்கள். ஆனால் அட்லாண்டிஸ் நில அழிவிற்கான வலுவான மறுக்க முடியாத வரலாற்று ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் இந்தப் பதில் இப்போதைக்கு வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் மற்றொரு கருத்து ஸ்பிங்ஸ் சிலையை எகிப்தியர்கள்தான் கட்டியிருக்கவேண்டும் ஆனால் கி.மு. 10,000 வருடங்களுக்கு முன்பே இதை அவர்கள் செய்திருக்கவேண்டும் என்று ச�ொல்கிறார்கள். இந்தச் சிலை கட்டப்பட்டதன் ந�ோக்கம் வானியல் நிகழ்வு ஒன்றை அடையாளப்படுத்தத்தான் என்றும் ச�ொல்கிறார்கள். அந்த நிகழ்வு, சூரியன் நில நடுக்கோட்டிற்கு மேலும் கீழும் பயணம் செய்து கீழ் வானில் உதிக்கும் நிகழ்வுதான். ஒவ்வொரு 2160 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் பல விண்மீன் கூட்டங்களின் பின்னணியில் கீழ் வானில் உதிக்கும். கடந்த 2000 வருடங்களாக (இப்போது நாமிருக்கும் காலகட்டத்தையும் சேர்த்து) சூரியன் கீழ்வானில் பிசிஸ் தி ஃபிஷ் நட்சத்திரக் கூட்டத்திற்கு நேராக உதிக்கிறான். இதற்கு முந்தைய இரண்டாயிரம் ஆண்டுகளில் ‘டாரவுஸ் தி ஃபுல்’ நட்சத்திரக் கூட்டத்திற்கு நேராக உதித்தான். அதே ப�ோலக் கி.மு. 10,000 ஆண்டுகளில் லிய�ோ தி லையன் நட்சத்திர கூட்டத்திற்கு நேரே உதித்திருக்கிறான். இது கி.மு. 10,970 - 8810 ஆண்டுகள் வரை நீடித்திருக்கிறது. ஸ்பிங்ஸ் சிலையின் முகமும் மிகத் துல்லியமாக்கக் கீழ் வானில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் இடத்தைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்றையிலிருந்து பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சூரியன், லிய�ோ தி 70

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

லையன் நட்சத்திர கூட்டத்திற்கு நேரே உதித்ததை அடையாளப்படுத்தவே சிங்க உடலில் மனித தலைக்கொண்ட ஸ்பிங்கசை அன்றைய எகிப்தியர்கள் செதுக்கியிருக்கவேண்டும். இதுவே எல்லா வகையிலும் ஏற்றப் பதிலாக இருக்கிறது. அது சரி ஸ்பிங்ஸ் நட்ட நடுப் பாலைவனத்திலிருக்கிறது பிறகு அது எப்படிப் பல ஆண்டுகள் நீரில் மூழ்கியிருந்திருக்க முடியும். நிலவியல் ஆதாரம் ச�ொல்லும் நீர் அரிப்பு அதில் ஏற்பட சாத்தியக் கூறு பாலைவனத்தில் எப்படி என்று நீங்கள் ய�ோசிக்கலாம். நானும் ய�ோசித்தேன். அதே நிலவியல் ஆராய்ச்சிகள் இன்னொரு விசயத்தையும் ச�ொல்கிறது அது எகிப்திய பாலைவனம் முழுவதும் ஒரு காலத்தில் கடலில் மூழ்கியிருந்திருக்கிறது என்பது. இன்றைக்கு எகிப்தியப் பாலைவனத்தில் கடல் சிப்பிகள் கிடைப்பதும் இதற்கான வலுவான ஆதாரம். அப்படியென்றால் கடல் நீர் எகிப்திற்குள் புகுந்தது எப்போது? எதனால்? ஸ்பிங்ஸ் சிலை செதுக்கப்பட்ட பின்பே கடல் நீர் எகிப்திற்குள் புகுந்திருக்கவேண்டும். அதாவது கி.மு. 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு. கடல் நீர் உள்ளே புக வேண்டிய காரணம் என்ன என்கிற இடத்தில்தான் அட்லாண்டிஸ் மித் உள்ளே வருகிறது. இத்தோடு மூன்று முறை அட்லாண்டிஸ் என்கிற பெயரை நாம் கேட்டுவிட்டோம்தானே. அட்லாண்டிஸ் என்கிற பெயரை முதலும் கடைசியுமாக இந்த உலகத்திற்கு அறிவித்தது கூட எகிப்துதான். பிளாட்டோ கி.மு. 360 வாக்கில் எழுதிய ‘கிரைடியாஸ் & டையாமேஸ்’ என்கிற புத்தகத்தில் அட்லாண்டிஸ் குறித்துச் ச�ொல்கிறார். இந்தப் புத்தகத்தில் ச�ோல�ோன் என்கிறவர் அட்லாண்டிஸ் குறித்துச் ச�ொல்வது ப�ோலப் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அட்லாண்டிஸ் குறித்த ச�ொன்ன ஒரே நபரும் பிளாட்டோ மட்டும்தான். ச�ோல�ோன் வரலாற்றில் வாழ்ந்த மனிதர். மிகச் சிறந்த வணிகர் மற்றும் துறவி. இவர் கிரேக்க நாட்டின் சார்பில் வணிகம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த எகிப்திற்குச் சென்றிருந்த சமயத்தில் சாயிஸ் என்கிற நகரில் ச�ோன்சிஸ் என்கிற எகிப்திய பூசாரி ஒருவரைச் சந்தித்ததாகவும் அவர் அட்லாண்டிஸ் நிலப் பகுதிக் குறித்துத் தனக்கு விளாவாரியாகச் ச�ொன்னதாகவும் ச�ோல�ோன் ச�ொல்வதுப�ோலப் பிளாட்டோ எழுதியிருக்கிறார். எகிப்திய பூசாரி ச�ோன்சிஸ் செல்வதின்படி அட்லாண்டிஸ் நிலப் பகுதி எகிப்திற்கு மேற்கிலிருந்திருக்கிறது. அதுவும் நடுக் கடலில் ஒரு தீவு நாடாக. அவர் காலத்திற்குச் சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு அதாவது இன்றையிலிருந்து 9000 வருடங்களுக்கு முன்பு அட்லாண்டிஸ் நிலம் கடலுக்குள் மூழ்கிவிட்டது என்று ச�ோன்சிஸ், ச�ோல�ோனிடம் ச�ொல்லியிருக்கிறார். சுமார் 9000 வருடங்களுக்கு முன்பு நடந்த இயற்கை பேரிடர் ஒன்று உலகின் பல பாகங்களைக் கடலுக்குள் மூழ்கடித்திருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் அட்லாண்டிஸ் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கி அழிந்துவிட்டதைப் ப�ோல எகிப்தும் கடலுக்குள் மூழ்கியிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ச�ோன்சிஸின் கூற்றுப்படி அட்லாண்டிஸ் எகிப்திற்கு மேற்கே அட்லாண்டிக் கடலில் இருந்திருக்கவேண்டும். ஆனால் இன்றைய நவீன த�ொழில் நுட்பங்களைக்கொண்டு அட்லாண்டிக் கடலில் ஆராய்ச்சிகள் செய்து பார்த்ததில் எத்தகைய தீவும் அந்தக் கடலுக்குள் மூழ்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த முடிவுகளே அட்லாண்டிஸ் நிலப் பகுதி ஒரு மித் என்கிற முடிவிற்கு வர சில ஆராய்ச்சியாளர்களைத் தூண்டிவிட்டது. ஆனால் இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் அட்லாண்டிஸ் நிலப் பகுதி உண்மையில் இருந்திருக்கலாம் ஆனால் அது அட்லாண்டிக் கடலில் இல்லாமல் வேறு கடலில் இருந்து பின்பு கடலுக்குள் மூழ்கியிருக்கவேண்டும் என்று ச�ொல்கிறார்கள். அட்லாண்டிஸ் நிலப் பகுதியையும் லெமூரியக் குமரி கண்டத்தையும் முடிச்சிப்போட்டு பேசும் ஆராய்ச்சியாளர்களும் கூட இருக்கிறார்கள். அட்லாண்டிஸ் நில மக்களின் ஒரு காலனியாக எகிப்திய நாகரீகம் இருந்தது என்று ச�ொல்லும் ஆராய்ச்சியாளர்களும் கூட உண்டு. அட்லாண்டிஸ் நில மக்களிடமிருந்தே எகிப்தியர்கள் கட்டிடக் கலை அறிவையும், வானியல் அறிவையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர்கள் ச�ொல்கிறார்கள். அட்லாண்டிஸ் நிலப் பகுதி உண்மைய�ோ இல்லைய�ோ ஆனால் அது அழிந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் உலகின் பல பாகங்கள் கடலுக்குள் மூழ்கியது என்பது நவீனா அலெக்சாண்டர்

71

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

மட்டும் உண்மை. நம்முடைய த�ொல்காப்பியம், சுமேரியர்களின் கில்காமேஷ் மற்றும் பைபிள் ப�ோன்றவையும் இது குறித்துப் பேசுகின்றன. ஆக ஸ்பிங்ஸ் சிலையில் எப்படிக் கடல் நீர் அரிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கான பதிலும் கிடைத்துவிட்டது. ஆனால் கீசாப் பிரமிடிற்குள் எப்படிக் கடல் உப்புப் படிவம் வந்திருக்க முடியும்? அப்படியென்றால் கீசா பிரமிடும் ஸ்பிங்ஸ் சிற்பத்துடன் ஒரே காலத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்ததா? அப்படிப் பார்த்தால் கீசாப் பிரமிடும் கி.மு. 10,000 ஆண்டுகள் வாக்கில்தானே கட்டப்பட்டிருக்கவேண்டும்? கி.மு. 2000-ங்களில் வாழ்ந்த பார�ோ கூஃபு எப்படிக் கட்டியிருக்க முடியும்? இப்படியான த�ொடர்ச்சியான கேள்விகள் எழுவது நியாயம்தான். ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் காண முடியவில்லை. இந்தத் த�ொடர் கேள்விகளுக்குப் பதிலாகச் சில அனுமானங்களையே முன்வைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவற்றைக் கேட்பதற்கு முன்பு கீசா பிரமிடிற்குள் கடல் உப்புப் படிவங்களை முதலில் கண்டவர் யார் என்பதை உங்களுக்குச் ச�ொல்லாமல் விட்டுவிட்டால் எப்படி. அர�ோன் அல்-ரசித் என்றால் நிச்சியம் யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆயிரத்து ஒரு இரவு கதையில் வரும் அரசன் என்றால் நிச்சயம் உங்களுக்குத் தெரியும்தானே. இவரை மையமாக வைத்து அன்றைய காலங்களில் பல புனைவுக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஆயிரத்து ஓர் இரவு கதைகளும். இவருக்கு அல்-அமீன், அப்துல்லா அல்மாமூன் என்று இரண்டு மகன்கள் உண்டு. அப்துல்லா அல்-மாமூன் அவருடைய தந்தைக்குப் பிறகு கி.பி. 813-ல் பாக்தாதில் களிப்பாவாகப் பதவியேற்றவர். இவருடைய மிகப் பெரும் விருப்பங்களில் ஒன்று பாக்தாதை கல்வியில் சிறந்த நகரமாக மாற்றவேண்டும் என்பது. உலக ஞானிகளின் உறைவிடமாகப் பாக்தாதை மாற்றுவதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்தார் அவர். அதில் ஒன்று இவரால் பாக்தாத்தில் நிறுவப்பட்ட ஹவுஸ் ஆப் விஸ்டம் என்கிற நூலகம். அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்திற்கு அடுத்து உலகின் மிகப் பெரிய நூலகமாக இருந்தது இந்த நூலகம்தான். அதே ப�ோன்று உலகின் மிகச் சிறந்த வானியில் ஆராய்ச்சிக் கூடத்தையும் அவர் உருவாக்கினார். இதன் ந�ோக்கம் வானிலிருக்கும் திசை காட்டும் நட்சத்திரங்களைக் குறித்த ஒரு வரை படத்தை உருவாக்கவேண்டும் என்பது. பூமியின் சுற்றளவை தெரிந்துக�ொள்வதில் இவருக்குத் தீராத ஆர்வம். அதற்காக வட திசையிலும் தெற்கு திசையிலும் வானியியலாளர்களை அனுப்பிவைத்தார். அவர்கள்தான் முதன் முதலில் பூமியின் சுற்றளவு 23,180 மைல்கள் என்கிற ஓரளவு சரியான அளவைக் கண்டுபிடித்தவர்கள் (சரியாள அளவு 24,900 மைல்கள்). அவரிடம் எகிப்தின் கீசா பிரமிடில் நட்சத்திரக் கூட்டங்களின் வரைபடமும், நிலவியல் வரைபடமும் இருப்பதாகச் ச�ொல்லப்பட்டிருக்கிறது. அவற்றைத் தான் உருவாக்கிய நூலகத்திற்குக் க�ொண்டு வந்துவிட முடிவு செய்த அவர் கி.பி. 820-ல் பாக்தாதின் சிறந்த கல்வியாளர்களையும் ப�ொறியியலாளர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு எகிப்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு எகிப்து அவருடைய ராஜ்யத்தின் ஒரு பகுதி. எகிப்தில் அவர் ப�ோய் நின்றது கீசா பிரமிடில். அவருடைய காலகட்டத்தில் கீசாப் பிரமிடிற்கான உண்மையான நுழைவாயிலை அறிந்தவர் யாரும் இல்லை. அவராலும் அவர் அழைத்துச் சென்ற ப�ொறியியலாளர்களாலும் கூடக் கீசா பிரமிடிற்குள் நுழைவதற்கான வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரமிடின் கீழ் பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த அல்-மாமூன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மிகுந்த ப�ோராட்டத்திற்குப் பிறகே அவருடைய படையால் கீசா பிரமிடின் அடிப் பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முடிந்திருக்கிறது. கீசா பிரமிடிற்குள் இருக்கும் மூன்று முக்கிய அறைகளுக்கு அரசிகள் அறை, அரசர்கள் அறை, பாதாள அறை என்று பெயர் க�ொடுத்தவரும் இவரே. உலக வரைபடத்தையும், நட்சத்திரங்களின் வரைபடத்தையும் தேடிச் சென்றவருக்கு மிகுந்த ஏமாற்றம். அவர் எதிர்பார்த்துச் சென்ற ப�ொருள்கள�ோடு சேர்த்துக் கீசா பிரமிடிற்குள் எவ்வித ப�ொருளும் எப்பொழுதும் இருந்ததற்கான சிறு கீறல் அடையாளம் கூட இல்லாதது அவரையும் 72

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அவருடைய ஆட்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது. அரசர்கள் அறையில் காலியாகக் கிடந்த சர்கபேகசைத் தவிர வேறு எதையும் பெயரளவிற்குக் கூடக் காண முடியாததைக் கண்டு அல்-மாமூன் கடுப்பாகிவிட்டிருக்கிறார். அந்தக் கடுப்பிலும் அவர் தவறாமல் கவனித்த ஒரு வின�ோதமான விசயம் அரசர்கள் அறையின் தரைப் பகுதியிலும் சுவர் பகுதியிலும் நாட்ரன் (கடல் உப்பு) படிவம் இருப்பதை. இது அவருக்குப் பெரும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. அதன் பிறகு இவ்வளவு தூரம் தன்னுடன் கீசா பிரமிடை திறக்கப் பாடுபட்ட தன்னுடைய படையை ஏமாற்ற விரும்பாத அல்-மாமூன் தன்னுடைய ஆட்கள் அறியாத வண்ணம் இரவ�ோடு இரவாகக் கீசா பிரமிடிற்குள் தங்கப் ப�ொருட்கள் சிலவற்றை எடுத்துவந்து ப�ோட்டுவிட்டு மறுநாள் காலை கீசா பிரமிடிற்குள் புதையல் ப�ொருட்கள் இருப்பதாகச் ச�ொல்லி அவருடன் வந்த ஆட்களை அவற்றை எடுத்துக்கொள்ளும்படி ச�ொல்லியிருக்கிறார். கீசா பிரமிடிற்குள் உப்புப் படிவம் இருந்ததற்கான முதல் வரலாற்று பதிவைத் தருவது அல்-மாமூனின் இந்தப் பயணம்தான். கீசா பிரமிடிற்குள் கடல் உப்புப் படிவம் இருந்தமைக்கான காரணமாக ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கும் அனுமானம் கீசா பிரமிடும், ஸ்பிங்ஸ் சிலைப் ப�ோன்றே பார�ோ கூஃபு காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு ஸ்பிங்ஸ் சிலை ப�ோலவே கீசா பிரமிடும் கடலுக்குள் மூழ்கியிருந்தது என்பதுதான். இது த�ொடர்பாக அவர்கள் மேலும் தரும் விளக்கம், கீசா பிரமிட் ஒரு நபரால் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்க முடியாது என்றும் அது மூன்று கட்டமாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பல தலைமுறை மக்களால் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பது. கீசா பிரமிட் பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்கிற்கு மேல் கட்டப்பட்ட கட்டிடம். அத�ோடு மட்டுமில்லாமல் கீசா பிரமிட் இருக்கும் இடம் பூமியின் மிகத் துல்லியமான நடுமையம் கூட. இதைக் கி.மு. 10,000 வருடங்களுக்கு முன்பிருந்த எகிப்தியர்கள் தங்களுடைய வானியல் அறிவு மூலம் உணர்ந்திருக்கவேண்டும். இதை அடையாளப்படுத்தும் விதமாக அந்த இடத்தில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறையைக் குடைந்து இன்றைக்குப் பிட் சேம்பர் என்று அழைக்கப்படும் அறையை முதலில் கட்டியிருக்கவேண்டும். இதற்குப் பிறகு சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதாவது முதல் பார�ோவான நார்மருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைக்கு நாம் பார்க்கும் கீசா பிரமிடின் அடிப்பாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அடிப்பாகத்தைக் கட்டியவர்கள் பிரமிடின் நான்கு பக்க மூலையும் மிகத் துல்லியமாக்கப் பூமியின் நான்கு திசைகள�ோடும் ஒத்துப்போகும் வகையில் கட்டியிருக்கிறார்கள். இதற்கடுத்து பார�ோ கூஃபு தன்னுடைய காலத்தில் இந்த அடிப்பாகத்திற்கு மேல் இன்றைய கீசா பிரமிடின் மேல் பாகத்தைக் கட்டியிருக்கவேண்டும். அதாவது அரசிகள் மற்றும் அரசர்கள் அறைகள் இருக்கும் பகுதிகள். மேலும் இந்த இடத்தின் வானியல் முக்கியத்துவம் கருதியே பார�ோ கூஃபுவும் இரண்டு அறைகளின் இரண்டு திசைகளிலும் இரண்டு சன்னல்களை வைத்து (இந்தச் சன்னல்கள் மிகச் சரியாக வானில் சிரஸ் எனப்படும் டாக் நட்சத்திரத்தை பார்க்கும் வண்ணமிருக்கிறது) கட்டியிருக்கிறான். ஆராய்ச்சியாளர்களின் இந்த அனுமானத்தை வலுப்படுத்த மேலும் சில புறக் காரணங்கள் இருக்கின்றன. அதாவது எகிப்தில் கட்டப்பட்டிருக்கும் மற்ற எல்லாப் பிரமிடுகளிலும் (கீசா பிரமிடிற்குப் பின்பு கட்டப்பட்ட பிரமிடுகளையும் சேர்த்து) பார�ோவின் மம்மி வைக்கப்படும் அறையானது ஒன்று பூமிக்கு அடியில் இருக்கிறது அல்லது தரை மட்டத்திலிருக்கிறது. கீசா பிரமிடில் மட்டுமே இந்த அறை தரை மட்டத்திற்கு மேலிருக்கிறது. அதே ப�ோலக் கீசா பிரமிடில் மட்டுமே ஏகப்பட்ட அறைகள் (நான்கு பக்கமும் மூடப்பட்ட) இருக்கின்றன. அதே ப�ோலக் கீசா பிரமிடிற்குள் எந்தக் காலத்திலும் எந்த ஒரு பார�ோவின் மம்மியும் வைக்கப்பட்டதற்கான அடையாளமும் இல்லை. பிரமிடின் உள் அறைகளில் எத்தகைய மந்திர எழுத்துக்களும் ஓவியங்களும் எழுதப்படவ�ோ வரையப்படவ�ோ இல்லை. இது பிரமிட் கட்டுமான விதிக்கு முற்றிலும் வின�ோதமானது.

நவீனா அலெக்சாண்டர்

73

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஆராய்ச்சியாளர்களின் இந்த விளக்கங்களும் முழுமையான விளக்கங்களாக இல்லை. பார�ோ கூஃபு மூன்றாம் கட்டமாக அவனுடைய காலத்தில் அரசிகள் அறை மற்றும் அரசர்கள் அறையைக் கட்டியிருந்தால் அதற்குள் எப்படிக் கடல் உப்புப் படிவம் வந்திருக்க முடியும்? இப்படிக் கீசா பிரமிட் குறித்த கேள்விகள் எழும்பியபடியே இருக்கின்றன. இத்தகைய சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருக்கவேண்டிய எகிப்திய பப்பைரஸ் ஆவணங்களும் இந்த விசயத்தில் வாய் திறக்காமல் மெளனமாகவே இருப்பது எறிகிற சந்தேகத்தில் நெய் ஊற்றுவதுப�ோல் இருக்கிறது. சரி கீசா பிரமிட் குறித்த சந்தேகங்களை ஆராய்ச்சியாளர்களிடமே விட்டுவிட்டுக் கீசா பிரமிட் வளாகத்திலேயே 1954 மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புதத்தைக் குறித்துப் பார்க்கலாம். இந்த அற்புதம் தென்னிந்திய தமிழர்களுடன் த�ொடர்புடையது. இந்த அற்புதத்தைக் கண்டுபிடித்தவர் கமால் எல்-மாலாக். கீசா பிரமிடின் தெற்குத் திசையில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் அவர். அவர் கண்டுபிடித்தது 103 அடி நீளமும், 17 அடி ஆழமும் க�ொண்ட சதுரமான குழியை. குழியைக் கண்டுபிடிச்சதுல என்னாய்யா அதிசயம் கிடக்கு என்று நீங்கள் நான் ச�ொல்ல வருவதை முழுதாகக் கேட்பதற்கு முன்னாலேயே அலுத்துக்கொண்டால் எப்படி. அற்புதமே அவர் அந்தக் குழிக்குள் என்ன ப�ொருளை கண்டுபிடித்தார் என்பதில்தானே இருக்கிறது. அந்தக் குழியின் ஆறாவது அடியில் 15 டன் எடைக் க�ொண்ட சுண்ணாம்பு பலகை கற்களால் ஆன தளம் ப�ோன்ற அமைப்பு இருக்கிறது. அதற்குள்ளே மிக நீளமான கப்பல் ஒன்றின் அக்கு அக்காகப் பிரிக்கப்பட்ட மரப் பலகைகள் இருந்தது. இந்தப் பலகைகள் தேவதாரு மரத்திலிருந்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பலகைகளை வைத்து மீண்டும் அந்தக் கப்பலைக் கட்ட இன்றைய எகிப்திய ஆராய்ச்சியாளர்களுக்கு முழுதாகப் பதினான்கு வருடங்கள் பிடித்திருக்கிறது. கட்டி முடித்ததும் அவர்கள் கண் முன் நின்றது 143 அடி நீளம் க�ொண்ட கப்பல் ஒன்று. இந்தக் கப்பல் எத்தகைய சந்தேகமும் இல்லாமல் கடல் பயணத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட கப்பல். அதிலும் மிக முக்கியமாக நடுக்கடல் பயணத்திற்கென்று. அதாவது நடுக்கடலில் பயணித்துக் கண்டம் விட்டுக் கண்டம் செல்வதற்காகக் கட்டப்பட்ட கப்பல். இதுவும் சில கேள்விகளை ஆராய்ச்சியாளர்களுக்கு எழுப்பிவிட்டுவிட்டது. எகிப்தியர்களுக்கும் கடலுக்கும் எவ்வித த�ொடர்பும் கிடையாது. அப்படியிருக்க நடுக்கடலில் பயணம் செய்வதற்கான கப்பலை பார�ோ கூஃபு கட்டுவதற்கான தேவையென்ன? பார�ோக்கள் இறந்த பிறகு மறு உலகிற்குச் செல்வதற்கு அவர்கள் படகில்தான் ப�ோவார்கள் அதற்காக இது கூஃபுவின் பிரமிடிற்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் பார�ோக்களின் மறு உலகப் பயணமும், ரா கடவுளுடனான விண் பயணமும் படகில்தான் நிகழும், இவ்வளவு பெரிய கப்பலில் அல்ல. இவ்வளவு பெரிய கப்பல் நிச்சயம் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வணிகக் கப்பல். பார�ோ கூஃபுவின் காலகட்டத்தில் அதாவது இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பிருந்த எகிப்திய மற்றும் சுமேரிய நாகரீகத்திற்கு நடுக்கடல் பயணத் த�ொழில் நுட்பம் என்பது தெரியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில் நடுக்கடல் பயணச் சூட்சமமும் அதற்கான பெரிய கப்பலைக் கட்டும் த�ொழில் நுட்பமும் அறிந்திருந்த ஒரே மக்களினம் தமிழினம்தான். இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் தேவதாரு மரத்தில் செய்த கப்பல் ஒன்று கீசா பிரமிடின் அருகில் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது அற்புதமான விசயம்தானே. இந்த அற்புதம் இத்துடன் நின்றுவிடவில்லை. கிரஹாம் அன்காக் என்கிற ஆராய்ச்சியாளர் எகிப்தின் அபைட�ோஸ் நகரில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நைல் நதியின் கரையிலிருந்து எட்டு மைல் த�ொலைவில் இருந்த ஒரு புதைப�ொருள் இடத்தைக் கண்டுபிடித்தார், இந்த இடத்தில் 12 கப்பல்கள் அப்படியே புதைக்கப்பட்டிருந்ததை வெளியே க�ொண்டுவந்தார். இந்தக் கப்பல்கள் அனைத்தும் 72 அடி நீளம் க�ொண்டவை. இவற்றின் காலம் பார�ோ கூஃபுவின் காலத்திற்கும் முற்ப்பட்டவைகள் என்று அவர் 74

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கார்டியன் பத்திரிக்கைக்குக் க�ொடுத்த பேட்டியில் ச�ொல்லியிருக்கிறார் - கார்டியன் ரிப்போர்ட் (21, டிசம்பர் 1991). அதாவது இன்றையிலிருந்து சுமார் 6000 வருடங்களுக்கும் முற்பட்டது. இந்த 12 கப்பல்களும் நடுக்கடலில் பயணம் செய்வதற்கென்று கட்டப்பட்ட கப்பல்கள். அனைத்தும் தமிழர்கள் கட்டியவையாகத்தான் இருக்க முடியும். ஆனால் இவற்றை வெளியுலகத்திற்கு ஆணித்தரமாக எடுத்துச் ச�ொல்லத்தான் நமக்கு விதியில்லை. இதற்காக இனிய�ொரு விதியா செய்ய முடியும்! அப்படியா என்று வாயைப் பிளந்து கேட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க ப�ோகவேண்டியதுதான். கூஃபுவின் காலத்தில் உச்சத்தைத் த�ொட்ட பிரமிட் கட்டிடக் கலை அதன் பிறகு வந்த பார�ோ பரம்பரையினரின் காலத்தில் வீழ்ச்சியடைந்துவிட்டது. நாமும் ப�ோதுமான அளவிற்குப் பிரமிட் கட்டிடக் கலையைக் குறித்துத் தெரிந்துக்கொண்டுவிட்டோம். என்னத்தான் எகிப்திய நாகரீகம் பார�ோவின் கல்லறையை அடிப்படையாகக் க�ொண்டதாக இருந்தாலும் இலக்கிய வளர்ச்சியும் அந்த நாகரீகத்தில் ஏற்படாமலில்லை. இது குறித்துத் தெரிந்துக�ொள்ள நாம் பார�ோ அமினமெத் I பற்றித் தெரிந்துக�ொள்ள வேண்டும். இதற்கு நாம் பார�ோ கூஃபு காலத்திலிருந்து சுமார் 600 வருடங்கள் முன்நோக்கி வரவேண்டும். வாருங்கள் செல்வோம்.

நவீனா அலெக்சாண்டர்

75

பார�ோ அமினமெத் I கி.மு. 1938-1908 (12-வது அரச பரம்பரை, இடை அரசாட்சி காலகட்டம்)

பார�ோ அமினமெத் எகிப்தின் பன்னிரெண்டாவது அரச பரம்பரையைத் த�ொடங்கிவைத்தவன். அதாவது நேரடிப் பார�ோ பரம்பரையில் வந்த பார�ோ கிடையாது இவன். பதின�ொராவது அரச பரம்பரையின் கடைசிப் பார�ோவான மென்டோதெப் IV (கி. மு. 1948–1938)-யின் வலது கரமாக இருந்தவன் அமினமெத். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பார�ோவின் நம்பிக்கையைப் பெற்று பார�ோவின் வலது கரமாக இருந்து செயல்படும் அளவிற்கு உயர்ந்தவன். பார�ோ மென்டோதெப் இறந்த பிறகு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்தப் பார�ோவாகத் தன்னை அறிவித்துக்கொண்டு எகிப்தின் 12-வது அரச பரம்பரையைத் த�ொடங்கிவைத்தான் அமினமெத். பப்பைரஸ் ஆவணங்கள் இவன் பார�ோவான விதம் குறித்து ஏதும் நமக்குச் ச�ொல்வதாக இல்லை. இதிலிருந்தே தெரிந்துக�ொள்ளலாம் அமினமெத் சூழ்ச்சி செய்து க�ொல்லைப் புறம் வழியாகத்தான் அரியணை ஏறியிருக்கவேண்டும் என்று. அதற்கேற்றபடி உள் நாட்டிலும் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி, வேலை நிறுத்தம், க�ொள்ளை ப�ோன்ற அமைதியற்ற நிலையும் பஞ்சமும் தலைவிரித்தாடி இருக்கிறது. இப்படியே ப�ோனால் தலையிலிருக்கும் பார�ோ கிரீடத்தை எடுத்துவிட்டுத் துண்டுதான் ப�ோட்டுக்கொள்ள வேண்டும் என்பதை முன் கூட்டியே கணித்துவிட்ட அமினமெத், பாலைவனத்தில் வேட்டையாடி திரிந்துக�ொண்டிருந்த கேய் என்கிற க�ொள்ளையனை நாட்டிற்குள் அழைத்து வந்து அவனுக்குக் கீழ் கூலிப் படையையும் ஏற்பாடு செய்து தன்னுடைய ஆட்சிக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களுடைய குரல்வளையிலேயே குத்துவதற்குத் திரைமறைவு காய் நகர்த்தினான். இதற்குச் சாட்சி ச�ொல்லும் வாசகத்தைக் கேய் தன்னுடைய கல்லறை கற்பலகையில் இப்படிப் ப�ொறித்துவைத்திருக்கிறான், “நான் மேற்குப் பாலை ச�ோலையை வந்தடைந்தேன், அதன் அனைத்துப் பாலைவன வழித்தடங்களையும் தீவிரமாகக் கண்காணித்து, அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்களைப் பிடித்துக்கொண்டு திரும்பினேன்” இத்தோடு நிற்காமல் பதின�ொராவது பார�ோவின் அரசவையில் இருந்த அனைத்து அதிகார வர்க்க ஆட்களையும் ஏறக்கட்டிவிட்டு தன்னுடைய கையாட்களையும் தனக்கு அடிமையாக இருந்து ஆதரவுத் தெரிவித்தவர்களையும் அந்த இடங்களுக்கு நியமித்தான். இதன் மூலம் எகிப்திற்குள் அவனுக்கு எதிராக எத்தகைய புரட்சிய�ோ கிளர்ச்சிய�ோ எதிர்ப்புக் குரல�ோ எழாதபடி செய்துவிட்டான். வினை விதைத்தவனுக்குக் கைய�ோடு வினையையும் அறுவடை செய்யவேண்டியிருக்கும் என்பது தெரியாதா என்ன. அதுவும் உலகின் சக்தி வாய்ந்த அரச கிரீடத்தைச் சூழ்ச்சி செய்து கைப்பற்றிய அமினமெத்துக்குத் தெரியாதா என்ன! தான் பார�ோவாக இருக்கும் ப�ோதே தன்னுடைய மகனான ஸ்னெசுரெட்டை இளைய பார�ோவாக அறிவித்துவிட்டான். தான் பார�ோவின் அரச பரம்பரையில் வந்தவன் 76

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இல்லை என்பதாலும், பார�ோ பதவியைச் சூழ்ச்சி செய்து பெற்றதாலும் தனக்குப் பின் வேறு யாரும் அப்படிச் செய்து தன்னுடைய வாரிசு அடுத்தப் பார�ோ ஆவதைத் தடுத்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தான் பார�ோவாக இருக்கும்போதே தன்னுடைய மகனையும் துணை பார�ோவாக அறிவித்துவிட்டான். எகிப்து இதற்கு முன்பு கண்டிராத சர்வாதிகாரியாகப் பரிணாம வளர்ச்சியடைந்தான் அமினமெத். சூழ்ச்சி மற்றும் சர்வாதிகாரப் ப�ோக்கு இது இரண்டுமே பார�ோ அமினமெத்தின் உயிரைக் குடித்துவிட்டது. ஒரு நாள் இரவு உணவு முடிந்து படுக்கை அறைக்குச் சென்ற அவன் சூழ்ச்சியாளர்களால் படுக�ொலை செய்யப்பட்டான். அடுத்தப் பார�ோவான ஸ்னெசுரெட் தன்னுடைய தந்தையின் படுக�ொலையை மையமாக வைத்து ஒரு கதையை எழுதவைத்து அதை எகிப்து முழுவதும் சுற்றில் விட்டான். ஸ்னெசுரெட்டின் இந்தச் செயலை அதற்கு முன்பு எகிப்து கேள்விப்பட்டிருந்தது கூடக் கிடையாது. ப�ொதுவாகத் துன்பகரமான விசயங்களைப் ப�ொது வெளியில் பேசுவதைக் கேவலம் என்று தடுத்து வைத்திருந்தது அன்றைய எகிப்திய நாகரீகம். இந்தத் தடையை முதல் முறையாக உடைத்தான் ஸ்னெசுரெட். எகிப்து முழுவதும் சுற்றில் விட்ட கதையின் மூலம் தன்னுடைய தந்தை படுக�ொலை செய்யப்பட்டதற்கு எகிப்திய மக்களிடையே அனுதாபத்தை உருவாக்கிவிட்டான். தன்னுடைய தந்தை தியாகிப�ோலவும் அவருடைய வாரிசானத் தான் அவருடைய தியாகத்தை முன்னெடுக்கும் சீடன் ப�ோலவும் அந்தக் கதையின் மூலம் ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பித் தந்தையைக் க�ொன்ற அரண்மனை சூழ்ச்சியாளர்களைக் கதிகலங்கடித்தான். ஸ்னெசுரெட் இப்படி இலக்கியத்தைக் கையிலெடுத்து எகிப்திய மக்களைத் தனக்கு ஆதரவாக மாற்றியது மிகப் பெரிய அரசியல் காய் நகர்த்தல். இவனுடைய இந்தக் காய் நகர்த்தலுக்கு எதிராக எத்தகைய அரசியல் நகர்வையும் செய்ய முடியாமல் அரண்மனை சூழ்ச்சியாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். ஸ்னெசுரெட் இப்படி ஒரு அரசியல் நடவடிக்கையை எடுத்ததற்கும் படுக�ொலை செய்யப்பட்ட அமினமெத்தே முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். அமினமெத் எகிப்தின் 12-வது அரச பரம்பரையைச் சூழ்ச்சியின் மூலம் த�ோற்றுவித்த சர்வாதிகாரியாக இருந்திருந்தாலும் தன்னுடைய சர்வாதிகார அரசவையில் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் க�ொடுத்து எகிப்தின் இலக்கிய வளத்திற்கு ஒரு புதிய த�ொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எந்த ஒரு பார�ோவும் இப்படி அரசவையில் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூடவே வைத்து இலக்கியத்தை வளர்த்தெடுத்ததில்லை. எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்களுடைய கல்லறைகளில் வேலை செய்யும் த�ொழிலாள கூலிகளில் ஒரு கூட்டம் என்கிற அளவிலேயே வைத்திருந்தார்கள். இந்த அபத்தப்போக்கை முதன் முதலில் உடைத்தவன் அமினமெத். தனக்கு மகிழ்ச்சித் தரக் கூடிய பல கதைகளையும் கவிதைகளையும் இயற்றும்படி எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உற்சாகப்படுத்தினான். இலக்கியப் படைப்புகளின் வீரியத்தை, மக்களிடையே அவை செலுத்தும் தாக்கத்தை முழுதாக உணர்ந்துக�ொண்ட அமினமெத் அத்தகைய படைப்புகளைத் தன்னைப் பற்றிப் பிரச்சாரம் செய்யும் சக்தி மிக்கச் சாதனமாகவும் மாற்றிக்கொண்டுவிட்டான். இதற்கு ஒரு உதாரணம் அவனுடைய அரசவை எழுத்தாளர்கள் எழுதிய தி பிராபசிஸ் ஆப் நெஃப்ர்டி என்கிற படைப்பு. இதில் அவன் தன்னை எகிப்தை மீட்க வந்த மீட்பராகவும், வானியலின் வெற்றியாளனாகவும் காட்டிக்கொண்டான். கீழே இருக்கும் வாக்கியங்கள் தி பிராபசிஸ் ஆப் நெஃப்ர்டி படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. தெற்கிலிருந்து ஒரு அரசன் வருவான் ஆம்னே, நியாயாதிபதி, அவனுடைப் பெயர்… பிறகு ஒழுங்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும், நவீனா அலெக்சாண்டர்

77

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

குழப்பங்கள் விரட்டி அடிக்கப்படும். தந்தையின் வழியை அப்படியே பிடித்துக்கொண்ட ஸ்னெசுரெட் தந்தையின் படுக�ொலையை மையமாக வைத்து எழுதியது தி டேல் ஆப் சினுஹெ. இந்தக் கதை இவனுக்குப் பிறகு வந்த பல பார�ோக்களின் காலங்களிலும் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. அன்றைய எகிப்தியர்கள் மத்தியில் பல தலைமுறைகளுக்குத் திரும்பத் திரும்ப மக்களால் விரும்பிப் படிக்கப்பட்ட கதை தி டேல் ஆப் சினுஹெ. எகிப்திய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் க�ொண்டுவந்தவர்கள் அமினமெத்தும் ஸ்னெசுரெட்டும். இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிரமிடுகள் முளைவிட்டிருக்கும் பாலைவனம்தான் நமக்கு இப்பொழுது பழகிவிட்டதே. அதனால் இரவு க�ொண்டுவரும் குளிரைச் சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு இந்நேரம் நான் ச�ொல்லாமலேயே அத்துப்பட்டியாகியிருக்குமே. ஆம் சுள்ளிப் ப�ொறுக்கி வாருங்கள் தீ மூட்டுவ�ோம். அந்தத் தீயின் கதகதப்பில் எகிப்திய நாகரீகம் அன்னியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற உதவிய பார�ோ குறித்துச் ச�ொல்கிறேன். அந்தப் பார�ோவின் பெயர் ஆம�ோஸ்.

78

நவீனா அலெக்சாண்டர்

பார�ோ ஆம�ோஸ் I கி.மு. 1539 – 1514 (18-வது அரச பரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

பன்னிரெண்டாவது அரச பரம்பரையின் முடிவில் அதாவது கி.மு. 1630-களுக்கு முன்பு கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்த மக்களினம் ஒன்று எகிப்தின் வடக்குப் பகுதிகளில் குடியேறியது. இவர்களை வரலாற்றுப் பதிவுகள் ஹிக்சோஸ் என்று அழைக்கிறது. இந்த மக்களினத்தின் பூர்வீகம் எதுவாக இருக்கும் என்று இந்த நிமிடம் வரை ஆராய்ச்சிகள் நடந்துக�ொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டங்களில் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மிக வலிமையான நாகரீகமாக இருந்தது திராவிட நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகம். சமயம், சமூகம், ப�ொருளாதாரம், இராணுவம், த�ொழில் நுட்பம் என்று அனைத்து நிலைகளிலும் பல படிகள் வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தவர்கள் சிந்து சமவெளி திராவிடர்கள். சிந்து சமவெளி திராவிடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் நகர விரிவாக்கம் செய்தபடி இருந்திருக்கிறார்கள். இந்த நகர விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சிந்து சமவெளி திராவிடர்கள் கி.மு. 1630-களில் எகிப்தின் வடக்குப் பகுதிகளில் வந்து குடியேறி நகர மற்றும் நாடு உருவாக்கம் செய்திருக்கவேண்டும். மேலும் சிந்து சமவெளி நகரங்களான அரப்பா மற்றும் ம�ொகஞ்சதார�ோ ப�ோன்றவை கி.மு.1700-கள் வாக்கில் அழியத் த�ொடங்கியிருக்கிறது. இதற்குச் சிந்து நதியின் வெள்ளப் பெருக்குக் காரணமாக இருக்கலாம் என்று இன்றைய த�ொல்லியல் ஆராய்ச்சிகள் ச�ொல்கின்றன. சிந்து நதியின் வெள்ளப் பெருக்குக் காரணமாக இந்த நகரங்களைக் கைவிட்ட சில சிந்துவெளி திராவிட மக்கள் மேலும் மேற்கு ந�ோக்கி நகர்ந்து மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து சிந்துவெளிப் பகுதிகள் ப�ோன்றே செழிப்பான எகிப்தின் வடக்கு டெல்டாப் பகுதிகளில் குடியேறி தங்களுக்கான புதிய அரசை நிறுவியிருக்கவேண்டும். பின்னாட்களில் இவர்கள் எகிப்தியர்களுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கினார்கள். அடுத்த நூறு ஆண்டுகளில் இவர்கள் எகிப்தின் தீப்ஸ் நகரம் வரை தங்களுடைய ஆட்சியதிகாரத்தை விரிவாக்கம் செய்துவிட்டார்கள். இதற்குக் காரணம் இவர்களிடமிருந்த வளர்ச்சிபெற்ற இராணுவத் த�ொழில் நுட்பங்கள். ஹிக்சோஸ்கள் வலிமைப்பெற்ற இந்த நூறு ஆண்டுகளில் எகிப்தில் ஐந்து பார�ோ அரச பரம்பரைகள் வந்துப்போய் விட்டன. ஆனால் எந்த அரசப் பரம்பரையின் பார�ோவும் ஹிக்சோஸ்களை எதிர்க்கும் அளவிற்கு இராணுவ பலம் பெற்றவர்களாக இருக்கவில்லை. பார�ோ பதவியைப் பிடிப்பதில் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டதால் வடக்குத் திசையில் வலுப்பெற்று வந்த ஹிக்சோஸ்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இது ஹிக்சோஸ்களுக்கு வசதியாகப் ப�ோய்விட எகிப்தின் பெரும்பான்மையான வடக்குப் பகுதி அவர்கள் வசமாகிப்போனது. அதாவது ஒட்டும�ொத்த எகிப்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு ஹிக்சோஸ்களின் ஆட்சியின் கீழ். எகிப்திய குடிமக்கள் ஹிக்சோஸ்களுக்கு வரிக்கட்டும் அளவிற்குப் ப�ோய்விட்டது நிலைமை. இந்த நிலைக்கு ஒரு முடிவுக் க�ொண்டுவர துணிந்த ஒரே பார�ோ 79

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

பதினேழாம் அரச பரம்பரையின் இறுதிப் பார�ோவான காம�ோஸ் கி.மு. 1542 – 1539. பார�ோ காம�ோஸ் பதவியேற்றப�ோது வடக்கில் ஹிக்சோஸ்களும் தெற்கில் குஷைட்களும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு பலம் ப�ொருந்திய எதிரிகளையும் எதிர்க்கத் துணியாத காம�ோஸ் ஒப்பீட்டளவில் எந்த எதிரி பலம் குறைந்தவனாக இருக்கக் கூடும் என்று கணித்துத் தெற்கில் இருந்த குஷைட்களைத் தாக்க முடிவு செய்தான். எகிப்தின் தெற்கில் பாதுகாப்பு அரணாக இருந்த க�ோட்டை பூஹென். இதைக் குஷைட்டுகள் பிடித்துக்கொண்டதால் இதை முதலில் மீட்பது என்கிற திட்டத்துடன் தன்னுடைய இராணுவத்தைத் தெற்கு ந�ோக்கி நகர்த்தினான் காம�ோஸ். இது நடந்தது அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில். பூஹென் க�ோட்டையின் குடியானவர்கள் எகிப்தியர்கள் என்பதால் எல்லா வகையிலும் காம�ோசின் இராணுவத்திற்கு உதவி செய்து அவன் இந்தக் க�ோட்டையைப் பிடிக்கப் பெரும் உதவி செய்தார்கள். இந்த முக்கிய வெற்றிக்குப் பிறகு அவன் குறிவைத்தது எகிப்தின் வடக்கிலிருந்த ஹிக்சோஸ்களை. ஹிக்சோஸ்களைத் தாக்க அவன் வகுத்த ப�ோர் தந்திரம் எதிர்பாராத தாக்குதல். எதிர்பாராத தாக்குதல் செய்யும் அதே வேகத்தில் பின் வாங்கிவிடுவது. இதுதான் அவனுடைய ப�ோர் திட்டம். திட்டம் வகுத்துவிட்டு வெட்டியாக நேரத்தைக் கடத்த அவன் விரும்பவில்லை. எகிப்தின் வடக்கு ந�ோக்கி தன்னுடைய இராணுவத்தை நகர்த்தினான். இதை அவனுடைய வார்த்தைகளிலேயே இத�ோ கேளுங்கள், “அமூன் கடவுளின் கட்டளைப்படி தெற்காசியர்களை விரட்டியடிக்க வெற்றி வேந்தனாக நான் நைல் நதியில் பயணித்தேன்….நெருப்பு பிழம்புகளாக எனக்கு முன்பாக என்னுடைய வீரம் மிகுந்த படை.” அவனுடைய முதல் இலக்கு நெஃரூசி நகரம். விடியற் காலையின் முதல் சூரிய கிரணத்தின் வெளிச்சம் ச�ோம்பல் முறித்துக்கொண்டு கீழ் வானத்திற்கு அடியிலிருந்து எட்டிப்பார்க்கும் வேலையில் காம�ோசின் இராணுவம் நெஃரூசி நகரத்தின் தலையில் இடியை இறக்கியது. இந்தத் தாக்குதல் குறித்தும் காம�ோசின் வார்த்தைகளிலேயே இத�ோ, “பருந்துப�ோல நான் அவன் சூழ்ந்துக�ொண்டேன்.… இறையைக் கவ்வி இழுத்துச் செல்லும் சிங்கத்தைப்போல எனது படைகள் எதிரிகளைச் சின்னாபின்னமாக்கினார்கள்” சந்தேகமேயில்லாமல் நெஃரூசி நகரவாசிகளைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது காம�ோசின் படை. தாக்கி சின்னாபின்னமாக்கிய அதே வேகத்தில் எகிப்திற்குள் திரும்பியும் விட்டது காம�ோசின் படை. இந்த எதிர்பாராத தாக்குதலின் வேகமும் அழிப்பின் வீரியமும் ஹிக்சோஸ்களைக் கதிகலங்கடித்துவிட்டது. இதன் பிறகு மீண்டும் ஒரு தாக்குதலை நைல் நதியின் வழியே ஹிக்சோஸ்கள் மீது நடத்தினான் ஆனால் இந்த முறை வெற்றி தேவதை அவன் பக்கம் இருக்கமாட்டேன் என்று க�ோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் காம�ோஸ் த�ோல்வியுடன் தீப்ஸ் திரும்பினான். இவனுடைய இந்த வெற்றியும் த�ோல்வியும் இப்ட்சட் நகரில் இருக்கும் அமூன் க�ோயிலில் கல்வெட்டாகப் ப�ொறிக்கப்பட்டிருக்கிறது. இவனுடன் க�ோபித்துக்கொண்டு ப�ோன வெற்றி தேவதை சும்மாயில்லாமல் மரணத் தேவதையைப் பிடித்துக் காம�ோசிடம் அனுப்பிவிட்டால். கி.மு. 1539-ஆம் வருடம் காம�ோஸ் மரணத் தேவதையின் பாசக் கரங்களைப் பிடித்துக்கொண்டு பரல�ோகத்திற்குச் சென்றுவிட்டான். அவன் எப்படி இறந்தான் என்பது குறித்த எத்தகைய வரலாற்றுத் தகவல்களும் இன்றைக்கு நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்தப் பார�ோவாகப் பதவியேற்றவன் சிறுவனான ஆம�ோஸ். ஆம�ோசின் தாய் ஆவ�ோதெப் கிரேக்க மின்னோவன் பகுதியைச் சேர்ந்த இளவரசன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்ததாக இப்ட்சட் நகரிலிருக்கும் அமூன் க�ோயில் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஆக ஆம�ோஸ் எகிப்திய பார�ோ அரச பரம்பரையில் வந்தவனாகத் தெரிகிறது. ஆம�ோஸ் பார�ோவாகப் பதவியேற்றப�ோது சிறுவனாக இருந்ததால் அவனுடைய தாய் ஆவ�ோதெப் அவனுக்குப் பதிலாக எகிப்தின் அரசவை நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டாள். ஆம�ோஸ் பார�ோவாகச் செயல்படுவதற்கான வயதை அடைந்ததும் ஆவ�ோதெப் ஆட்சியை 80

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அவன் ப�ொறுப்பில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டிருக்கிறாள். பார�ோ ஆம�ோஸ் எகிப்தின் 18-வது அரச பரம்பரையைத் த�ொடங்கிவைத்தான். இவனுக்கு முன்பே எகிப்தின் தெற்கிலிருந்த குஷைட்கள் த�ோற்கடிக்கப்பட்டு அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதால் எகிப்தின் தெற்குப் பகுதி அன்னியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டிருந்தது. இருந்தும் எகிப்தின் பெரும் பகுதியை ஹிக்சோஸ்கள் தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். ஹிக்சோஸ்கள் மீதான இறுதியான அதே சமயத்தில் உறுதியான தாக்குதலை த�ொடங்கிவைத்தான் ஆம�ோஸ். இந்தத் தாக்குதல்களில் ஆம�ோசுக்கு பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது எகிப்தியர்களின் கப்பல் படையே. ஹிக்சோஸ்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கும் மேலாக அன்னியர்களின் ஆட்சியின் கீழிருந்த எகிப்தியர்களை மீட்டெடுத்த பெருமையை முழுமையாகத் தனதாக்கிக்கொண்டான் ஆம�ோஸ். ஆம�ோசின் இந்த வெற்றி கிட்டத்தட்ட முதல் பார�ோவான நார்மரின் செயலுக்கு ஒப்பானதாகப் பிற்காலப் பார�ோக்களால் ப�ோற்றப்பட்டிருக்கிறது. எகிப்திய நாகரீக வரலாற்றிலும் இந்த வெற்றியானது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்துவிட முடியுமா என்ன. அதே ப�ோலப் பெண் ஆளுமைகள் இல்லாத எகிப்திய நாகரீகத்தையும் கற்பனை செய்துவிட முடியாது. எகிப்திய பெண் ஆளுமைகளிலேயே உச்சப் புகழையும் பெயரையும் பெற்ற ஒரு பெண் குறித்துத்தான் அடுத்து உங்களுக்குச் ச�ொல்லப்போகிறேன். இவரைப் பெண் பார�ோ என்று ச�ொன்னாலும் அது வரலாற்றுப் பிழையாகாது. அந்தப் பெண்ணின் பெயர் ஹெத்செப்சத்.

நவீனா அலெக்சாண்டர்

81

ஹெத்செப்சத் கி.மு. 1473 – 1458 (18-வது அரச பரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

ஹெத்செப்த் பற்றித் தெரிந்துக�ொள்வதற்கு முன்பாக அவளுடைய தந்தையான பார�ோ துத்மோஸ் I குறித்துத் தெரிந்துக�ொள்வது மிக அவசியமானது. ப�ோன அத்தியாயத்தில் நாம் பார்த்த பார�ோ ஆம�ோசின் மகன் பார�ோ அமன�ோதெப் I. அமன�ோதெப்பிற்கு வாரிசு என்கிற வகையில் புழுப் பூச்சிக்கூட உண்டாகாததால் அவன் ஒரு ஈக்கட்டான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவு அவனுக்குப் பிறகான வாரிசு யார் என்று அறிவிப்பது. இதற்கு அமன�ோதெப் எடுத்த முடிவு யாரையாவது தன்னுடைய வாரிசாகத் தத்துயெடுத்துக் க�ொள்வது என்பது. அதன்படி தன்னுடைய தளபதிகளில் மிக அற்புதமான தலைமைத் திறனும் ப�ோர் குணமும் க�ொண்ட துத்மோஸ் I-யை பார�ோவுக்கான அடுத்த வாரிசாக அறிவித்தான் அமன�ோதெப். துத்மோஸ் I சாதாரண நிலையிலிருந்து உயர்ந்தப் பதவிக்கு வந்தவன். அதனால் அவனை அடுத்தப் பார�ோவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் அரண்மனையில் சூழ்ச்சிகள் உருவானது. துத்மோஸ் அரண்மனை சூழ்ச்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு அடுத்தப் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டான். எகிப்தின் நான்கு எல்லைகளையும் தாண்டி தூரக் கிழக்கு நாடுகளிலும் தெற்கு ஆப்பிரிக்க எல்லைகளிலும் எகிப்து வல்லரசாக மாறியது இவனுடைய ஆட்சியின் கீழ்தான். தெற்கில் நுபியாவைக் கடந்தும் வடக்கில் டைகிரீஸ், யூப்பிரடிஸ் நதிப் பகுதி நாடுகளையும் கடந்து எகிப்தின் எல்லையை விரிவாக்கியவன் துத்மோஸ். எகிப்தின் நான்கு திசைகளிலும் இவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எதிரிகள் தெறித்து ஓடும் அளவிற்கு இராணுவ வெற்றிகளை அள்ளிக் குவித்தான். எகிப்தில் பார�ோ அரச பரம்பரை ஆட்சித் த�ொடங்கி 1500 வருடங்கள் கழித்து எகிப்தை உலகின் வல்லரசு நாடாக மாற்றிக்காட்டினான் அவன். இத்தகைய வல்லமைப் படைத்த துத்மோசுக்கு முதல் மகளாகப் பிறந்தவள் ஹெத்செப்த். தந்தையின் துணிச்சல் மற்றும் மன வலிமையில் பாதிக் கூடவா அவளுக்கு இல்லாமலிருந்திருக்கும். இருந்தது. துத்மோசின் துணிச்சலும் மன வலிமையும் அச்சரம் பிசகாமல் அவளுக்கும் இருந்தது. ஹெத்செப்த்தின் வாழ் நாள் கனவே தன்னுடைய தந்தைக்குப் பிறகு எகிப்திய வல்லரசின் அடுத்தப் பார�ோவாகத் தான் பதவியேற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். ஆனால் அவளுடைய கனவு பலிக்கத்தான் எகிப்தில் வாய்ப்பில்லாமல் இருந்தது. எகிப்திய பார�ோ சித்தாந்தத்தைப் ப�ொறுத்தவரையில் இந்தப் புவியில் கடவுளின் பிரதியாக ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். பெண்கள் ஆண் பார�ோக்களின் ஆட்சிக்கு உதவியாக வேண்டுமானால் இருக்கலாம். அப்படித்தான் ஹெத்செப்த்துக்கு முற்பட்ட காலங்களில் நடந்திருக்கிறது. இந்தச் சித்தாந்தத்தை எப்படியாவது உடைத்துவிட்டுத் தான் அடுத்தப் பார�ோவாக வந்துவிடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தாள் ஹெத்செப்த். ஆனால் துத்மோஸ் இறந்த பிறகு அவனுடைய மகனான - ஹெத்செப்த்தின் தம்பியுமான 82

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

- துட்மோஸ் II-விற்குப் பார�ோ முடி சூட்டப்பட்டது. துட்மோஸ் II-வே ஹெத்செப்த்தின் கணவனும் கூட. துட்மோஸ் II இள வயதிலேயே இறந்துவிடப் பார�ோ பதவி காலியானது. துட்மோஸ் II-விற்கும் ஹெத்செப்த்திற்கும் ஆண் வாரிசு பிறக்கவில்லை. ஆனால் மற்றொரு மனைவியின் மூலம் துட்மோஸ் II என்கிற ஆண் வாரிசு ஒன்று இருந்தது. ஆனால் அந்த ஆண் வாரிசு கைக் குழந்தையாக இருந்தபடியால் அடுத்தப் பார�ோ யார் என்கிற குழப்பம் தென்படத் த�ொடங்கியது. ஹெத்செப்த் மிகச் சரியாக இந்தக் குழப்பம் ஏற்படுத்திய சூழ்நிலையைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டாள். எகிப்து கண்ட முதல் பெண் பார�ோவாகத் தன்னை அறிவித்துக்கொண்டாள் ஹெத்செப்த். அதுவரை ஆண் பார�ோக்களுக்கே பழகியிருந்த அரச இயந்திரம் முதல் முறையாக அதிகாரப் பூர்வப் பெண் பார�ோவிற்குக் கீழ் இயங்கப் பழகிக்கொள்ள வேண்டியதானது. அவளுக்கு எதிராக அரண்மனைத் த�ொடங்கி அனைத்து மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக் குரல்களை ஒன்றுமில்லாமல் ஆக்கினாள். அவளுடைய தந்தை ஏற்கனவே எகிப்தை உலகின் வல்லரசு நாடாக மாற்றிவிட்டிருந்ததால் அவள் மேற்கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தி எகிப்தின் எல்லைகளை மேலும் மேலும் விரிவாக்கவேண்டிய அவசியமில்லாமல் ப�ோயிற்று. இதன் காரணமாக அவளுடைய கவனம் உள் நாட்டில் பல பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியெழுப்புவதில் திரும்பியது. நான் ஏற்கனவே பார்த்த பார�ோ ராமேசிஸ்சிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டும் காரியத்தைச் செய்தவள் ஹெத்செப்த். இப்படிக் கணக்கெயில்லாமல் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே ப�ோகிறாளே அராஜகமால்ல இருக்கு என்று பார்ப்பவர்கள் முனுமுனுக்கும் அளவிற்கு வடக்கில் சீனாய் மலைத் த�ொடங்கித் தெற்கே நுபியாவில் இருக்கும் பூஹென் க�ோட்டைவரை ஹெத்செப்த்தின் பிரம்மாண்ட கட்டிடங்களின் அணிவகுப்புதான். இதில் குறிப்பாக அவள் கவனம் செலுத்தியது தீப்ஸ் நகரில்தான். தீப்ஸ் நகரின் இப்ட்சட் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற அமூன்-ரா க�ோயிலின் அமைப்பையே தலை கீழாகப் புறட்டிப்போட்டுவிட்டாள். அமூன்-ரா க�ோயில் நினைத்தே பார்க்க முடியாத பிரம்மாண்டத் த�ோற்றத்தை பெற்றது. க�ோயிலின் நுழைவாயிலில் அவளுடைய ஆறு மிக மிகப் பெரிய உருவச் சிலையை நிற்கவைத்தால். அதுவும் அவளுடைய கண்களை நிறைவாக்காததால் விண்ணைத்தொடும் மூன்று ஆப்லிஸ்க்குகள் க�ொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இந்த மூன்றில் ஒரு ஆப்லிஸ்கின் கீழ்ப் பகுதியில் தன்னைக் குறித்து இப்படிக் கல்வெட்டாகப் ப�ொறித்துவைத்திருக்கிறாள், “மனம் முழுக்க நிறைந்திருக்கும் அன்புடன் இந்தக் காரியத்தை எனது தந்தை அமூனுக்காகச் செய்திருக்கிறேன்….இனி வரும் எதிர்காலச் சந்ததி இதை உணர்ந்துக�ொள்ளும்படி அழைக்கிறேன், இந்த நினைவுச் சின்னத்தை எனது தந்தைக்காக நான் உருவாக்கியதை அவர்கள் மனதில் நிறுத்துவார்களாக.…நான் அரண்மனையில் உட்கார்ந்திருக்கும் சமயம் ஒன்றில் என்னை உருவாக்கியவரைக் குறித்து நினைத்துப் பார்த்தேன். எனது மனம் அவருக்கு என்று ச�ொர்கத்தைத் த�ொடும் உயரம் க�ொண்ட இரண்டு ஆப்லிஸ்குகளைக் கட்டும்படி கட்டையிட்டது.…இனி வருங்காலத்தில் வரும் சந்ததி என்னுடைய இந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்து என்ன ச�ொல்வார்கள் என்பதைக் குறித்தும் நான் செய்த இந்தக் காரியத்தைக் குறித்து எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பதைக் குறித்தும் நினைத்துப் பார்த்து என்னுடைய மனம் அலைபாய்கிறது.… இங்கே நான் கூறியிருப்பதை யாரும் மிகையானது என்று அறிவிக்க வேண்டாம்.” இப்ட்சடில் அவள் கட்டிய பிரம்மாண்ட கட்டிடங்களையெல்லாம் தூக்கி சாப்பிடக் கூடியவை டையர் எல்-பாரி பகுதியில் அவள் கட்டிய க�ோயில் கட்டிடங்கள். இந்தப் பகுதி அத்தோர் தாய் கடவுளுக்குப் பெயர் ப�ோன பகுதி. இந்தப் பகுதியில் அவள் கட்டிய அந்த அட்டகாசமான க�ோயிலின் பெயர் ஹெத்செப்சத் ஜிசர்-ஜிசரு. இந்தக் க�ோயிலில் அமூன், ரா, நவீனா அலெக்சாண்டர்

83

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அனுபிஸ் மற்றும் அத்தோர் கடவுள்களுக்கான தனித் தனியான கருவறையும், அவளுடைய தந்தை துத்மோஸ் I-கான கருவறையும், அவளுக்கான கருவறையும் இருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான க�ோயிலைக் கட்டி முடிக்க 13 வருடங்கள் ஆகியிருக்கிறது. இன்றைக்கும் எகிப்தியக் க�ோயில் கட்டிடக் கலையில் தனித்தும் பார்ப்பவர்களைக் கிரங்கடிக்கக் கூடியதாகவும் இருக்கிறது டையர் எல்-பாரியில் அவள் கட்டிய க�ோயில். க�ோயில் கட்டிடக் கலையில் ஒரு புதிய த�ொடக்கத்தையும் மாற்றத்தையும் ஒருசேர உண்டாக்கி அடுத்து வரவிருந்த பல தலைமுறைகளின் க�ோயில் கட்டிடக் கலையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது ஹெத்செப்சத் ஜிசர்-ஜிசரு. இந்தக் க�ோயிலுக்கு முன் ஐந்நூறு அடிகள் த�ொலைவிற்கு இரு பக்கமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெத்செப் தலைக்கொண்ட ஸ்பிங்ஸ் மிருக சிலைகள் இருக்கின்றன. ப�ொது வெளியில் ஆளுமைக் க�ொண்டவளாக ஒரு பெண் திகழ்ந்தாலும் சமூகம் அவளைச் சாதாரண இயல்புகள் க�ொண்ட பெண்ணாகத்தான் பார்க்கும். அதிலும் ஆணாதிக்க வெறியும், ப�ொறாமை புகையும் க�ொண்ட மனங்கள் அவள் மீது அவதூறுகளைப் பரப்பாமல் இருந்துவிடுமா என்ன. பெண் மீது கள்ளத் த�ொடர்பு அவதூறு பரப்புவதில்தானே கள்ள மனங்களுக்குக் களியாட்ட மகிழ்ச்சி. ஹெத்செப்த் மீதும் இப்படிய�ொரு கள்ளத் த�ொடர்பு அவதூறு உண்டு. பப்பைரஸ் ஆவணங்கள் இதைப் பற்றி ஏதும் ச�ொல்லவில்லை என்றாலும் ஹெத்செப்த் டையர் எல்-பாரியில் கட்டிய சில கட்டிடங்கள் இது பற்றி மறைமுகமாகப் பேசுகிறது. ஹெத்செப்த்தின் இரகசிய காதலனாக இருக்கலாம் என்று அறியப்படுபவன் செனின்முத். அரண்மனை பப்பைரஸ் ஆவணங்கள் செனின்முத் மிகச் சிறந்த படிப்பாளி மற்றும் கலா இரசிகன் என்று நமக்கு அவனைக் குறித்து அறிமுகப் படுத்துகிறது. இவனுடைய இந்தப் படிப்பாளுமை ஹெத்செப்த்தை கவர்ந்த காரணத்தால் அவளுடைய மகளின் ஆசானாகச் செனின்முத் நியமிக்கப்படுகிறான். ஆனால் உண்மையில் செனின்முத், ஹெத்செப்த்தின் அரசவையில் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறான். எகிப்தைப் ப�ொறுத்தவரையில் ஒரு நபர், பார�ோவின் அரசவையில் செல்வாக்கு செலுத்தியவராக இருந்தாரா என்பதை அவர் கட்டும் கட்டிடங்களை வைத்தும், பார�ோவின் கல்லறைக் க�ோயில் கட்டிட வளாகத்தில் அந்தக் குறிப்பிட்ட நபருக்கும் கல்லறை க�ோயில் கட்டிக்கொள்ளும் அனுமதியும் க�ோயிலும் இருந்ததா என்பதை வைத்தே மிக எளிதாகக் கணித்துவிடலாம். டையர் எல்-பாரியில் ஹெத்செப்த் கட்டிய கட்டிடங்களுக்கு அருகிலேயே செனின்முத் அவனுக்கென்று கட்டிக்கொண்ட கல்லறையும், கல்லறை க�ோயில் கட்டிடங்களும் இருக்கின்றன. இந்தக் கட்டிடங்களில் இருக்கும் சில கல்வெட்டுக்கள், ஹெத்செப்த் எகிப்து முழுவதும் கட்டிய கட்டிடங்களும் முக்கியமாக டையர் எல்-பாரியில் எழுப்பிய கட்டிடங்கள் அனைத்தும் இவனுடைய இரசனையின் வெளிப்பாடு என்று ச�ொல்கின்றன. இந்த அனைத்துக் கட்டிடங்களின் கட்டுமான வேலைகளையும் அடி முதல் முடிவரை தன்னுடைய முழக் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறான் செனின்முத். இந்தச் செயல்பாடுகள் அன்றைய எகிப்து முழுவதும் இருவருக்கும் இடையில் ‘அது’ப்பா என்று ஊரறிந்த இரகசியமாகக் கிசுகிசுக்க வைத்திருக்கிறது. இந்தக் கிசுகிசுப்பிற்கு வரலாற்று ஆதாரமாக டையர் எல்-பாரியில் செனின்முத் அவனுக்கென்று கட்டிக் க�ொண்ட ஒரு கட்டிடத்திலிருக்கும் ஓவியத்தைக் காட்டுகிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். அந்த ஓவியத்தில் இரண்டு உருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஆண் மற்றதுப் பெண். இரண்டு உருவங்களும் மிக நெருக்கமாக இருக்கின்றன. நெருக்கமாக என்றால் ‘நெருக்கமாகத்தான்’. இந்த ஓவியம் குறித்துச் செனின்முத்தே கூட அறியாமல்தான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் இது எவர் கண்ணிலும் பட முடியாத இடத்திலிருக்கிறது. மற்றொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தப�ோது எதேச்சையாக இந்த ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். செனின்முத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அவனுடைய கட்டிடத்தில் வேலை செய்துக�ொண்டிருந்த ஓவியர்கள், ஓய்வாக உட்கார்ந்து ஊர் கதைப் பேசுகின்ற சமயம் ஒன்றின்போது விளையாட்டாக இந்த 84

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஓவியத்தை வரைந்து பார்த்து தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்திருக்கலாம் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி ஒரு சுவாரசியமான விளக்கம் தருகிறார்கள். இரகசியக் காதலன் என்கிற அளவில் ஹெத்செப்த்திடம் மிக நெருக்கமாக இருந்த செனின்முத் பல ஆண்டுகள் கழித்து எத்தகைய அடையாளமும் இல்லாமல் திடீரென்று வரலாற்றின் கண்களிலிருந்து மறைந்துப்போய்விட்டான். எகிப்தின் முதல் பெண் பார�ோவாக இருந்த வலிமைப் படைத்த நபருக்கு மிக நெருக்கமான ஒரு நபர் எப்படி எத்தகைய வரலாற்றுச் சுவடுகளும் இல்லாமல் காணாமல் ப�ோக முடியும் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிலர், ஹெத்செப்த்திற்கு அவன் மீதிருந்த ம�ோகம் தீர்ந்துவிட்ட காரணத்தால் அவன் மிகச் செல்வாக்கான நிலையிலிருந்து சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். சிலர், அவனே அரசாங்க காரியங்களிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டிருக்கலாம் என்கிறார்கள். சிலர், அவன் இயற்கையாக மரணமடைந்துவிட்டிருக்கலாம் என்கிறார்கள். எது எப்படிய�ோ செனின்முத் வந்த சுவடும் ப�ோன சுவடும் தெரியாமல் இருந்தாலும் அவன் இருந்த சுவடு மட்டும் அவனுடைய கட்டிடங்கள் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது. இவன் ப�ோன சுவடுதான் தெரியவில்லை அது சாமானியனுக்கு நேரும் விதி என்றால் ஹெத்செப்த்திற்கு இறுதியில் என்ன ஆனது என்பது கூட வரலாற்றின் கண்களிலிருந்து மறைந்தே இருக்கிறது. இது பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு பார�ோவாக ஹெத்செப்த் செய்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தைப் பார்த்துவிடலாம். புண்ட் என்கிற இடம் குறித்து அறிந்துக�ொள்வதில் இன்றையிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த மக்களினம் அனைத்திற்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருந்தது. எகிப்தியர்களுக்கும் அந்த ஆசை இருந்திருக்கிறது. ஹெத்செப்த்திற்கு முன்பு எந்த ஒரு பார�ோவும் இந்த ஆசையை நிறைவேற்றும் காரியத்தில் ஈடுபடவில்லை. எகிப்தை வல்லரசாக மாற்றிய ஹெத்செப்த்தின் தந்தையான துட்மோஸ் I கூட இந்த ஆசையை நிறைவேற்ற ஏதும் செய்யவில்லை. ஹெத்செப்த் இந்த ஆசையை நிறைவேற்றி வரலாற்றில் தனக்கென ஒரு நீங்காத இடம் பிடிப்பது என்று முடிவு செய்திருக்கவேண்டும். புண்ட் நிலம் எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடித்து அந்த நில மக்களுடன் வணிகத் த�ொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டால் ஹெத்செப்த். அவள் உள்நாட்டில் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டும் காரியத்தில் மிகுந்த கவனம் செலுத்தினாலும் வெளியுறவுக் க�ொள்கையைக் கண்டுக�ொள்ளாமல் விட்டுவிடவில்லை. அவளுக்கு முன்பு எந்த ஒரு பார�ோவும் செய்திடாத அளவிற்கு உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு வணிகத்தை மிகப் பெரும் அளவில் வளர்த்தெடுத்தால் ஹெத்செப்த். இதன் காரணமாக எகிப்தில் ப�ொருளாதாரம் மிகச் சிறந்த இடத்திலிருந்தது. எகிப்தில் பணப் புழக்கம் கரை புரண்டு ஓடியது. ஆபத்தை ஏற்படுத்தாத வகையில்தான். அவள் பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே ப�ோனதற்கு இதுவும் ஒரு காரணம். ஹெத்செப்த்தின் ஆட்சியை எகிப்தின் ப�ொற்காலங்களில் ஒன்று என்று கூடச் ச�ொல்லலாம். வெளிநாட்டு வணிகத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே புண்ட் நிலத்திற்கான தேடல் பயணமும். புண்ட் நிலப் பகுதி எங்கிருந்தது அல்லது அது இன்றைக்கு எந்தப் பகுதியாக இருக்கும் என்பதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே மிகப் பெரும் அக்கப்போரே நடந்துவருகிறது. அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வணிகப் ப�ொருட்களாகத் தரப்படும் ப�ொருட்களின் பெயரை வைத்து அந்த நிலம் தென்னிந்தியப் பகுதியாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அனுமானம் மட்டுமே இது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஹெத்செப் தன் நேரடி ஆணையின் கீழ் அனுப்பிவைத்த வணிகக் குழு புண்ட் நிலத்தைக் கண்டுபிடித்து அடைந்து மீண்டும் எகிப்திற்குத் திரும்பிய கப்பலில் பல அரிதான - எகிப்தியர்கள் அதுவரை கண்டிராத - பல ப�ொருட்களை எடுத்து வந்து ஹெத்செப்த்திடம் க�ொடுத்ததாக டையர் எல்-பாரியில் இருக்கும் ஒரு கட்டிடக் கல்வெட்டு ஓவியம் நமக்குத் தெரிவிக்கிறது. ஹெத்செப்த்தின் இந்த வரலாற்று வெற்றி, அவளுடைய தந்தை உருவாக்கிய நவீனா அலெக்சாண்டர்

85

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

எகிப்திய வல்லரசு எல்லாவகையிலும் வல்லரசுதான் என்கிற செய்தியை உலக நாடுகளின் மனங்களில் ஆணியாக அடித்து இறக்கியது. இத்தகைய அரசியல் வெற்றிகள் ஹெத்செப்த்தை தான் ஒரு ஆண் பார�ோ ப�ோன்றவள் என்றே உணரவைத்திருக்கிறது. அவளுடைய பல புடைப்புச் சிற்பங்களும் ஆளுயர சிலைகளும் ஆணின் உடலமைப்பிலேயே இருக்கிறது. இது ஆணுக்குத் தான் எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை என்கிற செய்தியை அவளுக்கு எதிராக ந�ொள்ளை ந�ொரநாட்டியம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்குக் க�ொடுத்தபடி இருந்திருக்கிறது. ‘என்னாது பார�ோ ஒரு ப�ொம்பளையா என்னங்கடா இது க�ொடுமை, கல்யாணத்தைப் பண்ணமா புள்ளையப் பெத்தமா அந்தப்புரத்துக்குப்போய்க் குப்புறப் படுத்தோமா விதி வந்தா ம ம்மியாகிப் ப�ோய்ச் சேந்தோமான்னு இல்லாம. எதுக்கு இவளுக்கு இந்த வேல’ என்று ஊருக்கு வெத்து வக்கனைப் பேசிய நான்கு வாய்களின் வாயில் தன் வரலாற்று வெற்றிகளின் மூலம் மண்ணை அள்ளிப்போட்டாள் ஹெத்செப்த். ஊரார்களின் ப�ொறாமைகளுக்குப் பதிலடிக்கொடுத்த அவளால் அரண்மனையில் த�ோன்றிய ஒரு ப�ொறாமைக்கு எந்த வித பதிலடியும் க�ொடுக்க முடியாமல்போனது.

துட்மோஸ் III – எகிப்தின் அலெக்சாண்டர் அரண்மனை ப�ொறாமைக்குச் ச�ொந்தக்காரன் துட்மோஸ் III. ஹெத்செப்த்தின் சக�ோதர கணவனான துட்மோஸ் II-க்கு மற்றொரு மனைவியின் மூலம் பிறந்தவன். இவனுக்கு ஹெத்செப்த் சித்தி முறை. துட்மோஸ் II இறந்த ப�ோது இவன் கைக் குழந்தையாக இருந்த காரணத்தைக் காட்டித்தான் ஹெத்செப்த் பார�ோ பதவியைத் தனதாக்கிக்கொண்டாள். கைக் குழந்தை காலம் முழுவதும் கைக் குழந்தையாகவே இருந்துவிடுமா என்ன. துட்மோஸ் III வளர்ந்து பெரியவனாகிவிட்டிருந்தான். எகிப்தின் வழக்கப்படி பெரியவனாகிவிட்ட ஆண் வாரிசுக்கு உடனடியாகப் பார�ோ பதவியைக் க�ொடுத்துவிடவேண்டும். ஆனால் ஹெத்செப் தன்னைப் பெண் பார�ோ என்று அறிவித்துவிட்டதால் எகிப்தின் வழக்கத்தைத் தூக்கி குப்பையில்போட்டுவிட்டாள். அவள் குப்பையில் ப�ோட்டுவிட்டாலும் அரண்மனைப் பெரிசுகளும் ஊர் பெரிசுகளும் சும்மாயிருந்துவிடுமா. தெய்வக் குத்தமாகிப்போய்விடும் என்று ஹெத்செப்த்தை நச்சரித்து, துட்மோஸ் III துணைப் பார�ோவாக அறிவிக்க வைத்தார்கள். இதன்படி அவன் கி.மு. 1479-ல் துணைப் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டான். பதிவியேற்று அடுத்த 17 ஆண்டுகள் அவன் ஹெத்செப்த்திற்குக் கீழ் அடங்கியே இருக்கவேண்டியிருந்தது. பெயரளவிற்குக் கூட அவனைத் துணைப் பார�ோவாகச் செயல்பட விடவில்லை ஹெத்செப்த். இதுவே அவனுக்குள் தன் சித்தி மீதான ப�ொறாமைத் தீயை மூட்டிவிட்டுவிட்டது. இத்தனைக்கும் ஹெத்செப்த்தின் தந்தையான துட்மோஸ் I-னுடைய அனைத்து இயல்புகளையும் க�ொண்டிருந்தவன் துட்மோஸ் III. பேரரசை உருவாக்கும் துணிச்சலும் திறனும் க�ொண்டவனால் அரண்மனையில் தேமே என்று உட்கார்ந்துக�ொண்டு வெற்றிலை பாக்கு மென்றுக�ொண்டிருக்க முடியுமா என்ன. எப்பொழுது சித்தி ப�ோவாள் திண்ணை காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருந்தான். இந்தக் காத்திருப்பு காலமும் அவனுக்குள் மேலும் வெறுப்பைத் தூண்டிக்கொண்டிருந்தது. ஹெத்செப்த், துட்மோஸ் III-க்குச் சித்தியாகும் அதே வேலையில் அவனுக்கு மாமியாரும் கூட. ஆம் ஹெத்செப்த் அவளுடைய மகளைத் துட்மோஸ் III-க்குத் திருமணம் செய்துவைத்திருந்தாள். அரியணையைக் க�ொடுக்க வேண்டியவள் மகளைக் க�ொடுத்து மேலும் வெறுப்பைக் கிளப்பினாள். இந்நிலையில் கி.மு. 1458-க்குப் பிறகு ஹெத்செப்த் குறித்து எத்தகைய வரலாற்றுத் தகவல்களும் நமக்குக் கிடைப்பதில்லை. துட்மோஸ் III, கி.மு. 1457-க்குப் பிறகு தன்னை எகிப்தின் பார�ோவாக அறிவித்துக் கல்வெட்டு வெளியிடத் த�ொடங்குகிறான். அப்படியென்றால் ஹெத்செப்த்திற்கு என்ன நேர்ந்தது? இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் ந�ொடிவரை இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. 86

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவளுக்கு என்ன நேர்ந்திருக்கலாம் என்று ஊகிக்கக் கூட முடியாத நிலை. அரண்மனை சூழ்ச்சி அவளைக் க�ொன்றுவிட்டதா, அவளே துட்மோஸ் III-க்கு வழிவிட்டு ஒதுங்கிச் சென்றுவிட்டாளா, இயற்கையாக மரணித்துவிட்டாளா எதற்கும் பதில் இல்லை. கடும் மெளனத்தை இழுத்துப் ப�ோர்த்திக்கொண்டு ஹெத்செப்த் வரலாற்றின் இருளில் எங்கோ சென்று மறைந்துவிட்டாள். அவளுடைய மம்மியைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெத்செப்த்திற்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு துட்மோஸ் III-வும் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். காரணம் துட்மோஸ் III தன்னைப் பார�ோவாக அறிவித்துக்கொண்ட பிறகு ஹெத்செப்த் கட்டிய அனைத்துக் கட்டிடங்களையும், அவளுடைய சிலைகளையும், ஓவியங்களையும் சிதைக்கக் கட்டளையிட்டான். துட்மோஸ் III-யின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்குத் தப்பிப் பிழைத்த ஹெத்செப்த்தின் கட்டிடங்களையும், சிலைகளையும், ஓவியங்களையுமே இன்றைக்கு நாம் பார்க்கிற�ோம். ஹெத்செப்த் மீதிருந்த அவனுடைய ப�ொறாமை, வெறுப்பு அனைத்தையும் இந்த வழியாகத் தீர்த்துக்கொண்டான் துட்மோஸ் III. இனி வரும் வரலாற்றில் ஹெத்செப்த் என்கிற பெயர் கூட மீந்திருக்கக் கூடாது என்கிற தீவிரத்திலிருந்தது அவனுடைய அழித்தொழிப்புக் காரியங்கள். அவளுடைய கல்லறை கட்டிடங்களைக் கூட அவன் விட்டுவைக்கவில்லை. இதனால்தான் அவளுடைய மம்மிக் கூட இன்றைக்கு நமக்குக் கிடைக்கவில்லை என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். துட்மோஸ் III-ன் ஆவிக்குப் பயந்தோ என்னவ�ோ பின்னால் வந்த பார�ோக்கள் பலர் அவளுடைய பெயரை குறிப்பிடுவதைக் கூடக் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள். ஹெத்செப்த்தின் அடையாளத்தை இல்லாமல் ஆக்குவதில் மிக ம�ோசமாக நடந்துக�ொண்ட துட்மோஸ் III உண்மையில் எகிப்தின் மாவீரர்களில் முதன்மையானவன். எகிப்தின் நூற்றுக்கணக்கான பார�ோக்களில் மாவீரன் என்கிற பட்டத்திற்குப் ப�ொருத்தமானவன் துட்மோஸ் III மட்டுமே. அலெக்சாண்டருக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகம் பார்த்த மாவீரன் இவன்தான். இவனுடைய தாத்தா 16 அடிப் பாய்ந்திருந்தார் என்றால் இவன் 116 அடிகள் பாய்ந்திருந்தான். எட்டுத் திக்கிலும் இருந்த மன்னர்கள் அனைவரும் துட்மோஸ் III என்று உச்சரிக்கக் கேட்டாலே ‘சனியன் நம் மீது படை கிடை எடுத்துத் த�ொலைத்துவிடப் ப�ோகிறது’ என்று பீதி அடையும் நிலை இருந்தது. எகிப்தை வல்லரசிலும் வல்லரசாக மாற்றியவன் இவன். எகிப்தின் 31 அரசப் பரம்பரை பார�ோக்கள் ஒவ்வொருத்தரைக் (கிட்டத்தட்ட 200 பார�ோக்களுக்கும் மேல்) குறித்தும் தனித் தனியாகப் பார்ப்பதாக இருந்தால் அதற்கு இந்தப் புத்தகம் ப�ோதாது. உங்களுக்கும் ஒரு வித சலிப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எகிப்திய நாகரீகத்தில் அரசு, கட்டிடக் கலை, இலக்கியம், வணிகம், இராணுவம் ப�ோன்ற துறைகளில் புதுமையும் சாதனைகளும் நிகழ்த்திய பார�ோக்களை மட்டும் தேர்ந்தெடுத்து இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இவர்களைக் குறித்து அறிந்துக�ொண்டாலே எகிப்திய நாகரீகம் குறித்து ஒரு முழுமையான அறிமுகம் உங்களுக்குக் கிடைத்துவிடும். எகிப்திய நாகரீகத்தின் த�ொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளை முன்னகர்த்திச் செல்வது நாம் இந்தப் புத்தகத்தில் பார்த்த பார�ோக்களின் செயல்களும் சாதனைகளுமே. இப்படியிருந்தும் மேலும் ஒரு பார�ோவைக் குறித்து நான் இங்கே ச�ொல்லாமல் விட்டுவிட்டால் அது உங்களுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தரலாம். உங்களை ஏன் ஏமாற்றுவானேன். நீங்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கும் அந்தப் பார�ோவைக் குறித்தும் பார்த்துவிடலாமே. உண்மை என்னவென்றால் அவர் எகிப்தியப் பார�ோவாக இருந்தவர் என்றாலும் எகிப்திய இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அந்நிய மண்ணைச் சேர்ந்தவர். அவரை உங்களின் சிறு வயது முதலே நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அவர் கிளிய�ோப்பாட்ரா. எகிப்தின் கறுப்பழகி. எகிப்தின் பார�ோ என்றெல்லாம் வரலாறு உங்களுக்கு இவளைக் குறித்து அறிமுகப்படுத்தியிருக்கலாம். இதில் ஒரு பகுதி உண்மை ஆனால் மறு பகுதி ப�ொய்.

நவீனா அலெக்சாண்டர்

87

கிளிய�ோப்பாட்ரா VII கி.மு. 51-30 (தாலமி காலகட்டம்)

எகிப்தில் இருபதாம் அரச பரம்பரை முடிவிற்கு வந்தவுடன் சுமார் 2000 வருட பார�ோனிக் சிறப்பும் முடிவிற்கு வந்துவிட்டது. இருபதாம் அரச பரம்பரையின் இறுதி பார�ோ ராமேசிஸ் XI (கி.மு. 1099 - 1069). முதல் பார�ோவான நார்மர் கி.மு. 3000-த்தில் த�ொடங்கி வைத்த பார�ோனிக் சாம்ராஜ்யத்தை ராமேசிஸ் XI கி.மு. 1069 முடித்து வைத்தான். இருபத்திய�ொராம் அரச பரம்பரையின் த�ொடக்கம் என்பது கிட்டத்தட்ட எகிப்திய பார�ோனிக் சாம்ராஜ்யத்தின் சாவு மணி. வலிமை மிக்கப் பார�ோ யாரும் அடுத்து அரியணைக்குத் தயாராக இல்லாததால் கத்தியின்றி இரத்தமின்றி எகிப்திய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்திய லுபிய நாட்டைச் சேர்ந்தவர்களே (எகிப்திற்கு மேற்கில் லிபியா இருக்கிறது) எகிப்தின் பார�ோக்களாக வந்தமர்ந்தார்கள். லுபியர்கள் கால் நடை மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எகிப்தின் பார�ோ பதவியைக் கைப்பற்றியதும் தங்களுடைய கால் நடை சமூகப் பழக்க வழக்கங்களை எகிப்திர்குள் புகுத்தினார்கள். அரசு, சமூகம், கலை, இலக்கியம், கட்டிடக் கலை என்று அனைத்திலும் புதிய மாற்றம் நிகழ்ந்தது. எகிப்தியர்கள் பார�ோவின் கல்லறை சார்ந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டவர்கள், லுபியர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். இறந்த உடலை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் பழக்கமெல்லாம் இல்லாதவர்கள். புதைத்தோமா மூன்றாம் நாள் காரியம் செய்தோமா வேறு வேலையைப் பார்க்கப் ப�ோகவேண்டியதுதான் என்று த�ோள் துண்டை உதறிக்கொண்டு நடையைக் கட்டும் பாரம்பரியம் உடையவர்கள். இதன் காரணமாக எகிப்தில் கல்லறைக் க�ோயில்களுக்கும் மம்மிகளுக்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. இதனால் எகிப்தியர்கள் ஒரு புதிய சமூக வாழ்க்கை முறைக்குப் பழகவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள். ப�ோதாததற்கு வடக்கிலிருந்து பெர்சியர்களின் படையெடுப்பும் தெற்கிலிருந்து நுபியர்களின் படையெடுப்பும் எகிப்தியர்களின் வாழ்வை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தது. கெட்டக் குடியேதானே கெட வேண்டும் அதன்படி புதிய வாழ்க்கை முறை, அந்நியப் படையெடுப்புகள் என்று பாடாய்ப் பட்டுக்கொண்டிருந்த எகிப்தியர்கள் கூடவே உள் நாட்டுக் கிளர்ச்சிகளுக்கும் ப�ோராட்டங்களுக்கும் ஆளானார்கள். இந்த நிலை 31-ஆம் அரச பரம்பரை காலம் வரை நீடித்தது. அதாவது சுமார் 700 ஆண்டுகள். எகிப்தியர்களின் இந்தப் பாடுகளுக்கு ஒரு முடிவைக் க�ொண்டுவந்தது அலெக்சாண்டரின் எகிப்தியப் படையெடுப்பு. அலெக்சாண்டரின் சிறிய படை கி.மு. 332 வருடத்தின் இறுதி மாதங்களில் எகிப்தை வென்றது. அடுத்த ஆண்டின் த�ொடக்கத்தில் நைல் நதி மெடிடீரினியன் கடலில் கலக்கும் முகத்துவார டெல்டாப் பகுதியில் அலெக்சாண்டிரியா என்கிற நகரை உருவாக்கினான் அலெக்சாண்டர். எகிப்தை அவன் வென்றதற்கு அடையாளமாக இந்த நகரம் அவன் பெயரிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகரத்திற்கு வரலாற்றில் மற்றொரு சிறப்பும் உண்டு. அது உலகின் மிகப் பெரிய நூலகம் ஒன்றும் இந்த நகரத்திலிருந்ததுதான். அலெக்சாண்டர் தான் வென்ற எகிப்தில் ம�ொத்தமாகத் தங்கியிருந்தது நான்கு மாதங்கள் மட்டுமே. ஏப்ரல் மாதம் கி.மு. 331 வருடம் அவன் எகிப்தை விட்டு மேலும் கிழக்கு நாடுகளைத் தாக்க கிளம்பிவிட்டான். 88

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அடுத்து வந்த எட்டு ஆண்டுகளில் அலெக்சாண்டர் ஒட்டும�ொத்தமாக இந்த உலகத்தைவிட்டே கிளம்பிவிட்டான். அவன் இறந்ததும் அவனுடைய தளபதிகளுக்கிடையே அவன் விட்டுச் சென்ற மிகப் மிகப் பெரிய சாம்ராஜ்யம் குறித்த குடுமி பிடி சண்டைத் த�ொடங்கியது. குழந்தைப் பருவத்திலிருந்து அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பனாகவும், அவனுடைய தளபதிகளில் ஒருவனாகவும் இருந்த தாலமி, நடந்த குடுமி பிடி சண்டையில் தன் பங்காக எகிப்தை பெற்றுக்கொண்டான். இந்த வெற்றியை உறுதி செய்ய அவன் அலெக்சாண்டரின் பிணத்தையே ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டான். அலெக்சாண்டரின் உடலை எகிப்தின் மெம்பிசில் புதைப்பதன் மூலம் தான் எகிப்தின் அடுத்தப் பார�ோவாகப் பதவியேற்றுக்கொள்வதை ஒருவரும் கேள்விக்கேட்டுவிட முடியாதபடி பார்த்துக்கொள்வது என்பது அவனுடைய திட்டம். எகிப்திலும், அவனே முன் நின்று அலெக்சாண்டரின் உடலுக்கு இறுதி காரியங்கள் செய்வதன் மூலம் தானே அதிகாரப் பூர்வ அடுத்தப் பார�ோ என்கிற செய்தியை எகிப்தியர்களுக்கு உணர்த்துவதற்கும் வசதியாக இருக்கும் என்பது அவனுடைய ஒரு பிணத்தைக் க�ொண்டு இரண்டு நன்மைகள் என்கிற திட்டம். அலெக்சாண்டர் பாபில�ோனில் இறந்ததால் அவனுடைய உடலை அவனுடைய தாய் மண்ணான மாசிட�ோனியாவின் ஹெல்ஸ்பாண்டில் புதைப்பது என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி அவனுடைய உடல் அடங்கிய சவ ஊர்வலம் பாபில�ோனிலிருந்து ஹெல்ஸ்பாண்டிற்குச் சென்றுக�ொண்டிருந்தது. செல்லும் வழியில் சிரியாவில் வைத்து தாலமி அந்த ஊர்வலத்தை இடைமறித்து அலெக்சாண்டரின் உடலை எகிப்திற்குக் க�ொண்டு வந்துவிட்டான். இந்தச் சவ ஊர்வலத்தின் ப�ோதுதான் அலெக்சாண்டர் தன் இரண்டு கைகளையும் சவப் பெட்டிக்கு வெளியே விரித்துக்காட்டித் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது ஒன்றையும் க�ொண்டு செல்லவில்லை என்று உலக மக்களுக்குச் செய்தி ச�ொல்லும்படி தன்னுடைய இறுதி நிமிடங்களில் ச�ொல்லியதாக ஒரு செய்தி உண்டு. இது முழுக்க முழுக்கக் கற்பனையான செய்தி. அப்படிய�ொன்றும் நடக்கவேயில்லை. மாறாக உலகத்தையே வென்றே அலெக்சாண்டரின் உடல் எகிப்திற்குக் கடத்தப்பட்டதுதான் நடந்தது. உலகத்தையே வென்றவனுக்குத் தன் உடல் கடத்தப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்று வேண்டுமானால் தத்துவப் பித்தில் உளறிக்கொள்ளலாம். எகிப்திற்குக் கடத்தப்பட்ட அலெக்சாண்டரின் உடல் எகிப்திய பார�ோக்களின் பாரம்பரிய தலைநகரமான மெம்பிசில் புதைக்கப்பட்டது. எகிப்திய பார�ோவாக இருந்தாலும் அவனுடைய உடல் மம்மியாக மாற்றப்படவில்லை. எகிப்தில் பார�ோக்களை மம்மி செய்யும் வழக்கமெல்லாம் அவனுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே தலை முழுகப்பட்டுவிட்டதே பிறகு எப்படி. அலெக்சாண்டர் ஒரு முறை இறந்தாலும் அவனுடைய உடலுக்கு இரண்டு முறை சவ அடக்கம் நடந்தது. அலெக்சாண்டரின் உடலை எகிப்தில் புதைத்து தாலமி தான் எகிப்தின் அடுத்தப் பார�ோ என்று உணர்த்திக்கொண்டாலும் அவனுடைய அலெக்சாண்டர் உடல் கடத்தல் செயல் அலெக்சாண்டரின் மற்ற தளபதிகளுடனான த�ொடர்ச்சியான சண்டைகளுக்கு வழி வகுத்தது. அடுத்து வந்த 35 ஆண்டுகள் தாலமியும் அலெக்சாண்டரின் மற்ற தளபதிகளும் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள். ஒரு வழியாக இந்தச் சண்டை முடிவிற்கு வந்ததும் தாலமி முறைப்படி எகிப்தின் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டான். பார�ோவான உடன் அவன் செய்த முதல் காரியம் எகிப்தின் தலை நகரத்தை மெம்பிசிலிருந்து அலெக்சாண்டிரியா நகரத்திற்கு மாற்றியது. இது நடந்தது கி.மு. 304 சனவரி 12-ல். மெம்பிசிலிருந்து அலெக்சாண்டிரியாவிற்குப் ப�ோனவன் கைய�ோடு மெம்பிசில் புதைக்கப்பட்டிருந்த அலெக்சாண்டரின் உடலையும் த�ோண்டியெடுத்துக்கொண்டு ப�ோனான். உடல் என்றால் அலெக்சாண்டரின் எலும்புக் கூடுகளைத்தான். நாம் மேலே பார்த்த அதே நாளில் அலெக்சாண்டரின் உடல் எலும்பு கூடு ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு அதற்கென்றே கட்டப்பட்ட கல்லறையில் வைக்கப்பட்டது. இரண்டாம் முறையாக அலெக்சாண்டரின் உடல் அடக்கம் இப்படியாக நடைபெற்றது.

நவீனா அலெக்சாண்டர்

89

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

தாலமி எகிப்தின் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டதன் மூலம் எகிப்து இரண்டாம் முறையாக அந்நியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த முறை அது கிரேக்க மாசிட�ோனியர்களின் ஆட்சியின் கீழ். இந்த மாசிட�ோனிய தாலமியின் வம்சத்தில் வந்தவளே நாம் நன்றாக அறிந்திருக்கும் கிளிய�ோப்பாட்ரா. இவள் உண்மையில் மாசிட�ோனிய வெள்ளை இனத்தைச் சேர்ந்தவள். எகிப்திய கருப்பினத்தை சேர்ந்த அழகியல்ல அவள். அவளுக்கும் எகிப்திய இனத்திற்கும் எத்தகைய இரத்த த�ொடர்பும் கிடையாது. உடல் நிறத்திலிருந்து நடை உடை பாவனை என்று அனைத்திலும் அவள் கிரேக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவள். பிறகு எப்படி அவளை எகிப்தின் கருப்பழகி என்று வரலாறு ச�ொல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வரலாற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று நடுநிலை வரலாற்றை மட்டுமே பேசும். மற்றது ப�ொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பேசும். எங்கேயும் எப்போதும் ப�ொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பேசும் வரலாற்றின் குரல்தான் பலமாகக் கேட்கும். அதைத்தான் பெருவாரியான மக்களும் கேட்கும்படி நேர்கிறது. கிளிய�ோப்பாட்ரா என்கிற பெயரில் அவளுக்கு முன்பே ஆறு பெண்கள் இருந்திருக்கிறார்கள். நாம் பரவலாக அறிந்திருக்கும் கிளிய�ோப்பாட்ரா அந்தப் பெயர் க�ொண்ட ஏழாவது பெண்மணி. கிளிய�ோப்பாட்ரா அவளுடைய தந்தை பார�ோவாக இருக்கும்போதே துணை பார�ோவாக அறிவிக்கப்பட்டவள். இது நடந்தது கி.மு. 52-ல். எகிப்து கண்ட இரண்டாவது பெண் பார�ோ கிளிய�ோப்பாட்ரா VII ஆனால் அந்நிய இனத்தைச் சேர்ந்தவள். ஒரு பெண் எத்தகைய உயர்ந்த சக்திமிக்க இடத்திலிருந்தாலும் கெட்ட நேரமும் துரதிர்ஷ்டமும் ஆணைவிடப் பெண்ணை எவ்வளவு தூரம் பாடாய்ப்படுத்தும் என்பதற்குச் சிறந்த உதாரணம் கிளிய�ோப்பாட்ரா. பெண் என்றால் பேய் மட்டும்தான் இறங்கும்போலிருக்கிறது கெட்ட நேரமும் துரதிர்ஷ்டம் வேடிக்கை பார்க்கும்போல. கெட்ட நேரமும் துரதிர்ஷ்டமும் கூடி கும்மியடித்தாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இறுதி மூச்சு வரையிலும் துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் பெண் கிளிய�ோப்பாட்ரா. அவள் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டாலும் அவளுடைய தம்பியும் துணைப் பார�ோவாகப் பதவியேற்றுக்கொண்டிருந்ததால் அவளுக்குப் பிரச்சனைகள் க�ொஞ்ச நஞ்சமில்லை. ஒரு கட்டத்தில் எகிப்திய மக்கள் அவளுடைய தம்பிக்கு ஆதரவாகவும் இவளுக்கு எதிராகவும் ப�ோய்விட்டார்கள். கிளிய�ோப்பாட்ரா நாட்டை விட்டு வெளியேறியே ஆகவேண்டிய சூழ்நிலையும் கூட ஏற்பட்டுவிட்டது. அவளும் நாட்டைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் எல்லையில் தஞ்சமடைந்தாள். அங்கிருந்துக�ொண்டே தன் தம்பிக்கு எதிராகப் படை திரட்டி அவனுடன் ப�ோருக்கு தயாரானாள். இந்தச் சமயத்தில் ர�ோமில் நடந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக ர�ோமின் தளபதிகளான ஜூலியஸ் சீசருக்கும், பாம்பேயிக்கும் அதிகார ப�ோர் நடந்துக�ொண்டிருந்தது. இந்தப் ப�ோரில் உயிர் பிழைக்க ர�ோமிலிருந்து தப்பி எகிப்திற்கு வந்த பாம்பேயை கிளிய�ோப்பாட்ராவின் தம்பி க�ொலை செய்தான். தான் செய்த இந்தக் க�ொலை தனக்கு ர�ோமில் சீசரின் நட்பையும் ர�ோம செனட்டின் நம்பிக்கையையும் பெற்றுத் தரும் என்பது அவனுடைய அரசியல் கணக்கு. ஆனால் கணக்கு தவறாகிப் ப�ோனதுதான் மிச்சம். தன்னுடைய எதிரி தன் கையால் சாகாமல் எகிப்திய மண்ணில் புற முதுகில் குத்திக் க�ொலை செய்யப்பட்டது சீசருக்கு கடும் க�ோபத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. சீசர் நேரடியாக எகிப்தில் வந்து உட்கார்ந்துக�ொண்டு இந்தக் க�ொலைக் குறித்த விசாரணையில் ஈடுபட்டான். ர�ோமிலிருந்து வீசும் காற்று தன் தம்பிக்கு எதிராகப் ப�ோவதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிளிய�ோப்பாட்ரா எகிப்திற்குள் இரகசியமாக நுழைந்து சீசரை சந்தித்தால். அரைக் கிழடாக இருந்த சீசருக்கு இருபத்திரண்டு வயதே ஆன கிளிய�ோப்பாட்ராவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப்போய்விட்டது. பிடித்துவிட்டால் பிறகு என்ன காதலில் விழுந்துவிடவேண்டியதுதானே. அரைக் கிழடு சீசரும் காதலில் விழுந்தார். இத்தனைக்கும் பார்த்த மாத்திரத்தில் கவ்வி இழுக்கும் பேரழகியெல்லாம் கிடையாது நாம் அறிந்த 90

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கிளிய�ோப்பாட்ரா. சுமாரான அழகுதான். சீசர் காதல் என்கிற பெயரில் அவளுடைய காலில் விழுந்துவிட்டதை உணர்ந்துக�ொண்ட கிளிய�ோப்பாட்ரா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த கதையாக அந்த வாய்ப்பையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டாள். இவர்களின் காதல் கிளிய�ோப்பாட்ராவின் தம்பி காதுகளுக்குப் ப�ோக, அவன் இருவரையும் அந்த அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான். ர�ோமிலிருந்து சீசருக்கு உதவ ர�ோமானியப் படை எகிப்திற்கு வந்திறங்கியது. இந்தப் படைக்கும் எகிப்தியர்களுக்கும் நடந்த சண்டையில் கிளிய�ோப்பாட்ராவின் தம்பி நைல் நதியில் மூழ்கி இறந்துப்போனான். கிளிய�ோப்பாட்ராவிற்குப் பார�ோ பதவி பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக எவ்வித தடையும் இல்லாமல் அவள் கைகளில் வந்து சேர்ந்தது. எகிப்தியர்களுக்கும் அவளை மீண்டும் பார�ோவாக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிக் கிடையாது. இப்போது அவள் பலம் ப�ொருந்திய ர�ோமானிய தளபதி சீசரின் காதல் மனைவியும் ஆகிவிட்டாலே. சீசருக்கும் கிளிய�ோப்பாட்ராவிற்கும் சிசேரியன் என்று ஆண் குழந்தைப் பிறந்தது. சீசர் கிளிய�ோப்பாட்ராவை எகிப்தில் விட்டுவிட்டு ர�ோமில் அடுத்த மன்னனாக முடிசூட்டிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள ர�ோமிற்குத் திரும்பிச் சென்றான். எகிப்தில் கிளிய�ோப்பாட்ராவின் பார�ோ ஆட்சி எவ்வித சிக்கலும் இல்லாமல் த�ொடரத்தொடங்கியது. அவளுக்கு முன்பிருந்த மாசிட�ோனிய கிரேக்கப் பார�ோக்கள் ப�ோலக் கிடையாது கிளிய�ோப்பாட்ரா. அவளுக்கு எகிப்திய நாகரீகத்தின் மீது தனிக் காதலே இருந்தது என்று ச�ொல்லலாம். முதல் மாசிட�ோனிய பார�ோவான தாலமித் த�ொடங்கி அவளுடைய தந்தையான பார�ோ தாலமி வரைக்கும் அனைவரும் கிரேக்க ர�ோமக் கலாச்சாரத்தையே பின்பற்றியவர்கள். அவர்கள் ஆட்சி செய்தது எகிப்திய மக்கள் என்றாலும் அவர்கள் பேசியதெல்லாம் கிரேக்க ர�ோமானிய ம�ொழிகள்தான். அவர்களுடைய வாழ்க்கை முறையும் கட்டிடக் கலையும் கிரேக்க ர�ோமானிய கலாச்சாரத்தை ஒட்டியே இருந்தன. ஆனால் இதில் கிளிய�ோப்பாட்ரா முற்றிலும் வேறுப்பட்டிருந்தாள். எகிப்திய ம�ொழியை ஆர்வமுடன் கற்றுக்கொண்டு எகிப்தியர்களுடன் அவர்களின் தாய் ம�ொழியிலேயே பேசிய முதலும் கடைசியுமான கிரேக்க மாசிட�ோனிய பார�ோ கிளிய�ோப்பாட்ரா மட்டுமேதான். எகிப்தியர்களின் கட்டிடக் கலையிலேயே அவள் பார�ோவாகத் தான் கட்டிய கட்டிடங்களையும் கட்டினாள். அவளுடைய நடை உடை பாவனைகள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டியிருந்தாலும் முடிந்தவரை எகிப்தியர்களைப் ப�ோலவே இருக்கப் பெரும் முயற்சிகளை செய்திருக்கிறாள். அவளுடைய மகன் சற்று பெரியவனானதும் அவனைத் துணைப் பார�ோவாக அறிவித்தாள். ஆனால் அவள்தான் எகிப்தின் கடைசிப் பார�ோ என்கிற விதியை எகிப்தியக் கடவுளர்கள் முன்பே எழுதிவிட்ட சங்கதியை யார்தான் முன் கூட்டியே அறிந்திருக்க முடியும். எகிப்திய பூசாரிகளாலும் கூட இந்த விதியை முன் கூட்டியே அறிந்து ச�ொல்ல முடியவில்லை. ர�ோமிற்குச் சென்ற ஜூலியஸ் சீசர் படுக�ொலை செய்யப்பட்ட பிறகு ர�ோமின் பலம் ப�ொருந்திய தளபதியாக உருவெடுத்தவன் மார்க் ஆண்டனி. ர�ோம செனெட் இவனுடைய தலைமையின் கீழ் மத்திய கிழக்கில் எஞ்சியிருந்த இருந்த ஒரே பலம் மிக்க எதிரியை அடக்கப் படையை அனுப்பியது. மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்குவதற்கு முன்பாகத் தன்னுடைய படையை நிலை நிறுத்துவதற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய ஆண்டனியின் கண்களில் பட்டது எகிப்து. இது குறித்துப் பேசுவதற்காகக் கிளிய�ோப்பாட்ரா தன்னை வந்து சந்திக்கும்படி அவன் செய்தி அனுப்பினான். மீண்டும் ஒருமுறை பழம் நழுவி பாலில் விழுந்த வாய்ப்பு ஏற்பட்டது கிளிய�ோப்பாட்ராவிற்கு. சீசரை காதல் பார்வைக் காட்டி கவிழ்த்ததைப் ப�ோல ஆண்டனியையும் கவிழ்த்துவிடவேண்டும் என்று திட்டம் செய்திருந்ததால�ோ அல்லது ர�ோமானிய தளபதிகள் எல்லாம் காதல் விசயத்தில் க�ொஞ்சம் ‘வீக்’ என்பதை நன்றாகப் புரிந்துக�ொண்டிருந்ததால�ோ நவீனா அலெக்சாண்டர்

91

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

அவள் ஆண்டனியை சந்திக்கச் செல்லும் நிகழ்வைப் படு பிரம்மாண்ட ஊர்வலமாக மாற்றிவிட்டாள். தேவதைகள் ப�ொறாமை க�ொள்ளும் அளவில் தன்னை அலங்காரித்துக்கொண்டு ஆண்டனி முன் ப�ோய் நின்றாள். பிறகு என்ன ஆண்டனி வாயைப் பிளந்துக�ொண்டு காதலில் விழவேண்டியதுதானே. அதுதான் நடந்தது. இத்தனைக்கும் அவனை விடப் பதினைந்து வயது மூத்தவள் கிளிய�ோப்பாட்ரா. காதலுக்குக் கண்ணு, மண்ணு, வயசு கன்றாவி இதெல்லாம் தெரியவாப் ப�ோகிறது. ஆண்டனிக்கும் இதெல்லாம் தெரியவில்லை. கிளிய�ோப்பாட்ரா மட்டும் உலக அழகியாகத் தெரிந்திருக்கிறாள். குடும்பம் குட்டி என்று ப�ோகவேண்டியதுதானே மிச்சம். இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சீசரைப் ப�ோலவே ஆண்டனியும் சிறிது காலம் கிளிய�ோப்பாட்ராவை ர�ோமில் தன்னுடன் தங்க வைத்து அழகுப் பார்த்தான். வல்லரசு என்றாலே அரண்மனை சூழ்ச்சிகளுக்குக் குறைச்சல் இல்லாமலா இருக்கம். ஆண்டனிக்கு எதிராகவும் அரசியல் சூழ்ச்சி நடந்தது. இதற்குக் காரணம் ஆண்டனி மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த ப�ோர்களில் த�ொடர்ச்சியாகத் த�ோற்றுக்கொண்டே வந்ததுதான். இந்த நிலையில் அடுத்தப் பலம் ப�ொருந்திய தளபதியாக உருவெடுத்தவன் ஆக்டோவியன். இவன் ஜூலியஸ் சீசரின் உறவினன். ஆண்டனிக்கு எதிராக ர�ோமானியர்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க வேண்டுமென்றால் அவனுடைய எகிப்தியக் காதல் மனைவியே இலக்கு என்பதை நன்கு உணர்ந்து வைத்திருந்தான் ஆக்டோவியன். கிளிய�ோப்பாட்ரா ஜூலியஸ் சீசரின் விதவை மனைவி என்கிற வகையில் அவனுக்கு உறவுதான் என்றாலும் அவன் அதைப் பற்றியெல்லாம் கண்டுக�ொள்ளவேயில்லை. ர�ோமில் கிளிய�ோப்பாட்ராவிற்கும் ஆண்டனிக்கும் எதிர்ப்பு அதிகமாக இருவரும் தப்பித்து எகிப்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆண்டனியை உயிருடன் விட்டால் அது தனக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆக்டோவியன் அவர்களுக்குப் பின்னாலேயே ர�ோமானியப் படையை அனுப்பிவைத்தான். ஆண்டனியின் கதையை முடிக்க. ஆனால் அந்தப் படை இறுதியில் ஒட்டும�ொத்த எகிப்தையும் ர�ோமானிய ஆட்சிக்குக் கீழ் க�ொண்டுவந்துவிடும் என்பதை யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். எகிப்தில், தான் முன்புத் தலைமைத் தாங்கிய படையுடனேயே இப்போது ம�ோதிய ஆண்டனி த�ோற்றுப்போனான். கிளிய�ோப்பாட்ரா எகிப்தை விட்டுத் தப்பித்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் ப�ோய்விடுவது என்றும் அவளுடைய மகனான சிசேரியனை கப்பல் மூலம் தென்னிந்தியாவிற்கு அனுப்பிவிடுவது என்றும் திட்டம் வைத்திருந்தாள். ஆனால் அவள் எகிப்தை விட்டுத் தப்பித்துப் ப�ோகத் தயார் செய்து வைத்திருந்த அனைத்துக் கப்பல்களும் எதிரிகளால் எறித்து அழிக்கப்பட்டுவிட்டது. ஆண்டனியும் கிளிய�ோப்பாட்ராவும் ப�ொறிக்குள் சிக்கியது கணக்காக எகிப்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டார்கள். ஆண்டனி தன் வாளாலேயே குத்தி தற்கொலை செய்துக�ொண்டான் என்பது மட்டும் சந்தேகமில்லாமல் தெரிகிறது. அதே சமயத்தில் கிளிய�ோப்பாட்ரா எப்படி இறந்தாள் என்பது மட்டும் இன்றைக்கு வரைக்கும் மர்மமாகவே இருக்கிறது. அவள் எகிப்தின் க�ொடிய விசம் க�ொண்ட பாம்பின் விசம் அருந்தி இறந்துவிட்டாள் என்று ஒரு செவி வழி செய்தியும், வைரத்தை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்துக�ொண்டாள் என்று ஒரு செவி வழி செய்தியும் ச�ொல்கின்றன. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. கிளிய�ோப்பாட்ராவின் இறப்பின் மூலம் ஒட்டும�ொத்த எகிப்தும் ர�ோமானிய ஆட்சியின் கீழ் ப�ோனது. முதல் பார�ோ நார்மர் த�ொடங்கிவைத்த பார�ோ பாரம்பரியம் முற்றிலுமாக முடிந்துப்போனது. சுமார் 3000 வருடங்களாக எகிப்து கண்டுவந்த பார�ோ பாரம்பரியம் கிளிய�ோப்பாட்ராவின் இறப்புடன் முடிவிற்கு வந்தது. தாங்கள் கடவுளர்களின் பிரதிநிதிகள், மறு அவதாரங்கள் என்று ச�ொல்லிக்கொண்ட பார�ோக்கள் ஒரேயடியாக எகிப்தியக் கடவுளர்களிடமே ப�ோய்ச் சேர்ந்துக�ொண்டார்கள். மீண்டும் அவர்கள் எகிப்தில் தலைகாட்டவே இல்லை. இந்த ந�ொடி வரை. இனியும் அது முடியாதுதானே.

92

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ப�ோதும். பார�ோக்கள் குறித்துப் ப�ோதும் ப�ோதும் என்கிற அளவிற்குப் பார்த்தாகிவிட்டது. வாருங்கள் இனி நாம் கல்லறைத் திருடர்களைப் ப�ோய்ச் சந்திப்போம். ஆம் அவர்களேதான். பிரமிடுகளையும், குடைவரைக் கல்லறைகளையும் தங்கத்திற்காகச் சூறையாடி பார�ோக்களைக் கதறவிட்டார்களே அதே கல்லறைத் திருடர்களைத்தான்.

நவீனா அலெக்சாண்டர்

93

கல்லறை திருடர்கள் மற்றும் சாபங்கள்

சத்தம் எழுப்பவேண்டாம் மெதுவாக வாருங்கள். புரிகிறது இருட்டில் தட்டு தடுமாறி நடந்துக�ொண்டிருக்கிற�ோம் இதில் சத்தம் எழுப்பாமல் வரச் ச�ொல்கிறானே என்று நீங்கள் மனதிற்குள் முனகிக்கொள்வது எனக்குக் கேட்காமல் இல்லை. சத்தம் எழுப்பினால், அத�ோ த�ொலைவில் மேற்கு பாலைவன நெக்ரோப�ோலிசில் ர�ோந்து ப�ோய்க் க�ொண்டிருக்கும் காவலர்களின் காதுகளில் விழுந்து நாம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளலாம். இன்னும் க�ொஞ்சத் த�ொலைவுதான். இம் இத�ோ இங்கே நின்றுக�ொள்ளுங்கள். இப்பொழுது வந்துவிடுகிறேன். நல்லது. இவர்தான் அமென்பின�ோபர். பதினெட்டாம் அரசப் பரம்பரைப் பார�ோவான அமென�ோதெப் (அமென�ோதெப் I கி.மு. 1514 – 1493 புதிய அரசாட்சி காலகட்டம்) கல்லறையில் வேலை செய்யும் கட்டிடக் கலை வல்லுநர். நாளை இரவு இவரும் இவருடைய கூட்டாளிகளும் பதினேழாம் அரசப் பரம்பரை பார�ோவான ச�ோபிகேம்செப்பின் பிரமிடில் திருடப் ப�ோகிறார்கள். இவருடன் சேர்ந்து நாமும் ப�ோகலாம். நம்மையும் உடன் அழைத்துச் செல்வதாகச் ச�ொல்லியிருக்கிறார். இந்த விசயம் உங்களின் மனதிற்குள்ளேயே இருக்கவேண்டும். வேறு யாரிடமும் மறந்தும் ச�ொல்லிவிடாதீர்கள். அப்படி யாரிடமாவது இது பற்றி உளறிக்கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிவு செய்துக�ொள்ளுங்கள் நாம் அனைவரும் உயிருடன் எறிக்கப்படுவது நிச்சயம் என்று. ஆம் கல்லறைத் திருட்டிற்குத் தண்டனை உயிருடன் எறிக்கப்படுவதுதான். சரி வாருங்கள் வந்த சுவடே தெரியாமல் இருட்டில் மறைந்துவிடுவ�ோம். கல்லறைத் திருட்டைத் தடுக்கத்தான் நெக்ரோப�ோலிசில் காவலர்கள் ர�ோந்து சுற்றி வந்துக�ொண்டிருக்கிறார்கள். இரவும் பகலும் அவர்கள் ர�ோந்துப் பணியில் இருப்பார்கள். மேற்குக் கரை பாலைவனமான தி லேண்ட் ஆப் டெட்டில் நூற்றுக்கணக்கான மஸ்டபாக்களும் பிரமிடுகளும் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் காவலர்களைப் ப�ோடுவது என்றால் அது எப்பேர்பட்ட சிக்கலான பணி என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பார�ோக்களுக்கு வேறு வழியில்லை நூற்றுக் கணக்கில் இதற்கென்றே காவலர்களைப் பணியில் அமர்த்தவேண்டும். இந்தக் காவலர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அந்த அந்தப் பகுதி ந�ோமார்கிடம் க�ொடுக்கப்பட்டிருக்கும். கல்லறைத் திருடர்கள் மஸ்டபாக்களுக்குள்ளும் பிரமிடுகளுக்குள்ளும் திருட்டுத் தனமாகப் புகுந்து அவற்றில் இருக்கும் தங்கப் ப�ொருட்களைத் திருடிவிடாமலிருக்கத்தான் இந்தக் காவல் ஏற்பாடு. இந்தக் காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத்தான் நாளைக்கு நாம் அமன்பின�ோபருடன் பிரமிடிற்குள் திருடச் செல்லப்போகிற�ோம். என்னது பயமாக இருக்கிறதா பிறகு எப்படிக் கல்லறைத் திருட்டைக் குறித்து அறிந்துக்கொள்வீர்களாம். கல்லறைத் திருட்டில் பெரிதும் ஈடுபட்டவர்கள் பிரமிட் கட்டுமான அனுபவம் க�ொண்ட வல்லுநர்களும் உள்ளூர் ஆளுநர்களுமே. இது ஊரறிந்த இரகசியம். பார�ோக்களுக்கும் 94

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

கூட இது அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரையும் கையும் களவுமாகப் பிடிக்க முடியாத காரணத்தால் கல்லறைத் திருடர்களை அடையாளம் கண்டு தண்டிக்க முடியாத நிலையே இருந்து வந்தது. அவ்வளவு தெளிவாகத் திட்டம்போட்டுக் கல்லறைகளைத் திருடியிருக்கிறார்கள் இந்தக் களவாணிகள். ப�ொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களிலும், அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சிகள் ஏற்படும்போதும் எகிப்திய குடிமக்களும் கூடப் பிரமிடுகளுக்குள்ளும் கல்லறைகளுக்குள்ளும் புகுந்து திருடியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களாகத் திருடத் திருடக் குறைவில்லாமல் ஒவ்வொரு பிரமிடும் கல்லறையும் திருடுபவர்களுக்கு வாரி வழங்கியிருக்கின்றன என்றால் எவ்வளவிற்கு அதிகமாக விலை மதிக்க முடியாத ப�ொருட்கள் அவை ஒவ்வொன்றிர்குள்ளும் வைக்கப்பட்டிருந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துக�ொள்ளுங்கள். எந்த ஒரு பார�ோவின் கல்லறையும் பிரமிடும் இந்தக் கல்லறைக் களவாணிகளின் கண்களிலிருந்தும் கைவரிசையிலிருந்தும் தப்பியது கிடையாது. இவர்களுக்குப் பயந்து பார�ோக்கள் வானத்தில் தங்கள் பிரமிடுகளையும் கல்லறைகளையும் கட்டாததுதான் மிச்சம் மற்றபடி பூமிக்குள்ளும் யார் கண்ணிலும் படாதபடி தங்களுடைய கல்லறையைக் கட்டியும் பார்த்துவிட்டார்கள். ஆனால் பூமிக்கு அடியில் கட்டிய கல்லறையிலும் ப�ொருட்கள் திருடுப�ோனதுதான் உச்சக்கட்டக் க�ொடுமை. இந்தக் க�ொடுமைக்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னிரண்டாவது அரசப் பரம்பரையைச் சேர்ந்த பார�ோ சென்வொஸ்ரெட் (சென�ோஸ்ரெட் III கி.மு. 1836 – 1818 இடை அரசாட்சி காலகட்டம்) கல்லறை. இந்தப் பார�ோ தனக்கென்று ஒரு பிரமிட் கட்டியிருந்தாலும் அவனுடைய மம்மியும் தங்கப் ப�ொருட்களும் வைக்கப்பட்டதென்னவ�ோ மலைக் குன்று அடியில் கட்டப்பட்ட கல்லறையில்தான். இந்தக் கல்லறை இருப்பது அபைட�ோஸ் நகரிலிருக்கும் மெண்டேன் ஆப் அனுபிஸ் மலைக் குன்றுக்கு அடியில். இந்த மலைக் குன்றுக்கு அடியில் பூமியைக் குடைந்து யார் கண்ணிலும் பட்டுவிடாத இடத்தில்தான் இந்தப் பார�ோவின் கல்லறைக் கட்டப்பட்டிருந்தது. பிரமிட் கட்டுமானத்திற்கு எப்படி மஸ்டபாக்கள் முன்னோடிய�ோ அதே ப�ோலத் தி வேலி ஆப் தி கிங்சில் இருக்கும் குடைவரை கல்லறை கட்டிடக் கலைக்கு முன்னோடி பார�ோ சென்வொஸ்ரெடின் மலைக் குன்றுக்கு அடியில் இருக்கும் இந்தக் கல்லறை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பாலைவனத்தில் துருத்திக்கொண்டிருக்கும் இந்த மலைக் குன்று மட்டுமே கண்ணில் படும். இதற்கு அடியில் ஒரு பார�ோவின் கல்லறை இருக்கிறது என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் இந்தக் கல்லறையிலும் கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் கல்லறைக் களவாணிகள். இருபதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்கள் எதேச்சையாக இந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தப�ோது பல முறை இந்தக் கல்லறையில் திருட்டு நடந்திருப்பதற்கான தடயங்களையும் கண்டுபிடித்தார்கள். என்ன அமன்பின�ோபருடன் செல்லத் தயாராகிவிட்டீர்களா. திருடுவது சட்ட விர�ோதம் அதனால் வரமாட்டீர்களா. நீங்கள் ச�ொல்வதும் சரிதான். யார் அந்த அமன்பின�ோபர் என்று தெரியவேண்டுமா. ச�ொல்கிறேன். பிரமிடுகளையும் கல்லறைகளையும் திருடுவதில் பெயர் ப�ோனவன். இவன் இந்தக் காரியத்தில் கெட்டிக்காரன் என்று 3500 வருடங்களுக்கு முற்பட்ட பப்பைரஸ் ஆவணங்களே ச�ொல்கின்றன. ஆனால் இவனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தான் எந்தச் சாட்சியமும் இறுதி வரை கிடைக்கவேயில்லை. கல்லறைத் திருட்டு வழக்குத் த�ொடர்பாக இன்னொரு சம்பவமும் பப்பைரஸ் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. அது பார�ோ ராமேசிஸ் IX (ராமேசிஸ் IX கி.மு. 1124 BC – 1106 BC, 20-வது அரச பரம்பரை புதிய அரசாட்சி காலகட்டம்) காலத்தில் நடந்த வழக்கு. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தீப்ஸ் நகரின் ந�ோமார்க். கல்லறைத் திருட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் மேற்கு தீப்ஸ் நகரின் ந�ோமார்க் அவருடைய பெயர் பவேரா. பவேராவின் கூட்டாளிகள் பிரமிடுகளில் திருடும்போது ர�ோந்துப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த நெக்ரோப�ோலிஸ் காவலர்களிடம் அகப்பட்டுக் க�ொள்கிறார்கள். அகப்பட்டவர்கள் நவீனா அலெக்சாண்டர்

95

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

இரண்டு பேர். அவர்கள் இருவரையும் விசாரிக்கும் நடவடிக்கைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறது அந்தப் பப்பைரஸ் ஆவணம். அந்த இரண்டு கல்லறைத் திருடர்களும் இறுதிவரை தங்களுடைய தலைவரான பவேராவைக் காட்டிக்கொடுக்கவேயில்லை. வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் இருவரும கல்லறைத் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபனமாகிறது. அவர்கள் திருடியது உண்மைதான் என்று உறுதி செய்ததே அவர்களுடைய தலைவரான பவேராதான். அப்படியிருந்தும் தீப்சின் ந�ோமார்குக்குப் பவேரா மேல் இருந்த சந்தேகம் ப�ோகவேயில்லை. அவர் பவேராவுக்கும் இந்தத் திருட்டில் பங்கிருக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார். ஆனால் தண்டனைக்கு ஆளானது என்னவ�ோ அகப்பட்ட அப்பாவிகள் இருவர்தான். எகிப்தில் க�ொலை, க�ொள்ளை, கற்பழிப்பை விட மிக மிகக் க�ொடுங்குற்றம் கல்லறைத் திருட்டுதான். கல்லறைத் திருட்டுக் குற்றத்தில் அகப்பட்டுக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். உயிருடன் எரித்துக் க�ொல்வதுதான் அந்த மரண தண்டனை. எகிப்தியர்கள் மறு உலக வாழ்வில் நம்பிக்கை உடையவர்கள் என்பது நமக்குத்தான் தெரியுமே. மறு உலக வாழ்விலும் உயிருடன் திரும்ப எழும்போது இந்த உலக வாழ்வில் அவர்களின் உயிர் எந்த உடலில் இருந்தத�ோ அதே உடல்தான் மறு உலக வாழ்விலும் உதவும் என்பதை அவர்கள் திடமாக நம்பினார்கள். இந்த உலகில் அவர்கள் உயிர் இருந்த உடல் மறு உலக வாழ்வில் கிடைக்கவில்லை என்றால் அவர்களுடைய ஆன்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு இந்த உலகிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை. அவர்களைப் ப�ொறுத்தவரையில் இது ஆன்ம ஈடேற்றம் இல்லாத நிலை. இப்படி ஒரு நிலையைக் கல்லறைத் திருடர்களுக்கு உண்டாக்கத்தான் அவர்களுடைய உடலை இந்த உலகிலேயே எறிக்கும் தண்டனை. இறந்த உடல் சாம்பலாகிவிட்ட பிறகு கல்லறைத் திருடர்களின் ஆன்மா மறு உலகத்திற்கு எப்படிப் ப�ோக முடியும். ப�ோனாலும் உடலுக்குப் பதிலாக எறிக்கப்பட்ட சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும். இப்படியான தண்டனை எல்லாம் கல்லறைத் திருடர்களை இம்மியளவிற்குக் கூட அச்சுறுத்தவில்லை. பிரமிடுகளிலும், கல்லறைகளிலும் ஆளைக் க�ொல்லும் சாபம் இருக்கும் என்பதற்கே அசறாதவர்கள் இதற்கெல்லாமா அலறுவார்கள். ஒவ்வொரு பார�ோவிற்கும் தலைமை பூசாரி ஒருவர் இருப்பார். பூசாரி என்பது க�ொஞ்சம் மென்மையான பெயராகத் த�ோன்றுகிறது காரணம் உண்மையில் அவர்கள் மந்திரவாதிகள். இப்படியான மந்திரவாதி பூசாரியின் சமயப் பணிகளில் மிக முக்கியமான பணி கல்லறைத் திருடர்களுக்கு எதிராகப் பார�ோவின் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளின் மீது சாபத்தை இறக்கி வைப்பது. தன்னுடைய சாபம் ப�ோதாது என்று கடவுள் ஓசிரிசின் சாபத்தையும் சேர்த்தே மந்திரவாதி பூசாரி பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் கல்வெட்டாக எழுதிவைத்துவிடுவார். இந்தச் சாபங்கள் கல்லறைத் திருடர்களைக் க�ொன்று விடும் என்பது நம்பிக்கை. தங்கத்தைத் திருட பிரமிடுகளுக்குள் நுழைபவர்கள் க�ொடூரமாக இறந்துப்போவார்கள். அந்தக் க�ொடூர மரணத்தை வைத்தே கல்லறைத் திருடர்களை அடையாளம் காண்பதுடன், அந்தக் க�ொடூர மரணம் மற்றவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதும் ப�ொதுவான நம்பிக்கை. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடைபெற்றதாக எவ்வித வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரமிடுகளில் ப�ொறிக்கப்பட்டிருக்கும் சாபங்களில் சில இத�ோ. இது கடவுள் ஓசிரிசின் சாபம், “பார�ோவின் கல்லறைக்குள் நுழைபவன் மீது மரணம் பறந்து வந்து கவிழும்". இந்தச் சபிக்கும் வரிகள் மரணத்தின் புத்தகத்தில் இருப்பவை. மேலும் சில சாபங்கள் இத�ோ, “இந்தக் கல்லறையை உடைத்து நுழைந்து த�ொல்லைத்தருபவன், என்னுடன் நியாயம் தீர்க்கப்படுவானாக" “எவன் ஒருவன் இந்தக் கல்லறைக்கு எதிராகச் செயல்படுவான�ோ, அவனை நைல் நதி முதலை விழுங்க, நிலத்தில் பாம்பு அவனைக் க�ொத்த. கடவுள் அவனை நியாயம் தீர்க்கட்டும்" மேலே நாம் பார்த்தவை பழைய அரசாட்சி காலகட்ட மஸ்டபாக்களில் இருக்கும் சாபங்கள். 96

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

ஸக்கரா பகுதியில் இருக்கும் அன்க்மஹ�ோர் என்கிற மந்திரவாதி பூசாரியின் கல்லறையில் இருக்கும் சாபம் இத�ோ, “மேற்கிலிருக்கும் எனது கல்லறைக்குள் நீங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களும் உங்களின் ச�ொத்துக்களின் மீதும் வரக்கடவதாக. எல்லா மந்திர தந்திரங்களும், இரகசிய சாபங்களும் அறிந்த தலைமை பூசாரி நான். தீய எண்ணத்துடன் எனது இந்தக் கல்லறைக்குள் நுழைபவர்கள் அசுத்தமானவற்றைத் தின்ற பாவத்திற்கு ஆளாகிப்போவார்கள். நான் அத்தகையவர்களின் கழுத்தை நெறித்துப்போடுவேன். அதே சமயத்தில் எனது கல்லறைக்குள் சுத்தமாகவும் தூய எண்ணத்துடனும் நுழைபவர்களின் காவலனாக நான் இருப்பேன்." கல்லறைத் திருடர்கள் மேல் மந்திரவாதி பூசாரிகள் இறக்கி வைத்த ஒட்டும�ொத்த சாபங்களின் பட்டியலை அறிந்துக�ொள்ள நமக்கு உதவுவது அமன�ோதெப், சன ஆப் ஹாப்பு என்பவனின் கல்லறை. இவன் 18-வது அரச பரம்பரையைச் சேர்ந்தவன். பூசாரி, கட்டிடக் கலைஞன், எழுத்தாளன், கண்காணிப்பாளன் என்று பல அரச பதவிகளில் இருந்தவன். இவனுடைய கல்லறை சாபங்களின் ஒரு பெரிய பட்டியலையே தருகிறது. அந்த நீ….ண்டப் பட்டியலில் இருக்கும் அனைத்தும் சாபங்களும் அவனுடைய கல்லறையைத் திருடும் களவாணிகள் மேல் இறங்கும் என்கிறது அந்தச் சாபங்களின் கல்வெட்டு. அந்த நீண்டப் பட்டியலை இங்கே தர முடியாது. அதிலிருந்து ஒரு பகுதி மட்டும், “இம்மணுலக ஆஸ்திகளையும் அந்தஸ்துகளையும் இழந்துப்போவார்கள், நரகத்தின் தீயில் சாம்பலாகிப் ப�ோவார்களாக, கட்டுண்டு கடலில் மூழ்கிப்போவார்களாக, வாரிசுகள் இல்லாமல் அவதிப்படுவார்கள், அவர்களுக்கு என்று ச�ொந்தமாகக் கல்லறையும் இறுதிச் சடங்கு படையல்களும் இல்லாமல் சாவார்கள், அவர்கள் பிணம் அழுகி நாறி எலும்புகள் நசிந்துப்போகும்" நல்லவேளை நாம் அமன்பின�ோபருடன் சேர்ந்துக் கல்லறைத் திருட்டிற்குப் ப�ோகவில்லை. ப�ோயிருந்தால் இந்த அத்தனை சாபங்களும் நம் தலையிலும் இறங்கியிருக்குமே என்று நீங்கள் பீதியுடன் பார்ப்பது எனக்குத் தெரியாமலில்லை. க�ொஞ்சம் எனக்கு அருகில் வாருங்களேன். உங்களுக்கு ஒரு இரகசியம் ச�ொல்லட்டுமா இந்தச் சாபங்கள் எல்லாம் ஒரு பிரமிடிற்குள் முதன் முறையாகச் செல்லும் கல்லறைத் திருடர்கள் மீது மட்டுமே வேலை செய்யும். அடுத்தடுத்து அந்தப் பிரமிடிற்குள் திருடச் செல்வோர்கள் மீது இந்தச் சாபங்கள் வேலை செய்யாது. உண்மை என்னவென்றால் எந்த ஒரு கல்லறைக் களவாணி மீதும் இந்தச் சாபங்கள் வேலை செய்ததாக எகிப்திய வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் பதிவேயாகவில்லை. இறுதியாக ஒரு வின�ோதமான சாபம் குறித்தும் ச�ொல்லட்டுமா. கழுதை முகம் க�ொண்ட கடவுளான செத் கல்லறைக் களவாணிகளைக் கற்பழித்துவிடுவார் என்கிற சாபமும் இந்தச் சாபங்களில் அடக்கம். இந்தச் சாபங்கள் அனைத்தும் கடவுளர்களின் பெயராலும் மந்திரத்தாலும் கட்டப்பட்டவை என்பதால் அவை குறித்தும் க�ொஞ்சம் தெரிந்துக�ொள்ளலாம். வேண்டாம் என்றா ச�ொல்வீர்கள்.

நவீனா அலெக்சாண்டர்

97

கடவுளர்களும், மந்திரத் தந்திர மர்மங்களும்

எகிப்தில் நூற்றுக் கணக்கில் கடவுளர்கள் உண்டு என்பதைக் குறித்து நமக்கு முன்பே தெரியும். எல்லாக் கடவுளர்களுக்கும் த�ோற்றம் குறித்த கதை உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. மிகக் குறிப்பிட்ட முக்கியமான கடவுளர்களுக்கு மட்டுமே த�ோற்றக் கதைகள் உண்டு. அந்தக் கதைகளும் எகிப்தியர்களின் உலகத் த�ோற்றக் க�ொள்கையுடன் த�ொடர்புடையது. இந்தக் கதைகள் ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பச் ச�ொல்லக் கூடியவை கிடையாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் உலகத் த�ோற்றம் குறித்தும் அதன் மூலம் உருவான கடவுளர்கள் குறித்தும் ச�ொல்லும். ஓல்ட் கிங்டம் பப்பைரஸ் மற்றும் கல்லறை எழுத்துக்கள் உலகத் த�ோற்றம் குறித்தும் கடவுளர்கள் குறித்தும் ஒரு விதமாகச் ச�ொன்னால், மிடில் கிங்டம் மற்றும் நியூக் கிங்டம் எழுத்துக்கள் வேறு கதைகளைச் ச�ொல்லும். ஆனால் இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்ட கடவுளர்கள் மட்டுமே ஒரே பெயரில் இருப்பார்கள். இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் ஒத்தக் குரலில் ச�ொல்கின்றன. அது உலகத் த�ோற்றம், குழப்பம் நிறைந்த Nun என்று அழைக்கப்படும் நைல் நீரின் வெள்ளப் பெருக்கில் இருந்து த�ோன்றியது என்பது. இது குறித்து நாம் முன்பே க�ொஞ்சம் பார்த்திருக்கிற�ோம். குழப்பம், இருள் மற்றும் உருவம் அற்ற இந்த உலகத் த�ொடக்க நிலையின் பகுதிகளாக நான்கு கடவுளர் ச�ோடிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தச் ச�ோடிக்கு ஓக்டாட் என்று பெயர். நுண் நுவுனெட், ஹெ -ஹவுயெட், கூக - கவுகெட், அமூன் - அமூனெட் ஆகியவர்கள் அந்த எட்டுக் கடவுளர்கள். சில கதைகள் இந்த எட்டுக் கடவுளர்களின் பெயர்களாக வேறு ஒன்றைத் தரும். ஆனால் எட்டு என்ற த�ொகை மட்டும் எல்லாக் கதைகளிலும் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த எட்டு கடவுளர்களையும் 6000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்தியர்கள் கெம்னு என்கிற வரலாற்றுக்கு முந்தைய பழமையான நகரில் வழிப்பட்டிருக்கிறார்கள். கெம்னு என்றால் எட்டு நகரம் என்று ப�ொருள். கிரேக்கர்கள் கெம்னு நகரை ஹெர்மோப�ோலிஸ் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இந்த நகரம் நிலாக் கடவுளான த�ோதின் புனித நகரமாக மாறிப்போனது. த�ோத் கடவுள்தான் எகிப்திய எழுத்து முறையைக் கண்டுபிடித்து எகிப்தியர்களுக்கு வழங்கியவர். ஹெர்மோப�ோலிஸ் நகரமே எகிப்திய மந்திர தந்திர வித்தைகளுக்கும் அது த�ொடர்பான பப்பைரஸ் ஆவணங்களுக்கும் பெயர் ப�ோனது. அன்றைய உலக மக்கள் அனைவரும் இந்த நகரின் மந்திர தந்திர செயல்பாடுகள் குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. உலகத் த�ோற்றம் குறித்த கதைகளில் ஒரு கதையைச் ச�ொல்லும் எழுத்துக் குறிப்புகளில் மிகப் பழமையானது புக் ஆப் ஓவர்துர�ோயிங் அபெப். அபெப் என்பது பாம்பு வடிவில் இருக்கும் கெட்ட சக்தி. இன்னொரு உலகத் த�ோற்றக் கதை அதும்-ரா என்கிற ஒற்றைக் கடவுளில் இருந்தே உலகமும் அதன் உயிரினங்களும் த�ோன்றியதாகச் ச�ொல்கிறது. அதும்ரா ஒரே உருவில் ஆண் பாகமும் பெண் பாகமும் க�ொண்ட கடவுள். இவருக்குத் தலையில் நெற்றிக் கண்ணும் உண்டு. அதும் தன்னுடைய ஆண் குறியை கையில் எடுத்து அதிலிருந்து 98

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

விந்துவைத் தெளித்துக் காற்றுக் கடவுளான ஸ்ஸூ (ஆண் கடவுள்)-வையும், நீர் கடவுளான டெஃப்னெட்டையும் (பெண் கடவுள்) படைக்கிறார். ஸ்ஸூவும், டெஃப்னெட்டும் நுண் நிலையின் இருளுக்குள் என்ன இருக்கிறது என்று ஆராயச் செல்கிறார்கள். ஆராயச் சென்றவர்கள் த�ொலைந்துவிட அதும்-ரா தன் நெற்றிக் கண்ணை எடுத்துத் த�ொலைந்த இருவரையும் கண்டுபிடிக்க இருளுக்குள் அனுப்புகிறார். இந்த நெற்றிக்கண்ணே சூரியன். இந்த நெற்றிக்கண் வேறு பல பெண் கடவுளர்களின் உருவத்தையும் எடுக்கக் கூடியது. உதாரணமாக அத்தோர், செக்மெட் மற்றும் வாடிஜெட் கடவுள்கள். இவர்கள் அதும்-ராவின் பெண் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள். அதும்-ராவின் நெற்றிக் கண் நுன் இருளை வெளிச்சப் படுத்தித் த�ொலைந்த ஸ்ஸூவையும், டெஃப்னெட்டையும் அதும்-ராவிடம் மீட்டு வருகிறது. இந்த நெற்றிக் கண் ஸ்ஸூ, டெஃப்னெட்டை தேடிச் சென்ற சமயத்தில் அதும்-ரா தனக்கு வேறு ஒரு நெற்றிக் கண்ணை உருவாக்கிக்கொள்கிறார். இந்தச் செயல் முந்தைய நெற்றிக் கண்ணுக்கு ப�ொறாமையையும் க�ோபத்தையும் உண்டாக்க அதும்-ராவிடம் க�ோபித்துக்கொண்டு எகிப்தின் தெற்கிலிருக்கும் நுபியப் பாலைவனப் பகுதிக்குப் ப�ோய்விடுகிறது (இது இன்றைய சூடான் நாடு). அங்கே அது காட்டுப் பூனை (பெண் சிங்கமாகவும் இருக்கலாம்) வடிவம் எடுத்து வசித்து வருகிறது. இந்த நிலையில் உலகில் குழப்ப நிலைக்கும், நியாயத்திற்கும் பெரும் சண்டை மூண்டுவிடுகிறது. இதைச் சரி கட்ட அதும்-ராவிற்குக் க�ோபிந்துக்கொண்டு ப�ோன நெற்றிக் கண்ணின் உதவித் தேவைப்படுகிறது. பூனை வடிவிலிருக்கும் நெற்றிக் கண்ணைச் சமாதானப்படுத்தி அழைத்துவர ஸ்ஸூவை அனுப்புகிறார் அதும்-ரா. சில க�ோயில் பப்பைரஸ் எழுத்துக்கள் த�ோத் அனுப்பப்பட்டதாகச் ச�ொல்கின்றன. த�ோத் குரங்கு வடிவம் எடுத்து எகிப்தின் தெற்குப் பாலைவனப் பகுதிக்குச் சென்று நெற்றிக் கண்ணைச் சந்திக்கிறார். இன்னாப்பா இராமாயணக் கதையையும் சிவபுராணக் கதையையும் ரீ-மிக்ஸ் பண்ணி ச�ொம்மாங்காட்டியும் அட்சிவுட்றியா – இப்படியெல்லாம் நீங்கள் ய�ோசிக்கலாம். ஆனால் நான் இங்கே ச�ொல்லிக்கொண்டிருப்பது இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு விசயத்தை. குரங்கு வடிவிலிருக்கும் த�ோத், பூனை வடிவிலிருக்கும் நெற்றிக் கண்ணைச் சமாதானப்படுத்தி அதும்-ராவிடம் அழைத்து வருகிறார். நெற்றிக் கண்ணைச் சாந்தப்படுத்தும் விதமாக அதும்-ரா அதை இராஜ நாகமாக மாற்றித் தன்னுடைய புருவங்களில் ஒன்றாக வைத்துக்கொள்கிறார். அவரை எதிர்க்க வரும் எதிரிகள் மீது நெருப்பைக் கக்கி அதும்-ராவைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு. இதற்குப் பிறகு அவர் தன்னுடைய உடல் வியர்வைத் துளிகளிலிருந்து மற்ற நூற்றுக் கணக்கான கடவுளர்களையும், அவருடைய கண்ணீர் துளிகளிலிருந்து மனித இனத்தையும் உண்டாக்குகிறார். உலகத்தைப் படைத்த அதும்-ராவிற்கே எதிரிகளா? ஆம் மானிடப் பதர்கள்தான் அவருடைய எதிரிகள் என்று தி புக ஆப் தி ஹெவன்லி கவ் ச�ொல்கிறது. இந்தப் புத்தகம் பார�ோ துத்தன்காமூனுடைய கல்லறையிலும் மற்ற சில கல்லறை சுவர்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் மனிதர்கள் எப்படி அதும்-ராவிற்கு எதிராகக் கலகம் செய்து அவரை எதிர்த்தார்கள் பிறகு எப்படி அவர்கள் அடக்கப்பட்டார்கள் என்று ச�ொல்கிறது. இப்படியே பல கதைகள் ப�ோய்க் க�ொண்டேயிருக்கிறது. இவற்றுக்கு ஒரு முடிவேயில்லையா என்று கேட்கும் அளவிற்கு. அந்தக் கதைகள் அனைத்தையும் இங்கே ச�ொல்வதென்றால் கேட்கும் உங்களுக்கும் ச�ொல்லும் எனக்கும் மண்டைக் காய்வதென்பது நிச்சயம். பார�ோக்களின் பிரமிடுகளும், குடைவரைக் கல்லறைகளும், கல்லறைக் க�ோயில்களும், கடவுளர்களின் க�ோயில்களும் இத்தகைய கதைகள் அடங்கிய எழுத்துக்களுக்கும், பப்பைரஸ் ஆவணங்களுக்கும் பாதுகாவல் இடங்களாக இருந்திருக்கின்றன. இந்த உலகத் த�ோற்றக் கதைகள் ஒருபுறம் என்றால் மந்திர தந்திரம் குறித்த எழுத்துக்களும், பப்பைரஸ் ஆவணங்களும் பார�ோக்களின் கல்லறைகளிலும், பிரமிடுகளிலும், கல்லறைக் க�ோயில்களிலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மந்திர தந்திரத்தை எகிப்தியர்கள் ஹெக்கா என்கிற ச�ொல்லாலும் அக்கு என்கிற ச�ொல்லாலும் குறிக்கிறார்கள். இன்றையிலிருந்து நவீனா அலெக்சாண்டர்

99

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

4000 வருடங்களுக்கு முற்பட்ட மந்திர வித்தைகளுக்கான சடங்குகள் அடங்கிய பப்பைரஸ் ஜுமில்ஹாக் ஆவணம் இப்பொழுது கிடைத்திருக்கிறது. இந்த ஆவணத்திலிருக்கும் எழுத்துக்கள் பிரமிடிற்குள்ளே பார�ோவின் மம்மி வைக்கப்படும் அறை சுவர்களிலும், கல்லறைக் க�ோயில் சுவர்களிலும் எழுதப்பட்டுமிருக்கிறது. இதேப் ப�ோன்று மிகப் பழமையான தி பிரமிட் டெக்ஸ்ட் மற்றும் தி கஃபின் டெக்ஸ்ட் பப்பைரஸ் சுருள்கள் கிடைத்திருக்கின்றன. இவையும் இறப்பிற்குப் பிறகான மறு வாழ்வுக் குறித்த மந்திரங்களும், மறு வாழ்வில் இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரங்களும் அடங்கியவை. மேலும் பிரமிடிற்குள் புகுந்து திருடுபவர்களையும், பிரமிடிற்குச் சேதம் ஏற்படுத்துபவர்களையும் நாசமாகப் ப�ோகும்படி சபிக்கும் மந்திர எழுத்துக்களும் இவற்றில் உண்டு. இந்த எழுத்துக்கள் மஸ்டபா மற்றும் பிரமிடிற்குள் மம்மி வைக்கப்படும் அறை சுவர்களிலும், மம்மி வைக்கப்படும் சர்கபேஃகசின் உள்ளேயும் வெளியேயும், சிலைகளின் கீழேயும், ஓவியங்களின் கீழேயும் எழுதி வைக்கப்படும். எழுத்தாக எழுதப்படும் மந்திர ச�ொற்களுக்கு சக்தியும் வீரியமும் அதிகம் என்று நம்பினார்கள் எகிப்தியர்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகவே கடவுள் சேத் (Seth) குறித்த மந்திர ச�ொற்களை அவ்வளவாகப் பயன்படுத்தவே மாட்டார்கள் எகிப்தியர்கள். காரணம் சேத் இந்த உலகில் தீமைகளையும் பேராபத்துக்களையும் க�ொண்டுவரும் தீயக் கடவுள் அல்லது சக்தி. தி பிரமிட் டெக்ஸ்ட் மற்றும் தி கஃபின் டெக்ஸ்ட் புத்தகங்கள் பாதாளத்தின் புத்தகங்கள் (books of underworld) என்று அடையாளப்படுத்துகிறார்கள் எகிப்திய மந்திரவாதிகள். தி புக் ஆப் தி டெட் புத்தகமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இதே வகையில் வரும் மற்ற மந்திர புத்தகங்கள் தி புக் ஆப் தி பிரிதிங்,தி புக் ஆப் தி டூ வேஸ், தி புக் ஆப் தி லைப், தி புக் ஆப் தி என்ட் ஆப் தி இயர் மற்றும் தி புக் ஆப் தி லாஸ்ட் டே ஆப் தி இயர். இதில் இறுதியாகக் கூறப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களும் கைகளில் கட்டும் தாயத்து மற்றும் வீடுகளில் வைக்கும் யந்திரத் தகடு ஆகியவற்றில் ப�ொறிக்கப்படும் மந்திரங்களைக் க�ொண்டவை. இந்தப் புத்தகங்கள் பல பப்பைரஸ் பிரதிகளாக எழுதப்பட்டு நூற்றுக் கணக்கில் எகிப்து முழுவதும் இருக்கும் க�ோயில் நூலகங்களிலும், பார�ோவின் அரண்மனை நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகங்களின் சில பிரதிகளைக் கல்லறைக் க�ோயில்களிலிருந்தும் கூட ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கிறார்கள். இத்தகைய மந்திரங்களை எல்லாம் கடவுளர்கள் எகிப்திய பார�ோக்களுக்கும், தலைமை பூசாரிகளுக்கும், பூசாரி மந்திரவாதிகளுக்கும் ச�ொல்லிக்கொடுத்திருப்பதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். எகிப்திய பூசாரி மந்திரவாதிகள் எகிப்தின் எதிரிகளுக்குச் சூனியம் வைக்கக் கூடியவர்கள் என்றும் நம்பப்பட்டது. ஆனால் சூனியம் மூலம் எகிப்தின் எந்த ஒரு எதிரியும் த�ோற்கடிக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம்தான் இல்லவே இல்லை. சூனியம் வைப்பதற்கான மந்திர சடங்குகளைச் செய்வதற்கு ஏற்ற வேளைகளாக அதிகாலை நேரமும், அந்தி சாயும் நேரமும் மந்திரப் புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. சூனியம் வைக்கும் சடங்கை செய்யும் பூசாரி மந்திரவாதி எத்தகைய புற சுத்தத்துடன் இருக்கவேண்டும் என்றும் ச�ொல்கின்றன. பூசாரி மந்திரவாதிகளும், தலைமை பூசாரிகளும், பார�ோக்களும் தங்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு தலையை ம�ொட்டையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இந்தப் புத்தகங்கள் ச�ொல்கின்றன. இத்தகைய சடங்குகளுக்கு ஏற்ற நாட்களையும் கூட அவை குறித்துத் தருகின்றன. கெட்ட சக்திகளிடமிருந்தா காத்துக்கொள்ள மந்தரித்துச் செய்யப்பட்ட தாயத்துக்கள் எகிப்து முழுவதும் பிரசித்தம். பிரமிடுகளிலும், கல்லறைக் க�ோயில்களிலும், கடவுளர் க�ோயில்களிலும் செய்யப்பட்ட த�ொல்பொருள் ஆராய்ச்சிகளின் ப�ோது பெருவாரியாகக் கிடைத்தவை இந்தத் தாயத்துகள்தான். இந்தத் தாயத்துக்களை எகிப்தியர்கள் கைகளின் மணிக்கட்டிலும், புஜத்திலும், கால்களிலும் கட்டியிருந்திருக்கிறார்கள். இதுவரை நாம் பார்த்த அனைத்து விசயங்களும் எகிப்திய நாகரீகம் குறித்த ஒரு புரிதலை 100

நவீனா அலெக்சாண்டர்

எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

உங்களுக்குக் க�ொடுத்திருக்கும். எகிப்திய நாகரீகத்தை உருவாக்கிய நைல் த�ொடங்கிப் பார�ோக்கள், பிரமிடுகள், மம்மிகள், கல்லறைத் திருடர்கள், வாய் பிளக்க வைக்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள், சாபங்கள் என்று எகிப்தின் அனைத்துச் சுவாரசியங்கள் குறித்தும் இந்தப் புத்தகத்தின் அளவு அனுமதிக்கும் வரையறைக்குள் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டதாக நம்புகிறேன். இங்கே நான் ச�ொல்லாமல் விட்ட விசயங்கள் இன்னும் இன்னும் பல இருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் த�ொடக்கத்தில் ச�ொன்னதுப�ோல எகிப்திய வரலாறு என்பது ஒரு கடல். இந்தப் புத்தகம் அந்தக் கடலின் கரையில் நிற்கும் அனுபவத்தையே உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இனி அந்தக் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க வேண்டியது உங்களின் ப�ொறுப்பு.

நவீனா அலெக்சாண்டர்

101

துணைக் கருவி நூல்கள்

1. The Rise and Fall of Ancient Egypt - Toby Wilkinso 2. The Pyramid Builders of Ancient Egypt: A Modern Investigation Of Pharaohs Workforce - Rosalie David 3. The History of The Egyptian Mastaba - George A. Reisner 4. The Complete Gods and Goddesses of Ancient Egypt - Richard H. Wilkinson 5. Temples, Tombs and Hieroglyphs: A Popular History of Ancient Egypt - Barbara Mertz 6. Ramesses II - Richard Spilsbury 7. Pyramid Quest: Secrets of the Great Pyramid And The Dawn of Civilization - Robert M. Schoch, Ph.D. & Robert Aquinas McNally 8. Ancient Civilizations: Pre-History to Egypt 9. Practical Egyptian Magic - Murry Hope 10. Magic In Ancient Egypt - Geraldine Pinch 11. From Atlantis To The Sphinx - Colin Wilson 12. Black Genesis: The Prehistoric Origins of Ancient Egypt - Robert Bauval & Thomas Brophy, Ph.D. 13. Atlantis Pyramid Floods: Did Noah’s Flood Destroy Atlantis And Damage The Pyramids? - Dennis Brooks 14. Egyptian Book of the Dead and the Mysteries of Amenta 15. Luxor: A Guide To Ancient Thebes - Jill Kamil 16. Ancient Egypt: 1000 Facts - Jeremy Smith 17. The Pharaoh’s Kitchen: Recipes From Ancient Egypt’s Enduring Food Traditions - Magda Mehdawy & Amr Hussein 18. Egypt of the Pharaohs - The UNESCO Courier (September 1988) 102

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF